செவ்வாய், ஜூன் 13, 2006

முத்தச்சந்தம்

காதல் ஜோதி
பிரகாரத்தை நீ
சுற்றுகிறாய்
நானோ
உன்னைச்சுற்றுகிறேன்


காதல் பயணம்

வேகத்தடையை
என்னமோ
நாம் பயணம் செய்த
பைக்
வேகமாக
கடந்துவிட்டது
ஆனால் என்
மனதோ
ஏன் சாலை
முழுதும்
வேகத்தடையில்லை
என கேட்கிறதுஅப்படியெல்லாம் பார்க்காதே
அப்படியெல்லாம்
என்னைப் பார்க்காதே
என் மனதில்
அதிவிரைவாக
காதலுற்ற
முத்த மண்டலம்
உருவாகின்றது !
Image Hosted by ImageShack.us
எனது உதடுகளுக்கும்
உனது உதடுகளுக்கும்
இன்று ஒரே விருந்தாம்
இறுமாப்பில் அவை
பேசவே விடவில்லை
நம்மை!


Image Hosted by ImageShack.us
இத்தனைபேர்
மத்தியிலும்
எனக்கு முத்தம் கொடுக்க
முடியுமா?
என கேட்டதற்கு
கொடுத்தால் தனிமையில்
தருவேன் என்ற
பந்தயத்தில் ஜெயிக்க
ஏதோ ரகசியம் சொல்வதுபோல்
என் காதினில்
முத்தமிட்டுவிட்டு
ஒரு சிரிப்பு சிரித்தாயே
அந்தச் சிரிப்பை
இன்னும் என் காதல்
சுமந்து கொண்டு இருக்கிறது .


இன்று என்னுடன்
பேசாதே என நான்
கூறியதற்காய்
ஏன் கோபித்துக்
கொண்டு அமர்திருக்கிறாய்?
பேசினால் நம்
உதடுகள்
ஏங்கிப்போய்விடாது ?
உனக்கு மிகவும்
பிடித்த இசை
என்னவென்று
நீ கேட்டதற்கு
நான் சொன்ன
பதிலைக்கேட்டவுடன்
ஏன் உன்
கன்னங்கள்
சிவக்கின்றன ?
34 கருத்துகள்:

கார்த்திக் பிரபு சொன்னது…

thala kalukkureenga..adhu sari engirundhu indha padangal edukureeragl..nanum google panni parthane ..onnum sikka matangiradhu..sollungalen

மிதக்கும்வெளி சொன்னது…

உம்மா...

பெயரில்லா சொன்னது…

கவிதைகளும், வடிவமைப்பும் அருமை.

//...

இறுமாப்பில் அவை
பேசவே விடவில்லை
நம்மை!

//

மிகவும் ரசித்தேன்.

அன்புடன்
சேவியர்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//karthick said...
thala kalukkureenga..adhu sari engirundhu indha padangal edukureeragl..nanum google panni parthane ..onnum sikka matangiradhu..sollungalen //

வாங்க கார்த்திக்,
மிக்க மகிழ்ச்சி ! வலையிலிருந்துதான் எடுக்கிறேன் படங்களை :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மிதக்கும் வெளி said...
உம்மா... //

வாருங்கள் மிதக்கும்வெளி :) அழகான விமர்சனம் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேவியர் said...
கவிதைகளும், வடிவமைப்பும் அருமை. //

வாங்க சேவியர் ! நன்றி வருகைக்கும் தருகைக்கும் :)

பெயரில்லா சொன்னது…

என் மனதில்
அதிவிரைவாக
காதலுற்ற
முத்த மண்டலம்
உருவாகின்றது !

:-)

Unknown சொன்னது…

Thalaivaa,

Kalakureenga ponga:)

Chummmmmmmmmaaaaaaaaaaaaaa superaa irrukku:)

நாமக்கல் சிபி சொன்னது…

//உனக்கு மிகவும்
பிடித்த இசை
என்னவென்று
நீ கேட்டதற்கு
நான் சொன்ன
பதிலைக்கேட்டவுடன்
ஏன் உன்
கன்னங்கள்
சிவக்கின்றன ?
//

வேறென்ன!
இம்சை என்று
சொல்லியிருப்பீர்கள்!

அந்த காதல் இம்சைக்கு
கன்னங்கள் சிவக்காமல் என்ன செய்யுமாம்?

உண்மைதானே!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில் said...
என் மனதில்
அதிவிரைவாக
காதலுற்ற
முத்த மண்டலம்
உருவாகின்றது !

:-) //

வாங்க எழில் ! :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Dev said...
Thalaivaa,

Kalakureenga ponga:)

Chummmmmmmmmaaaaaaaaaaaaaa superaa irrukku:) //

மிக்க மகிழ்ச்சி தேவ் :)
உங்கள் செதுக்கல் எப்போதுமே கலக்கல் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அந்த காதல் இம்சைக்கு
கன்னங்கள் சிவக்காமல் என்ன செய்யுமாம்?//

ஆஹா சிபி விளக்கம் அழகு! ஆயிரம் தான் இருந்தாலும் அனுபவஸ்த்தர் இல்லையா ?:))))

ILA (a) இளா சொன்னது…

//ஏன் சாலை
முழுதும்
வேகத்தடையில்லை
என கேட்கிறது
//
ஆஹா.....
//இறுமாப்பில் அவை
பேசவே விடவில்லை//
அசத்தல்
//அந்தச் சிரிப்பை
இன்னும் என் காதல்
சுமந்து கொண்டு இருக்கிறது//
அழகு

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

ஆஹா!
அசத்தல்!
அழகு !
அழகான சந்தங்களுக்கு மிக்க நன்றி இளா ! :)

சத்தியா சொன்னது…

ம்... ரசிக்கக் கூடிய கவிதைகள்.

வாழ்த்துக்கள் நவீன்!

ப்ரியன் சொன்னது…

ஆஹா காதல் என்றால் அப்படியே உருகி விடுகிறீர்!நேரமாகிவிட்டது இங்கே!பொறுங்கள் நாளை நல்ல பின்னூட்டத்தோடு வருகிறேன்,

பெயரில்லா சொன்னது…

பிரகாரத்தை நீ
சுற்றுகிறாய்
நானோ
உன்னைச்சுற்றுகிறேன்

உமக்கு அவள்தான் கருவறையோ!!!

கலக்கல் போங்க.

பெயரில்லா சொன்னது…

"கியூட்டா" இருக்குதுங்க இந்தக் கவிதைகளும் படமும்... வாழ்த்துக்கள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

//குழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் !!//

அழகு!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

/பிரகாரத்தை நீ
சுற்றுகிறாய்
நானோ
உன்னைச்சுற்றுகிறேன்/

காதல்!!!!!!!!!!!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சத்தியா said...
ம்... ரசிக்கக் கூடிய கவிதைகள்.//

மிக்க நன்றி சத்தியா :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//nikshika said...
பிரகாரத்தை நீ
சுற்றுகிறாய்
நானோ
உன்னைச்சுற்றுகிறேன்

உமக்கு அவள்தான் கருவறையோ!!!

கலக்கல் போங்க. //

வந்தமைக்கும் ஈந்தமைக்கும் நன்றி நிக்ஷிதா :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ப்ரியன் said...
ஆஹா காதல் என்றால் அப்படியே உருகி விடுகிறீர்!//

வாங்க ப்ரியன். நீங்கள் மட்டும் என்னவாம்?? :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேதுக்கரசி said...
"கியூட்டா" இருக்குதுங்க இந்தக் கவிதைகளும் படமும்... வாழ்த்துக்கள் //

நன்றி சேதுக்கரசி ! க்யூட்டாக இருக்கிறது விமர்சனம் தங்கள் பெயரைப் போலவே :))

Gnaniyar @ நிலவு நண்பன் சொன்னது…

இதனை வாசித்துவிட்டு செல்லுகின்ற காதலர்கள்
கண்டிப்பாய் விமர்சனம் செய்வார்கள்.

விமர்சனம் செய்யாதவர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்று அர்த்தம்..

இந்தக் கவிதைகளை
எந்தப்பெண்ணிடம் கொடுத்தாலும்
காதலிக்க ஆரம்பித்து விடுவாள்..

காதலியிடம் கொடுக்க மட்டும்
பயமாக இருக்கிறது :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நிலவு நண்பன் said...

//இதனை வாசித்துவிட்டு செல்லுகின்ற காதலர்கள்
கண்டிப்பாய் விமர்சனம் செய்வார்கள்.//

இப்படி விமர்சனம் செய்தவர்களை மாட்டிவிடுகிறீர்களே ?:))

//விமர்சனம் செய்யாதவர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்று அர்த்தம்..//

:)))


//இந்தக் கவிதைகளை
எந்தப்பெண்ணிடம் கொடுத்தாலும்
காதலிக்க ஆரம்பித்து விடுவாள்..//

அப்படியா ரசிகவ்?? :) நன்றி !

//காதலியிடம் கொடுக்க மட்டும்
பயமாக இருக்கிறது :) //

என்னங்க கடைசியில் இப்படி சொல்லிவிட்டீர்கள்?

ரசிகவ் உங்கள் வரிகள் என் கவிதைச் செடிக்கு ஊற்றியநீர் ! :))

1:02 PM

Unknown சொன்னது…

நவீன்,

என்ன இந்தப் பக்கம் ஒரே "இச்" சத்தமாவேக் கேட்குது!!

ஓ இது காதலர்கள் ஏரியாவா...

சரி..விடு..ஜூட்...நான் கிளம்பறேன்..

அன்புடன்,
அருள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//என்ன இந்தப் பக்கம் ஒரே "இச்" சத்தமாவேக் கேட்குது!!

ஓ இது காதலர்கள் ஏரியாவா...

சரி..விடு..ஜூட்...நான் கிளம்பறேன்..//

வாங்க அருள் ! :)
நீங்கதான் இந்த ஏரியா மெம்பர் ! நீங்களே கிளம்பினா எப்படி?? :))

கார்த்திக் பிரபு சொன்னது…

sir valaiyil endha kalai sorkkalai (keywords)use panni idhai pol poruththamaan padangalai edukkireer?

help pannveengannu numburane..

and unga anumadhiyoda ungala padhivirkaaana linkai en padhivil idugirane..nandri..

பெயரில்லா சொன்னது…

\\இத்தனைபேர்
மத்தியிலும்
எனக்கு முத்தம் கொடுக்க
முடியுமா?
என கேட்டதற்கு
கொடுத்தால் தனிமையில்
தருவேன் என்ற
பந்தயத்தில் ஜெயிக்க
ஏதோ ரகசியம் சொல்வதுபோல்
என் காதினில்
முத்தமிட்டுவிட்டு
ஒரு சிரிப்பு சிரித்தாயே
அந்தச் சிரிப்பை
இன்னும் என் காதல்
சுமந்து கொண்டு இருக்கிறது .\\

அழகான கற்பனை!!!சூப்பர்!!

Rasiga சொன்னது…

காது மடல்களில் இரகசியமாய் முத்தமிடும் காதலி, ஒர் அழகான கற்பனை.
இளைமை துள்ளலும், காதலும்,முத்தமழையும் கலந்த கவிதை, ரசித்தேன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கார்த்திக் பிரபு said...
sir valaiyil endha kalai sorkkalai (keywords)use panni idhai pol poruththamaan padangalai edukkireer?

help pannveengannu numburane..

and unga anumadhiyoda ungala padhivirkaaana linkai en padhivil idugirane..nandri..//

வாங்க கார்த்திக் :)))
சொற்களை வலையில் தேடுவதில்லை !!
சாதாரண சொற்களை தானே உபயோகிக்கிறேன்

வருகைக்கும் தருகைக்கும்
மிக்க நன்றி :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\இத்தனைபேர்
மத்தியிலும்
எனக்கு முத்தம் கொடுக்க
முடியுமா?
என கேட்டதற்கு
கொடுத்தால் தனிமையில்
தருவேன் என்ற
பந்தயத்தில் ஜெயிக்க
ஏதோ ரகசியம் சொல்வதுபோல்
என் காதினில்
முத்தமிட்டுவிட்டு
ஒரு சிரிப்பு சிரித்தாயே
அந்தச் சிரிப்பை
இன்னும் என் காதல்
சுமந்து கொண்டு இருக்கிறது .\\

அழகான கற்பனை!!!சூப்பர்!!//

வாங்க அனானி :))
மிக்க நன்றி :)))
அழகான ரசிப்புக்கு... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Rasiga said...
காது மடல்களில் இரகசியமாய் முத்தமிடும் காதலி, ஒர் அழகான கற்பனை.
இளைமை துள்ளலும், காதலும்,முத்தமழையும் கலந்த கவிதை, ரசித்தேன்.//

வாருங்கள் ரசிகா :)))
பெயருக்கேற்றது போலவே
மிகவும் ரசிப்பீர்களா நீங்கள் ??
:)))) மிக்க நன்றி அழகான ரசிப்புக்கும்
ரசனையான பின்னூட்டத்திற்கும்... :))))