சனி, ஜூலை 15, 2006

அது ஒரு கார்காலம்

யார்யாரோயார் யாரோ பார்த்துப்
போகும் என் கவிதைகளை
என்றேனும் நீ
வாசித்திருக்கிறாயா?

உணர்ந்திருக்கிறாயாகாலைப் பனியிலும்
மாலைகளின் மடியிலும்
வீழ்ந்து கிடக்கும்
உன் பற்றிய என்
கவிதைகளை என்றேனும்
நீ உணர்ந்திருக்கிறாயா?

Image Hosted by ImageShack.usஇந்த மனசோட அட்டகாசம்
வர வர தாங்க முடியாலை
இன்னிக்கு காலையிலே
என்னைப் பார்த்து
சிரித்துவிட்டாயாம் !
போய் உடனே பேசுன்னு
ரொம்பத்தான் படுத்துது !இதயத்துடிப்புநீ இல்லாத என்
பயணங்களில்
கடந்து செல்கின்ற
ஒவ்வொரு
வேகத்தடையும்
உன் இதயத்
துடிப்பை எனக்கு
உணர்த்துகிறது
காந்தல் அழகுகருப்பாக
இருப்பதாக
குறைபட்டுக்
கொள்கிறாய்
சிலைகள்
எந்த நிறத்தில்
இருந்தால் என்ன?
நானாவது கொடுக்கிறேன்தாமதமாக வந்ததிற்காக
முத்தம் தரமாட்டேன் என
ஏன் அழிச்சாட்டியம் செய்கிறாய் ?
சரி நீ தரவேண்டாம் போ
நானே தந்துவிட்டுப்
போகிறேன் என்றாலும் ஏன்
முறைக்கிறாய் ?
லூசாடி நீ?


சிலசமயங்களில்
உன் பேச்சுக்கள்
லூசுத்தனமாக இருப்பாத
எனக்குப் படுகிறது என
தெரியாமல்
உன்னிடம்
சொல்லிவிட்டதற்காக
என்னிடம் பேசாமல்
இருந்த தினங்களில்
ஏண்டா லூசாடா நீ ?
எனக் கேட்ட
நண்பனை
அமைதியாகப்
பார்த்துக்கொண்டிருதேன் !
சிரித்த கொலுசு


எனக்கெல்லாம்
காதல் என்பதே
வராது என
கல்லூரியில்
என் நண்பர்களிடம்
சொல்லிகொண்டிருதபோதுதான்
கொலுசு அணிந்து
வந்து காதல் என்னைப்
பார்த்து சிரித்தது !
காதலித்துதொலையேன்சரி சரி போய்த்தொலை
உன்னைக் காதலித்துத்
தொலைக்கிறேன்
என்றாவது சொல்லிவிட்டு
போயேன்
இந்த மனசோட தொல்லை
தாங்கமுடியலை !
நினைவுஎன் நினைவு வந்தால்
என்ன செய்வாய் என
நீதானே என்னைக் கேட்டாய்
பின் எதற்கு பதிலைக்
கேட்டு கோபப்படுகிறாய்
அதுவும் சிரித்துக் கொண்டே !
பஸ்ஸ்டாப்புக்கு
வருவதற்குள்
நனைத்துவிட்ட
மழையை சபித்தபடி
நீ இருக்கிறாய்
நானோ நீ செல்ல
வேண்டிய பேருந்து
இப்போதைக்கு
வரக்கூடாது என
வரம்கேட்டு
வேண்டியபடி இருக்கிறேன் !


எப்பவும் அதே
நெனப்புதானா
வேற நெனப்பே
இல்லையா
என அடிக்கடி
கேட்கிறாய்
கேட்கும்போதே
வழிந்து ஓடுகிறது
உன் அழகான
வெட்கம் !
வெட்கம் காட்டும்
நினைவுகள் வாழ்க !