திங்கள், டிசம்பர் 11, 2006

சா - தீ

என்ன சாதி ?“சாதிகள்
இல்லையடி
பாப்பா “
கேட்டதும்
கேட்கிறோம்
சொன்னவர்
என்ன சாதி ?விடுதி“சாதிகள்
இல்லையடி
பாப்பா !! “
விபச்சார
விடுதிக்குள்
நுழையும்போது
மட்டும் !!அணை


“சாதிகள்
இல்லையடி
பாப்பா “
சீக்கிரம்
விளக்கை
அணை !


தேர்தல்


“சாதிகள்
சேருது
சண்டைகள்
தொலையுது “
தேர்தல்
வந்தால்
மட்டும்.மீதம் எதற்கு
ஆண்சாதி
பெண்சாதி
மீதமெல்லாம்
எதற்கு சாமி ?

15 கருத்துகள்:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

:-))))

Unknown சொன்னது…

பாட்டுக்கு சாரதியாம் பாரதிக்கு கவிஞரின் மரியாதை :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//செந்தில் குமரன் said...
:-)))) //

வாங்க செந்தில்குமரன் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தேவ் | Dev said...
பாட்டுக்கு சாரதியாம் பாரதிக்கு கவிஞரின் மரியாதை :)) //

வாருங்கள் தேவ் :))
ஆம் பாரதிக்கு மரியாதை :)) மிக்க நன்றி !!

பெயரில்லா சொன்னது…

பார(தீ)யின் பொறியில் சா(தீ)கள் ஒழியட்டுமே

மரைக்காயர் சொன்னது…

"சா - தீ"

கவிதையாய் தலைப்பு!
கருத்துக்கள் உறுத்துகின்றன
நெருஞ்சி முள்ளாய்..!

பெயரில்லா சொன்னது…

சரியான வார்த்தைகள்.
முக்தில்,தோளில்,தொடையில்,காலில்
பிறந்தோர் நால்சாதி
தாய்க்குப் பிறந்தவன்
உலகெங்கும் உள்ளார்
அவர் என்ன சாதி?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இனியவள் புனிதா said...
பார(தீ)யின் பொறியில் சா(தீ)கள் ஒழியட்டுமே //

வாருங்கள் புனிதா
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மரைக்காயர் said...
"சா - தீ"

கவிதையாய் தலைப்பு!
கருத்துக்கள் உறுத்துகின்றன
நெருஞ்சி முள்ளாய்..! //

வாருங்கள் மரைக்காயர் :))
வருகையும் தருகையும் மிக்க மகிழ்ச்சி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhan said...
சரியான வார்த்தைகள்.
முக்தில்,தோளில்,தொடையில்,காலில்
பிறந்தோர் நால்சாதி
தாய்க்குப் பிறந்தவன்
உலகெங்கும் உள்ளார்
அவர் என்ன சாதி? //

வாருங்கள் தமிழன் :))
வந்தமைக்கும் தந்தமைக்கும் மிக்க நன்றி :)

Divya சொன்னது…

கருத்துக்கள் உள்ள கவிதை, அருமை, பாராட்டுக்கள்!

பள்ளி/ கல்லூரி விண்ணப்பத்தில் சாதி கேட்கப்படும் வரை.......சா[தீ] ஒழிவது கடிணம்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
கருத்துக்கள் உள்ள கவிதை, அருமை, பாராட்டுக்கள்!

பள்ளி/ கல்லூரி விண்ணப்பத்தில் சாதி கேட்கப்படும் வரை.......சா[தீ] ஒழிவது கடிணம்! //

வாங்க திவ்யா :))
ஆம் நீங்கள் சொல்வதும் சரிதான் :)) கருத்துக்கு மிக்க நன்றி !! :))

நாமக்கல் சிபி சொன்னது…

அற்புதமாக பாரதிக்கு மரியாதை செய்துள்ளீர்கள்!

//ஆண்சாதி
பெண்சாதி
மீதமெல்லாம்
எதற்கு சாமி ?
//

ஃபினிஷிங்க் டச் பிரமாதம்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
அற்புதமாக பாரதிக்கு மரியாதை செய்துள்ளீர்கள்!

//ஆண்சாதி
பெண்சாதி
மீதமெல்லாம்
எதற்கு சாமி ?
//

ஃபினிஷிங்க் டச் பிரமாதம்! //

வாருங்கள் சிபி :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :)))

பெயரில்லா சொன்னது…

மறுபடியும் ஒரு அற்புதமான கவிதை.உண்மையை அழகாக கவி பாடியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்