வெள்ளி, நவம்பர் 24, 2006

கொஞ்சும் இன்பம்...

meesaiஎனக்கு வெட்கம் என்றால்
என்னவென்றே தெரியாதவளாக
இருந்தேன்
உன் மீசை குத்தும் வரைKonjuகொஞ்சம் என்னை திட்டு
என்னை திட்டிவிட்டு
நீ கெஞ்சுவதைப்போல்
கொஞ்சுவது
எனக்கு மிகவும் பிடிக்கிறது


vetkam
இப்பொழுதெல்லாம் நான்
அடிக்கடி அழகாக
வெட்கப்படுகிறேனாம்
சொல்கிறார்கள் என் தோழிகள் !
நீ தொலைபேசி வழியே என்னுடன்
பேசும்போது கூட
சும்மா இருந்தால் தானே ?kaatru
உன்னைபோலவே
இந்த காற்றும்
சும்மாவே இருப்பதில்லை
பார் என் மேலாடையை
சும்மா விடுகிறதா ?


poraamai
முன்பெல்லாம் உன்னுடன்
எந்தப்பெண் பேசினாலும்
கவலைப்படாத நான்
இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமைப்படுகிறேன்vendaamவர வர உன் குறும்புக்கு
ஒரு எல்லையே இல்லாமல்
போய்விட்டது
நான் வேண்டாம் என்றாலே
உடனே அதை செய்ய
ஆரம்பித்துவிடுகிறாய்.manasuஎன் மனதில் நீதாண்டா
இருக்கிறாய் என ஏன் தான்
சொன்னேனோ
எங்கே காட்டு என
இப்படி என் உடை
கலைத்தால் எப்படி ?


porukkiநீ ஒரு பொறுக்கி
என்று திட்டினால் கூட
‘ஆமாம்! என்னைப்பார்த்து
சிதறிக்கிடந்த உன் இதயத்தான்
பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய்
ச்சீய் போடா பொறுக்கி !!!
ஏன் இப்படி கூறி என் வெட்கத்தை
சிதறடிக்கிறாய் ?


samiyalசமயலறையில் வந்து
ஏன் இப்படி தொல்லை செய்யுறே
இப்போ என்னை சமையல் செய்ய
விடப்போறியா இல்லையா
என நான் கோவமாக
சொன்னாலும் பொய்யாகத்தான்
சொல்கிறேன் என
எப்படிடா கண்டுபிடிக்கிறாய் ?


sweetlips


உனக்காக நான் சமைத்த
பலகாரம் எப்படி இருக்கிறது
எனக்கேட்டால்
உன் உதடுகளை விட
ஒன்னும் சுவையாக இல்லை
என்றால் எப்படி ?
எப்படி திட்டுவேன் உன்னை இனி ?


cinema
என்னை சினிமாவிற்கு
கூட்டிகிட்டு போ என்றால்
வீட்டிலேயே உனக்கு நான்
படம் காட்டுகிறேன் என்கிறாயே
திருடா !!
நீ என்ன படம் காட்டுவாய்
தெரியாதா ?honeymoon

நம் தேனிலவுக்கு எங்கே
செல்லலாம் என கேட்டால்
கட்டிலுக்கு என்கிறாயே
சீசீய்... வர வர உன்னை....

57 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆஹா! நவீன் பிரகாஷ்!

அருமையான கவிதை!

(எனக்கு கூட கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது உங்கள் கவிதைகளைப் படித்து)

பெயரில்லா சொன்னது…

கலக்கல்ஸ்

பெயரில்லா சொன்னது…

sexy poem!super naveeen...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஆவி அம்மணி said...
ஆஹா! நவீன் பிரகாஷ்!

அருமையான கவிதை!

(எனக்கு கூட கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது உங்கள் கவிதைகளைப் படித்து) //

வாங்க ஆவிஅம்மணி :)

மிக்க நன்றி :)) வெட்கப்படுங்களேன் என்ன ஆகிவிட போகிறது :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேவியர் said...
கலக்கல்ஸ் //

வாங்க சேவியர் :))
வருகை கலக்கல்ஸ் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//thurgah said...
sexy poem!super naveeen... //

வாங்க துர்கா :))
உங்கள் விமர்சனம் சூப்பர் :))) மிக்க நன்றி தந்தமைக்கு !!

சத்தியா சொன்னது…

ம்...உங்கள் கவிதைகளைப் படித்தால் காதல் வராதவர்களுக்கும் காதல் வரும். வெட்கம் வராதவர்களுக்கும் வெட்கம் வரும்.

ம்... வாழ்த்துக்கள் நவீன்.

பெயரில்லா சொன்னது…

Im going back to my teen ages whenever I read your poems.yeppadi naveen.... how you pick out such a matching pictures?. I just love it

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சத்தியா said...
ம்...உங்கள் கவிதைகளைப் படித்தால் காதல் வராதவர்களுக்கும் காதல் வரும். வெட்கம் வராதவர்களுக்கும் வெட்கம் வரும்.

ம்... வாழ்த்துக்கள் நவீன்.//

வாருங்கள் சத்தியா :))
வெட்கம் வருமா ? :)) நீங்கள் சொன்னால் சரிதான் சத்தியா :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !!!

இராம்/Raam சொன்னது…

நவின்,


கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கு!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
Im going back to my teen ages whenever I read your poems.yeppadi naveen.... how you pick out such a matching pictures?. I just love it//

வாருங்கள் அனானி :))
உங்களின் பதின்ப பருவத்தை என் கவிகள் நினைவுபடுத்துவது கேட்டி எல்லையில்லா மகிழ்ச்சி !!! வருகையும் தருகையும் அழகு !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ராம் said...
நவின்,

கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கு!!! //

வாருங்க ராம் :))
மிக்க நன்றி ராம் :))

ILA (a) இளா சொன்னது…

கலக்கலான் கவிதைகள், சிரிப்பா சிரிப்பா வருதுங்க நவீன்.

ஆவி அண்ணாச்சி சொன்னது…

ஒரு புரொபோசல் உள்ளது.

:))

ப்ரியன் சொன்னது…

அவசரமா படிச்சேன் தல!கலக்கல்...நாளைக்கு விரிவான பின்னூட்டத்தோட வாரேன்.

ஆவி அண்ணாச்சி சொன்னது…

//எனக்கு கூட கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது உங்கள் கவிதைகளைப் படித்து)
//

பிச்சிப்பிடுவேன் பிச்சி!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ILA(a)இளா said...
கலக்கலான் கவிதைகள், சிரிப்பா சிரிப்பா வருதுங்க நவீன். //

வாங்க இளா :))
சிரிப்பு மிக நல்லது இளா !! வருகைக்கு மிக்க நன்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ப்ரியன் said...
அவசரமா படிச்சேன் தல!கலக்கல்...நாளைக்கு விரிவான பின்னூட்டத்தோட வாரேன். //

வாங்க ப்ரியன் :))

மிக்க நன்றி! மீண்டும் வருக :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

ஆவி அண்ணாச்சி said...
//எனக்கு கூட கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது உங்கள் கவிதைகளைப் படித்து)
//

பிச்சிப்பிடுவேன் பிச்சி!

வாங்க ஆவி அண்ணாச்சி :))
எல்லாம் உங்களைப்பார்துத்தாங்க அண்ணாச்சி :))அதுனால எதுக்கு பிச்சுகிட்டு :))

//ஒரு புரொபோசல் உள்ளது.//

என்ன அது என்று கூறிவிடுங்களேன் :))

மிக்க நன்றி அண்ணாச்சி:))

:))

பெயரில்லா சொன்னது…

கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கு

சேதுக்கரசி சொன்னது…

பித்தம் தலைக்கேறுது போலிருக்கே :D

பெயரில்லா சொன்னது…

கவிதை அருமை தோழா... உன் குறும்பு இனிமை...!:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//காண்டீபன் said...
கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கு //

வாங்க காண்டீபன் :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேதுக்கரசி said...
பித்தம் தலைக்கேறுது போலிருக்கே :D //

வாருங்கள் சேதுக்கரசி :))
ஏறட்டும் மேன்மேலும் பித்தம் :)) மிக்க நன்றி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இனியவள் புனிதா said...
கவிதை அருமை தோழா... உன் குறும்பு இனிமை...!:) //

வாங்கள் தோழி :))
இனிமையானது உங்களது விமர்சனம் கூட :))மிக்க நன்றி !!

சாத்வீகன் சொன்னது…

கவிதைகள் நன்று
ஆதலினால்.....
ஒரு பின்னூட்டம்.....

Divya சொன்னது…

குறும்பு கொப்பளிக்கும்
உன் கவிதையை கலக்கல்ஸ் என கலாய்ப்பதா???
விரசத்திற்க்கு ஒரு படி கீழே நிற்க்கும்
உன் கவிதை வரிகளை வர்ணிப்பதா???
என்னவென்று சொல்வது இளமை கூத்தாடும்
உன் காதல் கவிதையை !!!

கவிதா | Kavitha சொன்னது…

நவீன்..பெண்ணாக நினைத்து எழுதியிருந்தாலும்.. அற்புதமான வரிகள்.. பெண்ணை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்...

:) நல்ல வரிகளுக்கு நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சாத்வீகன் said...
கவிதைகள் நன்று
ஆதலினால்.....
ஒரு பின்னூட்டம்..... //

வாருங்கள் சாத்வீகன் :))
விமர்சனத்திற்கு மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
குறும்பு கொப்பளிக்கும்
உன் கவிதையை கலக்கல்ஸ் என கலாய்ப்பதா???
விரசத்திற்க்கு ஒரு படி கீழே நிற்க்கும்
உன் கவிதை வரிகளை வர்ணிப்பதா???
என்னவென்று சொல்வது இளமை கூத்தாடும்
உன் காதல் கவிதையை !!! //

வாருங்கள் திவ்யா :))
இளமை கூத்தாடுகிறது உங்கள் விமர்சனத்தில் :)) வரிகளுக்கு மிக்க நன்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கவிதா said...
நவீன்..பெண்ணாக நினைத்து எழுதியிருந்தாலும்.. அற்புதமான வரிகள்.. பெண்ணை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்...

:) நல்ல வரிகளுக்கு நன்றி... //

வாருங்கள் கவிதா :))
பெண்ணை சரியாக புரிந்தவர் யார் ?? :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :))

பெயரில்லா சொன்னது…

வெகு அருமையான எளிய வரிகளில், பெண் மனதிலுள்ளதை சொல்லும் கவிதைகள்.

என்ன நிறையவே வெக்கப்பட வைக்கிறீர்கள் நவீன்

கென்

G3 சொன்னது…

Kavidhai's superb.. Ellamae oru ponnoda point of viewla irundhey ezhudhi irukkeengalae.. any special reason ;)

பெயரில்லா சொன்னது…

கலக்கல், கவிதையும் படமும் அருமை

பெயரில்லா சொன்னது…

இளமை கொஞ்சும் கவிதைகள்.அதை மேலும் மெருகேற்றும் படங்கள்.ரொம்ப நல்லா இருக்குதுங்க நவீன் பிரகாஷ் !

பெயரில்லா சொன்னது…

Poem is simply superb!

பெயரில்லா சொன்னது…

WOW.. superb poems naveen. பெண்களின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டீர்கள். சபாஷ்!
ம்ம்.. கலக்குறே மச்சி!!
வாழ்த்துகள்!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கென் said...
வெகு அருமையான எளிய வரிகளில், பெண் மனதிலுள்ளதை சொல்லும் கவிதைகள்.

என்ன நிறையவே வெக்கப்பட வைக்கிறீர்கள் நவீன்//

வாருங்கள் கென் :))
வெட்கம் அழகு !! வந்தமைக்கும் ஈந்தமைக்கும் மிக்க நன்றி :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//G3 said...
Kavidhai's superb.. Ellamae oru ponnoda point of viewla irundhey ezhudhi irukkeengalae.. any special reason ;) //

வாருங்கள் G3 :))
விசேச காரணங்கள் இல்லை. ஒரு பதிவில் படித்ததால் பெண்ணின் கோணத்தில் கவிதைகள் எழுத முயற்சித்துள்ளேன் :)) மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கிலுரு said...
கலக்கல், கவிதையும் படமும் அருமை //

வாருங்கள் கிலுரு :))
கலக்கல் பெயர் :) மிக்க நன்றி கிலுரு :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கதிரவன் said...
இளமை கொஞ்சும் கவிதைகள்.அதை மேலும் மெருகேற்றும் படங்கள்.ரொம்ப நல்லா இருக்குதுங்க நவீன் பிரகாஷ் !//

வாருங்கள் கதிரவன் :))
தங்களின் வருகையும் தருகையும் மிகுந்த மகிழ்சியளிக்கிறது கதிர் !! :) மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//subbulak said...
Poem is simply superb! //

வாருங்கள் சுப்புலாக் :))

மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//tamilmagani said...
WOW.. superb poems naveen. பெண்களின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டீர்கள். சபாஷ்!
ம்ம்.. கலக்குறே மச்சி!!
வாழ்த்துகள்!! //

வாருங்கள் தமிழ்மகனி :))
பெண்களின் மனது இப்படிதானா ?? இன்னும் சந்தேகமாகத்தான் இருக்கிறது எனக்கு :)) மிக்க நன்றி !!

தாரிணி சொன்னது…

நவீன்.. வழக்கம் போலவே துள்ளல் கலந்த குறும்பு.. ரசிக்கிறேன் உங்கள் குறும்பை..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தாரிணி said...
நவீன்.. வழக்கம் போலவே துள்ளல் கலந்த குறும்பு.. ரசிக்கிறேன் உங்கள் குறும்பை.. //

வாருங்கள் தாரிணி :))
துள்ளல் உங்கள் விமர்சனமும் கூடத்தான் :)) மிக்க நன்றி !!

sooryakumar சொன்னது…

ஐயோ....இப்போதானே பார்க்கிறேன்.
ஏதோ..எனக்கும் அவளுக்குமாய்..சொன்னது போல நிறைய விசயங்கள்..!
நிற்க.,
ஓசோ பெண்களைப்பற்றி எழுதியது பெங்குயினில் போட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா..??
உங்கள் பதிவுகள் அருமை..!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sooryakumar said...
ஐயோ....இப்போதானே பார்க்கிறேன்.
ஏதோ..எனக்கும் அவளுக்குமாய்..சொன்னது போல நிறைய விசயங்கள்..!//

வாருங்கள் சூரியகுமார் :))
மிகுந்த மகிழ்ச்சி :))

//நிற்க.,
ஓசோ பெண்களைப்பற்றி எழுதியது பெங்குயினில் போட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா..??
உங்கள் பதிவுகள் அருமை..! //

நான் படித்ததில்லையே !! தேடிப்பார்கிறேன். மிக்க நன்றி !!

பெயரில்லா சொன்னது…

சிருங்காரம் பொங்கி வழியுது!..
அருமையான வரிகள்.

ஹ்ம்ம்ம்ம்மாஆஆஆ...
அமைதிப்படை அமாவாசை மாதிரி ரியாக்ஷன் கொடுக்க வச்சிட்டீங்களே.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பெத்த ராயுடு said...
சிருங்காரம் பொங்கி வழியுது!..
அருமையான வரிகள்.

ஹ்ம்ம்ம்ம்மாஆஆஆ...
அமைதிப்படை அமாவாசை மாதிரி ரியாக்ஷன் கொடுக்க வச்சிட்டீங்களே. //

வாங்க பெத்தராயுடு :))
மிக்க நன்றி ராயுடு :)) அதென்னங்க அமைதிபடை அமாவாசை சவுண்ட் ? ;)))

பெயரில்லா சொன்னது…

\\நீ ஒரு பொறுக்கி
என்று திட்டினால் கூட
‘ஆமாம்! என்னைப்பார்த்து
சிதறிக்கிடந்த உன் இதயத்தான்
பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய்
ச்சீய் போடா பொறுக்கி !!!\\

பொறுக்கின்னு சொன்னா கூட கோபமே வராத ஒரு ஆணா????
எங்கே அவன்......பார்க்கனுமே!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\நீ ஒரு பொறுக்கி
என்று திட்டினால் கூட
‘ஆமாம்! என்னைப்பார்த்து
சிதறிக்கிடந்த உன் இதயத்தான்
பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய்
ச்சீய் போடா பொறுக்கி !!!\\

பொறுக்கின்னு சொன்னா கூட கோபமே வராத ஒரு ஆணா????
எங்கே அவன்......பார்க்கனுமே!//

வாங்க அனானி :))
பொறுக்கின்னு சொன்னா கோபம் வரணுமா ?? :)))) வந்தாதான் ஆணா ? :)))) அப்படியா சொல்லறீங்க? :)))

பெயரில்லா சொன்னது…

\\எனக்கு வெட்கம் என்றால்
என்னவென்றே தெரியாதவளாக
இருந்தேன்
உன் மீசை குத்தும் வரை \\

குத்திய மீசை
ஏற்படுத்தும்
ஓசையில்லா ஆசை
திகட்டாத இம்சை!!

Divya சொன்னது…

\\\முன்பெல்லாம் உன்னுடன்
எந்தப்பெண் பேசினாலும்
கவலைப்படாத நான்
இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமைப்படுகிறேன்\\

ஆபத்தான பொறாமை என்றாலும் , ரசிக்கும்படியாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\எனக்கு வெட்கம் என்றால்
என்னவென்றே தெரியாதவளாக
இருந்தேன்
உன் மீசை குத்தும் வரை \\

குத்திய மீசை
ஏற்படுத்தும்
ஓசையில்லா ஆசை
திகட்டாத இம்சை!!//

வாங்க அனானி :)))
திகட்டாத இம்சையா என்ன.?? எனக்குத் தெரியாதே.. :))))))))))
மிக்க நன்றி திகட்டாத தருகைக்கு...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\\முன்பெல்லாம் உன்னுடன்
எந்தப்பெண் பேசினாலும்
கவலைப்படாத நான்
இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமைப்படுகிறேன்\\

ஆபத்தான பொறாமை என்றாலும் , ரசிக்கும்படியாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!!//

வாங்க திவ்யா :))
ரசிக்கிற மாதிரி இருக்கிறது அல்லவா..?? :)))) மிக்க நன்றி !!!!

மஹாராஜா சொன்னது…

செம சூப்பர்... உங்க கவிதை ஒன்னு விடாம படிக்கிறேன்..
எல்லாமே நாளா இருக்கு..
ஒரு வெப்சைட் ஓபன் பண்ணுங்க..தல ..

Unknown சொன்னது…

sir many would have already asked u
anyway do u love anyone?