வியாழன், அக்டோபர் 18, 2007

கொஞ்சுவது சினம்...

Image Hosted by ImageShack.us

உன்
கோபத்தைவிட
உன்
கண்ணீர்துளிகள்தாம்
என்னை
அதிகம்
காயப்படுத்துகின்றன
தெரியுமா ?
Image Hosted by ImageShack.us


கோபமாக திட்டுவதாக
நினைத்துக்கொண்டு
நீ செய்யும்
அழிச்சாட்டியங்களை
எங்கேயடி கற்றுக்கொண்டாய் ?Image Hosted by ImageShack.us


நீ
கோபப்பட்டால்
கொஞ்சத்தான்
தோன்றுகிறது
ஆனாலும்
கெஞ்சுவதுபோல்
நடிக்கிறேன்
தெரியுமா ?Image Hosted by ImageShack.us

நீ
கோபப்பட்டால்
அழகாய் இருக்கிறாய்
என சொன்னதற்காக
இப்படி அடிக்கடி
கோபப்பட்டால்
எப்படி?Image Hosted by ImageShack.us


இப்படி என்னுடன்
கோபித்துக்கொண்டு
பேசாமலே இருக்கப்
போவதாக நீ சொன்னதற்கு
ரொம்ப தேங்ஸ் டி
இனி நான் உன்னிடம்
என்ன குறும்பு செய்தாலும்
நீ என்னை திட்ட முடியாதே !!!Image Hosted by ImageShack.us


நீ என்னை
திட்டும்போதுகூட
சிரித்துக்கொண்டிருப்பதாக
சண்டைபோடுகிறாய்
என்ன செய்வது?
கோபமான உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது போடி...


Image Hosted by ImageShack.us


நீ வார்த்தைகளால்
என்னுடன் வாதிட்டால்
விட்டிருக்கமாட்டேன்
கண்ணீர்களால்
எதிர்கொண்டால்
என்ன செய்வேன் ?Image Hosted by ImageShack.usஒவ்வொருமுறையும்
நம் சண்டைகளின்
முடிவு
மேலும் சண்டையிடத்
தூண்டுகின்றனImage Hosted by ImageShack.us


கோபித்துக்கொண்டு
நீ
சாப்பிடாமல் இருந்த
அன்றுதான் தெரிந்தது
நீ என் தூக்கம்
தின்ற ராட்சஷி
என...Image Hosted by ImageShack.usஉன்னைப்பார்த்தால்
மட்டும் இந்தப் பாழாய்ப்போன
கோபம் எங்கே போய்த்
தொலையுமோ ?Image Hosted by ImageShack.us


அழகான பெண்களை
பார்த்தால் எனக்கு
உன் ஞாபகம் தான்
வருகிறது தெரியுமா?
நாம் இப்படி பார்க்கிறதை
நீ பார்த்தால்
என்ன ஆகுமோ என..Image Hosted by ImageShack.us


முடிந்து விட்ட நம்
சண்டையில் யார் ஆரம்பித்தது
இந்த சண்டையை என்ற
சண்டையை புதிதாக
ஆரம்பித்து விட்டாய்
ஏண்டி இப்படி?Image Hosted by ImageShack.us

என்னைத் திட்டிவிட்டு
போயேன்!
ஏன் இப்படி
மெளனமாக இருந்து
கொல்கிறாய் ?Image Hosted by ImageShack.us


யாருக்கும் தெரியாமல்
நீ என்னவோ
முத்தம் கொடுத்து
சென்றுவிட்டாய்
ஏன் இப்படி என்னைக்
கடனாளியாக்குகிறாய்?Image Hosted by ImageShack.us


கொஞ்சிக்கொஞ்சியே
என்னை
நீ கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றிக்கொண்டிருக்கிறாய்
தெரியுமாடி என்
செல்லத்திருடி?