திங்கள், ஜூன் 23, 2008

வெட்கம் என்ன நிறம்...?






நான் கலராகி விட்டேனா
எனக் கேட்கிறாய்
நீ எந்தக் கலராக
இருந்தாலும்
எனக்குப் பிடித்த
கலர் நீதானே..?







ஏன் நான் நிறம்
குறைவாகப் பிறந்தேன்
ஏனடி அடிக்கடி
சலித்துக்கொள்கிறாய் ?
உன் நிறையே
உன் நிறம் தான்...
உணர்வாயா..?





சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?





என் நிறமே எனக்குப்
பிடிக்கவில்லை
என அடிக்கடி
அழகாகக் குறைபட்டுக்
கொள்கிறாய்
எனக்குப் பிடித்ததே
உன் நிறம் தான்
என உணராமல்...






இந்த சேலை
உன் நிறத்துக்கு
ஒத்துவருமா என
என்ன சந்தேகம்
உனக்கு..?
எந்த சேலை
கட்டினாலும்
நீ சேலை
கட்டிய சிலை
போல் இருக்கிறாய்
தெரியுமா..?





இப்படி உன் நிறம்
பற்றி ஏணடி அடிக்கடி
கவலைப் படுகிறாய்..?
விக்ரகம்
தங்கமாயிருந்தாலென்ன..?
கல்லாய் இருந்தாலென்ன..?





என் நிறம்
யாருக்குப் பிடிக்கும்
எனக் கேட்கிறாய்...
எந்த நிறமாக இருந்தாலும்
அள்ளிக்
கொஞ்சத் தூண்டும்
என் செல்லப்
பூனைக்குட்டி நீ...





எந்த நிறமாக
இருந்தாலும்
உன் வெட்கங்கள்
எல்லாமே
எனக்குப்
பிடித்த
நிறம் தானடி
என் செல்லமே..





வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான

உன்
உள்ளமே அழகு...