வியாழன், டிசம்பர் 20, 2007

கொஞ்சம் காதலித்துத் தொலையேன்...ஏண்டா இப்படிக் காதலிச்சு என்
உயிரை வாங்கற..?
என அழகாக நீ
அலுத்துக்கொள்ளும்போது
என் உயிரை வாங்குவது
என்னவோ நீதான்...

எப்படி என்னை
உன்னுடன் கூட்டிபோவது
எனக்கேட்கிறாய்
நான் வேண்டுமானால்
உன் துப்பட்டாவுக்குள்
ஒளிந்துகொள்ளட்டுமா?


தாவணி கட்டினால்
இடுப்பு தெரியும்
கட்டமாட்டேன் என
ஏன் அடம் பிடிக்கிறாய்?
சரி விடு அப்போ
என்னையாவது
கட்டிக்கொள்
உன் இடுப்பை மறைத்துத்
தொலைக்கிறேன்

நீ எனக்குச் சேலை கட்டக்
கற்றுக்கொடுப்பதற்குள்
போதும் போதும்
என்றாகிவிடுகிறது போடா..
கட்ட ஆரம்பிப்பதற்குள்
என்னைக் கட்டிக்
கொல்கிறாய்...

எனக்கு கல்யாணம்
கட்டிக்கவே பிடிக்கலை
எனச் சொல்லிவிட்டு
சென்றால் எப்படி??
அப்படியென்றால்
என்னையாவது
கட்டிக்கொள்ளேண்டி ??

எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?

உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!


அட இவ்வளவு மென்மையான
மனசா உனக்கு என நிஜமாகவே
நான் கேட்டால் ஏண்டி
உடனே என்னை முறைத்துவிட்டு
மறைத்துக்கொள்கிறாய்???
நான் நெஜம்மா மனசைத்தான் கேட்டேன்
தெரியுமா ?


உன்னையெல்லாம்
எப்படி காதலித்துத்
தொலைத்தேன் ??
பாழாய்ப்போன மனம்
உன் பின்னே
ஒரு நாய்க்குட்டியைப் போல்
ஓடி என் உயிரை எடுக்கிறது...


நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறதுExcuse me !
என்னைக் கொஞ்சம்
கண்டுபிடித்துத்
தரமுடியுமா ?
உன் கண்ணுக்குள்
தான் எங்கோ
தொலைந்துபோனேன்
எத்தனை முறை
நீ கேட்டாலும் பதில்
சொல்ல அலுக்காத
கேள்வி ...
என்னை அவ்வளவு
பிடிச்சுருக்காடா..??
என்னைக் கட்டிகொள்
என நான் கேட்டது
என்னைக் காதலில்
கட்டிக் கொல் என்ற
அர்த்தத்தில் தான்...


போன ஜென்மத்தில்
நீ ஒரு கொள்ளைக்காரியாகத்தான்
இருந்திருக்க வேண்டும்
அடிக்கடி கொள்ளை
போகிறது என் மனம்
உன் சிரிப்பினால்..


உன் அழகே
அழகான உன்
சிந்தனைதான்
தெரியுமா?


உன்னைக் கட்டிகிறவ
கொடுத்து வச்சவடா என்கிறாய்
அந்தக்கொடுத்து வச்சவ
யாருன்னு தெரியணுமா ?
போய்க் கண்ணாடியிலே பாருடி
முட்டாளே...

புதன், டிசம்பர் 05, 2007

நட்போடு காதலித்து...


அனைவரிடமும்
நட்புகொள்ள
முடியும்
ஆனால்
உன்னிடம் மட்டும் தான்
காதல்
கொள்ளமுடியும்
தெரிந்துகொள்ளடி...

காதலித்தால்
நம் நட்பு சாகும் என்கிறாய்
சாகும் வரை நட்போடு
இருக்கத்தான் உன்னைக்
காதலிக்கிறேன்
உணர்ந்து கொள்ளடி..
உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?
நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்நண்பனே காதலனாக
முடியாது என்கிறாய் நீ
காதல் சொல்ல வருபவன்
நண்பனாகும் போது
நட்போடு வருபவன்
காதலனாக முடியாதா என்ன?

எனக்கு நீ எப்பொழுதுமே
நண்பனாக வேண்டும்
என்கிறாய்
எனக்கு நீ எப்பொழுதுமே
நட்பான மனைவியாக
வேண்டும் என்றுதான்
சொல்கிறேன்
நான்..

நான் பிடிவாதக்காரி
என்கிறாய்
எனக்குப்பிடித்த..
என்னைப் பிடித்த..
வாதக்காரி நீ...நட்பைதான் நான்
காதலிக்கிறேன்
என்கிறாய்
காதலிடம்
நட்பாய்
இருக்கிறேன் நான்
என் காதல் நீஎல்லாரும் எனக்கு
ஒன்றுதான் என்கிறாய்
எனக்கும் காதலி
நீ ஒன்று மட்டும்தான்நட்பு எல்லாவற்றையும்
கொடுக்கும்
காதலைத்தவிர...
காதல் எல்லாவற்றையும்
கொடுக்கும்
நட்பையும் சேர்த்து
தெரியுமா??நான்
நானாக
இருக்க
வைத்தது
நட்பு...
நான்
நீயாக
உணரவைத்தது
காதல்..