Tuesday, June 27, 2006

பின் எப்படி பார்ப்பதாம்?

மஞ்சள் தேவதை
உன்னை முதன் முதலில்
அந்த மாம்பழ நிற
பட்டுப்பாவாடையில் பார்த்ததும்
எனக்குத்தோன்றியது
தேவதைகள் வெள்ளை
உடைகளில் தான்
வரவேண்டுமா என்ன ?


எப்படி இப்படிகோவிலுக்கெல்லாம்
இப்படி வராதே
பார்
வருபவர்களெல்லாம்
உன்னைப்
பார்த்து கன்னத்தில்
போட்டுக்கொள்கிறார்கள்
அம்மன்முதலில் இப்படி
பார்ப்பதை விடு
என்கிறாய்
கர்ப்பகிரகத்துக்குள்
இருக்கும் என்
தெய்வத்தை
பின் எப்படி
பார்ப்பதாம் ?
பாவம் அம்மா
இப்பொழுதெல்லாம்
கோவிலுக்கு
தவறாமல் வருகிறேன்
எனக்கு பக்தி
வந்து விட்டதென
என் அம்மா மிகுந்த
ஆனந்தப்படுகிறார்கள்
பாவம் அவர்களுக்கு
தெரியாது
என் பக்தி
கர்பகிரகத்துக்குள்ளிருக்கும்
அம்மனுக்காக அல்ல
அதைச் சுற்றிக்
கொண்டிருக்கும்
அம்மனுக்காக
என!
அப்படி பார்க்காதே
அப்படிப் பார்க்காதே
எனக்கு வெட்கமாக
இருக்கிறதென
முகத்தினை திருப்பிக்
கொள்கிறாய்
இருப்பினும்
என்னை நோக்கி
சிரிக்கிறது
எனக்கான உன்
உன் வெட்கம் !

அன்று
என் எதிர் வீட்டு
குழந்தையை நீ
கொஞ்சிக்கொண்டிருந்த
போதுதான்
தவழ ஆரம்பித்தது
உன்னை நோக்கி என்
மனது !
நம் பயணத்தில்
திடீரென குறுக்கே
வந்துவிட்ட
அந்த
மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை
வாழ்த்தத்தான்
தோன்றுகிறது
நீ என்
பின்னால் அமர்திருக்கும்
வேளைகளில் !

Saturday, June 24, 2006

ஆறுகள் சில...

ஆறுகள் சிலதோழி வித்யாவின் அழைப்பிற்கிணங்க அளிக்கிறேன் ரசிக்கும் ஆறுகள் சில !

ரசிக்கும் பொழுதுகள்

அதிகாலை இருள் பிரியும் பொழுது
மழைவிட்ட வீதி பயணம்
போக்குவரத்து அற்ற சாலைப் பயணம்
மலை மீது பயணம்
பாடல் கேட்டுக்கொண்டே புத்தகம் படிக்கும்பொழுது
மின்சாரம் போன இரவு பொழுது

ரசிக்கும் எழுத்துகள்

சாண்டில்யன்
தி.ஜானகிராமன்
ஜெயகாந்தன்
ஜி. நாகராஜன்
கல்கி
ராமகிருஷ்ணன்

ரசிக்கும் இசை

இளையராஜா
யுவன் சங்கர்
ரஹ்மான்
யானி
கென்னி ஜி
கிடாரோ

ரசிக்கும் ஆக்கங்கள்

ஓஷோவின் அனைத்தும்
திருக்குறள்
அகநானூறு
Robin Cook
Dawn Brown
தபூ சங்கர்

என்றும் ரசிக்கும் திரைப்படங்கள்

வண்ண வண்ண பூக்கள்
மௌனராகம்
அழியாத கோலங்கள்
Life is Beautiful
Troy
முதல் மரியாதை

ஆறு பதிய அழைக்கிறேன்

ப்ரியன்
அருட்பெருங்கோ
நித்தியா
இளா
சத்தியா
ரவீந்திரன்

Tuesday, June 13, 2006

முத்தச்சந்தம்

காதல் ஜோதி
பிரகாரத்தை நீ
சுற்றுகிறாய்
நானோ
உன்னைச்சுற்றுகிறேன்


காதல் பயணம்

வேகத்தடையை
என்னமோ
நாம் பயணம் செய்த
பைக்
வேகமாக
கடந்துவிட்டது
ஆனால் என்
மனதோ
ஏன் சாலை
முழுதும்
வேகத்தடையில்லை
என கேட்கிறதுஅப்படியெல்லாம் பார்க்காதே
அப்படியெல்லாம்
என்னைப் பார்க்காதே
என் மனதில்
அதிவிரைவாக
காதலுற்ற
முத்த மண்டலம்
உருவாகின்றது !
Image Hosted by ImageShack.us
எனது உதடுகளுக்கும்
உனது உதடுகளுக்கும்
இன்று ஒரே விருந்தாம்
இறுமாப்பில் அவை
பேசவே விடவில்லை
நம்மை!


Image Hosted by ImageShack.us
இத்தனைபேர்
மத்தியிலும்
எனக்கு முத்தம் கொடுக்க
முடியுமா?
என கேட்டதற்கு
கொடுத்தால் தனிமையில்
தருவேன் என்ற
பந்தயத்தில் ஜெயிக்க
ஏதோ ரகசியம் சொல்வதுபோல்
என் காதினில்
முத்தமிட்டுவிட்டு
ஒரு சிரிப்பு சிரித்தாயே
அந்தச் சிரிப்பை
இன்னும் என் காதல்
சுமந்து கொண்டு இருக்கிறது .


இன்று என்னுடன்
பேசாதே என நான்
கூறியதற்காய்
ஏன் கோபித்துக்
கொண்டு அமர்திருக்கிறாய்?
பேசினால் நம்
உதடுகள்
ஏங்கிப்போய்விடாது ?
உனக்கு மிகவும்
பிடித்த இசை
என்னவென்று
நீ கேட்டதற்கு
நான் சொன்ன
பதிலைக்கேட்டவுடன்
ஏன் உன்
கன்னங்கள்
சிவக்கின்றன ?