Monday, February 13, 2006

காதலே தினம் !தினமும் விழிக்கையில்
கூடவே விழிக்கிறது
உன் நினைவுகளும் !

கிளம்ப எத்தனித்து
குளிக்கிறேன்
நீராய் வழிகிறது
உன் நினைவுகள் !
வழக்கம்போல்
என்னைக்
குளிர்விக்கின்றது !

வெளியில் வருகிறேன்
என்
உடலெங்கும்
உன் முகம்
நீர்த்திவலைகளாய் !
துடைக்க மனமின்றி
என்னில் முளைத்த
உன்னைப்
பார்க்கிறேன்!

காலை உணவு
சட்டினியில்
அம்மாவின் சுவையும்
இட்லியில்
உந்தன் மென்மையும் !
சாப்பிட மனமின்றி
தட்டைப் பார்க்கிறேன் !
எனக்குள் நீ
பசித்திருப்பாயென
உண்கிறேன்!

செல்லும் வழியில்
கடந்த கூந்தலில்
மல்லிகை !
எங்கும்
பரப்புகிறது
உந்தன் வாசம் !
ஆழமாக சுவாசிக்கிறேன்
காற்றாய் நிறைகிறாய்
நெஞ்செங்கும் !

வந்த பேருந்தில்
வழிகிறது கூட்டம்
என்னுள்
எப்பொழுதும்
நிறைந்து வழியும்
உன்
நினைவுகளைப் போல !
இருந்தும் நுழைந்து
கொள்கிறேன்
தரிசனத்திற்குச்
செல்லும்
பக்தன் போல !

கல்லூரிக்குள் நுழைகிறேன்
வழியெங்கும்
உந்தன் வெட்கம் !
கொட்டிக்கிடக்கின்றன
குல்மொகர் மலர்கள்!
வீசும் காற்றில்
சிரிக்கும் பூச்செடிகள்
நீ வந்துவிட்டாயென
உணர்த்துகின்றன !


கருவறையாய்
என்
வகுப்பறை !
பயபக்தியுடன்
பார்க்கிறேன்
தேவி தரிசனம்
கோடி புண்ணியம் !
ஒரு பார்வையால்
இந்த பக்தனை
இரட்சிக்கிறாய் !


இடைவேளை!
ஏதோ கேட்கிறாய்
ஏதும் கேட்கவில்லை
இருந்தும்
தலையாட்டுகிறேன்
சிரிக்கிறாய்
பிறந்த சிசுவைப்போல!
காற்றில் பறந்த உன்
சிரிப்பை
பிடிக்க விழைகிறேன்
தட்டான் பிடிக்க
ஓடும்
சிறுவனைப்போல!

வெயில் சாயும் நேரம் !
கல்லூரி விடுகிறது
சொர்கத்தைச்
சுமந்து வருகிறேன்
உன் நிழல் என்மீது!
முத்தம்பெறத்
துடிக்கிறது
பட்டு ஒதுங்கும்
உன் தாவணி
அணைத்து விலக்குகிறாய் !

விடையளிக்கிறாய்
உயிர் பறிக்கும்
உன்
புன்னகையினூடே!
எமன்போல
கவர்ந்துசெல்கிறது
உன் வழிசெல்லும் பேருந்து!
முடிந்துபோனது
இன்றைய சொர்கநாள்!


இரவு
தடமெங்கும் இருள்
உன் கூந்தலைப்போல்
விரிந்து கிடக்கின்றது !
உன் எண்ணப்
படுக்கையில்
உன் நினைவுகளே
போர்வையாக
நினைவின்றிக்
கிடக்கிறேன் நான்!

புலன் விழிக்கிறது
நண்பன் சொல்கிறான்
நாளை காதலர் தினம்!
சிரிக்கிறேன்
காதலர்க்கு தினம்
இருக்கலாம்
காதலுக்கு ஏது தினம் ?
காதலே தினம் !

20 comments:

நாமக்கல் சிபி said...

//காதலுக்கு ஏது தினம் ?
காதலே தினம் !//

Simply Superb!

சத்தியா said...

ஆழமான காதலை
அழகாய்
அற்புதமாய் சொன்ன விதம்
அருமை!... அருமை!

ஓ!....
காதலுக்கு ஏது தினம் ?
காதலே தினம் !

வாழ்த்துக்கள்....

தேவ் | Dev said...

Happy Valentines Day naveen sir:)

Naveen Prakash said...

நன்றி சிபி ! வருக !

Naveen Prakash said...

சத்தியா உங்கள் வாழ்த்துக்களால் வரம் பெற்றேன் ! நன்றி பல !

Naveen Prakash said...

நன்றி தேவ்.அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள் !

ஒரு வேண்டுகோள் தேவ்! சார் என்று விளிக்காதீர்கள் நவீன் என்றே விளியுங்கள்!

ஆர்த்தி said...

காதலர்க்கு தினம்
இருக்கலாம்
காதலுக்கு ஏது தினம் ?
காதலே தினம் !


அருமை...

சிங். செயகுமார். said...

காதலர்(களுக்கு) தின நல்வாழ்த்துக்கள்

தேவ் | Dev said...

சரிங்கோ நவீன்...

Naveen Prakash said...

இங்கு மலர்ந்தமைக்கு நன்றி ஆர்த்தி !

Naveen Prakash said...

வாங்க குமார்! வாழ்த்துக்கள் !

Naveen Prakash said...

ம்ம் இப்போதான் சரி தேவ் !

Divya said...

\\கிளம்ப எத்தனித்து
குளிக்கிறேன்
நீராய் வழிகிறது
உன் நினைவுகள் !
வழக்கம்போல்
என்னைக்
குளிர்விக்கின்றது !\\

அன்றாட செயலில் கூட காதலையும், காதலின் நினைவுகளையும் இத்தனை அழகாக கோர்க்க முடியுமா??
வியந்தேன்:))

Divya said...

\வெளியில் வருகிறேன்
என்
உடலெங்கும்
உன் முகம்
நீர்த்திவலைகளாய் !
துடைக்க மனமின்றி
என்னில் முளைத்த
உன்னைப்
பார்க்கிறேன்!\

நீர்திவலைகள்- புதிய வார்த்தை , கற்றுக்கொண்டேன்!!

மிக அழகான ஒரு கற்பனை, சிம்ப்ளி சூப்பர்ப்!!

Divya said...

\\வீசும் காற்றில்
சிரிக்கும் பூச்செடிகள்
நீ வந்துவிட்டாயென
உணர்த்துகின்றன !\\

அருமை....அருமை!!

Divya said...

\\காதலர்க்கு தினம்
இருக்கலாம்
காதலுக்கு ஏது தினம் ?
காதலே தினம் !\\

ஃபினிஷிங் டச்......சூப்பர்!!

நவீன் ப்ரகாஷ் said...

//Divya said...

\\கிளம்ப எத்தனித்து
குளிக்கிறேன்
நீராய் வழிகிறது
உன் நினைவுகள் !
வழக்கம்போல்
என்னைக்
குளிர்விக்கின்றது !\\

அன்றாட செயலில் கூட காதலையும், காதலின் நினைவுகளையும் இத்தனை அழகாக கோர்க்க முடியுமா??
வியந்தேன்:)) //

வாங்க திவ்யா...
நான் எப்பொழுதோ எழுதிய கவிதைகளை தேடிப் படித்து விமர்சிப்பது கண்டு நான் தான் வியந்துகொண்டிருக்கிறேன்...:))))

நவீன் ப்ரகாஷ் said...

// Divya said...

\வெளியில் வருகிறேன்
என்
உடலெங்கும்
உன் முகம்
நீர்த்திவலைகளாய் !
துடைக்க மனமின்றி
என்னில் முளைத்த
உன்னைப்
பார்க்கிறேன்!\

நீர்திவலைகள்- புதிய வார்த்தை , கற்றுக்கொண்டேன்!!

மிக அழகான ஒரு கற்பனை, சிம்ப்ளி சூப்பர்ப்!! //

அப்படியா திவ்யா.. :)))
மிக அழகான வருகை... :)))

நவீன் ப்ரகாஷ் said...

//Divya said...

\\வீசும் காற்றில்
சிரிக்கும் பூச்செடிகள்
நீ வந்துவிட்டாயென
உணர்த்துகின்றன !\\

அருமை....அருமை!! //

:))))) நன்றி திவ்யா... :)))

நவீன் ப்ரகாஷ் said...

// Divya said...

\\காதலர்க்கு தினம்
இருக்கலாம்
காதலுக்கு ஏது தினம் ?
காதலே தினம் !\\

ஃபினிஷிங் டச்......சூப்பர்!! //

சூப்பரான உங்கள் விமர்சன 'டச்' சும் மிக அழகு திவ்யா. :)))