புதன், ஜனவரி 21, 2009

உன்னிடம் மயங்குகிறேன்...


உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..நம்மைப் பற்றி அவுக
பேசறாக இவுக பேசறாக
என நீ கோபமாக
சொல்லும்போது
எனக்கு கோபம் வராமல்
சிரிப்புதான் வருகிறது...
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...நானும் நீயும் பேசிக்கொள்ளாமல்
இருந்த போது
என்ன செய்தாய் கவிதை
எழுத எனக் கேட்டாய்
சொன்ன பதிலைக் கேட்டு
கோபமும் வெட்கமும்
கலந்து நீ சொன்ன
"போடா.. திருடா..." வை
ஞாபகம் இருக்கிறதாடி ?அச்சச்சோ.... உன்னைப் போல
ஒரு பொய்காரனை நான்
பார்த்ததே இல்லை என
அழகாக சலித்துக்கொள்கிறாய்..
அப்படியெல்லாம் நான் பொய்
சொல்லிக்கொண்டே இருக்க
மாட்டேண்டி குட்டி...
சில சமயம் கவிதையும் எழுதுவேன்..நீ யார்கிட்டே வேணும்னாலும்
பேசிக்கோ எனக்கு
ஒண்ணுமே இல்லை
என்றுதான் சொல்கின்றாய்
அழகான உன் கண்களுக்குத்தான்
அவ்வளவாக
பொய்பேசத்தெரிவதில்லை
உன் உதடுகள் போல..."ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...105 கருத்துகள்:

Divya சொன்னது…

கவிதை வரிகள் அனைத்தும் ஒன்றோன்றொன்று போட்டி போட்டு கொண்டு "நான் அழகு" என்கிறது!!
எதனை பாராட்டுவது..........எதை விடுவது??
குழப்பத்தில் 'மயக்கம்' தான் வருகிறது:))))

Divya சொன்னது…

முழுவதுமாய் கவிதை அருமை!!
மிகவும் ரசித்தேன்,வாழ்த்துக்கள்!

Divya சொன்னது…

\\எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...\\"எனக்கே எனக்குதான் நீ" என்று உரிமை பாராட்டலுடன் வரும் செல்ல சண்டைகள்.........காதலில் எப்போதுமே அழகுதான், இல்லையா?

Divya சொன்னது…

\\நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக் கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..\\


ஹா ஹா.........எப்படி இப்படி எல்லாம் மிரட்டலுடன் கொஞ்சல் வரிகள் எழுதுறீங்க, ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்:)))

Divya சொன்னது…

\\எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என..\\

ஸோ கியூட்!!!!

Divya சொன்னது…

\அச்ச்ச்சோ.... உன்னைப் போல
ஒரு பொய்காரனை நான்
பார்த்ததே இல்லை என
அழகாக சலித்துக்கொள்கிறாய்..
அப்படியெல்லாம் நான் பொய்
சொல்லிக்கொண்டே இருக்க
மாட்டேண்டி குட்டி...
சில சமயம் கவிதையும் எழுதுவேன்..\\

அப்போ........உங்க கவிதைகள் எல்லாம் 'பொய்' இல்லன்றீங்க, அப்படிதானே கவிஞரே???

Divya சொன்னது…

\\"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா.. " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகின்றேன்...\\

அட அட............இத்தனை விதமா கூப்பிட முடியுமான்னு இப்பத்தான் தெரியுதுங்க கவிஞரே:)))

ஒவ்வொருமுறை கூப்பிடுதலுக்கும்........ஒவ்வொரு விதமான வார்த்தைகள் போட்டிருக்கிறீங்க......

\"கூப்பிடும்போதும்
அழைக்கும்போதும்
கேட்கும்போதும்
கெஞ்சும் போதும்
என கொஞ்சும் போதும்
என திணறும்போதும்\\

சூப்பர்ப் எக்ஸ்ப்ரஷன்ஸ்:)))

அசத்துறீங்க கவிஞரே, பாராட்டுக்கள்!!!

Divya சொன்னது…

கெஞ்சலும், கொஞ்சலும் மிஞ்சாத.........ஒரு அழகான காதல் கவிதை, மிகவும் அழகு நவீன், என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

Divya சொன்னது…

மாதம் ஒருமுறை தான் கவிதை எழுத வேண்டும் என்று ஏதும் சபதம் எடுத்திருக்கிறீங்களா நவீன்??
இந்த வருடமாவது..........மாதம் இருமுறையேனும் கவிதை எழுதுங்க:))

Divya சொன்னது…

இவ்வாண்டில் உங்கள் கவி பயணம் மேலும் பல எழுச்சிகளை காணட்டும்,
எங்கள் கண்களுக்கு உங்கள் கவிகள் விருந்து படைக்கட்டும், வாழ்த்துக்கள்!!!

Vijay சொன்னது…

Me the First :-)

Vijay சொன்னது…

அழகான ரொமாண்டிக் வரிகள். ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்.
அதிலும் புகைப்படங்கள் ஆஹா, சூப்பரோ சூப்பர் :-)

Divyapriya சொன்னது…

me the எத்தனாவது?

Divyapriya சொன்னது…

எல்லா கவிதையும் வாவ்....
கடைசி கவிதை வரே வாவ் :))

இராம்/Raam சொன்னது…

kalakkal... :)

இராம்/Raam சொன்னது…

/எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?////எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...//


ரசித்த கவிதைகள்... அட்டகாசம்... :))

ILA (a) இளா சொன்னது…

இன்னுமோர் கவிதைத் தழும்பல்..

பெயரில்லா சொன்னது…

very fantastic poem naveen...Keep it up!!!!!

தமிழ் சொன்னது…

/எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?
/

/நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்../

அருமை

Unknown சொன்னது…

உன்னிடம் மயங்குகிறேன்...
தலைப்பே அழகு

//உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...//

:)))

//எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...//

என்னது குரங்கா?? ம்ம்ம்ம் ;))

//எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?//

ம்ம்ம்ம் தெரியாதவங்களுக்கெல்லாம் வேற சொல்லிக்கொடுங்க....

//நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..//

:))

//நம்மைப் பற்றி அவுக
பேசறாக இவுக பேசறாக
என நீ கோபமாக
சொல்லும்போது
எனக்கு கோபம் வராமல்
சிரிப்புதான் வருகிறது...
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....//

:))

//எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...//

அப்படியா??

//நானும் நீயும் பேசிக்கொள்ளாமல்
இருந்த போது
என்ன செய்தாய் கவிதை
எழுத எனக் கேட்டாய்
சொன்ன பதிலைக் கேட்டு
கோபமும் வெட்கமும்
கலந்து நீ சொன்ன
"போடா.. திருடா..." வை
ஞாபகம் இருக்கிறதாடி ?//

போடா.. திருடா.. ஹைய்ய்ய்ய் இது நல்லாருக்கே.. :))

//அச்சச்சோ.... உன்னைப் போல
ஒரு பொய்காரனை நான்
பார்த்ததே இல்லை என
அழகாக சலித்துக்கொள்கிறாய்..
அப்படியெல்லாம் நான் பொய்
சொல்லிக்கொண்டே இருக்க
மாட்டேண்டி குட்டி...
சில சமயம் கவிதையும் எழுதுவேன்..//

அதனாலதான் இப்ப கவிதை எழுதினீங்களா?? ;)))

//நீ யார்கிட்டே வேணும்னாலும்
பேசிக்கோ எனக்கு
ஒண்ணுமே இல்லை
என்றுதான் சொல்கின்றாய்
அழகான உன் கண்களுக்குத்தான்
அவ்வளவாக
பொய்பேசத்தெரிவதில்லை
உன் உதடுகள் போல...//
:)))

//"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...//

:)))

அனைத்தும் அழகு... :)) அனுபவமா?? ;))

எழில்பாரதி சொன்னது…

நவீன் கவிதைகள் அனைத்தும் அருமை!!!!

வருடத்தின் தொடக்க பதிவே மிக அருமையாக வந்திருக்கிறது...

தொடருங்கள் உங்கள் காதல் பயணத்தை!!!!

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அழகான வரிகள்...

gayathri சொன்னது…

anaithu kavithai varikalum arumai

நட்புடன் ஜமால் சொன்னது…

ஆதலினால் ...

உன்னிடம் மயங்குகிறேன்

நட்புடன் ஜமால் சொன்னது…

அழகான வரிகள்

காதல் சொல்லும் வரிகள்

அன்போடும் அரவனைபோடும்

புதியவன் சொன்னது…

அனைத்து கவிதைகளும் அழகு...

//
"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...//

இது ரொம்ப ரொம்ப அழகு...

SUBBU சொன்னது…

கடைசி கவிதை வரே வாவ் :))
Repaetteeeeeeee :))

FunScribbler சொன்னது…

oh my god ஏங்க நவீன், இப்படி அநியாயத்துக்கு அழகா எழுதுறீங்களே! :)

//"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...//

மீண்டும் மீண்டும் படிக்க தூண்டிய வரிகள்! அருமையிலும் அருமை! simply gr8!:)

U.P.Tharsan சொன்னது…

எல்லாக் கவிதைகளும் அருமை.

குறிப்பாக

//நீ யார்கிட்டே வேணும்னாலும்
பேசிக்கோ எனக்கு
ஒண்ணுமே இல்லை
என்றுதான் சொல்கின்றாய்
அழகான உன் கண்களுக்குத்தான்
அவ்வளவாக
பொய்பேசத்தெரிவதில்லை
உன் உதடுகள் போல...//

ரசிக்கும் படியாக இருக்கிறது. :-))

அன்புடன் அருணா சொன்னது…

எப்பவும் போல சண்டையும் சிணுங்கல்களும் செல்லம் கொஞ்சுகின்றன..
அன்புடன் அருணா

logu.. சொன்னது…

ELLA LINESU MIGA MIGA ARUYMAI..

CUTE LOVE..

SUPER..

MSK / Saravana சொன்னது…

அட்டகாசம் நவீன் வழக்கம் போல்.. செம செம..

MSK / Saravana சொன்னது…

//எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என..//

மிக மிக மிக அழகு..

MSK / Saravana சொன்னது…

//நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக் கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..//

பின்னீட்டீங்க போங்க..

Ravishna சொன்னது…

கொஞ்சலின் வேகத்தில் அனல் பறக்கிறது.....
அருமை அற்புதம்...... நன்றிகள் பல......


--ரவிஷ்னா

பெயரில்லா சொன்னது…

எல்லா வரிகளும் அருமை நவீன் :-)

Princess சொன்னது…

எல்லா கவிதையிலும் காதல் ரசம் சொட்டுது...இருந்தாலும் எனக்கு ரொம்பப் பிடித்தக் கவிதை இது தான்....படிக்க படிக்க இனிக்குது..தேன் போல

//உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...//

எங்க தான் பிடிப்பீங்களோ இத்தனை அழகு படங்கள...ரொம்ப நல்லா இருக்கு...:)))


அன்பு சினேகிதி
ஸாவரியா

Revathyrkrishnan சொன்னது…

காதலிக்க தெரியாதவர்கள் கூட காதலிப்பார்கள் உங்கள் கவிதைகளை... அதாவது
.
.
.
.
.
.
நல்ல பசங்கள கூட கெட்டுப்போவாங்கனு சொல்ல வரேன்:-P :-P lol....

Shankar சொன்னது…

\\ எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..? \\

அட அட.. என்னென்று சொல்ல..
உங்கள் கவிதை என்றுமே இளமையை குத்தகை எடுத்து கொள்கிறது நவீன். பேனாவில் மைக்கு பதில் இளமை ஊற்றி எழுதுவீர்கள் என்றே தோன்றுகிறது நண்பரே!!

- S H A N K ii

ஆதவா சொன்னது…

////உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...////

காதல் முரண்.. அழகு கவிதை...நவீன்.எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...

இறுதியில் குரங்கே என்று அழகுமுரணாக முடித்துவிட்டீர்களே! :D அவளின் வெறுப்பு கூட ரசிக்கத்தக்கவாக இருக்கும் இல்லையா?

நம்மைப் பற்றி அவுக
பேசறாக இவுக பேசறாக
என நீ கோபமாக
சொல்லும்போது
எனக்கு கோபம் வராமல்
சிரிப்புதான் வருகிறது...
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....

யார் கன்னங்கள்???

கிண்டல்களும் சீண்டல்களும் காதலின் இரு கண்கள்எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...

ஆமாம் ஆமாம்... சரிதான் நீங்கள் சொல்வது.."ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...

காதல் மயக்கம்னு சொல்லுவாங்களே... அது இதுதானா... ஆஹா நவீன்... அழகான காதல் கவிதைகளை இப்படி அடுக்கியிருக்கீங்களே!! பாராட்டுக்கள்.. படங்களும் சூப்பர்.... வாழ்த்துக்கள்.. மேன் மேலும் எழுதுங்கள்///

நாமக்கல் சிபி சொன்னது…

எழுதத் துடிக்குது மனசு!

எதிர் கவுஜ ஒன்றை
எழுதத் துடிக்குது மனசு!

sa சொன்னது…

அருமையான அழக்கான வரிகள். வரிகளின் ஊடே அழகிய புகைப்படங்கள். நன்றி நன்றி.

அவசியம் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

கவிதை வரிகள் அனைத்தும் ஒன்றோன்றொன்று போட்டி போட்டு கொண்டு "நான் அழகு" என்கிறது!!
எதனை பாராட்டுவது..........எதை விடுவது??
குழப்பத்தில் 'மயக்கம்' தான் வருகிறது:)))) //

அட திவ்யாவுக்கு மயக்கம் வருதா...?? Any help I can render ..?? :))))

வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது கதா...:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

முழுவதுமாய் கவிதை அருமை!!
மிகவும் ரசித்தேன்,வாழ்த்துக்கள்!//

முழுதாய் ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திவ்யா..:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...\\"எனக்கே எனக்குதான் நீ" என்று உரிமை பாராட்டலுடன் வரும் செல்ல சண்டைகள்.........காதலில் எப்போதுமே அழகுதான், இல்லையா? //

அப்படியா..? ;))) காதல் கதா நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

\\நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக் கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..\\


ஹா ஹா.........எப்படி இப்படி எல்லாம் மிரட்டலுடன் கொஞ்சல் வரிகள் எழுதுறீங்க, ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்:))) //

எல்லாம் உங்களை போன்ற ரசிகர்களின் உற்சாகமும் ஆதரவும் தான் காரணம் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

\\எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என..\\

ஸோ கியூட்!!!! //

:)))) நன்றி நன்றி..:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

Blogger Divya said...

\அச்ச்ச்சோ.... உன்னைப் போல
ஒரு பொய்காரனை நான்
பார்த்ததே இல்லை என
அழகாக சலித்துக்கொள்கிறாய்..
அப்படியெல்லாம் நான் பொய்
சொல்லிக்கொண்டே இருக்க
மாட்டேண்டி குட்டி...
சில சமயம் கவிதையும் எழுதுவேன்..\\

அப்போ........உங்க கவிதைகள் எல்லாம் 'பொய்' இல்லன்றீங்க, அப்படிதானே கவிஞரே???

இப்படி சொன்ன எப்படி..? ரகசியம் ரம்யமானது...சரியா..? ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா.. " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகின்றேன்...\\

அட அட............இத்தனை விதமா கூப்பிட முடியுமான்னு இப்பத்தான் தெரியுதுங்க கவிஞரே:))) //

:))) எல்லாரும் தெரிஞ்சிகிட்டு பயன்படுத்தடுமேங்கற நல்லெண்ணம் தான் காரணம்.. வேறொன்றும் இல்லை..:))

// ஒவ்வொருமுறை கூப்பிடுதலுக்கும்........ஒவ்வொரு விதமான வார்த்தைகள் போட்டிருக்கிறீங்க......

\"கூப்பிடும்போதும்
அழைக்கும்போதும்
கேட்கும்போதும்
கெஞ்சும் போதும்
என கொஞ்சும் போதும்
என திணறும்போதும்\\

சூப்பர்ப் எக்ஸ்ப்ரஷன்ஸ்:)))

அசத்துறீங்க கவிஞரே, பாராட்டுக்கள்!!! //

வருகையும் அசத்தலான தருகையும் பெருமகிழ்ச்சியளிக்கிறது.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

கெஞ்சலும், கொஞ்சலும் மிஞ்சாத.........ஒரு அழகான காதல் கவிதை, மிகவும் அழகு நவீன், என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!//

வாழ்த்திய அழகான மனது வாழ்க... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

மாதம் ஒருமுறை தான் கவிதை எழுத வேண்டும் என்று ஏதும் சபதம் எடுத்திருக்கிறீங்களா நவீன்??
இந்த வருடமாவது..........மாதம் இருமுறையேனும் கவிதை எழுதுங்க:))//

ம்ம்ம்... அப்படியா..? எழுதலாம்தான்... ஆனா Inspiration கிடைக்கறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு திவ்யா.. என்ன பண்ண நான்..?? :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

இவ்வாண்டில் உங்கள் கவி பயணம் மேலும் பல எழுச்சிகளை காணட்டும்,
எங்கள் கண்களுக்கு உங்கள் கவிகள் விருந்து படைக்கட்டும், வாழ்த்துக்கள்!!! //

இப்படியெல்லாம் சொல்லி ஆனந்த கண்ணீர் வரவைக்கிறயே திவ்யா...:)))

வாழ்த்தான உரைகளுக்கும்... திகட்டாத பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி திவ்யா... !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// விஜய் said...

Me the First :-) //

வாங்க விஜய்... மிக்க நன்றி !! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//விஜய் said...

அழகான ரொமாண்டிக் வரிகள். ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்.
அதிலும் புகைப்படங்கள் ஆஹா, சூப்பரோ சூப்பர் :-) //

வாங்க விஜய்...:)))

அனைத்து வரிகளும் பாக்கியம் பெற்றிருக்கின்றன தங்களின் ரசிப்புக்கு...!!

நன்றி நன்றி...:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divyapriya said...

me the எத்தனாவது? //

எத்தனாவது வந்தா என்ன?? நீங்க வந்ததே அழகானதுதான்...:))) நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divyapriya said...

எல்லா கவிதையும் வாவ்....
கடைசி கவிதை வரே வாவ் :))//

அதென்ன வாவ்..?? ;)))))

மிக்க நன்றி... வருகைக்கும் அழகான தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம்/Raam said...

kalakkal... :) //

வாங்க ராம் ...:)))

நன்றி நன்றி..:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இராம்/Raam said...

/எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?////எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...//


ரசித்த கவிதைகள்... அட்டகாசம்... :)) //

ராம் ரசிக்கும்படி நானும் எழுதுகிறேன் என்பதே மிக்க மகிழ்ச்சியளிக்கிறது ராம்...:))))

நன்றி...வருகைக்கும் தருகைக்கும்..:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ILA said...

இன்னுமோர் கவிதைத் தழும்பல்..//

வாங்க இளா...:)))

ரொம்ப cute ஆ இருக்கு இந்த வாழ்த்து... :)))

மிக்க நன்றி..!! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//subha said...

very fantastic poem naveen...Keep it up!!!!! //

வாங்க சுபா...:))

அப்படியா என்ன..? வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி சுபா..!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//திகழ்மிளிர் said...

/எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?
/

/நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்../

அருமை //

வாங்க திகழ்மிளிர்... :))

அழகான வருகைகும் மிக அழகான ரசனைக்கும் மிக்க நன்றி :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸ்ரீமதி said...

உன்னிடம் மயங்குகிறேன்...
தலைப்பே அழகு //

வாங்க ஸ்ரீமதி...:)))

நன்றி நன்றி...!!

//உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...//

:)))//

:)))))))))

//எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...//

என்னது குரங்கா?? ம்ம்ம்ம் ;))//

ஆமாம்... குரங்கு தெரியாதா..? Monkey... chimpanzee...இப்படியெல்லாம் வெரைட்டி இருக்கே..:))))

//எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?//

ம்ம்ம்ம் தெரியாதவங்களுக்கெல்லாம் வேற சொல்லிக்கொடுங்க....//

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்னு வள்ளுவரே சொல்லியிருக்கறப்போ நானும் கொஞ்சம் கடவுளாக கூடாதா..?? ;)))))

//நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..//

:))//

:)))))

//நம்மைப் பற்றி அவுக
பேசறாக இவுக பேசறாக
என நீ கோபமாக
சொல்லும்போது
எனக்கு கோபம் வராமல்
சிரிப்புதான் வருகிறது...
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....//

:))//

:)))))))

//எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...//

அப்படியா????

அது அப்படித்தான்...:))))

//நானும் நீயும் பேசிக்கொள்ளாமல்
இருந்த போது
என்ன செய்தாய் கவிதை
எழுத எனக் கேட்டாய்
சொன்ன பதிலைக் கேட்டு
கோபமும் வெட்கமும்
கலந்து நீ சொன்ன
"போடா.. திருடா..." வை
ஞாபகம் இருக்கிறதாடி ?//

போடா.. திருடா.. ஹைய்ய்ய்ய் இது நல்லாருக்கே.. :))//

அட அப்படியா..? நன்றி நன்றி...:))

//அச்சச்சோ.... உன்னைப் போல
ஒரு பொய்காரனை நான்
பார்த்ததே இல்லை என
அழகாக சலித்துக்கொள்கிறாய்..
அப்படியெல்லாம் நான் பொய்
சொல்லிக்கொண்டே இருக்க
மாட்டேண்டி குட்டி...
சில சமயம் கவிதையும் எழுதுவேன்..//

அதனாலதான் இப்ப கவிதை எழுதினீங்களா?? ;))) //

இல்லைன்னு சொன்னா நம்பிடவா போறீங்க..?? ;)))))

//நீ யார்கிட்டே வேணும்னாலும்
பேசிக்கோ எனக்கு
ஒண்ணுமே இல்லை
என்றுதான் சொல்கின்றாய்
அழகான உன் கண்களுக்குத்தான்
அவ்வளவாக
பொய்பேசத்தெரிவதில்லை
உன் உதடுகள் போல...//
:)))//

:)))))))))

//"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...//

:)))

அனைத்தும் அழகு... :)) அனுபவமா?? ;)) //

ஆமாம் இப்படி கவிதை எழுதிய அனுபவம் தான்.. :))))

மிக்க நன்றி ஸ்ரீமதி... அழகான வருகைகும் மிக விரிவான தருகைக்கும்... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில்பாரதி said...

நவீன் கவிதைகள் அனைத்தும் அருமை!!!!//

வாங்க எழில்...:)))

மிக்க நன்றி கவிஞரே...:))

// வருடத்தின் தொடக்க பதிவே மிக அருமையாக வந்திருக்கிறது...//

அப்படியா..? நன்றி நன்றி..!!

// தொடருங்கள் உங்கள் காதல் பயணத்தை!!!!//

தொடர்கிறேன்.. :))) வருகையும் தருகையும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.....!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// VIKNESHWARAN said...

அழகான வரிகள்...//

வாங்க விக்னேஷ் :)))

மிக்க நன்றி..! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//gayathri said...

anaithu kavithai varikalum arumai//

வாருங்கள் காயத்ரி...:))

மிக்க நன்றி அனைத்து வரிகளையும் ரசித்தமைக்கு... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...

ஆதலினால் ...

உன்னிடம் மயங்குகிறேன் //

வாங்க ஜமால்..:)))
எப்படி இருக்கிறீகள்..? :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...

அழகான வரிகள்

காதல் சொல்லும் வரிகள்

அன்போடும் அரவனைபோடும்//

அன்பான வருகையும் அரவணைப்பான தருகையும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது..:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//புதியவன் said...

அனைத்து கவிதைகளும் அழகு...

//
"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...//

இது ரொம்ப ரொம்ப அழகு... //

வாங்க புதியவன்...:)))

வருகைக்கும் மிக அழகான ரசனைக்கும் மிக்க நன்றி புதியவன்..!! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Subbu said...

கடைசி கவிதை வரே வாவ் :))
Repaetteeeeeeee :)) //

வாங்க சுப்பு...:))

short and cute ஆன விமர்சனத்திற்கு மிக்க நன்றி..:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhmaangani said...

oh my god ஏங்க நவீன், இப்படி அநியாயத்துக்கு அழகா எழுதுறீங்களே! :) //

வாங்க தமிழ்...:)))

இப்படி எல்லாம் ஓட்டக்கூடாது என்னை ok..?? :))))

//"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...//

மீண்டும் மீண்டும் படிக்க தூண்டிய வரிகள்! அருமையிலும் அருமை! simply gr8!:)//

அப்படியா என்ன..? மிக்க நன்றி தமிழ் தொடர்ந்த வருகைக்கும் தருகைக்கும்...:)))

Divya சொன்னது…

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

// Divya said...

மாதம் ஒருமுறை தான் கவிதை எழுத வேண்டும் என்று ஏதும் சபதம் எடுத்திருக்கிறீங்களா நவீன்??
இந்த வருடமாவது..........மாதம் இருமுறையேனும் கவிதை எழுதுங்க:))//

ம்ம்ம்... அப்படியா..? எழுதலாம்தான்... ஆனா Inspiration கிடைக்கறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு திவ்யா.. என்ன பண்ண நான்..?? :)))))\\


Inspiration kedaikirathu kashtama irukka??

ungaluku 'kavithai' elutha INSPIRATION ethunnu soneenganna...........help panna rasigargal nanga ready,

engalku theyvai unga KAVITHAI:))

So koocha padama solunga kavignarey.......any help???

Divya சொன்னது…

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

// Divya said...

இவ்வாண்டில் உங்கள் கவி பயணம் மேலும் பல எழுச்சிகளை காணட்டும்,
எங்கள் கண்களுக்கு உங்கள் கவிகள் விருந்து படைக்கட்டும், வாழ்த்துக்கள்!!! //

இப்படியெல்லாம் சொல்லி ஆனந்த கண்ணீர் வரவைக்கிறயே திவ்யா...:)))

வாழ்த்தான உரைகளுக்கும்... திகட்டாத பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி திவ்யா... !! \\


achoooo ithukellam alugualama??
kannu thudaichukonga:))

குடந்தை அன்புமணி சொன்னது…

ஆதலினால்... உன்னிடம் மயங்குகிறேன்... தப்பே இல்லை. மயங்குவதில்...!

நாமக்கல் சிபி சொன்னது…

எப்போ கவிதை வருது?

Ravishna சொன்னது…

ரூம் போட்டு யோசிபின்களோ????


நட்புடன்,
ரவிஷ்னா

vinu சொன்னது…

hai naveen after a long time again i am back. i always enjoy your play me too will join wit u soon

venkatx5 சொன்னது…

/*
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....
*/

சூப்பர்.. சூப்பர்..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// U.P.Tharsan said...

எல்லாக் கவிதைகளும் அருமை.

குறிப்பாக

//நீ யார்கிட்டே வேணும்னாலும்
பேசிக்கோ எனக்கு
ஒண்ணுமே இல்லை
என்றுதான் சொல்கின்றாய்
அழகான உன் கண்களுக்குத்தான்
அவ்வளவாக
பொய்பேசத்தெரிவதில்லை
உன் உதடுகள் போல...//

ரசிக்கும் படியாக இருக்கிறது. :-))//

வாருங்கள் தார்சன்..:)))

எப்படி இருக்கிறீர்கள்..?
மிக்க நன்றி அழகான வருகைக்கும் ரசிப்பிற்கும்..:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// அன்புடன் அருணா said...

எப்பவும் போல சண்டையும் சிணுங்கல்களும் செல்லம் கொஞ்சுகின்றன..
அன்புடன் அருணா//

வாங்க அருணா...:)))

தவறாக வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது...:)))
மிக அழகான தருகைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி..!! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// logu.. said...

ELLA LINESU MIGA MIGA ARUYMAI..

CUTE LOVE..

SUPER..//

வாருங்கள் லோகு..:)))
அப்படியா..? மிக்க மகிழ்ச்சி..! :))
அழகான வருகைக்கும் மிக்க நன்றி லோகு..!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Saravana Kumar MSK said...

அட்டகாசம் நவீன் வழக்கம் போல்.. செம செம..//

வாங்க சரவணகுமார்...:)))

அதென்னாங் செம செம..?? :))))
இதுவும் அழகாக இருக்கிறது :)))நன்றி..!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Saravana Kumar MSK said...

//எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என..//

மிக மிக மிக அழகு..//

அழகு.. கவிஞரின் வருகையும்தான்...!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Saravana Kumar MSK said...

//நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக் கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..//

பின்னீட்டீங்க போங்க..//

:)))) மிக்க நன்றி ! தவறாத வருகைக்கும் அசத்தலான தருகைக்கும் மிக்க நன்றி சரவணன்..!! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Ravishna said...

கொஞ்சலின் வேகத்தில் அனல் பறக்கிறது.....
அருமை அற்புதம்...... நன்றிகள் பல......


--ரவிஷ்னா//

வாருங்கள் ரவிஷ்னா..:)))

எப்படி இருக்கிறீர்கள்..? அனல் பறக்கிறதா என்ன..? குளுமையாக இருக்கும் என்றுதானே எழுதினேன்..?? ;)))))

அழகான வருகையும் தருகையும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது...!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இனியவள் புனிதா said...

எல்லா வரிகளும் அருமை நவீன் :-)//

வாருங்கள் புனிதா..:)))

எப்படி இருக்கிறீர்கள்..?? வரிவரியாக ரசித்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது கவிஞரே...!!!! மிக்க நன்றி...!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸாவரியா said...

எல்லா கவிதையிலும் காதல் ரசம் சொட்டுது...இருந்தாலும் எனக்கு ரொம்பப் பிடித்தக் கவிதை இது தான்....படிக்க படிக்க இனிக்குது..தேன் போல

வாருங்கள் அன்பு ஸ்நேகிதி ஸாவரியா..:)))

தேன் போல இனிப்பது தங்களின் இனிப்பான வருகையும் தான் தெரியுமா..? :)))

//உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...//

எங்க தான் பிடிப்பீங்களோ இத்தனை அழகு படங்கள...ரொம்ப நல்லா இருக்கு...:)))


அன்பு சினேகிதி
ஸாவரியா//

மிக்க மகிழ்ச்சி... அழகான வருகையும் தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது கவிஞரே..!! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// reena said...

காதலிக்க தெரியாதவர்கள் கூட காதலிப்பார்கள் உங்கள் கவிதைகளை... அதாவது
.
.
.
.
.
.
நல்ல பசங்கள கூட கெட்டுப்போவாங்கனு சொல்ல வரேன்:-P :-P lol....//

வாருங்கள் ரீனா..:)))

அப்படியா சொல்கிறீர்கள்..?? :)))
நல்ல பசங்கன்னு யாருமே காதலிக்க மாட்டாங்களா என்ன.?? !! :))))காதலிக்காதவங்க நல்ல பசங்களே இல்லை...!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Shankar said...

\\ எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..? \\

அட அட.. என்னென்று சொல்ல..
உங்கள் கவிதை என்றுமே இளமையை குத்தகை எடுத்து கொள்கிறது நவீன். பேனாவில் மைக்கு பதில் இளமை ஊற்றி எழுதுவீர்கள் என்றே தோன்றுகிறது நண்பரே!!

- S H A N K ii//

வாங்க ஷங்கி;..:)))

எப்படி இருக்கிறீர்கள்..?? பேனாவில் அல்ல... ஒவ்வொரு ஜீன்களிலுமே இளமைதான்..;)))))

மிக அழகான தருகைக்கு மிக்க நன்றி ஷங்கி...!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஆதவா said...

////உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...////

காதல் முரண்.. அழகு கவிதை...நவீன். //

வாருங்கள் ஆதவா.. :))
மிக விரிவான விமர்சனத்திற்கு மிக்க நன்றி..!! :)))// எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...

இறுதியில் குரங்கே என்று அழகுமுரணாக முடித்துவிட்டீர்களே! :D அவளின் வெறுப்பு கூட ரசிக்கத்தக்கவாக இருக்கும் இல்லையா? //

ஆம்... காதலில் எதையும் ரசிக்காமல் இருக்க முடியாது அல்லவா..?? :))))

//நம்மைப் பற்றி அவுக
பேசறாக இவுக பேசறாக
என நீ கோபமாக
சொல்லும்போது
எனக்கு கோபம் வராமல்
சிரிப்புதான் வருகிறது...
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....

யார் கன்னங்கள்???

கிண்டல்களும் சீண்டல்களும் காதலின் இரு கண்கள் //

வேறு யார் கன்னங்கள்..?? ;))))


// எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...

ஆமாம் ஆமாம்... சரிதான் நீங்கள் சொல்வது.. //

நீங்கள் ஒரு காதலர் என்பதை நிரூபித்துவிட்டீட்கள்...!! :))))// "ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...

காதல் மயக்கம்னு சொல்லுவாங்களே... அது இதுதானா... ஆஹா நவீன்... அழகான காதல் கவிதைகளை இப்படி அடுக்கியிருக்கீங்களே!! பாராட்டுக்கள்.. படங்களும் சூப்பர்.... வாழ்த்துக்கள்.. மேன் மேலும் எழுதுங்கள்///

வருகையும் விரிவான தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது ஆதவா... !! நன்றி நன்றி...!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Namakkal Shibi said...

எழுதத் துடிக்குது மனசு!

எதிர் கவுஜ ஒன்றை
எழுதத் துடிக்குது மனசு!//

வாங்க சிபி...

துடிக்குதா..? என்ன ஏதோ சினிமா டைட்டில் மாதிரி தெரியுது..?? ;))))
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி சிபி..!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// viji said...

அருமையான அழக்கான வரிகள். வரிகளின் ஊடே அழகிய புகைப்படங்கள். நன்றி நன்றி.

அவசியம் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php//

வாருங்கள் விஜி...:))

வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி..!! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

// Divya said...

மாதம் ஒருமுறை தான் கவிதை எழுத வேண்டும் என்று ஏதும் சபதம் எடுத்திருக்கிறீங்களா நவீன்??
இந்த வருடமாவது..........மாதம் இருமுறையேனும் கவிதை எழுதுங்க:))//

ம்ம்ம்... அப்படியா..? எழுதலாம்தான்... ஆனா Inspiration கிடைக்கறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு திவ்யா.. என்ன பண்ண நான்..?? :)))))\\


Inspiration kedaikirathu kashtama irukka??

ungaluku 'kavithai' elutha INSPIRATION ethunnu soneenganna...........help panna rasigargal nanga ready,

engalku theyvai unga KAVITHAI:))

So koocha padama solunga kavignarey.......any help???//

அட அப்படியா திவ்யா..?? :))) உங்கிட்டவே கேட்டுடறேன் இனிமே.. சரியா..? ரெடியா இரு..!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

// Divya said...

இவ்வாண்டில் உங்கள் கவி பயணம் மேலும் பல எழுச்சிகளை காணட்டும்,
எங்கள் கண்களுக்கு உங்கள் கவிகள் விருந்து படைக்கட்டும், வாழ்த்துக்கள்!!! //

இப்படியெல்லாம் சொல்லி ஆனந்த கண்ணீர் வரவைக்கிறயே திவ்யா...:)))

வாழ்த்தான உரைகளுக்கும்... திகட்டாத பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி திவ்யா... !! \\


achoooo ithukellam alugualama??
kannu thudaichukonga:))//

கர்ச்சீஃப் ப்ளீஸ்... ;))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அன்புமணி said...

ஆதலினால்... உன்னிடம் மயங்குகிறேன்... தப்பே இல்லை. மயங்குவதில்...!//

வாருங்கள் அன்புமணி...:))

மயங்கத்துடனே கூட அழகான தருகையை பதிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது... நன்றி !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Namakkal Shibi said...

எப்போ கவிதை வருது?//

எனக்கு எப்படி தெரியும் சிபி..? அதைய அந்த கவிதைகிட்டே தான் கேட்கணும்..!! :)))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Ravishna said...

ரூம் போட்டு யோசிபின்களோ????


நட்புடன்,
ரவிஷ்னா//

வாருங்கள் ரவிஷ்னா..:)))

அதெல்லாம் இல்லீங்க... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// vinu said...

hai naveen after a long time again i am back. i always enjoy your play me too will join wit u soon//

வாருங்கள் வினு...:)))
எப்படி இருக்கிறீர்கள்..?? வருக வருக... சீக்கிரம் வந்து எழுதுங்கள் வினு..!! மிக்க நன்றி ஞாபகமாய் வந்தமைக்கு...:))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// venkatx5 said...

/*
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....
*/

சூப்பர்.. சூப்பர்..//

வாருங்கள் வெங்கட்..:))))

சூப்பரான வருகைக்கும் மிக்க நன்றி ! :)))))

Unknown சொன்னது…

அருமையான வரிகள்

கமலேஷ் சொன்னது…

கவிதையை படிக்கிறதா, படத்தை பார்க்கிறதா என்றே தெரியவில்லை...
எந்த கவிதைகளை பற்றி பேசுவது என்றும் தெரியவில்லை...
இதனை நாளாக இந்த வலை தளத்தினை காண முடியாமல் போனதை நினைத்து வருந்து கிறது மனது....
உங்களின் எழுத்து பயணம் தொடர என் வாழ்த்துக்கள்..

கவிதன் சொன்னது…

அற்புதமான கவிதைகள் ..... காதல் உலகத்திருக்குள் இதயத்தை மூழ்கடித்து திளைக்க விடுகிறது.......

வாழ்த்துக்கள் நவீன் பிரகாஷ்!!!

deeparaja சொன்னது…

etthanai murai than avanai thittinalum avan en uthadukkalai kayappadutha marappathillai

selvi சொன்னது…

anaithum alagu. rasithukonde erukalam ovoru variyaum

selvi சொன்னது…

anaithum alagu rasithukonde erukalam ungal kavithayai

பெயரில்லா சொன்னது…

புதிய காதலர்களுக்கு வழிகாட்டி தங்கள் கவிதைகள்
எப்படி எல்லாம் காதலிக்கலாம் என கற்று கொடுத்து விட்டீர்கள்