வெள்ளி, நவம்பர் 24, 2006

கொஞ்சும் இன்பம்...

meesaiஎனக்கு வெட்கம் என்றால்
என்னவென்றே தெரியாதவளாக
இருந்தேன்
உன் மீசை குத்தும் வரைKonjuகொஞ்சம் என்னை திட்டு
என்னை திட்டிவிட்டு
நீ கெஞ்சுவதைப்போல்
கொஞ்சுவது
எனக்கு மிகவும் பிடிக்கிறது


vetkam
இப்பொழுதெல்லாம் நான்
அடிக்கடி அழகாக
வெட்கப்படுகிறேனாம்
சொல்கிறார்கள் என் தோழிகள் !
நீ தொலைபேசி வழியே என்னுடன்
பேசும்போது கூட
சும்மா இருந்தால் தானே ?kaatru
உன்னைபோலவே
இந்த காற்றும்
சும்மாவே இருப்பதில்லை
பார் என் மேலாடையை
சும்மா விடுகிறதா ?


poraamai
முன்பெல்லாம் உன்னுடன்
எந்தப்பெண் பேசினாலும்
கவலைப்படாத நான்
இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமைப்படுகிறேன்vendaamவர வர உன் குறும்புக்கு
ஒரு எல்லையே இல்லாமல்
போய்விட்டது
நான் வேண்டாம் என்றாலே
உடனே அதை செய்ய
ஆரம்பித்துவிடுகிறாய்.manasuஎன் மனதில் நீதாண்டா
இருக்கிறாய் என ஏன் தான்
சொன்னேனோ
எங்கே காட்டு என
இப்படி என் உடை
கலைத்தால் எப்படி ?


porukkiநீ ஒரு பொறுக்கி
என்று திட்டினால் கூட
‘ஆமாம்! என்னைப்பார்த்து
சிதறிக்கிடந்த உன் இதயத்தான்
பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய்
ச்சீய் போடா பொறுக்கி !!!
ஏன் இப்படி கூறி என் வெட்கத்தை
சிதறடிக்கிறாய் ?


samiyalசமயலறையில் வந்து
ஏன் இப்படி தொல்லை செய்யுறே
இப்போ என்னை சமையல் செய்ய
விடப்போறியா இல்லையா
என நான் கோவமாக
சொன்னாலும் பொய்யாகத்தான்
சொல்கிறேன் என
எப்படிடா கண்டுபிடிக்கிறாய் ?


sweetlips


உனக்காக நான் சமைத்த
பலகாரம் எப்படி இருக்கிறது
எனக்கேட்டால்
உன் உதடுகளை விட
ஒன்னும் சுவையாக இல்லை
என்றால் எப்படி ?
எப்படி திட்டுவேன் உன்னை இனி ?


cinema
என்னை சினிமாவிற்கு
கூட்டிகிட்டு போ என்றால்
வீட்டிலேயே உனக்கு நான்
படம் காட்டுகிறேன் என்கிறாயே
திருடா !!
நீ என்ன படம் காட்டுவாய்
தெரியாதா ?honeymoon

நம் தேனிலவுக்கு எங்கே
செல்லலாம் என கேட்டால்
கட்டிலுக்கு என்கிறாயே
சீசீய்... வர வர உன்னை....

வியாழன், நவம்பர் 16, 2006

எனக்கு மதம் பிடிக்கிறது

மதமில்லா மதம்மதம்
பிடிக்காத
மதம்
பிடிக்கும்
மதம்
இல்லாத
மதம்
இருக்கிறதா ?அண்டம் கடவுள்


அண்டம் காக்கும்
கடவுளைப் பார்க்க
காத்திருக்கிறேன்
தரிசன
வரிசையில்

கடவுள் காட்சிஎனக்கு மட்டும்
காட்சி தருகிறார்
என் கடவுள்
விஷேச கட்டணத்தில்நான் பாவிநான் ஒரு
பாவி என்று
மற்றொரு பாவி
சொல்லிக்கொண்டிருக்கிறார்
என் கடவுள்என் கடவுள்
காக்கும் கடவுள்
என் மதத்தினரை
மட்டும்உண்டியல்

இது உண்டியல்
அல்ல
நான் தெரிந்தேசெய்த
தவறுகளை
அங்கீகரிக்க
நான் கடவுளுக்கு
அளிக்கும்
தூண்டில்
குலதெய்வம்


தெய்வம்
எனக்குச் சொந்தமா
தெரியாது
ஆனால்
எனக்குச் சொந்தமாக
குலதெய்வமே
இருக்கிறது


கடவுளை தேடி
கடவுளைத்தேடி
சென்ற
இடமெல்லாம்
நான்
இருந்தேன்
கடவுள் மட்டும் இல்லைமதம் உயர்வு
என் கடவுள்
மட்டுமே
உயர்ந்தவர்
என்று
தாழ்ந்தவர்கள்
சண்டையிட்டுக்கொள்கிறார்கள்மத மனிதன்மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லைதிருடர்
என்னைக் காப்பாற்ற
வேண்டிய கடவுளுக்கு
திருடர்களிடம்
தன்னைக் காப்பாற்ற
இயலவில்லைஅந்நியர்கள்அந்நியர்கள்
யாரும்
உட்பிரவேசிக்கக்கூடாது
என கடவுளின்
சந்நிதானத்தில்
கடவுளுக்கு
அந்நியமானவர்கள்
எழுதிவைத்திருக்கிறார்கள்தாயுள்ளம்
தாயுள்ளம் கொண்ட
கடவுள்
தாயார்கள் தொட்டாலே
தீட்டாகிவிடும்
மாயம் என்ன ?
தீண்டாமை
தீண்டாமை நன்று
கடவுளின் பெயரால்
சக மனிதனின்
உணர்வுகளை
தீண்டாமை நன்று

புதன், நவம்பர் 08, 2006

திமிறும் திமிர்

thimir 1
நீ வருவதைப் பார்த்த
புகைவண்டி அறிவிப்பாளர்
சொன்னது
ஒரு அழகிய திமிர்
திமிறும் அழகோடு வருகிறதுthimir 2

உன் திமிரை நான்
அடக்கமுடியுமா என
ஏன் கேட்கிறாய் ?
அப்புறம் திமிரிக்கொண்டு
ஓடுவாய் பரவாயில்லையா ?thimir 3


கைகால்கள் அடங்கி இருக்கும்
என்றால் மட்டுமே
என்னுடன் சினிமாவிற்கு
வருவேன் என
ஏன் இப்படி அடம்பிடிக்கிறாய்
அப்புறம், உன்னை போலவே
என் கைகளும் அடம்
பிடிக்கும் சொல்லிவிட்டேன்

thimir 4

இனி நீ சிகரெட் பிடித்தால்
உன்னுடன் பேசவே போவதில்லை
என என்னுடன் சண்டையிட்டு
சென்ற சோகத்தை மறக்க
இரண்டு பாக்கெட் சிகரெட்
சாம்பலானது உனக்கு தெரியுமா?

thimir 5

கொஞ்சம் கூட உனக்கு
பொறுப்பேயில்லை
என என் அறையை
சுத்தம் செய்தபோது
நீ சொன்னபோது
அப்படியே என் உதடுகளையும்
சுத்தம் செய்துவிட்டுப்போ
என நான் கேட்டதும் என்ன
அப்படி வெட்கம் உனக்கு ?