சனி, ஜனவரி 28, 2006

நட்பினால்...




இன்றும் நினைக்கிறேன்
என்றும் அவள்முகம்
எண்ணிப்பார்க்கையில்
மனதினில் நாணல்கள்

பலமுறை பார்க்கிறோம்
சிலமுறை முறைக்கிறாய்
திரும்பிப்பார்த்திட்டால்
யார் நீ என்கிறாய்?

நாட்கள் ஒடிட
நட்பாய் தொடங்கினோம்
நகரில் பல இடம்
சேர்ந்தே சுற்றினோம்

நட்புதான் என்றுநீ
சத்தியம் செய்கிறாய்
கடக்கும் பெண்ணினை
பார்த்தாலோ முறைக்கிறாய்

தொடங்கிடும் எல்லாமே
இப்படித்தான் என்றாலே
உடைப்போம் அதனையென
விடுதலை பேசினாய்

பேசும் பொழுதுகள்
வீசும் வார்த்தைகள்
நட்பெனும் வேலியை
தாண்டும் வெள்ளாடுகள்

வாய்கள் ஊமையாய்
ஆகும் பொழுதுகள்
கண்கள் தீர்க்குமே
வார்த்தையின் தேவைகள்

பார்த்தே கிடக்கும்
பொழுதுகள் வரமே
என்றே பொய்பேசி
கிடந்தோம் சுகமே

சின்னச் சண்டைகள்
தீரும் ஊடல்கள்
நெருங்கும் தருணங்கள்
பலதே தேடல்கள்

உண்மை அறிந்தும்
உணர மறுத்தோம்
என்ன உறவு ?
பின்னார் யோசிக்கலாம்

நாட்கள் ஓடிட
கொடுத்தாய் இதழில்
அழைப்பிதழ் என்று
உணரவே சிரித்தேன் !




6 கருத்துகள்:

பாலு மணிமாறன் சொன்னது…

காதலின் சோகங்களை சொல்லி சொல்லி பார்க்கும் சுகத்திற்காகவாவது - ஒரு முறை தோற்கலாம் போலிருக்கிறது :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வருகைக்கும் தருகைக்கும் நன்றி பாலு !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Divya சொன்னது…

\"நட்புதான் என்றுநீ
சத்தியம் செய்கிறாய்
கடக்கும் பெண்ணினை
பார்த்தாலோ முறைக்கிறாய்\"
Exlnt lines expressing possesiveness in friendship!!! good one Naveen!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\"நட்புதான் என்றுநீ
சத்தியம் செய்கிறாய்
கடக்கும் பெண்ணினை
பார்த்தாலோ முறைக்கிறாய்\"
Exlnt lines expressing possesiveness in friendship!!! good one Naveen!! //

வாருங்கள் திவ்யா :))
do u think so ? yea may be possesiveness ;))) மிக்க நன்றி திவ்யா :)

பெயரில்லா சொன்னது…

சண்டைக்காரனே!
நீ
கவிதைகள் எழுதவேண்டும
நீயாக இருந்து
நான் வாசிக்கவேண்டும
என் கவிகளை
நீ படித்துணர்ந்ததை
போல…