திங்கள், ஏப்ரல் 06, 2009

இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...?


என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...நானும் நீயும் பேசிக்கொண்டிருக்கையில்
தேவை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
இந்த நேரத்தை என்ன செய்யலாம்..?
அதற்கும் ஒரு முத்தம் கொடுத்து
அணைத்து விடட்டுமா
உன்னைப் போலவே..?
இவ்வளவு இறுக்கமான
அணைக்காதேடா எனக்கு
மூச்சுத்திணறுகிறது எனக்
கொஞ்சலாகச் சொல்கிறாய்...
உனக்காவது பரவாயில்லை
உன் கொஞ்சல் கேட்டாலே
எனக்கு மூச்சுத்திணறுகின்றதடி
குட்டிபிசாசே...சரியான திருடண்டா நீ
என சொல்கிறாய்
அடிபாவி... உன்னிடம்
திருடிய முத்தங்களை
உன்னிடம் தானே
கொடுக்கிறேன்..
இதற்கே இப்படி திருட்டுப்பட்டம்
கட்டினால் அப்புறம்
கொள்ளைக்காரனாகிவிடுவேன்
ஜாக்கிரதை...இரவுகள் எல்லாம் தீர்ந்த
பின்னும் பேசிக்கொள்ள
நமக்கு என்னெல்லாமோ
இருக்கின்றன...
ஆனாலும் சலிப்பதேயில்லை
நிறுத்தவும் மனதேயில்லை
உன் கொஞ்சலான
முத்தங்களைப்போல...காலமெல்லாம் காதலோடு
இருந்துவிடலாம் என்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
உன்னை சந்திக்கும் வரை...எப்பொழுதும் உன் அணைப்புக்குள்
இருக்கவேண்டும் என்ற
பேராசையெல்லாம்
எனக்குக் கிடையாது...
உன் கழுத்துச் சங்கிலியின்
மையமாக என்னைத்
தூக்கிலிட்டாலே போதும்...

பிழைத்துக் கொள்வேன்...


இந்தத் துப்பட்டாவுக்கு வந்த
வாழ்க்கையைப் பாரேன்...
உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு
எனக்குப் பழிப்பு காட்டுகின்றது..
சொல்லி வை...
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு
நான் சும்மா இருக்கமாட்டேனடி...அச்சசோ இந்த சுரிதார்
கொஞ்சம் சின்னதாகிடுச்சுடா
என அழகான முகம் சுழித்துச்
சொல்கிறாய்...
இப்படி இருமுனைத் தாக்குதல்
நடத்தினால் என்ன
சொல்வது நான்...
திருட்டுச் சுரிதார்
இவ்வளவு நாளும்
உன்னை
எப்படியெல்லாம்
மறைத்திருக்கிறது பாரேன்...கல்யாணதுக்கு அப்புறமும்
என்னை இதே மாதிரி
காதலிப்பாயாடா என
நீ கேட்டாயல்லவா...?
கண்டிப்பாக இதே மாதிரி
காதலிக்க மாட்டேண்டி..
வேற மாதிரி தான் காதலிப்பேன்
என கண்சிமிட்டிக்கொண்டே
சொன்னபோது மீண்டும் உன்
வெட்கம் திருடிய இன்பம்
அடைந்தேன்...62 கருத்துகள்:

Divya சொன்னது…

ரொம்பபபபப.......நாளைக்கு அப்புறமா கவிதை பதிவு போட்டிருக்கிறீங்க கவிஞரே, ஏன் இத்தனை பெரிய இடைவெளி ஒரு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும்??
அடிக்கடி பதிவு போடலாமே ......ப்ளீஸ்:))

Divya சொன்னது…

\\என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...\\

இப்படி சொன்னா...... உங்களைதிருடவும் விடாம....தானாக கொடுக்கிறதையும் கொடுக்காம விட்டுட போறாங்க, பார்த்து கவிஞரே!!!

Divya சொன்னது…

\\காலமெல்லாம் காதலோடு
இருந்துவிடலாம் என்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
உன்னை சந்திக்கும் வரை...\\


ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்:))

Divya சொன்னது…

\\நானும் நீயும் பேசிக்கொண்டிருக்கையில்
தேவை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
இந்த நேரத்தை என்ன செய்யலாம்..?
அதற்கும் ஒரு முத்தம் கொடுத்து
அணைத்து விடட்டுமா
உன்னைப் போலவே..?\\

ரசிக்கும்படியான வரிகள்:))

Divya சொன்னது…

வழக்கம்போல் குறும்பு வரிகளுடன்.........................கவிதைகள் ஒவ்வொன்றும் அழகாக ஜொலிக்கின்றது!!!!

Divya சொன்னது…

தொடர்ந்து பல அழகழகான கவிதைகளை பதிவிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிஞரே:))))

புதியவன் சொன்னது…

//என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...//

வரிகளில் தித்திப்பை உணர முடிகிறது கவிஞரே...

புதியவன் சொன்னது…

//இவ்வளவு இறுக்கமான
அணைக்காதேடா எனக்கு
மூச்சுத்திணறுகிறது எனக்
கொஞ்சலாகச் சொல்கிறாய்...
உனக்காவது பரவாயில்லை
உன் கொஞ்சல் கேட்டாலே
எனக்கு மூச்சுத்திணறுகின்றதடி
குட்டிபிசாசே...//

இந்த கவிதையை படிக்கும் போது எங்களுக்கும்
மூச்சுச்திணறுகிறது அதுக்கு இப்ப என்ன பதில்
சொல்றீங்க...?

புதியவன் சொன்னது…

//எப்பொழுதும் உன் அணைப்புக்குள்
இருக்கவேண்டும் என்ற
பேராசையெல்லாம்
எனக்குக் கிடையாது...
உன் கழுத்துச் சங்கிலியின்
மையமாக என்னைத்
தூக்கிலிட்டாலே போதும்...
பிழைத்துக் கொள்வேன்...//

மிகவும் ரசித்தேன் இந்த கவிதையை...

புதியவன் சொன்னது…

//இந்தத் துப்பட்டாவுக்கு வந்த
வாழ்க்கையைப் பாரேன்...
உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு
எனக்குப் பழிப்பு காட்டுகின்றது..
சொல்லி வை...
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு
நான் சும்மா இருக்கமாட்டேனடி...//

என்ன கவிஞரே ஒரே மிரட்டலா இருக்கு...?

புதியவன் சொன்னது…

//அச்சசோ இந்த சுரிதார்
கொஞ்சம் சின்னதாகிடுச்சுடா
என அழகான முகம் சுழித்துச்
சொல்கிறாய்...
இப்படி இருமுனைத் தாக்குதல்
நடத்தினால் என்ன
சொல்வது நான்...
திருட்டுச் சுரிதார்
இவ்வளவு நாளும்
உன்னை
எப்படியெல்லாம்
மறைத்திருக்கிறது பாரேன்...//

ரொம்ப அழகிய ரொமாண்டிக்...

எல்லா கவிதைகளிலும் எப்போதும் போல்
நவீன் டச்...வாழ்த்துக்கள் நவீன்...

யாழிபாபா சொன்னது…

it s really very nice

Revathyrkrishnan சொன்னது…

நவீன் ஜி... மறுபடியும் கன்னம் சிவ‌க்க வைக்கும் கவிதைகளோடு களமிறங்கி விட்டீர்கள் போலிருக்கிறது... ம்ம்... கலக்குங்க... வாழ்த்துக்கள்

Revathyrkrishnan சொன்னது…

///இரவுகள் எல்லாம் தீர்ந்த
பின்னும் பேசிக்கொள்ள
நமக்கு என்னெல்லாமோ
இருக்கின்றன///அட பேசறதுக்கு டைம் இருக்கா நவீன் உங்களுக்கு? நம்பிட்டோம்
.
..
...
....
இல்லப்பா.. கவிதை எழுதவே டைம் சரியாயிருக்குமேன்னு நெனச்சேன்;)))

//ஆனாலும் சலிப்பதேயில்லை
நிறுத்தவும் மனதேயில்லை
உன் கொஞ்சலான
முத்தங்களைப்போல..///

சலிப்பதேயில்லையா? :))) அழகு...

Revathyrkrishnan சொன்னது…

//காலமெல்லாம் காதலோடு
இருந்துவிடலாம் என்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
உன்னை சந்திக்கும் வரை...//

அர்த்தம் புரியலை... இப்போ நினைப்பை எப்படி மாற்றிக் கொண்டீர்கள்?

Revathyrkrishnan சொன்னது…

//மீண்டும் உன்
வெட்கம் திருடிய இன்பம்
அடைந்தேன்...//


உங்களை திருடன் என்று சரியாக‌த்தான் அழைக்கிறார்கள் உங்கள் காதலி;)))
முத்தம்,வெட்கம் என்று வரிசையாக எத்தனை தான் திருடுவீர்கள்? படிக்கிறவர் மனதையும் சேர்த்து திருடி விடுகிறீகளா?

Revathyrkrishnan சொன்னது…

இந்த முறை கவிதைகளிலும் சரி படங்களிலும் காதல் வழிகிறது... நீங்களும் கூட கொஞ்சம்... ஹிஹிஹி. சரி விடுங்க... என்ஜாய் பண்ணுங்க... வாழ்த்துக்கள்

கண்ணா.. சொன்னது…

\\திருட்டுச் சுரிதார்
இவ்வளவு நாளும்
உன்னை
எப்படியெல்லாம்
மறைத்திருக்கிறது பாரேன்...\\

அருமை......!!! மிகவும் ரசித்தேன்......

தொடர்ந்து எழுதுங்கள்....

அத்திரி சொன்னது…

//என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...//


திருட்டு மாங்காய் எப்பவும் ருசிதான் அருமையான வரிகள்

அத்திரி சொன்னது…

//இவ்வளவு இறுக்கமான
அணைக்காதேடா எனக்கு
மூச்சுத்திணறுகிறது எனக்
கொஞ்சலாகச் சொல்கிறாய்...
உனக்காவது பரவாயில்லை
உன் கொஞ்சல் கேட்டாலே
எனக்கு மூச்சுத்திணறுகின்றதடி
குட்டிபிசாசே...//


இந்த வரிகளில் எனக்கு மூச்சு திணறுகிறது.....

நாணல் சொன்னது…

வழக்கம் போல எல்லா கவிதையும் அருமை....

Ravishna சொன்னது…

எல்லா வரிகளுமே நன்றாக இருக்கிறது. ஏன் மாதம் ஒரு பதிவு தான் போடுவீங்கள???

நட்புடன்,
ரவிஷ்னா

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஆஹா.... பாஸ் கண்ணா பிண்ணானு கண்ண கட்டுது போங்க... ரொம்ப ரசிச்சேங்க... சாரி இரசிக்க வைச்சிட்டிங்க...

பட்டாம்பூச்சி சொன்னது…

உணர்வுப்பூர்வமான காதல் வரிகள்.
அருமை.

FunScribbler சொன்னது…

ஆஹா, மறுபடியும் வந்துவிட்டார் குரு! கலக்கலான கவிதைகள்!

FunScribbler சொன்னது…

//என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...//

எப்படிங்க இப்படிலாம் யோசிக்கிறீங்க... சூப்பர்!

FunScribbler சொன்னது…

//அச்சசோ இந்த சுரிதார்
கொஞ்சம் சின்னதாகிடுச்சுடா
என அழகான முகம் சுழித்துச்
சொல்கிறாய்...
இப்படி இருமுனைத் தாக்குதல்
நடத்தினால் என்ன
சொல்வது நான்...
திருட்டுச் சுரிதார்
இவ்வளவு நாளும்
உன்னை
எப்படியெல்லாம்
மறைத்திருக்கிறது பாரேன்...//

அசைவம் தூக்கலா இருக்குது நவீன்! :)

FunScribbler சொன்னது…

//வேற மாதிரி தான் காதலிப்பேன்
என கண்சிமிட்டிக்கொண்டே
சொன்னபோது மீண்டும் உன்
வெட்கம் திருடிய இன்பம்
அடைந்தேன்...//

really fantastic. classic one! too goodddddd as usual! all the best. keep rocking

யாத்ரா சொன்னது…

ரொம்ப நல்லா எழுதறீங்க, எல்லாமே அனுபவங்களா, கொடுத்து வச்சவங்க நீங்க

Princess சொன்னது…

எப்படீங்க இப்படி????
ஒண்ணுக்கொண்ணு சளைக்காதக் கவிதைகள்...நிரம்ப ஆழகு

பெயரில்லா சொன்னது…

எல்லா வரிகளும் இரசித்து கன்னம் சிவக்க வைக்கின்றன :">

சுபானு சொன்னது…

அழகான வரிகள்... :)

சுபானு சொன்னது…

//இரவுகள் எல்லாம் தீர்ந்த
பின்னும் பேசிக்கொள்ள
நமக்கு என்னெல்லாமோ
இருக்கின்றன...
ஆனாலும் சலிப்பதேயில்லை
நிறுத்தவும் மனதேயில்லை
உன் கொஞ்சலான
முத்தங்களைப்போல...//

அருமை...

சுபானு சொன்னது…

//இந்தத் துப்பட்டாவுக்கு வந்த
வாழ்க்கையைப் பாரேன்...
உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு
எனக்குப் பழிப்பு காட்டுகின்றது..
சொல்லி வை...
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு
நான் சும்மா இருக்கமாட்டேனடி...
//
அனுபவித்து எழுதிய வரிகளா... ?
அழகான வரிகள்... :)

ஆதவா சொன்னது…

நன்றாக காதலைப் பிழிந்து எழுதியிருக்கிறீர்கள். படங்களும் கொஞ்சல்.... அருமை!!!

வாழ்த்துகள்

vinodpragadeesh சொன்னது…

beauuuuuuuuuuuuuuuutiful nothing else to find to greet your poetries

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

அழகான காதல் கவிதைகள். மிகவும் ரசித்தேன். வெகு மாதங்களுக்குப் பிறகு உங்கள் வலைத்தளத்திற்கு வருகிறேன். மீண்டும் வரவேற்கிறீர்கள் அதே காதலுடன். வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்

யாழினி சொன்னது…

அஹா நவீன் கவிதைகள் மறுபடியும் வலைப்பூக்களில்...

எததனை முறை தான் உங்களது கவிதைகளைப் பார்த்து தித்திப்பது!

கவிதைகள் யாவும் மிக நன்று.

வாழ்த்துக்கள்!

Maddy சொன்னது…

என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...


நீங்கள் படு பயங்கர கொள்ளைகாரர் போல தான் தெரிகிறது .அருமை

மலர்விழி சொன்னது…

ம்ம்ம்...
என்னவென்று சொல்வது...
அழகு அழகு, ஒவ்வொரு சொற்களும், படங்களும்!
தொடருங்கள், காதல் பயணத்தை!

priyamudanprabu சொன்னது…

////
என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...
///

நானும் ஆதத்தாங்க நினைத்தேன்

priyamudanprabu சொன்னது…

///
சரியான திருடண்டா நீ
என சொல்கிறாய்
அடிபாவி... உன்னிடம்
திருடிய முத்தங்களை
உன்னிடம் தானே
கொடுக்கிறேன்..
இதற்கே இப்படி திருட்டுப்பட்டம்
கட்டினால் அப்புறம்
கொள்ளைக்காரனாகிவிடுவேன்
ஜாக்கிரதை...
/////


ஆஹா

priyamudanprabu சொன்னது…

எல்லாமே ரசிக்கும்படியான வரிகள்

Unknown சொன்னது…

//நானும் நீயும் பேசிக்கொண்டிருக்கையில்
தேவை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
இந்த நேரத்தை என்ன செய்யலாம்..?
அதற்கும் ஒரு முத்தம் கொடுத்து
அணைத்து விடட்டுமா
உன்னைப் போலவே..?//

சுத்தம் :-))

//இவ்வளவு இறுக்கமான
அணைக்காதேடா எனக்கு
மூச்சுத்திணறுகிறது எனக்
கொஞ்சலாகச் சொல்கிறாய்...
உனக்காவது பரவாயில்லை
உன் கொஞ்சல் கேட்டாலே
எனக்கு மூச்சுத்திணறுகின்றதடி
குட்டிபிசாசே...//

குட்டிபிசாசா சரி தான் :-))

//சரியான திருடண்டா நீ
என சொல்கிறாய்
அடிபாவி... உன்னிடம்
திருடிய முத்தங்களை
உன்னிடம் தானே
கொடுக்கிறேன்..
இதற்கே இப்படி திருட்டுப்பட்டம்
கட்டினால் அப்புறம்
கொள்ளைக்காரனாகிவிடுவேன்
ஜாக்கிரதை...//

:-)))

//காலமெல்லாம் காதலோடு
இருந்துவிடலாம் என்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
உன்னை சந்திக்கும் வரை...//

:-ஒ

//எப்பொழுதும் உன் அணைப்புக்குள்
இருக்கவேண்டும் என்ற
பேராசையெல்லாம்
எனக்குக் கிடையாது...
உன் கழுத்துச் சங்கிலியின்
மையமாக என்னைத்
தூக்கிலிட்டாலே போதும்...
பிழைத்துக் கொள்வேன்...//

அழகு :-))

//இந்தத் துப்பட்டாவுக்கு வந்த
வாழ்க்கையைப் பாரேன்...
உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு
எனக்குப் பழிப்பு காட்டுகின்றது..
சொல்லி வை...
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு
நான் சும்மா இருக்கமாட்டேனடி...//

:-))))))))))))

அத்தனையும் சூப்பர் எல்லாத்துக்கும் ஏதாவது கமெண்ட் எழுதனும்னு நினைச்சேன் பட் முடியல நல்லா இருக்கு அன்ன கவிதைகள் வழமை போலவே

Thamira சொன்னது…

வாவ்.. அழகழகான கொஞ்சல் கவிதைகள்.. கவிதைக்கொஞ்சல்கள்..

ரசித்தேன்..

gayathri சொன்னது…

காலமெல்லாம் காதலோடு
இருந்துவிடலாம் என்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
உன்னை சந்திக்கும் வரை...

super pa

ஷண்முகப்ரியன் சொன்னது…

மெல்லிய பியானோ இசையைக் கேட்பதைப் போல இருக்கின்றன் உங்கள் கவிதைகள்.
வாழ்த்துக்கள்,நவீன்.

Vijay சொன்னது…

Hi Naveen, good to see you carrying on the blog. As always, would like to see you branch out and write with a lot of diversity. Love the illustrations as always and also like the way some images are kind of simillar to the 'love is' cartoons.

பின்னோக்கி சொன்னது…

இளமையான அழகான கவிதைகள் படங்கள். அருமை.

KARTHICK சொன்னது…

hai dear

all lines wondwerful and nassary for a love thats is nature

thankyou for ur poet

by k.karthick raja

பனித்துளி சங்கர் சொன்னது…

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் !!!

வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

ரசிகன் சொன்னது…

//என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...
//

முதல் கவிதையே கலக்கல். இப்படி கவிதைகளை இன்னமும் என்னால் ரசிக்க முடிகிறது என ஆச்சர்யப்படும் போதுதான் இன்னும் நான் இயந்திரமாகிவிட வில்லை என உணர்கிறேன்.
இயல்பான என்னை நினைவூட்டிக்கொண்டிருக்கும் நமது நவின் குமாரின் கவிதைகளுக்கு நன்றிகள்.

கவிதன் சொன்னது…

கவிதைகள் அத்தனையும் அழகு.....அருமை...!!!
வாழ்த்துக்கள் நவீன்ப்ரகாஷ்!!

பனித்துளி சங்கர் சொன்னது…

புதுமையான சிந்தனை .

பகிர்வுக்கு நன்றி !

தொடருங்கள் மீண்டும் வருவேன் .

rasudeen சொன்னது…

very cuty
Leisure rasu $ deen

Unknown சொன்னது…

nice lines .................. i love your lines

Unknown சொன்னது…

nice lines ............... i love your lines................

பெயரில்லா சொன்னது…

super. please continue your writing

mrknaughty சொன்னது…

நல்ல இருக்கு
thanks
mrknaughty

பெயரில்லா சொன்னது…

Hey, wanted to read a poem or two.. but it seems to be struck in 2009..

knock... knock...

are you there...

-Vijay

முல்லை அமுதன் சொன்னது…

nallayirukku.thodarka.
http://kaatruveli-ithazh.blogspot.com/

கிருஷ்ணா...!!!! சொன்னது…

மிகவும் அருமை...!
உங்கள் இணையத்தை பார்த்த பிறகு, என் வாலைப்பூவில் கவிதை எழுதுவதையே நிறுத்திவிட்டேன்...