
பேசாமல்
இருக்க மாட்டியா?
என்கிறாய்
விரல்களுக்கு
ஏது காதுகள் ?
இருக்க மாட்டியா?
என்கிறாய்
விரல்களுக்கு
ஏது காதுகள் ?

கொஞ்ச நேரம்
சும்மா இருக்க
சொல்கிறாய்
கொஞ்சும் நேரம்
கொஞ்சநேரமாய்
எப்படி
இருக்கும் ?
சும்மா இருக்க
சொல்கிறாய்
கொஞ்சும் நேரம்
கொஞ்சநேரமாய்
எப்படி
இருக்கும் ?

யாராவது
வந்துவிடப்போகிறார்கள்
என்றபடியே
நெருங்குகின்றன
நம்
இதழ்கள்!
வந்துவிடப்போகிறார்கள்
என்றபடியே
நெருங்குகின்றன
நம்
இதழ்கள்!

ஒவ்வொரு முறையும்
சீக்கிரம் போகவேண்டும்
என்கிறாய்
நமது சீக்கிரம்
அவ்வளவு சீக்கிரமாய்
வருவதில்லை !
சீக்கிரம் போகவேண்டும்
என்கிறாய்
நமது சீக்கிரம்
அவ்வளவு சீக்கிரமாய்
வருவதில்லை !

ஏன் என்னை இப்படி
படுத்தரே ? கோபத்துடன்
கேட்கிறாய்
இருந்தும் எனக்காக
ஈரமாகின்றன
உன் உதடுகள் !
படுத்தரே ? கோபத்துடன்
கேட்கிறாய்
இருந்தும் எனக்காக
ஈரமாகின்றன
உன் உதடுகள் !

சுரிதாரிலே
நல்லா இருக்கேனா ?
இல்லை சேலையிலே
நல்லா இருக்கேனா ?
ரெண்டுலயுமே நல்லாதான்
இருப்படா நீ
ஆனா ரெண்டுமே
இல்லாமலும்
நல்லா இருப்ப !
சொன்ன பதிலுக்காக
நீ கிள்ளிய இடத்தில்
காதல் கட்டிக்கொண்டதடி !
நல்லா இருக்கேனா ?
இல்லை சேலையிலே
நல்லா இருக்கேனா ?
ரெண்டுலயுமே நல்லாதான்
இருப்படா நீ
ஆனா ரெண்டுமே
இல்லாமலும்
நல்லா இருப்ப !
சொன்ன பதிலுக்காக
நீ கிள்ளிய இடத்தில்
காதல் கட்டிக்கொண்டதடி !

போதும் என
எப்போதாவது
சொல்லி இருக்கிறாயா?
சிணுங்களுடன்
குனிகிறாய்
என் முகம் நோக்கி !!
எப்போதாவது
சொல்லி இருக்கிறாயா?
சிணுங்களுடன்
குனிகிறாய்
என் முகம் நோக்கி !!

நான் விட்டு விட்டு
சென்று விட்டால் என்ன
செய்வாய்?
ம்ம் கொலை செய்து
விடுவேன்
உன் காதலை !!
நீதான் என் காதல்
அப்படியென்றால்..?
37 கருத்துகள்:
ம்ம் என்னய்யா கவிதையிலே குறும்பு கொப்பளிக்குது என்ன விஷேஷம்
:-)
நவீன்,
கவிதை, காதலில் வழுக்கிக் கொண்டு செல்கிறது...அருமை...
அனுபவமா? :))
அன்புடன்,
அருள்.
//ம்ம் என்னய்யா கவிதையிலே குறும்பு கொப்பளிக்குது என்ன விஷேஷம்//
வாங்க தேவ் :) குறும்பு இல்லாத காதல் என்ன காதல் ? விஷேசம் ஒன்னும் இல்லைங்க சும்மதான் ! :)
//கவிதை, காதலில் வழுக்கிக் கொண்டு செல்கிறது...அருமை...
அனுபவமா? :))//
வாங்க அருள் ! :)
அனுபவம்தான். பல ஏடுகளைப் படித்த... ( அப்படா தப்பிசிக்கிட்டேன் !! )
உங்கள் கவிதைகளை எனக்குப் பிடித்திருக்கிறது
நல்லதொரு காதல் கவிதை. பாராட்டுக்கள் நவீன்!
//உங்கள் கவிதைகளை எனக்குப் பிடித்திருக்கிறது//
நன்றி சேரல் :) உங்கள் வருகையும் எனக்கு பிடித்திருக்கிறது !
//நல்லதொரு காதல் கவிதை. பாராட்டுக்கள் நவீன்! //
நன்றி சத்தியா ! காதல் கொள்ளும் பாரட்டுக்கள் !!
அடப்பாவிகளா! இப்படியெல்லாம் படங்களைப் போட்டா எவந்தான் காதலிக்க மாட்டான்.
இரு இரு. உங்களை பாட்னா போலீஸ் கிட்டெ சொல்லுறேன்.
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி என் சோலிய முடிசிடாதீங்க அப்பு! அம்புட்டித்தேன் சொல்வேன்.
// இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி என் சோலிய முடிசிடாதீங்க அப்பு! அம்புட்டித்தேன் சொல்வேன்...
அடப்பாவிகளா! இப்படியெல்லாம் படங்களைப் போட்டா எவந்தான் காதலிக்க மாட்டான்.
இரு இரு. உங்களை பாட்னா போலீஸ் கிட்டெ சொல்லுறேன்.... //
வாங்க சீனு :)
காதலிக்கத்தான் செய்யுங்களேன் :).என்ன ஆகிவிடப்போகுது ?
/*பேசாமல்
இருக்க மாட்டியா?
என்கிறாய்
விரல்களுக்கு
ஏது காதுகள் ?*/
கலக்கல்
/*ஒவ்வொரு முறையும்
சீக்கிரம் போகவேண்டும்
என்கிறாய்
நமது சீக்கிரம்
அவ்வளவு சீக்கிரமாய்
வருவதில்லை !*/
அனுபவம்
/*சொன்ன பதிலுக்காக
நீ கிள்ளிய இடத்தில்
காதல் கட்டிக்கொண்டதடி !*/
இதுவும் அருமை
/*நான் விட்டு விட்டு
சென்று விட்டால் என்ன
செய்வாய்?
ம்ம் கொலை செய்து
விடுவேன்
உன் காதலை !!
நீதான் என் காதல்
அப்படியென்றால்..?*/
இதுவும்...
உங்கள் காதல் பாசியில் வழுக்கி விழுந்த அப்பெண் யாரோ?
வாங்க ப்ரியன் ,
நன்றி ஆழமான ரசிப்புக்காக !!
//உங்கள் காதல் பாசியில் வழுக்கி விழுந்த அப்பெண் யாரோ? //
காதல் பாசியா வழுக்கி விழ ? :)
நன்றாக இருக்கிறது உவமானம்.
wow ..! அட நீங்களா?
ஒவ்வொரு முறையும் நான்
அழகான கவிதைகளைப்
பார்க்கிறேன்..
இருப்பினும்.. உங்கள்.. சிந்தனைகள்
உங்கள் கவிதைகளைவிட
மிக அழகாக இருக்கின்றன..!
இப்பத்தான் புரிகிறது..
"காதல்"
:-)
நேசமுடன்..
-நித்தியா
//இருப்பினும்.. உங்கள்.. சிந்தனைகள்
உங்கள் கவிதைகளைவிட
மிக அழகாக இருக்கின்றன..!//
நன்றி நித்தியா :)
// இப்பத்தான் புரிகிறது..
"காதல்"
:-) //
'தீக்குள் விரலை வைத்தால் ' தெரிய அனுபவம் தேவையா நித்தியா ?? :))
அருமையான கவிதைகள்.
அழகான படங்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
துபாய் ராஜா.
//அருமையான கவிதைகள்.
அழகான படங்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
துபாய் ராஜா. //
வாங்க துபாய்ராஜா ! :)
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :)
இரட்டைக் கவிதைகள்.
படங்களையும் சேர்த்துச் சொன்னேன்!
சிலநேரங்களில்
செவிகள் கூட செவிடாய்ப் போகும்
அவள் விழி பேசும்போது!
// இரட்டைக் கவிதைகள்.
படங்களையும் சேர்த்துச் சொன்னேன்!
சிலநேரங்களில்
செவிகள் கூட செவிடாய்ப் போகும்
அவள் விழி பேசும்போது! //
வாங்க நாகு!
நன்றி !
// செவிகள் செவிடாகும் விழிமொழியால்//
:)) அருமை
போட்டோ எல்லாம் எங்க புடிக்கறீங்க...சூப்பர்..
வாங்க ரவி :)
நன்றி ! எல்லாம் வலையில இருந்துதான் :)
அருமையான அனுபவங்கள்!
படங்கள் மிக அருமை!
மொனமே மொழியாகும்போது விழிகள் அல்லவா பேசும்!
//நீ கிள்ளிய இடத்தில்
காதல் கட்டிக்கொண்டதடி //
ரத்தத்திலேயே உம்ம காதல் ஒன்றி விட்டது போலிருக்கே!
வாங்க சிபி ! :)
நன்றி பல !
//ரத்தத்திலேயே உம்ம காதல் ஒன்றி விட்டது போலிருக்கே! //
ரத்தத்திலேயே காதலும் காதல் சார்ந்தவைகளும் ( குறும்பு உட்பட :) இருக்கிறதே ! உங்களை விடவா சிபி ? ;)
வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது! :)
//Mappillai said...
கலக்கிட்ட மாமூ........
ஏன் திருடுகிறாய் மாமூ........//
வாங்க மாப்ளே :))
நிரம்ப சந்தோஷம்:)
Hi Naveen
The poem is simply superb.I like your style of narration.
வாங்க சுபா,
நன்றி . வருகைகும் தருகைக்கும் :)
தங்களையும் ஆறு பதிவு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்..
பங்கு பெறவும்...
லிவிங் ஸ்மைல்..
//Umanath said...
kalakal thala //
வாங்க உமானாத் ! :)
நன்றி !
நான் தல எல்லாம் இல்லைங்க ! :))
//லிவிங் ஸ்மைல் said...
தங்களையும் ஆறு பதிவு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்..
பங்கு பெறவும்...//
வாங்க லிவிங்க ஸ்மைல் :) நன்றி !பங்குபெறுகிறேன் :))
உங்கள் வலைப்பூவில் காதல் அழுத்தமண்டலம் உருவானதாக "இன்றைய வானிலையில்" ஒரு பெண் தலையைத் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னாள்! வந்து பார்த்தால் உண்மை தானென்று தெரிகிறது!
//சேதுக்கரசி said...
உங்கள் வலைப்பூவில் காதல் அழுத்தமண்டலம் உருவானதாக "இன்றைய வானிலையில்" ஒரு பெண் தலையைத் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னாள்! வந்து பார்த்தால் உண்மை தானென்று தெரிகிறது! //
வாங்க சேதுக்கரசி ! :)யாரந்தப்பெண்?? எனக்கும் காட்டுங்கள்:))
Very Nice....
Aana earkanave engayo padicha mathiriya irukku...
//Vignesh K said...
Very Nice....
Aana earkanave engayo padicha mathiriya irukku...//
வாங்க விக்னேஷ் :)))
மிக்க நன்றி :)) ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கா? இதை எழுதி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன விக்னேஷ் :))) ஒருவேளை எப்போதோ இங்கே கூட படித்திருக்ககூடும் :))))
// பேசாமல்
இருக்க மாட்டியா?
என்கிறாய்
விரல்களுக்கு
ஏது காதுகள் ? //
மிக அருமை :)
avan ethanai murai sonnalum ketpathilai en uthadukalai iramakka marappathillai
கருத்துரையிடுக