திங்கள், பிப்ரவரி 06, 2006

புணர்ச்சிவிகுதி



வெள்ளிக்கிழமை
மாலை 5 மணி
கூட்ஸ் வண்டிவரும்
தண்டவாளம் போல
மனது தடதடக்க
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அமைதியாய் இருக்கும் வீதியினை !
உன் வருகை எப்போதும் நிகழலாம் !

மழைவரும் முன்னே
வீசும்
ஈரக்காற்றினைப்போல்
உன் வரவை முரசுகொட்டி
அறிவிக்கின்றன உன்
கொலுசுகள் !
தாயின் குரல் கேட்ட
கன்றுபோல்
துள்ளித்தாவுகிறது
மனசு !


ஒருமுறை என்னை
நிமிர்ந்து பார்க்கிறாய்
அந்த ஒரு நொடியில்
பூப்படைகிறது
என் காதல்
உன் கண்களாலே !
உயிர்பெற்றேன்
மயங்கிக்கிடந்த நான் !
தாவி ஓடுகிறது மனது
உன் பின்னே ஒரு
நாய்க்குட்டியைப்போல் !


கோயிலுக்குச் செல்கிறாய்.
தாயின் கரம் பற்றிச்
செல்லும் குழந்தையைப்போல்
உன் கால்தடம் பற்றி
தொடர்கிறேன்
அசையும் அழகுகள்
அசைக்கின்றன
தணிக்கிறேன் பார்வையை !


மலர்கின்றன உன்வழித்தடம்
எங்கும் பூக்கள்
மாலைக் கதிர்கள்
முழுதுமாய் தின்கின்றன
உன் அழகை
மூச்சடைத்துக் கொண்டது
இருந்தும் வழிநடத்துகிறது
உன் வாசம் !


கோயிலினுள் தேடுகிறேன்
காணவில்லை
சிலைகளுக்குள் மறைந்துவிட்டாய் !
குழப்பத்துடன் பார்க்கையில்
கண்டுபிடித்தேன்
ஒருசிலை அசைகிறது !
பிரகாரத்தில் நிற்கிறாய்
அம்மனுக்கே வழிபாடு
செய்யும் அம்மனாய் !

சுற்றிவருகிறேன்
நம் கண்கள் புணர்ந்து
மகிழ்கின்றன
நிற்கிறாய் ஒரு
தனிமையான சிலைமுன்
ஆயத்தம் செய்கிறாய்
கண்களின் ஒளியை
விளக்கில் ஏற்ற !
காற்றில் காதல் வாசம் !

இன்றாவது பேசிவிடு !
மண்டியிட்டுக் கெஞ்சுகிறது
குழந்தைபோல் மனசு !
அதன் அடத்தையெல்லாம்
நிறைவேற்றிவிடுகிறோமா என்ன?
ஆசையாக இருந்தாலும்
ஏதோ தடுக்கிறது
சுற்றிவருகையில்
சுட்டு எரிக்கிறாய்
என்னையும் விளக்கையும் !



மற்றுமொரு வெள்ளி
பிரிதொரு மாலை
அமைதியாய் என்முன்
கிடக்கிறது அதே வீதி !
மாறாமல் நிற்கிறேன்
உன் வரவுக்காக
துடிக்கும் இதயத்துடன்
இன்றாவது பேசேன் !
மனது தனது
அடத்தை தொடங்கிவிட்டது !

14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆயத்தம் செய்கிறாய்
கண்களின் ஒளியை
விளக்கில் ஏற்ற !
காற்றில் காதல் வாசம்

ரொம்ப நல்லாயிருக்கு

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

தங்கள் ரசிப்பு என் பாக்கியம் கீதா!

பெயரில்லா சொன்னது…

மாலைக் கதிர்கள்
முழுதுமாய் தின்கின்றன
உன் அழகை
மூச்சடைத்துக் கொண்டது
இருந்தும் வழிநடத்துகிறது
உன் வாசம் !

மிக அருமை நவீண். வாழ்த்துக்கள்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வருகைக்கும் தருகைக்கும் நன்றி ராசய்யா !

Unknown சொன்னது…

//சிலைகளுக்குள் மறைந்துவிட்டாய் !
குழப்பத்துடன் பார்க்கையில்
கண்டுபிடித்தேன்
ஒருசிலை அசைகிறது//
அருமை

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

:) வணங்குகிறேன் தேவ் !

செல்வேந்திரன் சொன்னது…

Asaiyum silai !! Nalla rasanai !!
valargha umathu pani....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

நன்றி செல்வா !

Divya சொன்னது…

\\ஒருமுறை என்னை
நிமிர்ந்து பார்க்கிறாய்
அந்த ஒரு நொடியில்
பூப்படைகிறது
என் காதல்
உன் கண்களாலே !\\

'காதல்' திரைபட பாடல் வரிகளை நினைவூட்டியது இந்த வரிகள்......

Divya சொன்னது…

\\சுற்றிவருகிறேன்
நம் கண்கள் புணர்ந்து
மகிழ்கின்றன
நிற்கிறாய் ஒரு
தனிமையான சிலைமுன்
ஆயத்தம் செய்கிறாய்
கண்களின் ஒளியை
விளக்கில் ஏற்ற !
காற்றில் காதல் வாசம் !\\

கண்கள் புணர்ந்து மகிழ்கின்றன......இந்த வரி ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு நவீன்!

Divya சொன்னது…

கவிதை முழுவதுமாய் அழகு!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

\\ஒருமுறை என்னை
நிமிர்ந்து பார்க்கிறாய்
அந்த ஒரு நொடியில்
பூப்படைகிறது
என் காதல்
உன் கண்களாலே !\\

'காதல்' திரைபட பாடல் வரிகளை நினைவூட்டியது இந்த வரிகள்...... //


வாங்க திவ்யா.. :))
அட காதல் படமா..? திரைப்படம்
பார்ப்பீர்களா நீங்கள்...?? :))

நன்றி... !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

\\சுற்றிவருகிறேன்
நம் கண்கள் புணர்ந்து
மகிழ்கின்றன
நிற்கிறாய் ஒரு
தனிமையான சிலைமுன்
ஆயத்தம் செய்கிறாய்
கண்களின் ஒளியை
விளக்கில் ஏற்ற !
காற்றில் காதல் வாசம் !\\

கண்கள் புணர்ந்து மகிழ்கின்றன......இந்த வரி ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு நவீன்! //


திவ்யாவுக்கு அந்த வரிகள்
மிக பிடித்தனவா..?
நன்றி... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

கவிதை முழுவதுமாய் அழகு! //

மிக்க மகிழ்ச்சி
திவ்யா.. :)))