செவ்வாய், அக்டோபர் 24, 2006

யாரும் பார்க்கவில்லை
பூக்கள்

என் முகம் அழகாயில்லை
என ஏன் தினம் தினம்
அலுத்துக்கொள்கிறாய்?
பூக்கள் எப்படியிருந்தாலும்
அழகுதான்
கோபமே இல்லை

போடா இப்பொழுதெல்லாம்
நீ திட்டினால் கூட எனக்கு
கோபமே வருவதில்லை
என செல்லமாக நீ
உதடு சுழித்தபோது
ஏற்பட்ட சுழலில்
அமிழ்ந்து போனது
என் கோபம்
பேசித்தொலை


நீ பேசப்போவதில்லை
என பறை சாற்றுவதுக்கு
இப்படி 1000 SMS அனுப்பி
என்னைப் படுத்துவதற்கு
பதில் என்னிடம் நீ
பேசித்தொலைத்திருக்கலாம்

உதடு க்ரீம்


என் முன்னால் இப்படி இனி
ஐஸ்கீரீம் சாப்பிடாதே
எனக்கும் இப்போதே
சாப்பிட வேண்டும் போல்
தோன்றுகிறது
உன் இதழ்களின் க்ரீமை


யாரும் பார்க்கவில்லை


நல்லவேளை
நீ வெட்கப்படும்போது
என்னைதவிர யாரும்
பார்க்கவில்லை
அப்புறம் அவனவன் உன்னை
காதலிக்க ஆரம்பித்து விடுவான்
சும்மா இருஎல்லாரும் பார்க்கிறார்கள்
சும்மா இரு என சொல்கிறாய்
யாரும் இல்லாத இடத்தினில்
வந்தாலோ யாரும் பார்த்து
விட போகிறார்கள்
சும்மா இரு என்கிறாய்