புதன், நவம்பர் 08, 2006

திமிறும் திமிர்

thimir 1




நீ வருவதைப் பார்த்த
புகைவண்டி அறிவிப்பாளர்
சொன்னது
ஒரு அழகிய திமிர்
திமிறும் அழகோடு வருகிறது



thimir 2





உன் திமிரை நான்
அடக்கமுடியுமா என
ஏன் கேட்கிறாய் ?
அப்புறம் திமிரிக்கொண்டு
ஓடுவாய் பரவாயில்லையா ?



thimir 3






கைகால்கள் அடங்கி இருக்கும்
என்றால் மட்டுமே
என்னுடன் சினிமாவிற்கு
வருவேன் என
ஏன் இப்படி அடம்பிடிக்கிறாய்
அப்புறம், உன்னை போலவே
என் கைகளும் அடம்
பிடிக்கும் சொல்லிவிட்டேன்





thimir 4





இனி நீ சிகரெட் பிடித்தால்
உன்னுடன் பேசவே போவதில்லை
என என்னுடன் சண்டையிட்டு
சென்ற சோகத்தை மறக்க
இரண்டு பாக்கெட் சிகரெட்
சாம்பலானது உனக்கு தெரியுமா?





thimir 5





கொஞ்சம் கூட உனக்கு
பொறுப்பேயில்லை
என என் அறையை
சுத்தம் செய்தபோது
நீ சொன்னபோது
அப்படியே என் உதடுகளையும்
சுத்தம் செய்துவிட்டுப்போ
என நான் கேட்டதும் என்ன
அப்படி வெட்கம் உனக்கு ?

45 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நவீன் கவிதை ரொம்ப romantic ஆக இருந்தது.நீங்கள் உண்மையாகவே உங்கள் மனைவியிடம் செய்தால் அவர்கள் ரொம்ப பாவம்.உங்கள் அன்புத் தொல்லையை தாங்க வேண்டுமே!ஆனால் கொடுத்து வைத்த மனைவிதான் போங்க

ILA (a) இளா சொன்னது…

// உன்னை போலவே
என் கைகளும் அடம்
பிடிக்கும் சொல்லிவிட்டேன்//
ஹ்ம்ம் கொஞ்சம் மீறல், மற்றபடி நவீனம்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
நவீன் கவிதை ரொம்ப romantic ஆக இருந்தது.நீங்கள் உண்மையாகவே உங்கள் மனைவியிடம் செய்தால் அவர்கள் ரொம்ப பாவம்.உங்கள் அன்புத் தொல்லையை தாங்க வேண்டுமே!ஆனால் கொடுத்து வைத்த மனைவிதான் போங்க //

வாங்க அனானி :)
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :)

இராம்/Raam சொன்னது…

நவின்,

அருமையான கவிதைகள்!!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ILA(a)இளா said...
// உன்னை போலவே
என் கைகளும் அடம்
பிடிக்கும் சொல்லிவிட்டேன்//
ஹ்ம்ம் கொஞ்சம் மீறல், மற்றபடி நவீனம். //

வாங்க இளா :))

மன்னிக்கப்படுவதற்கே மீறல்கள் அல்லவா ?? :)) மிக்க நன்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஜொள்ளுப் பேச்சி said...
இளா எனக்கு என்னமோ இதில் கவர்ச்சி மட்டும்தான் இருக்கு ஆபாசமா இல்லை.ஒரு காதலன் இல்லை கணவன் இப்படிதானே யோசிப்பான்!இதில் மீறல் தெரியவில்லை காதல் தெரிகின்றது //

வாங்க ஜொள்ளுப்பேச்சி !! :))

காதலான விமர்சனம் மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ராம் said...
நவின்,

அருமையான கவிதைகள்!!!! //

வாருங்கள் ராம் :))

வருகையும் தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது :))

பெயரில்லா சொன்னது…

//உன் திமிரை நான்
அடக்கமுடியுமா என
ஏன் கேட்கிறாய் ?
அப்புறம் திமிரிக்கொண்டு
ஓடுவாய் பரவாயில்லையா ?//

குறும்பு நவீன் !! :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸ்வேதா said...
//உன் திமிரை நான்
அடக்கமுடியுமா என
ஏன் கேட்கிறாய் ?
அப்புறம் திமிரிக்கொண்டு
ஓடுவாய் பரவாயில்லையா ?//

குறும்பு நவீன் !! :) //

வாங்க ஸ்வேதா :))
நன்றி வருகைக்கும் குறும்பான தருகைக்கும் :))

தாரிணி சொன்னது…

பொங்கி வழியும் திமிர்.. இருந்தாலும் ஒவ்வொரு திமிரையும் ரசிக்க முடிகிறது.. குறும்பு துள்ளி விளையாடுகிறது நவீன்..

பெயரில்லா சொன்னது…

super

பெயரில்லா சொன்னது…

கவிஞரே கவிதை நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

/கைகால்கள் அடங்கி இருக்கும்
என்றால் மட்டுமே
என்னுடன் சினிமாவிற்கு
வருவேன் என
ஏன் இப்படி அடம்பிடிக்கிறாய்
அப்புறம், உன்னை போலவே
என் கைகளும் அடம்
பிடிக்கும் சொல்லிவிட்டேன்/

மனதில் இடம் பிடித்தவர் அடம் பிடிக்க தானே செய்வார்??

கவிதைகளில் காதல் திமிருகிறது நவீன்!!!

பெயரில்லா சொன்னது…

"என் உதடுகளையும்
சுத்தம் செய்துவிட்டுப்போ
என நான் கேட்டதும் என்ன
அப்படி வெட்கம் உனக்கு"

கவிதைகள் அழகு உங்கள் குறும்பினைப் போல...
குறும்புகள் இனிமை உங்கள் தமிழினைப் போல...

வாழ்த்துகள்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தாரிணி said...
பொங்கி வழியும் திமிர்.. இருந்தாலும் ஒவ்வொரு திமிரையும் ரசிக்க முடிகிறது.. குறும்பு துள்ளி விளையாடுகிறது நவீன்.. //

வாங்க தரிணி :))
துள்ளும் விமர்சனம். நன்றி தாரிணி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
super //

வாங்க அனானி நன்றி :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//thurgah said...
கவிஞரே கவிதை நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள் //

வாங்க துர்கா :))
வருகையும் தருகையும் மகிழ்ச்சி :))

பெயரில்லா சொன்னது…

நிறைய இடத்தில் பிழைகள்.
திமிர் என்பதைத்தவிர மற்றவை வல்லினத்தைக்கொண்டிருக்க வேண்டும்.
தமிறி, திமிறும் என்றுதான் சொற்களுண்டு.
நீங்கள் எல்லாவற்றுக்கும் இடையினத்தைப் பயன்படுத்தியுள்ளீர்கள்.
தலைப்பு திமிறும் திமிர் என்றுதான் வந்திருக்க வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

எனக்கும் இப்படி குறும்பாய் காதலிக்க... இல்லை கவிதையெழுத கற்றுத் தாருங்களேன்... கொஞ்சும் ஆசை நிறைய குறும்பு உங்கள் கவிதையில்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// அருட்பெருங்கோ said...
/அப்புறம், உன்னை போலவே
என் கைகளும் அடம்
பிடிக்கும் சொல்லிவிட்டேன்/

மனதில் இடம் பிடித்தவர் அடம் பிடிக்க தானே செய்வார்??

கவிதைகளில் காதல் திமிருகிறது நவீன்!!! //

வாருங்கள் அருட்பெருங்கோ :))

திமிறும் விமர்சனங்களுக்கு மிக்க நன்றி!! எங்கே போய் விட்டீகள்? காணவில்லை ? :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இனியவள் புனிதா said...
"என் உதடுகளையும்
சுத்தம் செய்துவிட்டுப்போ
என நான் கேட்டதும் என்ன
அப்படி வெட்கம் உனக்கு"

கவிதைகள் அழகு உங்கள் குறும்பினைப் போல...
குறும்புகள் இனிமை உங்கள் தமிழினைப் போல...

வாழ்த்துகள் //

வாருங்கள் புனிதா :))
விமர்சனக்குறும்பு கவிஞனுக்கு கரும்பு :) வந்தமைக்கும் தந்தமைக்கும் மிக்க நன்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
நிறைய இடத்தில் பிழைகள்.
திமிர் என்பதைத்தவிர மற்றவை வல்லினத்தைக்கொண்டிருக்க வேண்டும்.
தமிறி, திமிறும் என்றுதான் சொற்களுண்டு.
நீங்கள் எல்லாவற்றுக்கும் இடையினத்தைப் பயன்படுத்தியுள்ளீர்கள்.
தலைப்பு திமிறும் திமிர் என்றுதான் வந்திருக்க வேண்டும்.//

மிக்க நன்றி அனானி அவர்களே !! ஆமாம் அப்படித்தான் வந்திருக்க வேண்டும் தவறை சுட்டிக்காடியதற்கு மிக்க நன்றி சரி செய்துவிடுகிறேன் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இனியவள் புனிதா said...
எனக்கும் இப்படி குறும்பாய் காதலிக்க... இல்லை கவிதையெழுத கற்றுத் தாருங்களேன்... கொஞ்சும் ஆசை நிறைய குறும்பு உங்கள் கவிதையில்... //

வாங்க புனிதா கற்றுத்தந்துவிட்டால் போயிற்று சரியா ?? :))

பெயரில்லா சொன்னது…

இனி நீ சிகரெட் பிடித்தால்
உன்னுடன் பேசவே போவதில்லை
என என்னுடன் சண்டையிட்டு
சென்ற சோகத்தை மறக்க
இரண்டு பாக்கெட் சிகரெட்
சாம்பலானது உனக்கு தெரியுமா?

Divya சொன்னது…

சில்மிஷங்கள் இல்லாத காதலா?
குறும்புகள் இல்லாத கூடலா??
இதெல்லாம் இல்லாத கவிதை-
நவீனின் கவிதையே அல்ல!!!

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள்!!! நவீன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வாங்க காண்டீபண் :) நன்றி !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
சில்மிஷங்கள் இல்லாத காதலா?
குறும்புகள் இல்லாத கூடலா??
இதெல்லாம் இல்லாத கவிதை-
நவீனின் கவிதையே அல்ல!!! //

வாங்க திவ்யா :))

சில்மிஷம் செய்யும் வருகை
குறும்பான தருகை
நன்றி திவ்யா :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//kulaai said...
வாழ்த்துக்கள்!!! நவீன். //

வாங்க குலாய் :))
வருகைக்கும் தருகைக்கும் நன்றிகள் பல !!!

கார்த்திக் பிரபு சொன்னது…

padam padam ella kavidhaigalm

thalaiva neenga unga blogil new post potta oru mail anupii sollunga..kast apptu kandu pidika vendiya dha iruku ..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கார்த்திக் பிரபு said...
padam padam ella kavidhaigalm

thalaiva neenga unga blogil new post potta oru mail anupii sollunga..kast apptu kandu pidika vendiya dha iruku .. //

வாங்க கார்த்திக் :))
படம் படம் உங்கள் விமர்சனம் :))
கண்டிப்பா இனி சொல்கிறேன் போதுமா ? :))

சாத்வீகன் சொன்னது…

திமிறித் திரியும் கவிதைகள்.
நன்று நவீன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சாத்வீகன் said...
திமிறித் திரியும் கவிதைகள்.
நன்று நவீன். //

வாருங்கள் சாத்வீகன் :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))

பெயரில்லா சொன்னது…

\\இனி நீ சிகரெட் பிடித்தால்
உன்னுடன் பேசவே போவதில்லை
என என்னுடன் சண்டையிட்டு
சென்ற சோகத்தை மறக்க
இரண்டு பாக்கெட் சிகரெட்
சாம்பலானது உனக்கு தெரியுமா?\\

நல்லா இரண்டு பாக்கெட் சிகரெட் அடிச்சுட்டு, அதுக்கு காரணம் சோகமா......அடிங்க!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\இனி நீ சிகரெட் பிடித்தால்
உன்னுடன் பேசவே போவதில்லை
என என்னுடன் சண்டையிட்டு
சென்ற சோகத்தை மறக்க
இரண்டு பாக்கெட் சிகரெட்
சாம்பலானது உனக்கு தெரியுமா?\\

நல்லா இரண்டு பாக்கெட் சிகரெட் அடிச்சுட்டு, அதுக்கு காரணம் சோகமா......அடிங்க!//

என்ன இப்படி சொல்லிட்டீங்க :)))
புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுன்னு
பெரியவங்க சொல்லி இருக்காங்களே
நீங்க கேள்விப்பட்டது இல்லையா? :))))))
மிக்க நன்றி வருகைக்கும்
தந்த குட்டுக்கும் :)))

Unknown சொன்னது…

நவீன் நல்லாயிருக்குய்யா:-)

மங்களூர் சிவா சொன்னது…

திமிறும் திமிர்

டைட்டிலே செம கிக்கா இருக்கு எனக்கு என்ன என்னவோ தோனுது... ம் போங்கப்பு

:-)))))

cheena (சீனா) சொன்னது…

நான் சொல்ல வேண்டியதெல்லாம் மறுமொழி இட்டவங்கல்லாம் சொல்லிட்டாங்க - அத்தனைக் கருத்துக்களுக்கும் என் உடன்பாடு உண்டு.

புகைப்படங்கள் அருமை - கவிதைக்கு ஏற்றாற்போல் இணைத்தது பாராட்டத் தக்கது. வாழ்த்துகள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தேவ் | Dev said...
நவீன் நல்லாயிருக்குய்யா:-)//

வாங்க தேவ் :))
ஆகா மிக்க மகிழ்ச்சி தேவ் !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மங்களூர் சிவா said...
திமிறும் திமிர்

டைட்டிலே செம கிக்கா இருக்கு எனக்கு என்ன என்னவோ தோனுது... ம் போங்கப்பு

:-)))))//

வாங்க சிவா :)))
ஆஹா என்ன தோணுது உங்களுக்கு சொல்லிட்டுதான் போங்களேன் ;)))) மிக்க நன்றி சிவா :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//cheena (சீனா) said...
நான் சொல்ல வேண்டியதெல்லாம் மறுமொழி இட்டவங்கல்லாம் சொல்லிட்டாங்க - அத்தனைக் கருத்துக்களுக்கும் என் உடன்பாடு உண்டு.

புகைப்படங்கள் அருமை - கவிதைக்கு ஏற்றாற்போல் இணைத்தது பாராட்டத் தக்கது. வாழ்த்துகள்.//

வாருங்கள் சீனா :)))
அதனால் என்ன தங்கள் வருகையே எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது !! மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))

Divya சொன்னது…

\\உன் திமிரை நான்
அடக்கமுடியுமா என
ஏன் கேட்கிறாய் ?
அப்புறம் திமிரிக்கொண்டு
ஓடுவாய் பரவாயில்லையா ?\\

எப்படியோ 'ஓடி' எஸ்கேப் ஆகிட்டாங்க இல்ல!!


\\நீ வருவதைப் பார்த்த
புகைவண்டி அறிவிப்பாளர்
சொன்னது
ஒரு அழகிய திமிர்
திமிறும் அழகோடு வருகிறது\

இவரு எதுக்கு இந்த 'சைட்' அடிக்கிற வேலையும் சேர்த்து பார்கிறார்??

\\இனி நீ சிகரெட் பிடித்தால்
உன்னுடன் பேசவே போவதில்லை
என என்னுடன் சண்டையிட்டு
சென்ற சோகத்தை மறக்க
இரண்டு பாக்கெட் சிகரெட்
சாம்பலானது உனக்கு தெரியுமா?\\

இரண்டு பாக்கெட் சிகரெட் புடிச்சது கொழுப்பு, அதுக்கும் இவ தான் காரணமா??
இதெல்லாம் அநியாயம் சார்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\உன் திமிரை நான்
அடக்கமுடியுமா என
ஏன் கேட்கிறாய் ?
அப்புறம் திமிரிக்கொண்டு
ஓடுவாய் பரவாயில்லையா ?\\

எப்படியோ 'ஓடி' எஸ்கேப் ஆகிட்டாங்க இல்ல!! //

வாங்க திவ்யா :)))
எங்கயோ ஓட முடியுமா என்ன..? :)))


\\நீ வருவதைப் பார்த்த
புகைவண்டி அறிவிப்பாளர்
சொன்னது
ஒரு அழகிய திமிர்
திமிறும் அழகோடு வருகிறது\

இவரு எதுக்கு இந்த 'சைட்' அடிக்கிற வேலையும் சேர்த்து பார்கிறார்?? //

:)))) என்ன கேள்வி இது..?
ஏதோ பாவம் சைட் அடிச்சுட்டார் .. விடுங்களேன்... :))))

\\இனி நீ சிகரெட் பிடித்தால்
உன்னுடன் பேசவே போவதில்லை
என என்னுடன் சண்டையிட்டு
சென்ற சோகத்தை மறக்க
இரண்டு பாக்கெட் சிகரெட்
சாம்பலானது உனக்கு தெரியுமா?\\

இரண்டு பாக்கெட் சிகரெட் புடிச்சது கொழுப்பு, அதுக்கும் இவ தான் காரணமா??
இதெல்லாம் அநியாயம் சார்! //

ஹஹஹஹ.... அநியாயமா... சரிதான்.. :))))

வருகைகும் அழகான... குறும்பான.. தருகைக்கும் மிக்க நன்றி திவ்யா..:)))

ரிதன்யா சொன்னது…

//கொஞ்சம் கூட உனக்கு
பொறுப்பேயில்லை
என என் அறையை
சுத்தம் செய்தபோது
நீ சொன்னபோது
அப்படியே என் உதடுகளையும்
சுத்தம் செய்துவிட்டுப்போ
என நான் கேட்டதும் என்ன
அப்படி வெட்கம் உனக்கு ?//

ஒருமையில் 'டி' சேர்த்து எழுதினர்ல் நன்றாய் இருக்கும் உரிமையாய்யும் இருக்கும்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மகி் said...

//கொஞ்சம் கூட உனக்கு
பொறுப்பேயில்லை
என என் அறையை
சுத்தம் செய்தபோது
நீ சொன்னபோது
அப்படியே என் உதடுகளையும்
சுத்தம் செய்துவிட்டுப்போ
என நான் கேட்டதும் என்ன
அப்படி வெட்கம் உனக்கு ?//

ஒருமையில் 'டி' சேர்த்து எழுதினர்ல் நன்றாய் இருக்கும் உரிமையாய்யும் இருக்கும் //

வாருங்கள் மகி.. :)))
ஆம் அழகாக இருக்கும் அல்ல..?? இனி அப்படி எழுதுகிறேன்.. :))) மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்...