செவ்வாய், ஏப்ரல் 04, 2006

களித்த இரவு


நன்றாக நினைவிருக்கிறது
குளிரான அந்த இரவு
நீண்ட நாட்களுக்குப்
பிறகு
சந்திக்கிறோம்
யாருக்கோ
திருமணம்
சாக்கு போக்கு சொல்லி
வந்திருக்கிறேன்
உன்னைப் பார்க்கதான்

எனக்கும் உனக்கும்
மட்டும் புரிகிறது
கரும்புகள்
இனிக்கமட்டும்
செய்வதில்லை
இரவு விழிக்கிறது
நம் உணர்வுகளும்
நீண்ட நாட்களாக
இரையில்லை

கொட்டிக் கிடக்கிறது
நம்முன் அடர்த்தியான
தனிமை
ஏக்கமான
உணர்வுகளோடு
துவங்கத்தான்
நினக்கையில்
துவள்கிறது எல்லாம்


என்று தணியும் என்று
விம்மித்தணியும்
மார்புகள்
இன்றே தணியென
அலரும் கொலுசுகள்
காற்றில் பரவும்
வெப்பமான
மூச்சுக் காற்று
எச்சில் பட
ஏக்கமாகும்
உதடுகள்


வீசும் காற்றிலெல்லாம்
மூச்சுக்காற்றின்
வெப்பம்
கானல் தெரித்த
இரவு
ராக்கோழிகளின்
கூவல்கள்
கூர்க்காவின்
விசில் சத்தம்
அலறாமல்
அலறும் நம்
உணர்வுகள்

அணைத்தாலும்
அணையாத தீ
தீண்டத் தீண்ட
தூண்டப்படுகிறது
சிம்மினியாக
தொடங்கி
காடா விளக்காக
காற்றினில் காந்தல்!
தனிமையின்
கொடுமை
வேரருக்கப்படுகிறது

களித்த இரவு
கழிகிறது
இரவு கொன்ற
களிச்சிரிப்பில்
காலானாய்
ஆதவன்
சில இரவுகள்
ஏன் நீள்வதில்லை ?

16 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//சிம்மினியாக
தொடங்கி
காடா விளக்காக
காற்றினில் காந்தல்!//

நல்ல கற்பனை :-)

- மது

பெயரில்லா சொன்னது…

//சிம்மினியாக
தொடங்கி
காடா விளக்காக
காற்றினில் காந்தல்!//

நல்ல கற்பனை :-)

- மது

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

நன்றி மது ! :)

பெயரில்லா சொன்னது…

:-) :-) :-)

nice nice

நேசமுடன்..
-நித்தியா

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

:-) நன்றி நித்தியா :-)

றெனிநிமல் சொன்னது…

வாழ்த்துக்கள் நவீன்.
அசத்தல் அசத்தல்!
இரசித்து வாசித்தேன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அசத்தல் அசத்தல்!
இரசித்து வாசித்தேன்.//

தன்யனானேன் றெனிமல் :))

ரவி சொன்னது…

கலக்குறீக மக்கா...அருமை..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கலக்குறீக மக்கா...அருமை.. //

வாருங்கள் செந்தழல் ரவி :) நன்றி. செந்தழல்?? பெயர் ? அருமை :)

சத்தியா சொன்னது…

நன்றாக ரசித்து எழுதி இருக்கிறீர்கள்
பாராட்டுக்கள் நவீன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நன்றாக ரசித்து எழுதி இருக்கிறீர்கள்
பாராட்டுக்கள் நவீன். //

நன்றி சத்தியா !! பாரட்டுக்கள் ரசிக்கப்படுகின்றன !!

பெயரில்லா சொன்னது…

"சில இரவுகள் ஏன் நீல்வதில்லை"

உண்மையில் உருகியது.
இவன்
சுரேஷ், நெய்வேலி.

பெயரில்லா சொன்னது…

நுட்பமான காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், அருமை!
நீண்ட பிரிவின் பின், தனிமையில் காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் ஸ்பரிஸத்தை கற்பனையில் கண்டு , கவிதையாக உருகொடுத்திரிக்கிறீர்கள், பாராட்டுக்கள்!!

- உங்கள் கவிதையின் ரசிகை!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நுட்பமான காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், அருமை!
நீண்ட பிரிவின் பின், தனிமையில் காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் ஸ்பரிஸத்தை கற்பனையில் கண்டு , கவிதையாக உருகொடுத்திரிக்கிறீர்கள், பாராட்டுக்கள்!!

- உங்கள் கவிதையின் ரசிகை!//

வாருங்கள் ரசிகையே :)))
அழகான மொழியினில்
கருத்துக்களை பகிர்ந்தமைக்கு
நன்றிகள் பல...

Revathyrkrishnan சொன்னது…

நவீன் ஜி... அருமையான கவிதை... காமத்தையும் காதலையும் தீயாக்கி குளிர்காய செய்கிறது தங்கள் கவிதை.. காந்தல், களிச்சிரிப்பு... ம்ம்ம்... அருமையான சொல்லாடல்...சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கவிஞரே... இது கற்பனையா;))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//reena said...

நவீன் ஜி... அருமையான கவிதை... காமத்தையும் காதலையும் தீயாக்கி குளிர்காய செய்கிறது தங்கள் கவிதை.. காந்தல், களிச்சிரிப்பு... ம்ம்ம்... அருமையான சொல்லாடல்...சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கவிஞரே... இது கற்பனையா;))//

வாருங்கள் ரீனா..:))

சொல்லாடல்கள் குளிர்காய வைக்கின்றனவா..?? :))) நன்றி நன்றி... கற்பனையா என்று என்ன கேள்வி..? 100% கற்பனைதான்..:)))