புதன், ஜனவரி 24, 2007

எம்குலப்பெண்களுக்கு...

sooraiபோதும் போதும்
என்றாலும்
விடாமல் என்
கற்பை சூறையாடுகிறது
இந்த மதிகெட்ட
ஆண்குலம்
தன் கண்களாலே


vilagum2பேருந்தில்
நடைபாதையில்
சாலையில்
கோவிலில்
எங்கும் எப்போதும்
ஏதோ ஒரு ஆண்
ஏதாவது விலகுமா என
முறைத்துக்கொண்டே
இருக்கிறான்


pirasavam


கொஞ்சம் வழிகேட்டால்
போதும் பிரசவ அறைக்கு
அனுப்பும் வரை
ஓய்வதில்லை
உன் குலம் !!


thaali4


தாலி
மெட்டி
குங்குமம்
எப்படியெல்லாமோ
வேலி போட்டு
அனுப்புகிறாய்
உன் சக ஆண்குலத்தின்
மீது அப்படியொரு
நம்பிக்கையா ?? !!maathavi5


தாயாக
தாசியாக
சேயாக
தோழியாக
தாதியாக
உனக்காக
எத்தனை அவதாரம்
எடுத்தாலும்
நீ மாதவிகளையே
போற்றுகிறாயே
ஏன் ?


parathai


ஒன்றுக்கு மேல்
கட்டிக்கொண்டால்
அதிர்ஷ்டகாரன் என
பெருமைப்படுகிறது
உன் குலம்
அதையே நான் செய்தால்
பரத்தை
எனத் தூற்றுகிறது
உன்குலம்saram7


என் உரிமைபூக்களைச்
சரமாக்கி
என் தலையிலேயே
சூடிவிடுவதற்கு
உன் இனத்திற்கு
உள்ள அறிவே தனி !!

வெள்ளி, ஜனவரி 12, 2007

இல்லாத பொழுதுகள்

இல்லாத
நீ இல்லாத
பொழுதுகளும்
நன்றாகத்தான்
இருக்கின்றன
இப்போதுதான்
உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்


ஓடிப்போகலாமாநீ ஓடிப்போகலாமா
எனக்கேட்டதும் நான்
தயாராவதற்குள்
என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?காதல்கழுதைஉன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !


சகிக்காது

நான் தாடி வைத்தால்
சகிக்காது என நீதானே
கூறியிருக்கிறாய்
அதற்காகவாவது
என்னிடம் பேசிவிடேண்டி !பேசும்தொல்லைபேசிக்கொண்டாவது
இருந்திருக்கலாம்
பேசிக்கொடுத்த
தொல்லையைவிட
உன் நினைவுகளின்
தொல்லை
அதிகமாக
இருக்கிறது.Image Hosted by ImageShack.us


இனி உன்னிடம்
பேசப்போவதில்லை
என
கூறிவிட்டு நீ மட்டும்
சென்றுவிட்டால் எப்படி
கூடவே உன் நினைவுகளையும்
கூட்டிக்கொண்டு போய்விடு
அவைகளின் அழிச்சாட்டியம்
தாங்கமுடியவில்லை !


அழகான பொய்ஏன் என்னிடம் பொய்
சொன்னாய் எனக் கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !


ஊடல் வாழ்க


நிறைய நேரம் கிடைக்கிறது
இப்போதெல்லாம்
நம் நினைவுகளை
அசை போடுவதற்கு
ஊடல் வாழ்க !


மணல்

தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே