புதன், பிப்ரவரி 07, 2007

முத்தபூமி ...

முத்தபூமி1
ரத்தம் தோய்ந்த
வாட்கள்
யுத்தத்திற்கழகு !
முத்தம் தோய்ந்த
இதழ்கள்
காதலுக்கழகு !


முத்தபூமி2நம் உதடுகள்
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்
பார்
நம்மை பேசவே
விடாமல்
அழிச்சாட்டியம்
செய்கின்றன !


முத்தபூமி3


எத்தனை முறை
படித்தாலும் மேலும்
மேலும் படிக்கத்
தூண்டுகிறது
உன் இதழ்கள் மட்டும்தான் !


முத்தபூமி4


சீக்கிரம் ஈரமாக்கிக்கொள்
உன் இதழ்களை
எனக்குத் தாகமாக
இருக்கிறது !முத்தபூமி5


இப்படி வாய் ஓயாமல்
பேசிக்கொண்டே இருக்கிறாயே
கொஞ்சநேரம் சும்மா
இருக்க மாட்டாயா என
நான் கேட்டால்
நீ சும்மா இருந்தால்
நான்வேறு என்ன செய்வது? என
குறும்பாக கேட்கிறயே
கள்ளி !


முத்தபூமி6


இதழும் இதழ்
சார்ந்த பகுதிகளும் தான்
முத்தம் விளைய
ஏற்ற நிலப்பரப்பு
என யார் சொன்னது?
நீ மொத்தமுமே
முத்தம் விதைக்க
ஏற்ற நிலப்பரப்புதான் !


முத்தபூமி7


பேசாமல் இருக்கமாட்டாயா
எனக்கேட்கிறாய்
இப்படி சொன்னால் எப்படி?
பேசாமல் தானே
முத்தம் கொடுக்கிறேன் !


முத்தபூமி8


ச்சீய் ...
இதைப் போயெல்லாமா
ரசிப்பார்கள் என கேட்கிறாய்
உனக்கென்ன தெரியும்
உன் ஈரமான இதழ் வரிகளின்
அழகு !!


முத்தபூமி9


கொஞ்சம் பயம்
நிறைய வெட்கம்
கொஞ்சம் கொஞ்சல்
நிறைய கெஞ்சல்
கொஞ்சம் நஞ்சு
நிறைய அமுதம்
எல்லாம் கலந்தது
இதழ்களில் கொடுத்தான் !


முத்தபூமி10

நெற்றியில்
கன்னத்தில்
காது மடல்களில்
இதழின் ஓரங்களில்
இதழின் மையங்களில்
கழுத்தினில்
அதன் சுற்றுப்புறங்களில்
அதன் கீழும்
இறைந்து
கிடக்கிறதடா
உன் முத்தங்கள் !
எப்படி குளிப்பேன் ?!முத்தபூமி11

கனவுகளில்
கூட
உன் உதடுகள்
சும்மா இருப்பதில்லை
ச்சீய் போடா பிசாசே
ஏன் என்னை
இப்படி இன்பமாக
துன்புறுத்துகிறாய் ?


முத்தபூமி12


நீ ஒரு சரியான
திருடண்டா
எப்படியெல்லாம்
என்னைடமிருந்து
முத்தங்களை
திருடலாம்
என கற்றுக்கொண்டிருக்கிறாய்!


முத்தபூமி13


பேசாமல் இருந்தால்
சும்மாதானே இருக்கிறது
இதழ்கள் என
முத்தத்தை ஆரம்பித்து
விடுகிறாய்
பேசிக்கொண்டிருந்தாலோ
ஏன் இப்படி ஓயாமல்
பேசிக்கொண்டிருக்கிறாய்
என இதழ்களைக்
கவ்விவிடுகிறாய்
முத்தத்திருடா !


'முத்தபூமி14

முதன் முதலில்
நீ என்னிடம்
திருடிய முத்ததை
எங்கேயடா ஒளித்து
வைத்திருக்கிறாய் எனக்
கேட்டால்
இங்கேதான் எடுத்துக்கொள்
என் உன் இதழ்களைக்
காட்டுகிறாய்
திருட்டுப்பயலே
இருஇரு நானே தேடி
எடுத்துக்கொள்கிறேன் !


முத்தபூமி15


உன் இதழ்களை
விட
அதன் மேலிருக்கும்
உன் மீசை செய்யும்
குறும்பு எனக்குப்
பிடித்திருக்கிறது !