வெள்ளி, டிசம்பர் 15, 2006

Yahoo விடும் தூது !

1இப்பொழுதெல்லாம்
அடிக்கடி எனக்கு கோவம்
வருகிறது
நீ ஆன்லைனில் இல்லாத
நேரங்களில்


2
நான் உனக்கு மெயில்
எழுத உக்காந்தாலே
ஏன்தான் இந்த கடிகாரம்
வேகமாக சுற்றுகிறதோ ?


3பேசிப்பேசியே
களைத்துபோனது
நம் விரல்கள் !


4நீ ஒருமுறை என்னிடம்
‘ சாட் ‘ செய்தாலே
நான் பல கவிதைகளை
திருடிவிடுகிறேன்


5உன் கடிதம் இல்லாத
என் ‘இன்பாக்ஸை’
திறப்பதற்குபதில்
திறக்காமலே இருக்கலாம்

6‘ ச்சீய் போடா !! ‘
எங்கிருந்து கற்றுகொண்டாய்
இந்த அழகான வார்த்தையை
எங்கே இன்னொருமுறை
சிணுங்கு ?!!


7பெறாத முத்ததிற்காக
நீயும்
கொடுக்காத முத்ததிற்காக
நானும்
வெட்கப்படுகொண்டிருக்கிறோம்
மெசெஞ்சரில் !


8


சீக்கிரம் ஆன்லைனில்
வாயேண்டி !!
அவசரமாக உனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும் !!


9யார் யாரோ வந்து
ஹாய் சொல்லிவிட்டு
சென்றபோதெல்லாம்
சும்மா இருந்த என்
மெசெஞ்சர்
நீ வந்தபோது மட்டும்
ஆனந்த கூத்தாடுகிறது
[ டேய் நான் Buzz பண்ணிணேண்டா !
மத்தவங்க பண்ணலே
]


10


‘ என்னடா ரொம்ப உற்சாகமாய்டே?'
என கேட்கிற என் நண்பனிடம்
எப்படி சொல்வது
இப்பொழுதுதான்
நான் உன்னிடம் ‘சாட்’
பண்ணிவிட்டு வருகிறேன் என்று !11


கண்டவளோட ‘சாட்’
பண்ணிட்டு இருக்கத்தான்
எப்பவுமே நீ ‘ஆன்லைனில்’
இருக்கிறாய் என ஏன்
என்னிடம் சண்டை போடுகிறாய் ?
நீ வரும்போது வரவேற்கத்தான்
நான் மெசெஞ்சர் மீது
விழிவைத்துக் காத்திருக்கிறேன்
நம்பித்தொலையேண்டி ..


12


கோபமாக என்னிடம்
சொல்கிறாய்
‘ எனக்கு வர்ற ஆத்திரத்திற்கு
உன்னை..’

‘ என்ன கட்டிப்பிடித்து
முத்தம் கொடுக்க வேண்டும்போல்
இருக்கிறதா ?? ‘

என கேட்டவுடனே
நீ அனுப்பிய
கோப ‘ ஐகான்’
வெட்க ‘ஐகானாக’
மாறுவது ரொம்ப
அழகுடி .


13

இப்படியெல்லாம் என்னிடம்
பேசினால் நான் உன்னை
நான் என் மெசெஞ்சரில்
இருந்து ‘கட்’ பண்ணிவிடுவேன்
என்கிறாய்
ஆனால் உன் கை என்னவோ
‘ டைப்’ செய்துகொண்டேதான்
இருக்கிறது .14


ஹையோ ! இப்பொழுதெல்லாம்
உன்மீது ‘ஆன்லைனில்’
கூட என்னால்
கோபபட முடியவில்லையே
என்ன செய்வேன் ?

113 கருத்துகள்:

மதுமிதா சொன்னது…

நவீன்
அருமையான ஆன்லைன் கவிதைகள்

நீ ஆன்லைனில்
வராதபோதும்
கவிதைகளைத்
தந்து செல்கிறாய்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மதுமிதா said...
நவீன்
அருமையான ஆன்லைன் கவிதைகள்

நீ ஆன்லைனில்
வராதபோதும்
கவிதைகளைத்
தந்து செல்கிறாய் //

வாருங்கள் மதுமிதா :))
அழகான கவிதையோடு ஒரு கமெண்ட் :)) நன்றி !!

மதுமிதா சொன்னது…

கவிதை எழுத டைப் செய்கிறேன்
கைகள் உன் பெயரையே தருகின்றன

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மதுமிதா said...
கவிதை எழுத டைப் செய்கிறேன்
கைகள் உன் பெயரையே தருகின்றன//

வாவ் !! மதுமிதா கவிதை எழுதுங்களேன் ! நன்றாக இருக்கிறது :))

மதுமிதா சொன்னது…

மெசேஞ்சரில் உன் பெயர்
பச்சை விளக்கு
பளிச்சிடும் என் முகம்
பறந்திடும் சோகம்
பிறந்திடும் கவிதை

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மதுமிதா said...
மெசேஞ்சரில் உன் பெயர்
பச்சை விளக்கு
பளிச்சிடும் என் முகம்
பறந்திடும் சோகம்
பிறந்திடும் கவிதை//

:)) மீண்டும் ஒரு அழகான கவிதை !

இரா.ஜெகன் மோகன் சொன்னது…

அருமையான (அனுபவக்) கவிதை நவீன் பிரகாஷ்!

SP.VR. SUBBIAH சொன்னது…

யாகூ வந்ததினால்
யாவையும் மாறிவிட்டன - உன்
முகம் மட்டும் மாறவில்லை
முழு நிலவாய் எப்போதும்போல!

மதுமிதா சொன்னது…

நீ ஆன்லைனில் இல்லாத நேரம்
ஏதோ ஒரு கவிதையை
அழகிய கவிதையாய் உணர்கிறேன்

நீ வந்தவுடன்
எதுவுமே கவிதையாய்த்
தெரியவில்லை

Divya சொன்னது…

\"கண்டவளோட ‘சாட்’
பண்ணிட்டு இருக்கத்தான்
எப்பவுமே நீ ‘ஆன்லைனில்’
இருக்கிறாய் என ஏன்
என்னிடம் சண்டை போடுகிறாய் ?
நீ வரும்போது வரவேற்கத்தான்
நான் மெசெஞ்சர் மீது
விழிவைத்துக் காத்திருக்கிறேன்
நம்பித்தொலையேண்டி \"

இப்படி டூப்பு விட்டு ஏமாத்திட்டிருக்கிறீங்க அந்த 'ஆன்லைன்' தோழியை, பாவம் பொண்ணு!![ ஆனாலும் உங்க 'ஆன்லைன் தோழிக்கு' possesiveness அதிகம் தான்]

Divya சொன்னது…

\"உன் கடிதம் இல்லாத
என் ‘இன்பாக்ஸை’
திறப்பதற்குபதில்
திறக்காமலே இருக்கலாம் \"

நான் அனுப்பும் ஈ-மெயிலுக்கு
உன்னிடமிருந்து பதில் வராத
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு யுகமாக தோன்றுகிறதே!

இந்த வரிகளும் இந்த பகுதியில் சேர்த்திருக்கலாமோ??

பெயரில்லா சொன்னது…

உன் விரல்கள் தட்டுவது
கீ போர்டையா? இல்லை
உன் காதலியின் கன்னத்தையா
இப்படி வழிகிறாயே நண்பா

சிறில் அலெக்ஸ் சொன்னது…

ரெம்ப நல்லயிருக்குங்க.

ஆன்லைனும் நீயே ஆப்லைனும் நீயே
யாஹோவிலும் நீயே கூகுளிலும் நீயே

கலக்கிட்டீங்க போங்க.

சிறில் அலெக்ஸ் சொன்னது…

இ-மெயில் என்பதற்கு
இதய மெயில் என்றா பொருள்?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இரா.ஜெகன் மோகன் said...
அருமையான (அனுபவக்) கவிதை நவீன் பிரகாஷ்! //

வாருங்கள் ஜெகன்மோகன் :))
ஆம் நண்பர்களின் அனுபவங்களையே கவிதையாக சொல்ல முயன்றிருக்கிறேன் ;)) மிக்க நன்றி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மதுமிதா said...
நீ ஆன்லைனில் இல்லாத நேரம்
ஏதோ ஒரு கவிதையை
அழகிய கவிதையாய் உணர்கிறேன்

நீ வந்தவுடன்
எதுவுமே கவிதையாய்த்
தெரியவில்லை //

மிக அழகான அனுபவமாக இருகிறதே இந்தக் கவிதை !!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\"கண்டவளோட ‘சாட்’
பண்ணிட்டு இருக்கத்தான்
எப்பவுமே நீ ‘ஆன்லைனில்’
இருக்கிறாய் என ஏன்
என்னிடம் சண்டை போடுகிறாய் ?
நீ வரும்போது வரவேற்கத்தான்
நான் மெசெஞ்சர் மீது
விழிவைத்துக் காத்திருக்கிறேன்
நம்பித்தொலையேண்டி \"

இப்படி டூப்பு விட்டு ஏமாத்திட்டிருக்கிறீங்க அந்த 'ஆன்லைன்' தோழியை, பாவம் பொண்ணு!![ ஆனாலும் உங்க 'ஆன்லைன் தோழிக்கு' possesiveness அதிகம் தான்] //

வாங்க திவ்யா :))
நான் ஏமாத்திகிட்டு இருக்கிறேனா ?? என்ன சொல்கிறீர்கள் :(( . இவைகளை கவிதைகளாக மட்டும் பாருங்கள் திவ்யா ;))) என் சொந்த அனுபவம் அல்ல :))) இப்படி சொல்லிவிட்டீர்களே யாராவது தப்பாக நினைத்துக்கொள்ளப்போகிறார்கள் நான் நல்ல பையன் :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\"உன் கடிதம் இல்லாத
என் ‘இன்பாக்ஸை’
திறப்பதற்குபதில்
திறக்காமலே இருக்கலாம் \"

நான் அனுப்பும் ஈ-மெயிலுக்கு
உன்னிடமிருந்து பதில் வராத
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு யுகமாக தோன்றுகிறதே!

இந்த வரிகளும் இந்த பகுதியில் சேர்த்திருக்கலாமோ?? //

வாவ் கவிஞர் திவ்யா நன்றாகத்தான் எழுதறீங்க கவிதை :))

அப்படியா தேன்றுகிறது உங்களுக்கு ?? ;))))

நல்ல கவிதை !!

பொன்ஸ்~~Poorna சொன்னது…

என்னங்க நவீன், உங்கக் கவிதைகளைப் பார்த்து வாசகர்களும் கவிஞராகிட்டாங்க ?! :)

மதுமிதா சொன்னது…

ஆன்லைனில் தவம் இருக்கிறேன்
தியானம் செய்வதாய் கருதுகின்றனர்

மதுமிதா சொன்னது…

நீ வராத நேரங்களில்
உன் ஜெபம்
உச்சரிப்பது உன் பெயர்தான்

மதுமிதா சொன்னது…

உன் மடல் வராதபோது
சமாதானம் செய்து கொள்கிறேன்
என் நினைவில் நீ தவித்துக்கொண்டிருப்பதாய்

பெயரில்லா சொன்னது…

//இப்படி சொல்லிவிட்டீர்களே யாராவது தப்பாக நினைத்துக்கொள்ளப்போகிறார்கள் நான் நல்ல பையன்//

நான் நம்புகிறேன்
நவீன் பிரகாஷ்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சிறில் அலெக்ஸ் said...
ரெம்ப நல்லயிருக்குங்க.

ஆன்லைனும் நீயே ஆப்லைனும் நீயே
யாஹோவிலும் நீயே கூகுளிலும் நீயே

கலக்கிட்டீங்க போங்க.

இ-மெயில் என்பதற்கு
இதய மெயில் என்றா பொருள்? //

வாருங்கள் சிறில் :)))
மிக்க நன்றி சிறில் :) மிக அழகான இரு கவிதைகள் !! கவிஞராகிவிடுங்களேன் :)) அழகு அழகு !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//SP.VR.சுப்பையா said...
யாகூ வந்ததினால்
யாவையும் மாறிவிட்டன - உன்
முகம் மட்டும் மாறவில்லை
முழு நிலவாய் எப்போதும்போல!//

வாருங்கள் சுப்பையா சார் :))
வாவ் என்ன ஒரு கவிதை :)) மாறாதது நிலவுமட்டுமில்லைதான் :)) மிக்க நன்றிங்க !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கௌசி said...
உன் விரல்கள் தட்டுவது
கீ போர்டையா? இல்லை
உன் காதலியின் கன்னத்தையா
இப்படி வழிகிறாயே நண்பா //

வாருங்கள் கௌசி :))
காதலியின் கன்னத்தை அல்ல என் எண்ணத்தை ;))) விமர்சனமே கவிதையானதே !! நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பொன்ஸ் said...
என்னங்க நவீன், உங்கக் கவிதைகளைப் பார்த்து வாசகர்களும் கவிஞராகிட்டாங்க ?! :) //

வாங்க பொன்ஸ் :))
ஆமாம் புது அனுபவமாக இருக்கிறது எனக்கும் :)) என்னைவிட பல நல்ல கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இவர்களே சாட்சி !!! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மதுமிதா said...

ஆன்லைனில் தவம் இருக்கிறேன்
தியானம் செய்வதாய் கருதுகின்றனர் //

சுகமான தியானம் ;))

//நீ வராத நேரங்களில்
என் ஜெபம்
உச்சரிப்பது உன் பெயர்தான் //

கொஞ்சம் மாற்றி இருக்கிறேன் இது இன்னும் சரியாக இருக்குமல்லவா ? :))

//உன் மடல் வராதபோது
சமாதானம் செய்து கொள்கிறேன்
என் நினைவில் நீ தவித்துக்கொண்டிருப்பதாய் //

வாவ் சூப்பர் !!! :))

மதுமிதா மிக மிக அழகான கவிதைகளை கொடுதிருக்கிறீர்களே !! இத்தனை கவிதை பூக்களையும் தொடுத்து தனிசரமாக ( பதிவாக ) இடுங்களேன் மேலும் நன்றாக இருக்கும் :))

மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//உலகம் தெரியாதவன் said...
//இப்படி சொல்லிவிட்டீர்களே யாராவது தப்பாக நினைத்துக்கொள்ளப்போகிறார்கள் நான் நல்ல பையன்//

நான் நம்புகிறேன்
நவீன் பிரகாஷ்! //

வாருங்கள் உலகம்தெரியாதவரே ;)))

நீங்களே நம்பிவிட்டீர்கள் எனறால் போதுமே ;)))) எதாவது தமிழ் அணி உபயோகித்து இருக்கிறீர்களா இதில் ?;))))

பெயரில்லா சொன்னது…

//எதாவது தமிழ் அணி உபயோகித்து இருக்கிறீர்களா இதில் //


உலகம் தெரியாதவன்தான் உம்மை நம்புகிறார் என்றால் உபயோகித்திருப்பது எந்த அணி என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//உலகம் தெரியாதவன் said...
//எதாவது தமிழ் அணி உபயோகித்து இருக்கிறீர்களா இதில் //


உலகம் தெரியாதவன்தான் உம்மை நம்புகிறார் என்றால் உபயோகித்திருப்பது எந்த அணி என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.//

உலகம் தெரியாதவர்களுக்கு தெரிந்த அணி !!! சரிதானே ??;)))))

மதுமிதா சொன்னது…

நீ இல்லாத இணையத்திலே
நிம்மதி இல்லை
உன் மடல் இல்லாத இன்பாக்ஸிலே
சுவையும் இல்லை

மதுமிதா சொன்னது…

/// சிறில் அலெக்ஸ் said...
ரெம்ப நல்லயிருக்குங்க.

ஆன்லைனும் நீயே ஆப்லைனும் நீயே
யாஹோவிலும் நீயே கூகுளிலும் நீயே///

சிறில் நீங்களுமா

இன்பாக்ஸில் நீயே
சேட்டில் நீயே
மெயிலில் நீயே
இணையத்திலும் நீயே

பெயரில்லா சொன்னது…

என்ன கவிஞரே,
யாரிடம் ஆன்லைனில் மாட்டி கொண்டிர்கள்?அனுபவம் கவிதையாக இங்குப் பேசுகின்றதே?

அனைவரும் இங்கே கவி பாடுவதைப் பார்த்தால் எனக்கும் கவி பாட ஆசையாகதான் இருகின்றது.ஆனால் நான் கவி பாடினால் அது கொலையாகிவிடும்.இருந்தாலும் தாங்கள் நல்ல பையன் என்று கூறுவது பொய் என்று இங்கு நிறைய பேர்களுக்குத் தெரிந்து உள்ளது.மிகவும் மகிழ்ச்சி.கவிதை வழக்கம் போல் அற்புதம்.

சிறில் அலெக்ஸ் சொன்னது…

நவீன்,
நான் ஏற்கனவேபாதி கவிஞர்தான்..
முதல் பரிசு வாங்கிட்டோம்ல.

உங்க மாதிரி முழுநேரக் கவிஞர் இல்ல..

:)

இரா.ஜெகன் மோகன் சொன்னது…

கவியரங்கமா?
அதுவும் காதல் தலைப்பா?
இதோ என் பங்குக்கு ஒன்று

--------------------------
கணினித் திரையினில்
உன் கண்களைத்தான்
பார்க்கிறேன் நான்!

மின்னஞ்சல் வரிகள்
எல்லாம் நம்
நெஞ்சங்களின்
வண்ணங்களே!

காலையில் எழுவதற்கு
அலாரம் எதற்கு?
உறங்கினால்தானே நான்!

நீதான் மெசஞ்சரில்
பிங்க் செய்கிறாயே!
நீ வந்தபின்புதானே
எனக்கு
பொழுது புலர்ந்தெதென்பது
புலனாகிறது!

நிஜமான உலகில்
நீண்ட இடைவெளிதான்
நமக்குள்!

சைபர் ஸ்பேசில்
மட்டும்
சந்தித்துக் கொள்கிறோம்!
நித்தமும்!

இராம்/Raam சொன்னது…

நவீன்,

கவிதைகள் எல்லாம் அருமையாக உள்ளன.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மதுமிதா said...

நீ இல்லாத இணையத்திலே
நிம்மதி இல்லை
உன் மடல் இல்லாத இன்பாக்ஸிலே
சுவையும் இல்லை

இன்பாக்ஸில் நீயே
சேட்டில் நீயே
மெயிலில் நீயே
இணையத்திலும் நீயே //

மதுமிதா மீண்டும் மீண்டும் அழகான கவிச்சரங்கள் மலர்ந்து மணம் வீசச்செய்திருக்கிறீர்கள் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//துர்கா said...
என்ன கவிஞரே,
யாரிடம் ஆன்லைனில் மாட்டி கொண்டிர்கள்?அனுபவம் கவிதையாக இங்குப் பேசுகின்றதே?

அனைவரும் இங்கே கவி பாடுவதைப் பார்த்தால் எனக்கும் கவி பாட ஆசையாகதான் இருகின்றது.ஆனால் நான் கவி பாடினால் அது கொலையாகிவிடும்.இருந்தாலும் தாங்கள் நல்ல பையன் என்று கூறுவது பொய் என்று இங்கு நிறைய பேர்களுக்குத் தெரிந்து உள்ளது.மிகவும் மகிழ்ச்சி.கவிதை வழக்கம் போல் அற்புதம். //

வாங்க துர்கா :))
ஏன் கவிபாட கூடாது ? கவலையில்லாமல் பாடுங்கள் :))) யாருங்க நான் நல்ல பையன்னு சொன்னது பொய்யென்று உரைத்தது ? :)) யாரிடம் மாட்ட வேண்டும் ? நான் கவிஞன்!தலைப்பிற்கு ஏற்றார்போல எழுதியிருக்கிறேன் அவ்வளே !!! ;)))))

இரா.ஜெகன் மோகன் சொன்னது…

////இருந்தாலும் தாங்கள் நல்ல பையன் என்று கூறுவது பொய் என்று இங்கு நிறைய பேர்களுக்குத் தெரிந்து உள்ளது//

பொய்யுரைத்தல்தானே
புலவர்க்கு அழகு!

கண்ணுக்கு மை அழகு!
கவிதைக்குப் பொய் அழகு!

பாடல் கேட்டதில்லையா!

(அந்தக் கவிஞனும் சொன்னதும் பொய்தானே என்று யாரும் கேட்டு விடப் போகிறார்கள்)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சிறில் அலெக்ஸ் said...
நவீன்,
நான் ஏற்கனவேபாதி கவிஞர்தான்..
முதல் பரிசு வாங்கிட்டோம்ல.

உங்க மாதிரி முழுநேரக் கவிஞர் இல்ல..//

வாங்க சிறில் :)) அப்படியா மிக்க மகிழ்ச்சி !!! நான் முழுநேர கவிஞன் இல்லைங்க சிறில் :))

பெயரில்லா சொன்னது…

//நான் முழுநேர கவிஞன் இல்லைங்க சிறில் //

அதான் எங்களுக்குத் தெரியுமே!

எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?
நீங்கள்தானே இதற்கு முந்தைய பின்னூட்டத்தில் சிறில் அலெக்ஸிடம் சொல்லி இருக்கிறீர்கள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இரா.ஜெகன் மோகன் said...
கவியரங்கமா?
அதுவும் காதல் தலைப்பா?
இதோ என் பங்குக்கு ஒன்று

வாருங்கள் ஜெகன் :))
கவியரங்கம் எல்லாம் இல்லைங்க :))

மிக அழகான ஆன்லைன் கவிசரம் தொடுத்துள்ளீர்கள் சிபி :))

//நீ வந்தபின்புதானே
எனக்கு
பொழுது புலர்ந்தெதென்பது
புலனாகிறது!//

மிக அழகு :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ராம் said...
நவீன்,

கவிதைகள் எல்லாம் அருமையாக உள்ளன. //

வாருங்கள் ராம் :))

மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இரா.ஜெகன் மோகன் said...
////இருந்தாலும் தாங்கள் நல்ல பையன் என்று கூறுவது பொய் என்று இங்கு நிறைய பேர்களுக்குத் தெரிந்து உள்ளது//

பொய்யுரைத்தல்தானே
புலவர்க்கு அழகு!

கண்ணுக்கு மை அழகு!
கவிதைக்குப் பொய் அழகு!

பாடல் கேட்டதில்லையா!

(அந்தக் கவிஞனும் சொன்னதும் பொய்தானே என்று யாரும் கேட்டு விடப் போகிறார்கள்) //

வாங்க ஜெகன் :))
என்னை வாரிவிடாமல் இருக்க மாட்டீர்களா ?? ;)))

கவிதைக்கு
பொய்யழகு
சரிதான் !!!
கவிஞனுக்கு அல்ல!

நான்
கவிஞன் ஜெகன்!! ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அனைத்தும் அறிந்தவன் said...
//நான் முழுநேர கவிஞன் இல்லைங்க சிறில் //

அதான் எங்களுக்குத் தெரியுமே!

எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?
நீங்கள்தானே இதற்கு முந்தைய பின்னூட்டத்தில் சிறில் அலெக்ஸிடம் சொல்லி இருக்கிறீர்கள். //

வாருங்கள் அனைத்துமறிந்தவரே :))
அட அனைத்தும் அறிந்தவர் இதையும் அறிந்திருப்பதில் என்ன ஆச்சரியம் ;)))))

இரா.ஜெகன் மோகன் சொன்னது…

//கவிதைக்கு
பொய்யழகு
சரிதான் !!!
கவிஞனுக்கு அல்ல!
//

கவிதைக்குத்தான்
பொய் அழகு
என்கிறீர்கள்!

சரிதான்!

எனில்
அந்தக் கவிதையைப்
படைப்பவன்?
கவிஞன்தானே!

பொய்மையும்
பெண்மையிடத்தென்று
கவி வடித்தவர்தானே
தாங்கள்!

கவிதையில் பொய்மையை
ஏற்றுக் கொள்ளும் தாங்கள்
கவிஞனைப் பொய்யனென்றால்
மறுப்பது ஏனோ?

:-)

வெற்றி சொன்னது…

நவீன்,
ஆகா! அருமை! அற்புதம்! பிரமாதம்!
என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. உணர்வுகளை யதார்த்தமாக மிகவும் அனுபவித்துக் கவியாக்கியுள்ளீர்கள். இக் கவிதையைப் படிக்கும் பலர், தமது அனுபவங்களை நீங்கள் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்களோ என வியக்கும் வண்ணம் அன்றாடம் பலரின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைக் கவியாக்கியுள்ளீர்கள். அதிலும் பாருங்கள், இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் எமது பூட்டன் வள்ளவர் சொன்ன அதே ஊடலை நீங்கள் இன்றைய காலத்திற்கு ஏற்றது போல் சொல்லியுள்ளது மிகவும் அழகு.

/* கண்டவளோட ‘சாட்’
பண்ணிட்டு இருக்கத்தான்
எப்பவுமே நீ ‘ஆன்லைனில்’
இருக்கிறாய் என ஏன்
என்னிடம் சண்டை போடுகிறாய் ?*/

இதே ஊடலை வள்ளுவர் 3000 ஆண்டுகளுக்கு முன் இப்படிச் சொல்கிறார்:

வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள்
யார்உள்ளித் தும்மினீர் என்று


தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்தீரோ என்று


தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதீர் என்றுநினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர்
யார்உள்ளி நோக்கினீர் என்று


நவீன், இன்னும் பல கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

சத்தியா சொன்னது…

"கண்டவளோட ‘சாட்’
பண்ணிட்டு இருக்கத்தான்
எப்பவுமே நீ ‘ஆன்லைனில்’
இருக்கிறாய் என ஏன்
என்னிடம் சண்டை போடுகிறாய் ?
நீ வரும்போது வரவேற்கத்தான்
நான் மெசெஞ்சர் மீது
விழிவைத்துக் காத்திருக்கிறேன்
நம்பித்தொலையேண்டி .."...

அச்சச்சோ!... உங்கள நம்பவே மாட்டாங்களாமா? அன்பு கூடினால் இப்படித்தான்.

ம்... Yahoo வில் அருமையாத்தான் தூது விடுறீங்க. வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

//யாருங்க நான் நல்ல பையன்னு சொன்னது பொய்யென்று உரைத்தது ? :)) //
கவிஞரே தாங்கள் பையன் என்பதே ஒரு மிகப் பெரிய பொய்.இதில் நல்ல பையன் என்று சொல்வது தகுமா?

மதுமிதா சொன்னது…

இணையத்தில் சந்திப்பு
இதயம் நெக்குருக
நெகிழும் நெஞ்சை அறியமாட்டாய்
நேரில் வந்தால் என்ன ஆவாய்


நவீன் பாருங்க
தனிப்பதிவா போட்டாச்சு
http://madhumithaa.blogspot.com/2006/12/blog-post_116633245488231171.html

நாமக்கல் சிபி சொன்னது…

//கவிஞரே தாங்கள் பையன் என்பதே ஒரு மிகப் பெரிய பொய்.இதில் நல்ல பையன் என்று சொல்வது தகுமா?//

ந.க.ச !?

இரா.ஜெகன் மோகன் சொன்னது…

//நவீன் பாருங்க
தனிப்பதிவா போட்டாச்சு
//
நானும்தான் நவீன் பிரகாஷ்!

இணையம் இணைக்கிறது இதயங்களை!

மாசிலா சொன்னது…

//பேசிப்பேசியே
களைத்துபோனது
நம் விரல்கள் !//

மிகவும் ரசித்தது.
சிரித்தது!

அருமையான வரிகள்.
அற்புதமான படங்கள்.

நன்றி. தொடர்க.

Unknown சொன்னது…

ஆன்லைனில் ஒரு கவியரங்கமே நடத்திட்டீங்க.. அசத்தல் நவீன்

பெயரில்லா சொன்னது…

நீ ஒருமுறை என்னிடம்
‘ சாட் ‘ செய்தாலே
நான் பல கவிதைகளை
திருடிவிடுகிறேன்

நவீன்
அருமையான ஆன்லைன் கவிதைகள்

இதோ என் பங்குக்கு ஒன்று

"நாம் சாட்டில் பேசும்போது நமக்கே தெரியாமல் பல கவிதைகள் இறந்து போகிறது இனியாவது நாம் பேசுவதை பதிந்துவை நீ கிழவி ஆகும் போது படித்துக் காட்ட வேண்டும்"

மேலும் படிக்க என் கவிதைகளை படிக்க வாங்க

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இரா.ஜெகன் மோகன் said...
கவிதையில் பொய்மையை
ஏற்றுக் கொள்ளும் தாங்கள்
கவிஞனைப் பொய்யனென்றால்
மறுப்பது ஏனோ?//

வாருங்கள் ஜெகன் :))
இதென்ன அநியாயமாக இருக்கிறது :(. கவிஞன் பொய்யன் அல்லன் அழகாக பொய் கூற தெரிந்தவன் ;))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//வெற்றி said...
நவீன்,
ஆகா! அருமை! அற்புதம்! பிரமாதம்!
என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. உணர்வுகளை யதார்த்தமாக மிகவும் அனுபவித்துக் கவியாக்கியுள்ளீர்கள்.//

வாருங்கள் வெற்றி :))
ஹையோ என்னை மிகவும் புகழ்கிறீர்கள்:)) மிக்க நன்றி உங்க உணர்விகளை தந்தமைக்கு :))

//நவீன், இன்னும் பல கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.//

கண்டிப்பாக வெற்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சத்தியா said...
அச்சச்சோ!... உங்கள நம்பவே மாட்டாங்களாமா? அன்பு கூடினால் இப்படித்தான்.

ம்... Yahoo வில் அருமையாத்தான் தூது விடுறீங்க. வாழ்த்துக்கள்! //

வாங்க சந்தியா :)))
என்ன பண்றதுங்க சத்தியா நீங்களாச்சும் நம்புகிறீர்களே ;))

வாழ்த்துக்கு மிக்க நன்றி ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//துர்கா said...
//யாருங்க நான் நல்ல பையன்னு சொன்னது பொய்யென்று உரைத்தது ? :)) //
கவிஞரே தாங்கள் பையன் என்பதே ஒரு மிகப் பெரிய பொய்.இதில் நல்ல பையன் என்று சொல்வது தகுமா? //

வாங்க துர்கா :))
நல்லபையன் என் என்பது தகுமா எனறால் சத்தியமாக இல்லை. மிக நல்ல பையன் என்பதே சரி ;)))))))))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மதுமிதா said...
இணையத்தில் சந்திப்பு
இதயம் நெக்குருக
நெகிழும் நெஞ்சை அறியமாட்டாய்
நேரில் வந்தால் என்ன ஆவாய்//

நேரில் வந்தால் என்ன ஆவாய் :)) ஆஹா மிக அருமையான வரிகள் மதுமிதா :))


//நவீன் பாருங்க
தனிப்பதிவா போட்டாச்சு
http://madhumithaa.blogspot.com/2006/12/blog-post_116633245488231171.html //

படித்தேன் மதுமிதா மிக அழகான கவிச்சரம் :)) வாழ்த்துக்கள் !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
//கவிஞரே தாங்கள் பையன் என்பதே ஒரு மிகப் பெரிய பொய்.இதில் நல்ல பையன் என்று சொல்வது தகுமா?//

ந.க.ச !? //

வாருங்கள் சிபி :)))
அதென்னங்க நகச ? ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மாசிலா said...
//பேசிப்பேசியே
களைத்துபோனது
நம் விரல்கள் !//

மிகவும் ரசித்தது.
சிரித்தது!

அருமையான வரிகள்.
அற்புதமான படங்கள்.

நன்றி. தொடர்க. //

வாருங்கள் மாசிலா :))
அழகான பெயர் :)) மிக்க நன்றி மாசிலா ரசிப்புக்கு :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தேவ் | Dev said...
ஆன்லைனில் ஒரு கவியரங்கமே நடத்திட்டீங்க.. அசத்தல் நவீன் //

வாங்க தேவ் :)) எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் ;)) மிக்க நன்றி தேவ் :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//காண்டீபன் said...
நீ ஒருமுறை என்னிடம்
‘ சாட் ‘ செய்தாலே
நான் பல கவிதைகளை
திருடிவிடுகிறேன்

நவீன்
அருமையான ஆன்லைன் கவிதைகள்//

வாருங்கள் காண்டீபன் :)))
மிக்க நன்றி :))

//இதோ என் பங்குக்கு ஒன்று

"நாம் சாட்டில் பேசும்போது நமக்கே தெரியாமல் பல கவிதைகள் இறந்து போகிறது இனியாவது நாம் பேசுவதை பதிந்துவை நீ கிழவி ஆகும் போது படித்துக் காட்ட வேண்டும்"

மேலும் படிக்க என் கவிதைகளை படிக்க வாங்க //

அழகான உணர்வுகள் இல்லையா ? கண்டிப்பாக வருகிறேன் காண்டீபன் :))

premkalvettu சொன்னது…

எனக்கு பிடித்த வரிகள்....

பேசிப்பேசியே
களைத்துபோனது
நம் விரல்கள் !

பெறாத முத்ததிற்காக
நீயும்
கொடுக்காத முத்ததிற்காக
நானும்
வெட்கப்படுகொண்டிருக்கிறோம்
மெசெஞ்சரில் !

மற்றவைகளில் ஏனோ ஏதோ ஒன்று குறைவது போல் தெரிகிறது....

பெயரில்லா சொன்னது…

//நீ ஒருமுறை என்னிடம்
‘ சாட் ‘ செய்தாலே
நான் பல கவிதைகளை
திருடிவிடுகிறேன் //
நவீன் தம்பி நீங்க இப்படிதான் இந்த கவிதையும் திருடிவிட்டீர்களா?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கல்வெட்டு(பிரேம்) said...
எனக்கு பிடித்த வரிகள்....

பேசிப்பேசியே
களைத்துபோனது
நம் விரல்கள் !

பெறாத முத்ததிற்காக
நீயும்
கொடுக்காத முத்ததிற்காக
நானும்
வெட்கப்படுகொண்டிருக்கிறோம்
மெசெஞ்சரில் !//

வாருங்கள் ப்ரேம் :))
மிக்க நன்றி ப்ரேம் :))

//மற்றவைகளில் ஏனோ ஏதோ ஒன்று குறைவது போல் தெரிகிறது.... //

அப்படியா ? அடுத்த முறை சரி செய்ய முயற்சிக்கிறேன் ப்ரேம் :)) மிக்க நன்றி ப்ரேம் உங்கள் விமர்சனதிற்கு !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
//நீ ஒருமுறை என்னிடம்
‘ சாட் ‘ செய்தாலே
நான் பல கவிதைகளை
திருடிவிடுகிறேன் //
நவீன் தம்பி நீங்க இப்படிதான் இந்த கவிதையும் திருடிவிட்டீர்களா? //

வாங்க அனானி அண்ணே ;)))
ஆம் கவிதைகளை நான் திருடிக்கொண்டுதான் இருக்கிறேன்! என் கற்பனையிலிருந்து ;))))))

பெயரில்லா சொன்னது…

//வாங்க துர்கா :))
நல்லபையன் என் என்பது தகுமா எனறால் சத்தியமாக இல்லை. மிக நல்ல பையன் என்பதே சரி ;))))))))))))) //
நீங்கள் கவிஞர் இல்லையா?பொய் சொல்வதற்கு சொல்லி தர வேண்டாம்.

Radha N சொன்னது…

super!!!!!

பெயரில்லா சொன்னது…

Romba anubavithu yezuthi irukireerkal....Athanayum nenjai thotta kavithaigal....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//துர்கா said...
//வாங்க துர்கா :))
நல்லபையன் என் என்பது தகுமா எனறால் சத்தியமாக இல்லை. மிக நல்ல பையன் என்பதே சரி ;))))))))))))) //
நீங்கள் கவிஞர் இல்லையா?பொய் சொல்வதற்கு சொல்லி தர வேண்டாம்.//

வாங்க துர்கா :))
சொல்லிதருவதில்லை கவிதைகள் உணர்ந்து வருவது ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாகு said...
super!!!!! //

வாங்க நாகு :))
மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
Romba anubavithu yezuthi irukireerkal....Athanayum nenjai thotta kavithaigal....//

வாருங்கள் அனானி :))
நெஞ்சை தொட்டதா ? மகிழ்ச்சியாக இருக்கிறது ! மிக்க நன்றி !!

கதிர் சொன்னது…

அய்யய்யோ யாரோ என்னைய பத்தி போட்டு குடுத்துட்டாங்களா??

கவிதை நல்லா இருக்குங்க நவீன்

இந்த வியாதி கொஞ்ச நாளா எனக்கும் இருக்குங்க :((((

கதிர் சொன்னது…

ஹாட்மெயிலும் கூலானதே நீ வந்த போது!!!!

பெயரில்லா சொன்னது…

//வாங்க துர்கா :))
சொல்லிதருவதில்லை கவிதைகள் உணர்ந்து வருவது ;)))
//

பொய்யும் இப்படிதான் வருமா?

மதுமிதா சொன்னது…

கவிதைகள் உணர்ந்து வருவது
கவிதைகள் கற்பனையில் வருவது

இரண்டும் சொல்றீங்க
எது உண்மை நவீன்:-)

மதுமிதா சொன்னது…

///ஹையோ ! இப்பொழுதெல்லாம்
உன்மீது ‘ஆன்லைனில்’
கூட என்னால்
கோபபட முடியவில்லையே
என்ன செய்வேன் ?///

உண்மைதான்:-)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தம்பி said...
அய்யய்யோ யாரோ என்னைய பத்தி போட்டு குடுத்துட்டாங்களா??

கவிதை நல்லா இருக்குங்க நவீன்

இந்த வியாதி கொஞ்ச நாளா எனக்கும் இருக்குங்க :(((( //

வாங்க தம்பி :))
யாரும் போட்டுக்கொடுக்கவில்லை கவலை வேண்டாம் ;))) இந்த வியாதி நல்லாதானே இருக்கு அப்புறம் என்ன கவலை ? ;))

//ஹாட்மெயிலும் கூலானதே நீ வந்த போது!!!! //

வாவ் தம்பி கலக்கல் கவிதை !! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//துர்கா said...
//வாங்க துர்கா :))
சொல்லிதருவதில்லை கவிதைகள் உணர்ந்து வருவது ;)))
//

பொய்யும் இப்படிதான் வருமா? //

துர்கா வேணாம் விட்டுடுங்க!! அப்புறம் நான் அழுதுவிடுவேன் :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மதுமிதா said...
கவிதைகள் உணர்ந்து வருவது
கவிதைகள் கற்பனையில் வருவது

இரண்டும் சொல்றீங்க
எது உண்மை நவீன்:-) //

வாங்க மதுமிதா :)))
கற்பனையில் உணர்வது தான் கவிதைகள் !!! ( (ஹப்பா எப்படியோ இப்போதைக்கு தப்பிச்சிட்டேன்) ;)))))


///ஹையோ ! இப்பொழுதெல்லாம்
உன்மீது ‘ஆன்லைனில்’
கூட என்னால்
கோபபட முடியவில்லையே
என்ன செய்வேன் ?///

உண்மைதான்:-) //

ஹய் அப்படியா ? :)))

அரை பிளேடு சொன்னது…

யப்பா...
யன்னா கவித...
யன்னா கவித...
யாஹூ....
யுர்ரே...
கவிதை யூப்பரு.

யாயும் யாயும் யாராகியரோ யாகூவில் சந்திக்கும் வரை...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அரை பிளேடு said...
யப்பா...
யன்னா கவித...
யன்னா கவித...
யாஹூ....
யுர்ரே...
கவிதை யூப்பரு.//

வாங்க அரை பிளேடு :)))
நல்ல விமர்சனம் !! ரசித்தேன்:))நன்றி !!

//யாயும் யாயும் யாராகியரோ யாகூவில் சந்திக்கும் வரை... //

ஆஹா நல்லா இருக்கே .. !!

dubukudisciple சொன்னது…

உனக்காக டைப் அடிக்கும் போது
மாத்திரம் ஏனோ
எல்லா வார்த்தைகளும்
கவிதைகளாகின்றன!!!

dubukudisciple சொன்னது…

உன்னை பார்க்கும் போது
மட்டுமே available mode -
மற்ற எல்லா நேரமும்
invisible mode

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//dubukudisciple said...
உனக்காக டைப் அடிக்கும் போது
மாத்திரம் ஏனோ
எல்லா வார்த்தைகளும்
கவிதைகளாகின்றன!!!

உன்னை பார்க்கும் போது
மட்டுமே available mode -
மற்ற எல்லா நேரமும்
invisible mode //

வாங்க டுபுக்குடிசைபிள் :))
வார்த்தைகள் கவிகளாகும் நேரம் இதயமும் டைப் அடிக்கிறதா ? ;)) அழகான இரு கவிதைகளுக்கு மிக்க நன்றி ! :))

பெயரில்லா சொன்னது…

//துர்கா வேணாம் விட்டுடுங்க!! அப்புறம் நான் அழுதுவிடுவேன் :))))) //
நவீன் நீங்கள் அழுதாலும் நான் விடுவதாய் இல்லை.நீங்கள் சொன்னது பொய் என்று ஒத்துக்கொள்ளவும்.என்ன சரியா?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//துர்கா said...
//துர்கா வேணாம் விட்டுடுங்க!! அப்புறம் நான் அழுதுவிடுவேன் :))))) //
நவீன் நீங்கள் அழுதாலும் நான் விடுவதாய் இல்லை.நீங்கள் சொன்னது பொய் என்று ஒத்துக்கொள்ளவும்.என்ன சரியா?//

வாங்க துர்கா:))
பொய்யான மெய் !
மெய்யான பொய் !
ஏன் இப்படி ??:))

பெயரில்லா சொன்னது…

ஆன்லைன் கவிதைகள் அனைத்துமே அருமை நவீன்.

எல்லாமே அனுபவக் கவிதைகள்!!!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

/அருட்பெருங்கோ said...
ஆன்லைன் கவிதைகள் அனைத்துமே அருமை நவீன்.

எல்லாமே அனுபவக் கவிதைகள்!!!! :)))

வாங்க அருள் :)) மிக்க நன்றி அருள் !! எல்லாமே உங்கள் அனுபவக்கவிதைகளாகவ உணர்கிறீர்கள்?;)) சந்தோசமாக இருக்கிறது :)))

G3 சொன்னது…

அருமையான கவிதைகள் :-)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//G3 said...
அருமையான கவிதைகள் :-)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)//

வாருங்கள் G3
மிக்க நன்றி !! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் அனைவருக்கும் !!

மதுமிதா சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள்
100 கமெண்ட்ஸுக்கும்

மதுமிதா சொன்னது…

எத்தனையோ
புத்தாண்டு வாழ்த்துகள்
எனினும்
உன்வாழ்த்தைப்போல் இல்லை

மதுமிதா சொன்னது…

இணையத்தில் இல்லா
இருபது நாட்களும்
இதயத்தில் தொல்லை

மதுமிதா சொன்னது…

ஒருமுறை உன்பெயர் கண்டாலே
ரிப்ளை எழுதிய மடலுடன்
செண்ட் க்ளிக்கை
நோக்கி செல்கிறதே இந்தக்கை
இதென்ன வாழ்க்கை

மதுமிதா சொன்னது…

ஒருமுறை
உன்பெயரெழுத
ஒருநூறுமுறையல்ல
ஓராயிரம் முறை
படபடக்கிறதே ஸ்க்ரீன்
பறக்கும் மனதுடன் சேர்ந்து

மதுமிதா சொன்னது…

ஆச்சா நூறு:-)

நல்வாழ்த்துகள் நவீன்
கவிதைக்கும் அன்பு கனியும் மனதுக்கும்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மதுமிதா said...
புத்தாண்டு வாழ்த்துகள்
100 கமெண்ட்ஸுக்கும்//

வாருங்கள் மதுமிதா :))
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

//இணையத்தில் இல்லா
இருபது நாட்களும்
இதயத்தில் தொல்லை //

மீண்டும் ஒரு அழகான கவிச்சரம் உங்களிடமிருந்து மதுமிதா :)) மணக்கிறது :)))

//ஆச்சா நூறு:-)

நல்வாழ்த்துகள் நவீன்
கவிதைக்கும் அன்பு கனியும் மனதுக்கும்//

மிக்க நன்றி மதுமிதா !! தங்கள் அன்பிற்கு தலை வணங்குகிறேன் !! :))

Jay சொன்னது…

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//mayooresan மயூரேசன் said...
அருமையான கவிதை வாழ்த்துக்கள் //

வாருங்கள் மாயூரேசன் :))
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !! :))

surya சொன்னது…

யார் யாரோ வந்து
ஹாய் சொல்லிவிட்டு
சென்றபோதெல்லாம்
சும்மா இருந்த என்
மெசெஞ்சர்
நீ வந்தபோது மட்டும்
ஆனந்த கூத்தாடுகிறது


buzz க்கு இப்படி ஒரு அர்த்தமா?

சொந்த அனுபவங்களோ?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//surya said...
யார் யாரோ வந்து
ஹாய் சொல்லிவிட்டு
சென்றபோதெல்லாம்
சும்மா இருந்த என்
மெசெஞ்சர்
நீ வந்தபோது மட்டும்
ஆனந்த கூத்தாடுகிறது


buzz க்கு இப்படி ஒரு அர்த்தமா?

சொந்த அனுபவங்களோ? //

வாங்க் சூர்யா :))))))
அட என்னங்க சூர்யா ஒரு கவிஞனுக்கு கற்பனை வராதா என்ன??;))))))))))) மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்க்கும் !! :))))

பெயரில்லா சொன்னது…

அட அட டா.. மெய் சிலிர்த்துப் போச்சு..
ம்.. சுடுவானத்திற்கு காதலியாய்.. இருப்பதை விட்டுட்டு.. பேசாமல்.. உங்கள் .."ஆதலால்"க்கு காதலி ஆகிடலாம் போல இருக்கு...

எங்க இருந்து நவீன்? எப்படிப்பா? :-)

நேசமுடன்..
-நித்தியா

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நித்தியா said...
அட அட டா.. மெய் சிலிர்த்துப் போச்சு..
ம்.. சுடுவானத்திற்கு காதலியாய்.. இருப்பதை விட்டுட்டு.. பேசாமல்.. உங்கள் .."ஆதலால்"க்கு காதலி ஆகிடலாம் போல இருக்கு...

எங்க இருந்து நவீன்? எப்படிப்பா? :-)

நேசமுடன்..
-நித்தியா //

வாருங்கள் நித்தியா !!! :))))
நீண்ண்ண்ண்ண்ட... நாட்களுக்குப்பிறகு உங்களை பார்கிறேன். மிக மகிழ்ச்சி!!! என்ன ஆயிற்று நித்தியாவிற்கு??:)))))

உங்கள் கவிதைகளுக்கு முன்பு என் கவிதைகள் எல்லாம் மிக சாதரணம் நித்தியா!!! :))) மிக்க நன்றி நித்தியா வருகைக்கும் தருகைக்கும் !!! அடிக்கடி வாருங்கள்!!! :))))

பெயரில்லா சொன்னது…

//
பேசிப்பேசியே
களைத்துபோனது
நம் விரல்கள் !
//

Fantastic kiko

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
//
பேசிப்பேசியே
களைத்துபோனது
நம் விரல்கள் !
//

Fantastic kiko//

வாங்க :)))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்.... :))))

Rasiga சொன்னது…

ஆன்லைன் அரட்டையை கவிதையாக்கிய விதமும்,
அனுபவித்து எழுதிய கவிநடையும்,அபாரம்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Rasiga said...
ஆன்லைன் அரட்டையை கவிதையாக்கிய விதமும்,
அனுபவித்து எழுதிய கவிநடையும்,அபாரம்.//


வாருங்கள் ரசிகா :)))
ஆன்லைன் அரட்டைகள்
ஒரு கட்டத்தில் காதலாக
பரிணாம வளர்ச்சி அடையலாம்
அல்லவா ?? :))))

மிக்க நன்றி
ரசிகாவின் ரசிப்புக்கும்
அளிப்புக்கும்... :)))

Divya சொன்னது…

Dear Naveen,

Ipathan unga blog profile pic parthein,
Greenish effectla pic luks really good:))

Enoda comment page la unga Dp , old pic than katuthu,
so I didnt notice the dp change.

This one ......really looks nice.

Unknown சொன்னது…

nee
oru murai chat seythale
naan
pazha kavithaihali
thrudividuhiren


super