செவ்வாய், ஜனவரி 29, 2008

எழுதியதில் மிகவும் ரசித்தது...

எழுதியதில்
பிடித்ததை
எழுதப் பணித்த
திவ்யாவுக்கு...
இந்தப் பதிவு...

ஆதலினாலில்
சென்ற வருடம்
பூத்த பூக்கள்
மொத்தம் பத்து

மிகவும் பிடித்த
கவிதை தொகுப்பு





சினம் கொஞ்சுமா..?
இல்லைக் கெஞ்சுமா..?
கொஞ்சம் மிஞ்சுமா..?








சொல்லுங்களேன் நீங்களும் தான்...

அழைக்கிறேன் என்னுடன் ஓட்டத்தில் இணைய...

எழில்
ராம்

செவ்வாய், ஜனவரி 15, 2008

கொஞ்சலோ கொஞ்சல்..




ஓயாமல் நீ பேசிக்கொண்டே
இருப்பதாக ரொம்ப
பீற்றிக்கொள்ளாதே !!
பேசவே முடியாதபடி
உன் உதடுகளைக் களவாடி
விடும் திருட்டு உதடுகள்
என்னுடயவை...









உன்னை வெட்கப்படவைத்து
நான் படுத்தியெடுப்பதாக
அழகாக சலித்துக்கொள்கிறாய்
உன் வெட்கங்கள் என்னைப்
படுத்தும் பாடு உனக்கென்னடி
தெரியும் செல்ல குரங்கே









எப்பொழுதும் நான் தான்
கேட்கவேண்டுமா ?
ஏன் நீயாக கொடுக்க மாட்டாயா என
கேட்கிறாய்
நீ கேட்கும்போது
வழியும் உன் நாணக்குரல்
என்னையே வெட்கப்படுத்துவது
தெரியுமா..?











நல்ல பிள்ளையாகத்தான்
இருக்கின்றன
இந்த விரல்கள்
நீ அருகினில் வரும் வரை













ஏதோ ரகசியம் சொல்கிறேன்
என அருகினில்
அழைத்து நீ
செய்ததை
இனி ரகசியமாகத்தான்
வைக்கவேண்டும்
ச்ச்சீய் போடா...








இது தப்பில்லையா
என என் உதடுகள்
உன் உதட்டுக்குள்
கேட்டபோது
தப்புதான்
இப்படி கேட்பது
என்கிறாய்
ஹய்யோ போடா..










நம் பெயரை என் மார்பினில்
எழுதத்தான்
இவ்வளவு கூர்மையாக
நகங்கள் வளர்த்தாயாடி..?
நானும் எழுதட்டுமா என்றால்
மட்டும் இப்படி ஓடினால் எப்படி?






சமையல் அறைக்கெல்லாம்
வராதே என நீ சொன்ன
பின்புதான் தெரிந்தது
அங்கே அணைக்க வேண்டியது
அடுப்பை மட்டும் அல்ல
என்று...








எங்கே ஒளித்துவைத்திருந்தாய்
இவ்வளவு காதலையும்
எனக்கேட்டால்
மனதினில் தான்
என சாதாரணமாகச்சொல்கிறாய்
இரு இரு அங்கே இன்னும்
என்னவெல்லாம்
ஒளித்து வைத்திருக்கிறாய்
என கண்டுபிடிக்கிறேன்








உன்னைக்
கொஞ்சும் வேலையை
என் உதடுகளுக்கும்
கெஞ்சும் வேலையை
என் விரல்களுக்கும்
கொடுத்துவிட்டு
நான் ரசிக்கும் வேலையை
மட்டும்தான்
செய்துகொண்டிருக்கிறேன்
திருப்தியாடி..?










பேசப் பேச வழியும்
உன் நாணங்களையும்
உன் மனதுக்குளிருந்து
எட்டி எட்டிப்பார்க்கும்
எனக்கான உன் காதலையும்
சேமித்துவை
என்னுடைய வரதட்சிணையே
அவைதான்...








என்னைக் காக்க வைத்த
ஒவ்வொரு நொடிக்கும்
சரமாரியாக
எங்கு வேண்டுமானாலும்
முத்தம் வழங்கும் தண்டனையை
உனக்கு
நிறைவேற்றப்போகிறேனடி...
தயாராக இரு








கொஞ்சிக் கொஞ்சியே
என்னிடம் காரியம் சாதிக்கிறாய்
என குற்றம் சுமத்தாதே
உன் தாய்க்குப்பின் உன்னை
நெஞ்சினில் சுமக்கும்
என் காதல் குழந்தையை
நான் கொஞ்சாமல்
வேறு யார் கொஞ்சுவார்கள்







ஏன் இப்படி இருக்கிறேன்..?
உன்னைக் காதலித்தபின்
வேறு பெண்களே என்
கண்களுக்கு தெரியவில்லையே..
என்னடி செய்தாய் ..?







மார்போடு என்னை
சேர்த்தணைத்தபோது
ஒரு தாய் போல
உணர்ந்தேன் உன்னை
தெரியுமாடி..?








நான் ஏன்
உன் மனைவியாக
வரவேண்டும்
என நீ
கேட்பது
ஏன்
உனக்கு மூச்சு வேண்டும்
எனக் கேட்பதுபோல்
இருக்கிறது