செவ்வாய், மே 20, 2008

அப்பா...


எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...


முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...


கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?


லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...


அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?


எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?


சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு


நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

119 கருத்துகள்:

Divya சொன்னது…

மனதை நெகிழ வைக்கின்றன ஒவ்வொரு வரிகளும்:(

Divya சொன்னது…

\\எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?\

யாராலும்...எந்த உறவாலும் 'அப்பா' விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப முடியவே முடியாது நவீன்.

Divya சொன்னது…

\\லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...\\

மறுமுறை படிக்க தூண்டிய இவ்வரிகள்......எனக்குள் ஏற்படுத்தி கணத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது:)

Divya சொன்னது…

\\நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..\\

துடைக்க முடியா கண்ணீரை வரவழைத்தது ....இந்த வரிகள்,

உங்கள் மனவேதனை மறைய, இழப்புகள் ஏற்படுத்தியிருக்கும் வெறுமை மறைய இறைவனை வேண்டுகிறேன்.

பெயரில்லா சொன்னது…

I really enjoyed reading this post.I agree with Divya very much. Excellent post. Keep posting.

Ramya

இராம்/Raam சொன்னது…

நல்ல கவிதைகள் நவீன்......

M.Rishan Shareef சொன்னது…

அன்பின் நவீன்,
அருமையான கவிதை நண்பரே.
எனக்கும் அப்பா இல்லை.எனது சிறுவயதிலேயே இறந்துவிட்டார்.
அவரது முகமோ,வாசனையோ நினைவிலற்ற நிலையில் அம்மாவின் கதைகளில் மட்டுமே இன்னும் உயிர்வாழ்கிறார் அப்பா.
உங்களது கவிதை என்னை பால்யத்துக்கு மீண்டுமொருமுறை அழைத்துச்சென்றது. :)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

என்ன சொல்ல அண்ணன் நெகிழ வைக்கிற உணர்வு பூர்வமான வரிகள்

தமிழன்-கறுப்பி... சொன்னது…

///நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..///

ஒரு மாதிரி மனதை கனமாக்குகிற வரிகள்...ம்ம்ம்..:(

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...\\\

அண்ணன்; குறைக்க முயல்கிற வலியை பகிர்ந்திருக்கிறீர்கள்...
முடிந்தவரை பங்கெடுத்துக்கொள்கிறேன்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

எளிய வரிகளில் வலிய உணர்வுகள்...
இன்னும் எழுதுங்க அண்ணன்...

ILA (a) இளா சொன்னது…

அழ வெச்சிட்டீங்க நவீன்

எழில்பாரதி சொன்னது…

நவீன் அருமையான கவிதைகள்!!!

எனக்கு அப்பான ரொம்ப உயிர் அதுக்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம் உங்கள் கவிதையை படித்ததும் ஏற்ப்பட்ட உணர்வுகளை எழுத்தில் கொண்டுவர இயலவில்லை

அனைத்து கவிதைகளும் மிகவும் அருமை

//அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...//

இக்கவிதை அருமை இக்கால பிள்ளைகளுக்கு தேவையான கருத்தும் கூட!!!!

பெயரில்லா சொன்னது…

A very honorable dedication. We respect that.

Praveena சொன்னது…

கவிஞருக்கு கவி எழுதி ஆறுதல் கூற
வார்த்தைகள் என்மனதில்
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறது
அவைகளை பிடித்து சேர்த்து எழுத தெம்பில்லை மனதில்...

ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் கவிதைக்கு
எனது அனுதாப வாழ்த்துக்கள் !

Praveena சொன்னது…

தொலை தூரம் போய்விட்ட
உறவினைத் தேடிடும் விரல்களில்
பிசைபடும் தந்தையின் பழைய நினைவுகளை...
எழுதப்படாத துயரங்களை...
வரைபடம் போடும் உங்கள் மனதிற்கு
ஆறுதலை இறைவன் அருள வேண்டுகிறேன்!

பெயரில்லா சொன்னது…

ஏதோவொரு இனம் புரியாத சோகம்...
ஒற்றை இறகு வண்ணத்துப்பூச்சி பறக்கத்துடிப்பது போன்ற சோகவுணர்வும்..
இறுதியில் வெறுமையெனும் பெயர் கொண்ட மெல்லிய பெருமூச்சும்..
கடைசியில் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரும்
வந்து போயிற்று.....உங்கள் கவிதை படிக்கையில்.


ப்ரியமுடன்
ஷாரன்.

FunScribbler சொன்னது…

இப்படி வித்தியாசமான கவிதையை எழுதியதற்கு என் முதல் பாராட்டுகள்!! காதல் கவிதைகளிலும் மட்டும் அல்ல, எல்லா வித கவிதைகளிலும் கலக்குவேன் என நிருபித்துவிட்டீர்கள்! வாழ்த்துகள்!!

யதார்த்தமான கவிதை. என்ன.. சந்தோஷ் சுப்பரமணியம் படம் பாத்தீங்களோ. இல்ல.. inspirationஆ கேட்டேன்!!

கைப்புள்ள சொன்னது…

/////நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..///

ஒரு மாதிரி மனதை கனமாக்குகிற வரிகள்...ம்ம்ம்..:(//

உண்மையிலேயே கண்கலங்க வைக்கும் வரிகள்.

நாமக்கல் சிபி சொன்னது…

:(

வெற்றி சொன்னது…

கவிதை அருமை.
என் அப்பாவை நினைவுபடுத்தியது.

/*லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...*/

கண்ணீரை வரவழைத்த வரிகள்.

பாராட்டுக்கள்.

PPattian சொன்னது…

வழக்கமா "காதல்" எழுதி அசர வைப்பீங்க. இப்போ "பாசம்" எழுதி நெகிழ வச்சிட்டீங்க..

நிஜமாவே ஏதானும் துயரம் நிகழ்ந்து விட்டதா?

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

/கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
//

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?
//

வாசிக்கும்போதே சோகம் துளிர்க்கிறது. தந்தையின் பாசத்தை அருமையாக தந்திருக்கிறீர்கள்.

பெயரில்லா சொன்னது…

migavum arumai.

Aruna சொன்னது…

அந்த உறவின் இழப்பு.....கைகளுக்குள் இருந்தது விடுபட்ட மெல்லிய விரல்கள் போல ஒரு வெறுமையைத் தந்தே தீரும்....அந்த வெறுமை வாழ்நாள் முழுவதும் வெறுமையாகவே இருக்கும்.... யாராலும் நிரப்பப்பட முடியாது..
அன்புடன் அருணா

நாடோடி இலக்கியன் சொன்னது…

படிக்கும் பொழுதே கண்ணில் நீர்த்திரை...!.
வேறு என்ன சொல்ல .....

காஞ்சனை சொன்னது…

//எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...//

நவீன்,
அம்மாங்கற ஜீவனுக்குள்ளே எத்தனை மென்மையான மனது ஒளிந்து கொண்டிருக்கிறதோ அதை விட மேலான அன்பு, பாசம், அக்கறை எல்லாம் இருக்கிறது அப்பாவிடம்..
மீண்டுமொரு முறை தந்தை மடித்தூக்கமும், தலை வருடலும் கிட்டாதா என ஏங்குகிறது மனசு.

ரசிகன் சொன்னது…

//முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...//

அருமைங்க நவின்:)

ரசிகன் சொன்னது…

பொதுவா பெண்கள் தான் அப்பா செல்லம்ம்பாங்க.. ஆனா ஆண்களுக்குள்ளும் இருக்கும் தந்தைப் பாசத்தை வாழ்வில் என்றாவது உணர்ந்தே தீருவார்கள்:)

ரசிகன் சொன்னது…

//அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...//

டிரிபிள் ரிப்பீட்டேய்ய்ய்ய்...

புகழன் சொன்னது…

இப்படிகூட எழுதுவீங்களா?
வெறும் காதல் கவிஞர் என்று நினைத்தேன்.
எல்லாவற்றிலும் நீங்கள் கவியரசர்தான்.

பெயரில்லா சொன்னது…

The good one

பெயரில்லா சொன்னது…

கண்ணீர் நினைவுகளுக்குள் மீண்டும் ஒரு முறை என்னை இறக்(க)கி விட்டீர்கள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
மனதை நெகிழ வைக்கின்றன ஒவ்வொரு வரிகளும்:(//

வாங்க திவ்யா....
மிக்க நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?\

யாராலும்...எந்த உறவாலும் 'அப்பா' விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப முடியவே முடியாது நவீன்.//

சத்தியமான வார்த்தைகள் திவ்யா...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...\\

மறுமுறை படிக்க தூண்டிய இவ்வரிகள்......எனக்குள் ஏற்படுத்தி கணத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது:)//

ம்ம்ம்ம்.... சில உண்மைகள் கணமானவை அல்லவா..??

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..\\

துடைக்க முடியா கண்ணீரை வரவழைத்தது ....இந்த வரிகள்,

உங்கள் மனவேதனை மறைய, இழப்புகள் ஏற்படுத்தியிருக்கும் வெறுமை மறைய இறைவனை வேண்டுகிறேன்.//

வேண்டுதலும் ... பங்களிப்பும் ... மிக்க ஆறுதலாக இருந்தது திவ்யா..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//I really enjoyed reading this post.I agree with Divya very much. Excellent post. Keep posting.

Ramya //

மிக்க நன்றி ரம்யா....:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இராம்/Raam said...
நல்ல கவிதைகள் நவீன்......//

மிக்க நன்றி ராம் :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// எம்.ரிஷான் ஷெரீப் said...
அன்பின் நவீன்,
அருமையான கவிதை நண்பரே.
எனக்கும் அப்பா இல்லை.எனது சிறுவயதிலேயே இறந்துவிட்டார்.
அவரது முகமோ,வாசனையோ நினைவிலற்ற நிலையில் அம்மாவின் கதைகளில் மட்டுமே இன்னும் உயிர்வாழ்கிறார் அப்பா.
உங்களது கவிதை என்னை பால்யத்துக்கு மீண்டுமொருமுறை அழைத்துச்சென்றது. :)//

மிக்க நன்றி ரிஷான்..:)
பால்யத்தை நினைவூட்டியதா..?? மிக்க மகிழ்ச்சி... :)
சில நினைவுகள் அழகானவைகள் மட்டும் அல்ல ஆழமானவைகளும் கூட....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...
என்ன சொல்ல அண்ணன் நெகிழ வைக்கிற உணர்வு பூர்வமான வரிகள்//

வாங்க தமிழன்..
மிக்க நன்றி :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...
///நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..///

ஒரு மாதிரி மனதை கனமாக்குகிற வரிகள்...ம்ம்ம்..:( ///

சில கணங்கள் கனமாக்கினவா வரிகள்..?? ம்ம்ம்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...
\\லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...\\\

அண்ணன்; குறைக்க முயல்கிற வலியை பகிர்ந்திருக்கிறீர்கள்...
முடிந்தவரை பங்கெடுத்துக்கொள்கிறேன்...//

தங்கள் பங்கெடுப்புக்கும் வளமான பங்களிப்புக்கும் மிக்க நன்றி தமிழன்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...
எளிய வரிகளில் வலிய உணர்வுகள்...
இன்னும் எழுதுங்க அண்ணன்...//

கண்டிப்பாக எழுதுகிறேன் :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ILA said...
அழ வெச்சிட்டீங்க நவீன் //

வாங்க இளா...
அழவச்சுட்டேனா..?? ம்ம்ம்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// எழில்பாரதி said...
நவீன் அருமையான கவிதைகள்!!!

எனக்கு அப்பான ரொம்ப உயிர் அதுக்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்... உங்கள் கவிதையை படித்ததும் ஏற்ப்பட்ட உணர்வுகளை எழுத்தில் கொண்டுவர இயலவில்லை

அனைத்து கவிதைகளும் மிகவும் அருமை//

வாங்க எழில்...
சில நேரங்களில் எழுத்துகளும் ஊமையாகிவிடுகின்றன அல்லவா...? மிக்க நன்றி...

//அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...//

இக்கவிதை அருமை இக்கால பிள்ளைகளுக்கு தேவையான கருத்தும் கூட!!!! //

எழில் மிக்க நன்றி வளமையான பகிர்வுக்கும்... தங்கள் உணர்வுக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Shankii said...
A very honorable dedication. We respect that.//

வாங்க ஷங்கி....
மிக்க நன்றி... முதல் வருகைக்கு...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Praveena Jennifer Jacob said...
கவிஞருக்கு கவி எழுதி ஆறுதல் கூற
வார்த்தைகள் என்மனதில்
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறது
அவைகளை பிடித்து சேர்த்து எழுத தெம்பில்லை மனதில்...

ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் கவிதைக்கு
எனது அனுதாப வாழ்த்துக்கள் ! //

வாங்க ஜெனி....
மிக்க நன்றி.. அன்பான வரிகளுக்கும்.. ஆறுதலான உணர்வுகளுக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Praveena Jennifer Jacob said...
தொலை தூரம் போய்விட்ட
உறவினைத் தேடிடும் விரல்களில்
பிசைபடும் தந்தையின் பழைய நினைவுகளை...
எழுதப்படாத துயரங்களை...
வரைபடம் போடும் உங்கள் மனதிற்கு
ஆறுதலை இறைவன் அருள வேண்டுகிறேன்! //

ஜெனி ... தந்தையின் கரம் பிடித்து நடந்த அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவைகள் !!!

ஆறுதலுக்கும் தேற்றுதலுக்கும் நன்றிகள் பல...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sharon said...
ஏதோவொரு இனம் புரியாத சோகம்...
ஒற்றை இறகு வண்ணத்துப்பூச்சி பறக்கத்துடிப்பது போன்ற சோகவுணர்வும்..
இறுதியில் வெறுமையெனும் பெயர் கொண்ட மெல்லிய பெருமூச்சும்..
கடைசியில் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரும்
வந்து போயிற்று.....உங்கள் கவிதை படிக்கையில்.


ப்ரியமுடன்
ஷாரன்.//

வாங்க ஷாரன்..
ஒற்றை இறகு பட்டாம்பூச்சி... மிக அழகாக வேதனையை சொல்லி இருக்கிறீர்கள்... கண்ணீர் துடைக்க வந்து கண்ணீரோடு போகிறீர்களா..? மிக்க நன்றி வலியான வலிமையான ஆறுதல் வரிகளுக்கு...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhmaangani said...
இப்படி வித்தியாசமான கவிதையை எழுதியதற்கு என் முதல் பாராட்டுகள்!! காதல் கவிதைகளிலும் மட்டும் அல்ல, எல்லா வித கவிதைகளிலும் கலக்குவேன் என நிருபித்துவிட்டீர்கள்! வாழ்த்துகள்!!

யதார்த்தமான கவிதை. என்ன.. சந்தோஷ் சுப்பரமணியம் படம் பாத்தீங்களோ. இல்ல.. inspirationஆ கேட்டேன்!! //

வாங்க தமிழ்....
மிக்க நன்றி... படம் எல்லாம் பார்த்து inspiration இல்லை தமிழ்... :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// கைப்புள்ள said...
/////நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..///

ஒரு மாதிரி மனதை கனமாக்குகிற வரிகள்...ம்ம்ம்..:(//

உண்மையிலேயே கண்கலங்க வைக்கும் வரிகள்.//

வாங்க மோகன்....
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்.. :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
:( //

வாங்க சிபி..
:((

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//வெற்றி said...
கவிதை அருமை.
என் அப்பாவை நினைவுபடுத்தியது.

/*லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...*/

கண்ணீரை வரவழைத்த வரிகள்.

பாராட்டுக்கள்.//

வாங்க வெற்றி...
கண்ணீரோடு பாராட்டியதற்கு மிக நெகிழ்ந்தேன்... நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//PPattian : புபட்டியன் said...
வழக்கமா "காதல்" எழுதி அசர வைப்பீங்க. இப்போ "பாசம்" எழுதி நெகிழ வச்சிட்டீங்க..

நிஜமாவே ஏதானும் துயரம் நிகழ்ந்து விட்டதா? //

வாங்க பாட்டியன்....

நெகிழ்ச்சியான தருகைக்கு மிக்க நன்றி... ம்ம்ம்ம்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இறக்குவானை நிர்ஷன் said...
/கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
//

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?
//

வாசிக்கும்போதே சோகம் துளிர்க்கிறது. தந்தையின் பாசத்தை அருமையாக தந்திருக்கிறீர்கள். //

வாருங்கள் நிர்ஷன்...
மிக்க நன்றி ... தொடர்ந்த வாசிப்புக்கும் தேர்ந்தெடுத்த வரிகளுக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Aruna said...
அந்த உறவின் இழப்பு.....கைகளுக்குள் இருந்தது விடுபட்ட மெல்லிய விரல்கள் போல ஒரு வெறுமையைத் தந்தே தீரும்....அந்த வெறுமை வாழ்நாள் முழுவதும் வெறுமையாகவே இருக்கும்.... யாராலும் நிரப்பப்பட முடியாது..
அன்புடன் அருணா //

வாருங்கள் அருணா...
ஆம் தீராத சில வெறுமைகளில் ஏதேனும் நிரப்ப முடியுமா என முயன்று கொண்டே இருக்கும் மனம்... சத்தியமான வார்த்தைகள்... மிக்க நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாடோடி இலக்கியன் said...
படிக்கும் பொழுதே கண்ணில் நீர்த்திரை...!.
வேறு என்ன சொல்ல ..... /

வாங்க இலக்கியன்...

மிக்க நன்றி வருகைக்கும் கனத்த தருகைக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சகாராதென்றல் said...
//எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...//

நவீன்,
அம்மாங்கற ஜீவனுக்குள்ளே எத்தனை மென்மையான மனது ஒளிந்து கொண்டிருக்கிறதோ அதை விட மேலான அன்பு, பாசம், அக்கறை எல்லாம் இருக்கிறது அப்பாவிடம்..
மீண்டுமொரு முறை தந்தை மடித்தூக்கமும், தலை வருடலும் கிட்டாதா என ஏங்குகிறது மனசு. //

வாங்க சகாராதென்றல்...

ஆம் தந்தை முழுதுமாக வெளிப்படுத்துவது இல்லை... எல்லாம் முடிந்த பின் தான் சிலவற்றை உணர முடிகிறது அல்லவா..? மிக்க நன்றி....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ரசிகன் said...
//முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...//

அருமைங்க நவின்:) //

மிக்க நன்றி ரசிகன்.. :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ரசிகன் said...
பொதுவா பெண்கள் தான் அப்பா செல்லம்ம்பாங்க.. ஆனா ஆண்களுக்குள்ளும் இருக்கும் தந்தைப் பாசத்தை வாழ்வில் என்றாவது உணர்ந்தே தீருவார்கள்:) //

ஆம் ரசிகன் ... மிக உண்மையான வார்த்தைகள்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ரசிகன் said...
//அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...//

டிரிபிள் ரிப்பீட்டேய்ய்ய்ய்...//

மிக்க நன்றி ரசிகன்... :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//புகழன் said...
இப்படிகூட எழுதுவீங்களா?
வெறும் காதல் கவிஞர் என்று நினைத்தேன்.
எல்லாவற்றிலும் நீங்கள் கவியரசர்தான்.//

வாங்க புகழன்...
மிக்க நன்றி.. பகிர்ந்த உணர்வுகளுக்கு... :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இனியவள் புனிதா said...
The good one //

வாங்க புனிதா... மிக்க நன்றி :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேவியர் said...
கண்ணீர் நினைவுகளுக்குள் மீண்டும் ஒரு முறை என்னை இறக்(க)கி விட்டீர்கள். //

வாங்க சேவியர்...
பகிர்வுக்கும் உணர்வுக்கும் மிக்க நன்றி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//hemasri said...
migavum arumai. //

வாருங்கள் ஹேமாஸ்ரீ
மிக்க நன்றி !!!

ஜி சொன்னது…

:((

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

ஆழமாய் வருடிவிட்டது தங்களின் கவிதை!

வார்த்தைகள் தேடுகிறேன் ஆனால் நீர்துளிகள் மட்டுமே மனதில் எஞ்சிநிற்கின்றன நவீன்!

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் சொன்னது…

அப்பாக்களை பாசத்தை வெளிக்காட்டாமல் வளர்க்கச் சொன்ன சமுதாயத்தின் மீதுதான் கோபம் வருகிறது.

என்னிடம் சிரித்து பேசக் கூட தயங்குகிற என் அப்பா தான் எனக்குத் திருமணமாகி என்னை மாப்பிள்ளை வீட்டில் விடும் போது வாய் விட்டு அழுதார்கள்.

நான் உண்மையில் அன்றுதான் தகப்பன் பாசம் புரிந்து கொண்டேன்.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் சொன்னது…

உங்கள் கவிதைகளை கண்ணில் நீருடன் வாசித்தேன்

Shwetha Robert சொன்னது…

I said 'God it hurts'
And God said 'I Know'

I said 'God I cry alot'
And God said 'That's why I gave you tears'

I said 'God I get so depressed'
And God said 'That why I gave you sunshine'

I said god I feel Alone'
And god said 'That's why I gave you loved ones'

I said 'god my loved one is dead'
And God said'I watched mine nailed to the cross'

I said God 'Where are they? '
And God said 'Mine is on my right and yours is in the light.

I said 'God it hurts'
And God said 'I know'
------------------------

My Deep condolence Naveen Prakash.

Naresh Kumar சொன்னது…

மனதை நெகிழ வைக்கின்ற கவிதைகள் நவீன்.
அணமையில் தந்தையை இழந்த எனக்கு, என் உணர்வுகளை அப்படியே எடுத்துச் சொல்வது போல் இருந்தது.

நன்றி நவீன்!

சிவபார்கவி சொன்னது…

படங்கள் அருமை, கவிதை சூப்பர்
எப்படிப்பா... எப்படி...

வாழ்த்துக்கள்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஜி said...
:((//

வாங்க ஜி ,
:((

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
ஆழமாய் வருடிவிட்டது தங்களின் கவிதை!

வார்த்தைகள் தேடுகிறேன் ஆனால் நீர்துளிகள் மட்டுமே மனதில் எஞ்சிநிற்கின்றன நவீன்!//

வாங்க சதீஷ் !!!

பகிர்ந்த உணர்வுகளுக்கும் உள்ளத்துக்கும் மிக்க நன்றி சதிஷ் !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கோகிலவாணி கார்த்திகேயன் said...
உங்கள் கவிதைகளை கண்ணில் நீருடன் வாசித்தேன் //

வாருங்கள் கோகிலவாணி :))

மிக்க நன்றி வருகைக்கும் உணர்வுப் பகிர்வுக்கும்... !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கோகிலவாணி கார்த்திகேயன் said...
அப்பாக்களை பாசத்தை வெளிக்காட்டாமல் வளர்க்கச் சொன்ன சமுதாயத்தின் மீதுதான் கோபம் வருகிறது.//

வாருங்கள் கோகிலவாணி..
சில அப்பாக்கள் மிகுந்த பாசத்தை காட்டத்தான் செய்கிறார்கள்...

//என்னிடம் சிரித்து பேசக் கூட தயங்குகிற என் அப்பா தான் எனக்குத் திருமணமாகி என்னை மாப்பிள்ளை வீட்டில் விடும் போது வாய் விட்டு அழுதார்கள்.

நான் உண்மையில் அன்றுதான் தகப்பன் பாசம் புரிந்து கொண்டேன்.//

ஆம் அப்பாவின் பாசம் அளவு கடந்தது.. ஆனால் வெளிப்பாடாதது.....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Shwetha Robert said...
....................
said God 'Where are they? '
And God said 'Mine is on my right and yours is in the light.

I said 'God it hurts'
And God said 'I know'
------------------------

My Deep condolence Naveen Prakash.//

வாருங்கள் ஸ்வேதா

மிக மிக அழகான ஆழமான வரிகள்... மனதை மென்மையாக வருடிவிட்டு வன்மையாக உணர்வுகளை விட்டுச் செல்கின்றது.. மிக்க நன்றி... உணர்வுக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Naresh Kumar said...
மனதை நெகிழ வைக்கின்ற கவிதைகள் நவீன்.
அணமையில் தந்தையை இழந்த எனக்கு, என் உணர்வுகளை அப்படியே எடுத்துச் சொல்வது போல் இருந்தது.

நன்றி நவீன்!//

வாருங்கள் நரேஷ்..:))
அன்மையில் தந்தையை இழந்த தங்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் தர எல்லாம் வல்ல இறைவனை ப்ராத்திக்கிறேன்..

பகிர்ந்த உணர்வுகளுக்கு மிக்க நன்றி நரேஷ்..!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Durai Thiyagaraj said...
படங்கள் அருமை, கவிதை சூப்பர்
எப்படிப்பா... எப்படி...

வாழ்த்துக்கள் /

வாருங்கள் துரை தியாகராஜ்...

மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்....

முகுந்தன் சொன்னது…

அப்பா அப்படின்னாலே உங்கள் வரிகள் தான் இனிமேல் ஞாபகம் வரும்.
அற்புதம் என்று கூட சொல்ல முடியவில்லை, அதற்கும் மேல் எதோ ஒன்று....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//முகுந்தன் said...

அப்பா அப்படின்னாலே உங்கள் வரிகள் தான் இனிமேல் ஞாபகம் வரும்.
அற்புதம் என்று கூட சொல்ல முடியவில்லை, அதற்கும் மேல் எதோ ஒன்று....//

வாருங்கள் முகுந்தன்...
என் வரிகள் தான் ஞாபகம் வருமா..??
உயர்வு நவிர்ச்சியாக இருக்கிறதே....
உணர்வுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

கோகுலன் சொன்னது…

கவிதைகள் அருமை.. படங்கள் அதைவிட அருமை..

தமிழன்-கறுப்பி... சொன்னது…

அண்ணன் என்ன உங்க போட்டோவெல்லாம் மாத்திட்டிங்க...

எனக்கு பிடிச்சது அந்த பழைய போட்டோதான்...:)

MSK / Saravana சொன்னது…

எப்போதும் மகிழ்ச்சி அடைய வைப்பீர்கள்.. இம்முறை வருத்தபடவும் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்..
சொல்ல முடியாத குற்ற உணர்ச்சி வருகிறது..

"அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்..."

திடீரென்று வாழ்வில் வந்து கடந்துவிடும் பெண்ணை தேவதை,அன்பே, காதலென்று கவிதையில் புலம்பும் நான் (நான் மட்டுமில்லை என்று நினைக்கிறேன்), உண்மையான பாசம் காட்டும் பெற்றோரிடம் அந்த அளவுக்கு பாசம் காட்டுவதில்லை என்றே நினைக்கிறேன்..

இனி மாற்ற, மாற முயற்சிக்கிறேன்..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Gokulan said...
கவிதைகள் அருமை.. படங்கள் அதைவிட அருமை..//

வாருங்கள் கோகுலன்....:)))
மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...
அண்ணன் என்ன உங்க போட்டோவெல்லாம் மாத்திட்டிங்க...

எனக்கு பிடிச்சது அந்த பழைய போட்டோதான்...:) //

வாங்க தமிழன்... :)))
அப்படியா..?? அட இப்போ இப்படித்தானே இருக்கேன்...?? ::))))

கருணாகார்த்திகேயன் சொன்னது…

நவீன், நான் படித்த அப்பா பத்திய முதல் கவிதைனு நினைக்கிறேன்
அருமை !

அன்புடன்
கார்த்திகேயன்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//M.SARAVANA KUMAR said...
எப்போதும் மகிழ்ச்சி அடைய வைப்பீர்கள்.. இம்முறை வருத்தபடவும் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்..
சொல்ல முடியாத குற்ற உணர்ச்சி வருகிறது..

"அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்..."

திடீரென்று வாழ்வில் வந்து கடந்துவிடும் பெண்ணை தேவதை,அன்பே, காதலென்று கவிதையில் புலம்பும் நான் (நான் மட்டுமில்லை என்று நினைக்கிறேன்), உண்மையான பாசம் காட்டும் பெற்றோரிடம் அந்த அளவுக்கு பாசம் காட்டுவதில்லை என்றே நினைக்கிறேன்..

இனி மாற்ற, மாற முயற்சிக்கிறேன்.. //

வாங்க சரவணகுமார்..:)))

மிகச்சரியான வார்த்தைகள்... ஆம் பெற்றோர்களுக்கு தரும் அன்பில் என்றுமே குறை வைக்ககூடாது... மிக்க மகிழ்ச்சி தங்கள் வரவும் அழகான தருகையும்.... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கார்த்திகேயன். கருணாநிதி said...
நவீன், நான் படித்த அப்பா பத்திய முதல் கவிதைனு நினைக்கிறேன்
அருமை !

அன்புடன்
கார்த்திகேயன் //

வாருங்கள் கார்த்திகேயன்... :)))
அட அப்படியா...?? முதல் அப்பா கவிதையா..? மிக்க மகிழ்ச்சி...

மிக்க நன்றி கார்த்தி... அழகான தருகைக்கும் ... அருமையான வருகைக்கும்... :))))

Ravishna சொன்னது…

Wow.excellent.I don't have any words to describe about your lines.
I enjoyed much.

--ravishna

பெயரில்லா சொன்னது…

"லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்... "

அருமை.. என் அப்பாவும் நினைவில் வந்து போகிறார்...

காதல் கவிதைகளும் அழகு...தொடருங்கள் நவீன்... கவிதைகளை,,

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

/Tamil Paiyan said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள் //

வாருஙகள் தமிழ்பையன்...
மிக்க நன்றி.. :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Ravishna said...

Wow.excellent.I don't have any words to describe about your lines.
I enjoyed much.

--ravishna //

வாங்க ரவிஷனா... :)

மிக்க நன்றி... வருகைக்கும்
தருகைக்கும்.. !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ரகசிய சிநேகிதி said...

"லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்... "

அருமை.. என் அப்பாவும் நினைவில் வந்து போகிறார்...

காதல் கவிதைகளும் அழகு...தொடருங்கள் நவீன்... கவிதைகளை,, //

வாருஙகள் ரகசிய சிநேகிதி...
வருகையும் தருகையும்
மிக்க மகிழ்ச்சி... :))

sadha சொன்னது…

Appaakkal perumbaalum appaale iruthu iranthu vidukiraargal...
Naam muthal parisu vaanguvathrkkaaga avargal odum ottatthil, pala nerangalil nammudan avargalaal nindru kooda pesa mudivathillai. Ovvoru manithanukkum than thakappan perumai, satre thaamatham aanaalum, kattaayam puriyum...

Appa kavithai great pa!

Mahadevah from Batticaloa, Sri Lanka சொன்னது…

Excellent! மிகவும் அருமை!

E Saravana Sankar சொன்னது…

en vazhvil muthalil paditha appa kavithai. en mahanai kanum pothu en manathil erpadum enam puriatha unarvikku vardhai vadivangal thanthatharku mikka nandri naveen... en muthal blogspot ethu.

Unknown சொன்னது…

Office-இல் படிக்கமுடியவில்லை Access was blocked.
அதுவும் ஒரு வகையில் நல்லது தான்..
வீடு வந்த பிறகு படித்தேன் ..
படிக்க படிக்க கண்ணீர் ...
படித்த பிறகும்..

இழக்கும் வரை இழந்தவற்றின் அருமை அறிவதில்லை ..
இழந்த பொன், பணம், பொருள் எதோ ஒரு வகையில் ஈடு கட்டி விடலாம்..
இழந்த அப்பாவை.....

.... வலிக்கிறது....

mohamedali jinnah சொன்னது…

நானும் ஒரு அப்பா அதனால் இதனைப் படித்து திரும்பவும் படித்து இக் கட்டுரையில் மூழ்கின்றேன் . படமும் அருமை .

பெயரில்லா சொன்னது…

உங்களைபோன்றோரின் எழுத்துக்களே, உள்ளத்தை, எழுத்தால் வடிக்கும் ஆற்றல் இல்லாத என் போன்றோரின் உணர்வுகளின் வடிகால்.

நெஞ்சம் நெகிழச்செய்த, நினைவுகளை மீட்டு நெடு நேரம் உலாவரச்செய்த வரிகள் - மன்னிக்க - உண்மைகள் தோழரே.

நன்றி
மரு.கோ.பழநி.

P. Suresh Kumar சொன்னது…

வணக்கம் நவீன்,

அப்பாவை இழந்து நிற்கும் எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தன உங்கள் வரிகள். அழுது முடித்த பிறகு அமைதி அடைந்தேன். மிக்க நன்றி நவீன்.

\*லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...*\

/*சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?*/

உங்களது இந்த வரிகளில் கண்ணீரை நிறுத்த முடியாமல் அழுகிறேன் பல நாட்கள்.

காலங்கள் கடந்தாலும் உங்களது கவிதைகள் மறையாது என் நினைவில் இருந்து. மிக்க நன்றி நவீன்......

முருகானந்தம் சொன்னது…

வணக்கம் நவீன்,
அப்படியே என் அப்பாவை மட்டும் அல்ல .. எல்லாருடைய அப்பாவையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் ....
எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.... எங்க அப்பா காட்டுன பாசத்தை நான் அவரிடம் காட்ட தகுதியும், தருணமும் ஆனால் அவர் இன்று இல்லை .
தினமும் கண்ணீர் தான் காணிக்கை அவருக்கு ...

kannadhasan சொன்னது…

my god what a great expression....
i don't know how to about my feelings.....
nice good job keep it up
BY
Y.KANNADHASAN

Unknown சொன்னது…

kavithaikalil kannadiyai muniruthi ,

pennal irunthu engalai alavaikrigal

valaga valamudan

Endrum Anbudan

Saravanaraj.M

பெயரில்லா சொன்னது…

dr.pandian

thank you friend i lost my father six months back .again weeping in tears.

Saravanaram சொன்னது…

kanngalil neer katti vittathu...!!!
yethuvumey illaatha pothu thaan theriyum athan arumai.

Getcy சொன்னது…

Kattuppadutha iyala kanneer en kangalil
Kaattaraga odum en Appaa en Ninaivil

ithanai velaigalilum ennai oriru nimidam nan izhandha en appavai kanneerodu ninaika vaitha naveen ku en nandrigal...
Very Nice !!!! Thank you!

SURYAJEEVA சொன்னது…

நிமிர்ந்த நெஞ்சுடன் நீ பின்னே நிற்க நான் அனைவர் முன்னிலையிலும் நடக்க வேண்டும் என்று கூறினார் என் அப்பா

aalunga சொன்னது…

அருமையான வரிகள்...

//எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...//

மிகவும் உண்மை!

பெயரில்லா சொன்னது…

i have nothing but tears to post here... with ur permission, sharing it on my facebook wall. beautiful!

Remitha Satheesh சொன்னது…

i have nothing but tears to post here... with ur permission, sharing it on my facebook wall. beautiful!

Raji சொன்னது…

Appa erandhu 10 natkalil ungal kavidhaiyai padithen.kaneer mattume vandhadhu.

Unknown சொன்னது…

Fantastic!!!Fathers are the great soul who gifted by the almighty to us. I love you pas. ....

Unknown சொன்னது…

all most i feel then like line

Unknown சொன்னது…

all most i feel then like line

INDIAN சொன்னது…

Really Toching words........Thanks....

usually I m not posting comments...but for this I cant scroll my mouse without commenting......

Barathi சொன்னது…

என் அப்பா போன்ற ஒரு தங்கமான மனிதரை பார்க்க இயலாது. ஒரு நண்பனை போல என்னையும் என் தம்பியையும் வழி நடத்தினார். அவர் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த வரிகள் எனக்கு கண்ணீரை வர வைத்து விட்டது.

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

.......

Unknown சொன்னது…

vaarthaigal varavillai,naan alugiren.........