செவ்வாய், ஜூன் 27, 2006

பின் எப்படி பார்ப்பதாம்?

மஞ்சள் தேவதை




உன்னை முதன் முதலில்
அந்த மாம்பழ நிற
பட்டுப்பாவாடையில் பார்த்ததும்
எனக்குத்தோன்றியது
தேவதைகள் வெள்ளை
உடைகளில் தான்
வரவேண்டுமா என்ன ?






எப்படி இப்படி







கோவிலுக்கெல்லாம்
இப்படி வராதே
பார்
வருபவர்களெல்லாம்
உன்னைப்
பார்த்து கன்னத்தில்
போட்டுக்கொள்கிறார்கள்




அம்மன்



முதலில் இப்படி
பார்ப்பதை விடு
என்கிறாய்
கர்ப்பகிரகத்துக்குள்
இருக்கும் என்
தெய்வத்தை
பின் எப்படி
பார்ப்பதாம் ?




பாவம் அம்மா




இப்பொழுதெல்லாம்
கோவிலுக்கு
தவறாமல் வருகிறேன்
எனக்கு பக்தி
வந்து விட்டதென
என் அம்மா மிகுந்த
ஆனந்தப்படுகிறார்கள்
பாவம் அவர்களுக்கு
தெரியாது
என் பக்தி
கர்பகிரகத்துக்குள்ளிருக்கும்
அம்மனுக்காக அல்ல
அதைச் சுற்றிக்
கொண்டிருக்கும்
அம்மனுக்காக
என!




அப்படி பார்க்காதே




அப்படிப் பார்க்காதே
எனக்கு வெட்கமாக
இருக்கிறதென
முகத்தினை திருப்பிக்
கொள்கிறாய்
இருப்பினும்
என்னை நோக்கி
சிரிக்கிறது
எனக்கான உன்
உன் வெட்கம் !









அன்று
என் எதிர் வீட்டு
குழந்தையை நீ
கொஞ்சிக்கொண்டிருந்த
போதுதான்
தவழ ஆரம்பித்தது
உன்னை நோக்கி என்
மனது !








நம் பயணத்தில்
திடீரென குறுக்கே
வந்துவிட்ட
அந்த
மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை
வாழ்த்தத்தான்
தோன்றுகிறது
நீ என்
பின்னால் அமர்திருக்கும்
வேளைகளில் !

41 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//முதலில் இப்படி
பார்ப்பதை விடு
என்கிறாய்
கர்ப்பகிரகத்துக்குள்
இருக்கும் என்
தெய்வத்தை
பின் எப்படி
பார்ப்பதாம் ?//
தெய்வம் கர்பம் ஆகிறவரைக்கும் இப்படியெல்லாம் எழுதுவிங்க ....:)

Unknown சொன்னது…

அம்மன் மீது உங்கள் பக்தியைக் கண்டு மெச்சினோம்.பக்தருக்கு சீக்கிரமே வரம் கிடைக்க வாழ்த்துக்கள்!!

ஏற்கனவே வரம் கிடைத்து விட்டது போல் தான் தெரிகிறது!!

ஆனாலும் ஒப்புக் கொள்ள மாட்டீர்களே :)

அன்புடன்,
அருள்.

சீனு சொன்னது…

அட! இன்னொரு தபூ சங்கர் ரசிகரா? இங்கே பாருங்கள்

கார்த்திக் பிரபு சொன்னது…

hi pa kalkkal ponga..ean andha karrapkirakarathai vivavey mattengala??

ILA (a) இளா சொன்னது…

//தவழ ஆரம்பித்தது
உன்னை நோக்கி என்
மனது //
//மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை//
//பின் எப்படி
பார்ப்பதாம் ?//
//எனக்குத்தோன்றியது
தேவதைகள் வெள்ளை
உடைகளில் தான்//

மீண்டும் மீண்டும் ரசிக்கிறேன்,
சலிப்பிற்கே சலிப்பு வர
மீண்டும் படிக்கிறேன்,
படம் பார்க்கிறேன்,
ஒப்பிட்டு பார்க்கிறேன்..
பார்த்துகொண்டே இருக்கிறேன்.......

சேதுக்கரசி சொன்னது…

இன்னொரு தபூ சங்கர் ரசிகர் மாதிரி தெரியலை...
இன்னொரு தபூ சங்கர் மாதிரித்தான் தெரியுது!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கோவி.கண்ணன் said...
தெய்வம் கர்பம் ஆகிறவரைக்கும் இப்படியெல்லாம் எழுதுவிங்க ....:) //

வாங்க கண்ணன் :)
பேருக்கு தகுந்த மாதிரிதான் எழுதறீங்க :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// அருட்பெருங்கோ said...
அம்மன் மீது உங்கள் பக்தியைக் கண்டு மெச்சினோம்.பக்தருக்கு சீக்கிரமே வரம் கிடைக்க வாழ்த்துக்கள்!! //

வாங்க அருட்பெருங்கோ :)
வரம் கிடைக்கவா?? நல்ல மனது !! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சீனு said...
அட! இன்னொரு தபூ சங்கர் ரசிகரா?//

வாங்க சீனு!
தபூ சங்கர் நடைதான் என்னை எழுதத்தூண்டியது ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//karthick said...
hi pa kalkkal ponga..ean andha karrapkirakarathai vivavey mattengala?? //

வாங்க கார்த்தி ! :)
நானா விட மாட்டேன் என்கிறேன்? :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ILA(a)இளா said...
மீண்டும் மீண்டும் ரசிக்கிறேன்,
சலிப்பிற்கே சலிப்பு வர
மீண்டும் படிக்கிறேன்,
படம் பார்க்கிறேன்,
ஒப்பிட்டு பார்க்கிறேன்..
பார்த்துகொண்டே இருக்கிறேன்.//

வாங்க இளா !
பின்னூட்டமே கவிதையாக விதைக்க உங்களைத் தவிர யாரால் முடியும் ?? தங்கள் ரசிப்பு என் பாக்கியம் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேதுக்கரசி said...
இன்னொரு தபூ சங்கர் ரசிகர் மாதிரி தெரியலை...
இன்னொரு தபூ சங்கர் மாதிரித்தான் தெரியுது! //

வாங்க சேதுக்கரசி ! :)
தபூ சங்கர் எங்கே ! நான் சாதாரணன் ! மலைக்கு ஈடாகுமா மடு? :)) வருகையும் தருகையும் இனிமை :))

Unknown சொன்னது…

அசத்தல் தலைவா... !!!!!

ப்ரியன் சொன்னது…

நவீன் எல்லா கவிதைகளும் அழகு - அருமை என்பதால் எதை குறிப்பிட்டுச் சொல்ல எனத் திண்டாடுகிறேன்...

என்றாலும் இது மிக மிக அருமை

/*அன்று
என் எதிர் வீட்டு
குழந்தையை நீ
கொஞ்சிக்கொண்டிருந்த
போதுதான்
தவழ ஆரம்பித்தது
உன்னை நோக்கி என்
மனது ! */

/*நம் பயணத்தில்
திடீரென குறுக்கே
வந்துவிட்ட
அந்த
மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை
வாழ்த்தத்தான்
தோன்றுகிறது
நீ என்
பின்னால் அமர்திருக்கும்
வேளைகளில் ! */

ஹஹஹஹ :) என்சாய் தல :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Dev said...
அசத்தல் தலைவா... !!!!! //

வாங்க தேவ் ! :)
வரவினால் பெருமை கொண்டேன் ! :))

Unknown சொன்னது…

:)

வெற்றி சொன்னது…

நவீன்,
அருமை. எளிமையான தமிழில் மனதில் எழும் உணர்வுகளை அப்படியே கவியாக்கியுள்ளீர்கள். உண்மையில் இக் கவிதைகள் என்னுள் ஓர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்றால் மிகையாகாது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

நன்றி.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ப்ரியன் said...
நவீன் எல்லா கவிதைகளும் அழகு - அருமை என்பதால் எதை குறிப்பிட்டுச் சொல்ல எனத் திண்டாடுகிறேன்...//

வாங்க ப்ரியன்:))
வருகையும் தருகையும் என்னை பெருமை கொள்ள வைக்கின்றன :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Venkataramani said...
:) //

வாங்க ரமணி :) நன்றிகள் பல !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//வெற்றி said...
நவீன்,
அருமை. எளிமையான தமிழில் மனதில் எழும் உணர்வுகளை அப்படியே கவியாக்கியுள்ளீர்கள். உண்மையில் இக் கவிதைகள் என்னுள் ஓர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்றால் மிகையாகாது.//

வாருங்கள் வெற்றி ! :)
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ! வருகைக்கும் தருகைக்கும் என்ன செய்யத்தகும் ?? :) நன்றி !

பெயரில்லா சொன்னது…

. .
|
v

சத்தியா சொன்னது…

எல்லாக் கவிதைகளும் அருமை!... ஆனாலும் இந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது....

"முதலில் இப்படி
பார்ப்பதை விடு
என்கிறாய்
கர்ப்பகிரகத்துக்குள்
இருக்கும் என்
தெய்வத்தை
பின் எப்படி
பார்ப்பதாம் ?"

கவிதை மட்டுமல்ல, கவிதைக்கான படங்களும் கூட அழகுதான்.

வாழ்த்துக்கள் நவீன்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சுபா said...
. .
|
v //

வாங்க சுபா ! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சத்தியா said...

கவிதை மட்டுமல்ல, கவிதைக்கான படங்களும் கூட அழகுதான். //

வாங்க சத்தியா :)

மிக்க நன்றி ! வருகையும்தான் ! :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

/*அன்று
என் எதிர் வீட்டு
குழந்தையை நீ
கொஞ்சிக்கொண்டிருந்த
போதுதான்
தவழ ஆரம்பித்தது
உன்னை நோக்கி என்
மனது !*/

காதலைப் போலவே இந்த வரிகளும் அழகாய் இருக்கின்றன.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேரல் said...
காதலைப் போலவே இந்த வரிகளும் அழகாய் இருக்கின்றன.//

வாங்க சேரல் !
மிக்க நன்றி ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பிரேமா said...
படம் கிடைச்சதுக்காக கவிதை எழுதறீங்களா??
இல்லை கவிதை எழுதினதிற்காக படம் தேடுகிறீர்களா?இல்லை காதல் ஆட்க்கொண்டதால் கவிதை எழுதறீங்களா??

பதில் சொல்லுங்களேன்!!
Your poems are very good!! //

வாங்க ப்ரேமா :),

//படம் கிடைச்சதுக்காக கவிதை எழுதறீங்களா?? //

இல்லை ப்ரேமா !

//இல்லை கவிதை எழுதினதிற்காக படம் தேடுகிறீர்களா?//

ம்ம் இல்லை இருக்கலாம் :) என கவிதைக்கு ஏற்ற படம் இருக்கிறதா என தேடுகிறேன்:)

//இல்லை காதல் ஆட்க்கொண்டதால் கவிதை எழுதறீங்களா?? //

காதல் ஆட்கொண்டதில்லை ! கவிஞர்கள் உணர்வைக் காதலிக்கிறார்கள் என்பது என் எண்ணம்! நான் ஒரு ரசிகன் காதலைக் கூட ரசிக்கிறேன்!

//Your poems are very good!!//

மிக்க நன்றி ப்ரேமா! என் பதில் உங்கள் சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கும் என நினைக்கிறேன் ! :))

Santhosh சொன்னது…

//நம் பயணத்தில்
திடீரென குறுக்கே
வந்துவிட்ட
அந்த
மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை
வாழ்த்தத்தான்
தோன்றுகிறது
நீ என்
பின்னால் அமர்திருக்கும்
வேளைகளில் ! //
:)) நல்ல கவிதைகள் நவீன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சந்தோஷ் said...
//நம் பயணத்தில்
திடீரென குறுக்கே
வந்துவிட்ட
அந்த
மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை
வாழ்த்தத்தான்
தோன்றுகிறது
நீ என்
பின்னால் அமர்திருக்கும்
வேளைகளில் ! //
:)) நல்ல கவிதைகள் நவீன். //

வாங்க சந்தோஷ் :))

நன்றி !!

பெயரில்லா சொன்னது…

தெய்வம்,
பக்தனை விட பக்தனுக்குத் தொண்டாற்றுபவனுக்குதான் விரைவில் அருள் பாலிக்குமாமே?

Divya சொன்னது…

\\உன்னை முதன் முதலில்
அந்த மாம்பழ நிற
பட்டுப்பாவாடையில் பார்த்ததும்
எனக்குத்தோன்றியது
தேவதைகள் வெள்ளை
உடைகளில் தான்
வரவேண்டுமா என்ன ?\\

தேவதைகள் வெள்ளை ட்ரஸ் போட்டு வருவது 'பாரதிராஜா' படத்தில் மட்டுமே:))

Divya சொன்னது…

\\கோவிலுக்கெல்லாம்
இப்படி வராதே
பார்
வருபவர்களெல்லாம்
உன்னைப்
பார்த்து கன்னத்தில்
போட்டுக்கொள்கிறார்கள்\

சூப்பரு:)

Divya சொன்னது…

\\அப்படிப் பார்க்காதே
எனக்கு வெட்கமாக
இருக்கிறதென
முகத்தினை திருப்பிக்
கொள்கிறாய்
இருப்பினும்
என்னை நோக்கி
சிரிக்கிறது
எனக்கான உன்
உன் வெட்கம் !\


எனக்கான உன் வெட்கம்.......அழகான வரிகள்!!

பெயரில்லா சொன்னது…

\\நம் பயணத்தில்
திடீரென குறுக்கே
வந்துவிட்ட
அந்த
மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை
வாழ்த்தத்தான்
தோன்றுகிறது
நீ என்
பின்னால் அமர்திருக்கும்
வேளைகளில் !\


சடன் ப்ரேக்.....திடீர் ப்ரேக்கெல்லாம் ரொம்ப போடாதீங்க:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// பக்தனுக்குத் தொண்டன் said...
தெய்வம்,
பக்தனை விட பக்தனுக்குத் தொண்டாற்றுபவனுக்குதான் விரைவில் அருள் பாலிக்குமாமே? //

வாங்க தொண்டன் :))
அப்படியா..?? அப்படியாவது தொண்டாற்றினால் சரி :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\உன்னை முதன் முதலில்
அந்த மாம்பழ நிற
பட்டுப்பாவாடையில் பார்த்ததும்
எனக்குத்தோன்றியது
தேவதைகள் வெள்ளை
உடைகளில் தான்
வரவேண்டுமா என்ன ?\\

தேவதைகள் வெள்ளை ட்ரஸ் போட்டு வருவது 'பாரதிராஜா' படத்தில் மட்டுமே:)) //

வாங்க திவ்யா :))
அப்படியா என்ன..? அதனால தானே நாங்க கலர் கலரா வர விட்டு இருக்கோம்..:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\கோவிலுக்கெல்லாம்
இப்படி வராதே
பார்
வருபவர்களெல்லாம்
உன்னைப்
பார்த்து கன்னத்தில்
போட்டுக்கொள்கிறார்கள்\

சூப்பரு:) //

வாங்க திவ்யா :))
நன்றி !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\நம் பயணத்தில்
திடீரென குறுக்கே
வந்துவிட்ட
அந்த
மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை
வாழ்த்தத்தான்
தோன்றுகிறது
நீ என்
பின்னால் அமர்திருக்கும்
வேளைகளில் !\


சடன் ப்ரேக்.....திடீர் ப்ரேக்கெல்லாம் ரொம்ப போடாதீங்க:)) //

வாங்க அனானி :)))
அட சடன் ப்ரேக் எல்லாம் தேவையனப்போ கட்டாயம் போட்டுத்தானே ஆகனும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\அப்படிப் பார்க்காதே
எனக்கு வெட்கமாக
இருக்கிறதென
முகத்தினை திருப்பிக்
கொள்கிறாய்
இருப்பினும்
என்னை நோக்கி
சிரிக்கிறது
எனக்கான உன்
உன் வெட்கம் !\


எனக்கான உன் வெட்கம்.......அழகான வரிகள்!! //

வாங்க திவ்யா :))
அழகான வரிகளை ரசித்து மேலும் அழகாக்கிய உங்களின் அழகான தருகைக்கு மிக்க நன்றி :)))))

sree சொன்னது…

was searching tabu sankar's poetry long time.

thanks thalaiva!

Sivaji Sankar சொன்னது…

நான் தபூ சங்கர் ரசிகன்...,

இப்போது உங்கள் ரசிகன் கூட..,

நன்றி

-சிவ சங்கர்-