செவ்வாய், ஏப்ரல் 25, 2006

தரிசில்காடு



யாருமற்ற வீதிகளினூடே
நடந்து செல்கையில்
சிறிது தாகமெடுத்தது.
அரவமற்றுப் போன
வீதிகள் என்னைப் பார்த்து
கைகொட்டிச் சிரித்தன
நீர்வேண்டுமா தணிக்க?
வினவல் கேட்டு விழித்தேன்
ஆமென்ற தலையாட்டலில்
என் அகம் வீழ்ந்தது
அகந்தையை புதைக்க
நிலம் தோண்டு
தண்ணீர் கிடைக்கக்கூடும்
மண்டையில் மரமின்றி
நிலத்தில் மரமிடு
நீராறு நிலம் பிளக்கும்
செய்வாயா? தகம் தணிப்பேன்
கேட்டுவிட்டுக் கேவினேன்
தூரத்தில் ஆடுகள்
தரிசில்
மேய்ந்துகொண்டிருந்தன !


செவ்வாய், ஏப்ரல் 04, 2006

களித்த இரவு


நன்றாக நினைவிருக்கிறது
குளிரான அந்த இரவு
நீண்ட நாட்களுக்குப்
பிறகு
சந்திக்கிறோம்
யாருக்கோ
திருமணம்
சாக்கு போக்கு சொல்லி
வந்திருக்கிறேன்
உன்னைப் பார்க்கதான்

எனக்கும் உனக்கும்
மட்டும் புரிகிறது
கரும்புகள்
இனிக்கமட்டும்
செய்வதில்லை
இரவு விழிக்கிறது
நம் உணர்வுகளும்
நீண்ட நாட்களாக
இரையில்லை

கொட்டிக் கிடக்கிறது
நம்முன் அடர்த்தியான
தனிமை
ஏக்கமான
உணர்வுகளோடு
துவங்கத்தான்
நினக்கையில்
துவள்கிறது எல்லாம்


என்று தணியும் என்று
விம்மித்தணியும்
மார்புகள்
இன்றே தணியென
அலரும் கொலுசுகள்
காற்றில் பரவும்
வெப்பமான
மூச்சுக் காற்று
எச்சில் பட
ஏக்கமாகும்
உதடுகள்


வீசும் காற்றிலெல்லாம்
மூச்சுக்காற்றின்
வெப்பம்
கானல் தெரித்த
இரவு
ராக்கோழிகளின்
கூவல்கள்
கூர்க்காவின்
விசில் சத்தம்
அலறாமல்
அலறும் நம்
உணர்வுகள்

அணைத்தாலும்
அணையாத தீ
தீண்டத் தீண்ட
தூண்டப்படுகிறது
சிம்மினியாக
தொடங்கி
காடா விளக்காக
காற்றினில் காந்தல்!
தனிமையின்
கொடுமை
வேரருக்கப்படுகிறது

களித்த இரவு
கழிகிறது
இரவு கொன்ற
களிச்சிரிப்பில்
காலானாய்
ஆதவன்
சில இரவுகள்
ஏன் நீள்வதில்லை ?