ஞாயிறு, ஜூன் 03, 2007

செல்லமாய் காதலித்து...

chellam1



நான் கவிதை
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என



chellam2


நமக்குள் ஆரம்பிக்கும்
ஒவ்வொரு சண்டையும்
வாயிலே ஆரம்பித்து
நம் இதழ்களிலே
முடிக்கப்படுகிறது





chellam3


இனி உன்னுடன் பேச
போவதில்லை என
சொல்லிவிட்டு பேசாமல்
இருக்கிறாய்
சரி நீ
உபயோகப்படுத்தாத உன்
உதடுகளை நான்
ஒரு முத்ததிற்கு
உபயோகப்படுத்திக்கொள்ளலாமா?





chellam4


சில நேரங்களில்
சில பொய்கள்
காதலுக்கு
நன்மை பயக்கும்
‘நீ கோபப்படும்போது
இன்னும் அழகாய் இருக்கிறாய்’
என்பதைப் போல





chellam5


இதுக்கு முன்னாடி இப்படி
எத்தனை பொய் சொன்னாய்
என்னிடம் என நீ கோபமாக
கேட்கிறாய்
‘ நான் உன்னிடம் பொய்யே
சொன்னதில்லைடி இதுதான்
முதன் முறை ! ‘
நான் சொல்வது பொய் என
தெரிந்தும் ரசிக்கிறாய்





chellam6


உன்னைத்தவிர வேற
எந்தப்பெண்ணையும்
பார்க்கக்கூடாதென
சண்டையிடுகிறாய்
சரி இனி பார்க்கமாட்டேன்
என உன்னைப்பார்த்தாலும்
‘அப்படிப் பார்க்காதே!’
என ஏற்படும் வெட்கத்தை
மறைக்க கோபமாக உன்
முகத்தைக் காட்ட நீ படும்பாடு
இருக்கிறதே !!





chellam7


ஏதேனும் உன்னிடம்
சண்டையிடாமல்
இப்பொழுதெல்லாம்
என்னால் இருக்க முடிவதில்லை
ஊடிக் கூடின்
கோடி ஆனந்தம் !





chellam8



அவகூட பேசரப்போ என்ன
ஈஈன்னு இளிப்பு உனக்கு? என
சண்டை போடுகிறாய்
சரியென சிரிக்காமல் பேசினாலோ
அப்படி என்ன சீரியசா
பேசினே அவகூட
என சந்தேகத்தோடு கேட்கிறாய்





chellam9



கொஞ்ச நேரம் படம்பார்க்க
விடேன் என கோபமாகக்
கூறுகிறாய்
இப்படிக் கூறியே
என்னைக் கெஞ்ச வைத்து
உன்னைக் கொஞ்ச வைப்பதில்
என்னதான்
ஆனந்தமோ !





chellam10



செல்லச் சண்டையும்
கள்ளப் பார்வையும்
குட்டிப் பொய்களும்
சிணுங்கள் முத்தங்களும்
காதல் கொண்டு
ஊடல் கொண்டவருக்கான
கொண்டாட்டங்கள்
எனப்படும்