செவ்வாய், மார்ச் 06, 2007

143 missed calls

miscal1நானும் நீயும் ஒரே ரிங்டோன்
வைத்து இருப்பது அறியாமல்
யாருடைய மொபைலிலோ அழைப்பு
வந்தபோது நான் இருவருமே அவரவர்
மொபைலை எடுத்துப் பார்த்துவிட்டு
நீ என்னையும்
நான் உன்னையும்
பார்த்து வழிந்தோமே ?
அந்த முதல் சந்திப்பு உனக்கு
ஞாபகம் இருக்கிறதா ?


miscal2


தோழிக்கு சொல்வதுபோல்
உன் மொபைல் எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்டபோது நீ அவசரமாக முறைத்து
மறுத்துவிட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என் மெசேஜ் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?


miscal3


முதன் முதலில் நான்
உன்னை மொபைலில் அழைத்தபோது
யாரென்றே தெரியாதது போல
ஆயிரம் கேள்வி கேட்டு
வெறுப்பேற்றினாயே
ஞாபகம் இருக்கிறதா ?


miscal4


அண்ணன் பக்கத்தில்
இருந்ததால் தான் அப்படி
பேசவேண்டி இருந்தது மன்னிச்சுகுங்க
என நீ அனுப்பிக்கொண்டே
இருந்த மெசேஜ்
என் இன்பாக்ஸையே
நிரப்பிவிட்டது உனக்கு
தெரியுமா ?


miscal5


ஏண்டா வாய் அசையுது
ஆனா ஒரு சத்தமும் கேட்கமாட்டீங்குதேடா
குசுகுசுன்னு அப்படி
என்னதான் ரகசியம் பேசுறியோ ?
என கேட்கும் அம்மாவிடம்
சொல்லி விடட்டுமா
அந்த ரகசியத்தை என நான்
உன்னிடம் கேட்டபோது
தைரியம் இருந்தா பண்ணிட்டு சொல்லுடா
என குறும்பாக நீ சொன்னது
ஞாபகம் இருக்கிறதா ?


miscal6


அவசரத்தில் நீ மொபைலை வைத்து
இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு
ஒரேயொருநாள் நான் உன்
மொபைலாக இருக்கிறேனே
என நான் கேட்டபோது
நீ கொட்டிய வெட்கத்தை
என் மனதினில் இன்னமும்
சேமித்து வைத்திருக்கிறேன்
தெரியுமா ?


miscal7


ஏன் இன்னும் இந்த பழைய
மொபைலையே வைத்துக்கொண்டு
மாரடிக்கிறே என கேலிபேசும்
நண்பர்களிடம் இதுதான்
நீ முதன்முதலில் கொடுத்த
முத்தம் சுமந்த மொபைல்
என கூறமுடியுமா ?


miscal8


இப்போவெல்லாம் நம்ம தம்பி
நைட்டு ரொம்ப நேரம் படிச்சுட்டு
லேட்டாதான் தூங்குறான் என
அப்பாவிடம் உற்சாகமாக
சொல்லிக்கொண்டிருக்கும்
அம்மாவுக்கு தெரியுமா
நான் படித்துக்கொண்டிருப்பது மாதிரி
நடித்துக்கொண்டிருப்பதே
நாம் அனுப்பிக்கொள்ளும்
மெசேஜ்களுக்குத்தான் என்று ?


miscal9


என் தோழியிடமிருந்து வந்திருந்த
ஒரு மெசேஜை நீ படித்துவிட்டு
என்னிடம் சண்டையிட்டு போன
அன்று முழுவதும் நான் உனக்கு
விளக்கம் சொல்லி சொல்லி
தேய்ந்தே போனது என்
மொபைலின் கீபேட் மட்டும் அல்ல
என் விரல்களும்தான்
என உனக்குத்தெரியுமா ?


miscal10


நண்பர்களுடன் இருக்கும்போது
நீ கேட்ட ‘உம்மா’ வை நான் தரவில்லை
என கோபமாக நீ மொபைலை அணைத்துவிட்டு
சென்றுவிட்டாய் என்பதற்காக அடுத்த நாள்
முழுவதும் மொபைலில்
நான் முத்தம் கொடுத்துக்கொண்டே
இருக்க தாங்க முடியாமல்
‘போதுண்டா பேசித்தொலைக்கிறேன்
நிறுத்து ப்ளீஸ்!’ என நீ கெஞ்சலாக
கேட்ட கொஞ்சலை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?miscal11


இந்த மொபைலை பார்க்கிறபோ
எல்லாம் உனக்கு என்ன தோணுது
என நீ கேட்டதற்கு நான் சொன்ன
பதிலுக்குப்பிறகு முறைத்துக் கொண்டே
மறைத்துக்கொண்டாயே
ஞாபகம் இருக்கிறதா ?