Thursday, November 24, 2005

ஒரு கோப்பை பீர்

“ டேய் ஒவ்வொரு சொட்டும் தேன் மதிரி இருக்கும்டா !! “ என் நண்பன் ஜெகன் கூறுவதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் காலேஜில் சேர்ந்திருந்தேன். ஜெகன் என் ரூம் மேட்.. நான் அப்பொழுது பார்க்க மொடாக்குடிகாரன் மாதிரி தோற்றமளித்தாலும் அதிகபட்சமாக டீ தான் குடித்திருந்தேன். ஆனால் யாரும் என்னை நம்ப மறுத்தனர். சில பல நாட்களில் என் கூற்றை ஏற்றுக்கொண்டு “ ஆகாவளி ” என செல்ல பெயரும் கொடுத்தனர் என் நண்பர் குழாம்.

எங்கள் hostelல் ஒவ்வொரு சனிக்கிழமையும் free night. அன்று மட்டும் நாங்கள் ஹோட்டலில் சாப்பிடவேண்டும். மற்ற நாட்களில் “ விதியே “ என ஹாஸ்டல் சாப்பாட்டை தான் உள்ளே தள்ளவேண்டும். சனிக்கிழமை காலையில் இருந்தே
“ குடிமக்கள் ” பல கனவுகளில் மிதக்க ஆரம்பித்து விடுவார்கள். கூட சாப்பிடும்போது “ என்னடா குண்டா ( அடியேன்தான்! ) உனக்கு என்ன பீர் ஆர்டர் பண்ணட்டும்? “ என நக்கலாகக் கேட்டு கலாய்ப்பது வழக்கம். ஒரு பீரை உள்ளே தள்ளிவிட்டாலோ அப்பா! ஆட்டம் தாங்காது. நானுண்டு என் பட்டர் சிக்கன் உண்டு என நான் இவர்களின் ஆட்டங்களை ரசித்திருப்பேன். தவிர அவர்களின் side dish களையும் கருமமே கண்ணாக உள்ளே தள்ளிக்கொண்டு இருப்பேன்.

குடிகாரர்களின் குழாமில் நான் குடிக்காமல் இருப்பதால் எனக்கு கணக்குப்பிள்ளை பதவியும் கிடைத்தது. ( மப்பில் அவர்களுக்கு பில் சரிபார்க்கத்தெரியாதாம் !! ). இவ்வாறு அமைதியாக சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கையில் நான் கேட்ட ஒரேயொரு கேள்வி மாற்றிவிட்டது. தெரியாத்தனமாக என் ரூம் மேட் ஜெகனிடம் “ ஏண்டா இந்த பீர் எப்படி இருக்கும் ? “ கேட்டதுக்குதான் ஜெகன் முதல் பாராவில் சொல்லிக்கொண்டிருந்தான்.

என் கேள்வி என் நண்பர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்து விட்டது. அவ்வளவுதான் “ கொலகொலையா முந்திரிக்கா “ ரேங்சுக்கு என்னைச்சுற்றி உட்கார்ந்து கொண்டு விளக்கம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் யாரிடமாவது Engineering Mechanics ல் doubt கேட்டிருந்தால் ‘தெரித்து’ ஓடியிருப்பார்கள். பல விளக்கங்கள் சொல்லி குருடனுக்கு யானையைப் பற்றி விளக்குவது போல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
“ சரி குண்டனுக்கு பீரை டேஸ்ட் செய்ய ஆசை வந்துவிட்டது “ நண்பர்கள் declare செய்தார்கள். “ ஐய்யையோ ! டேய் டேய் அதெல்லாம் ஒன்னும் இல்ல ! சும்மாதான் கேட்டேன் !” என் கூக்குரல் காற்றில் கரைந்துபோனது.

“ சரி இந்தவாரம் சனிக்கிழமை குண்டனுக்கு opening ceremony பண்ணிடுவோமா? “ பீர் பாட்டில் மூடியைப்பார்த்தாலே மப்பாகிபோகும் ஹரி கேட்டான்.
“ சே சே சும்மாயிருங்கடா குண்டனுக்கு வேண்டாம் !” இது ஜெகன். “ ஆகா என்னதான் இருந்தாலும் என் ரூம் மேட் தான் என்னை சரியா புரிஞ்சு இருக்கான் !” என்ற நன்றிப்பெருக்கோடு ஜெகனை நான் பார்க்க ஜெகன் தொடர்ந்தான்.
“குண்டன் என்ன சும்மவா என் ரூம் மேட்..ஆப்ப சோப்பையான நாளிலேயா அவனுக்கு மலையேற ( வேறென்ன குடிக்கதான்! ) கத்து தர்றது ? அதான் ரெண்டு வாரத்துல New Year வருதே. அன்னிக்கு வச்சுக்குவோம். வருச ஆரம்பத்துல பீரை உள்ள தள்னாதான் வருசம் முழுசும் தள்ளுவான்“ .
' ஆஹா என்ன ஒரு சிந்தனை. அட ரூம் மேட் கவுத்துட்டயேடா! ' விதியை நொந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். ஜெகனின் இந்த தீர்மானம் பலத்த கரவொலிகளுக்கு நடுவே நிறைவேறியது.

அடுத்து வந்த இரு வாரங்களும் எனக்கு First night க்கு செல்லும் பெண்ணுக்கு நடக்கும் உபதேசம் போல பல அனுபவ குடிநண்பர்களிடமிருந்து மனாவாரியாக Advise கள் கிடைத்தன.

“ மாப்ளே ! மூடியைத் திறந்தோடனபொங்கிவர நுரையை அப்படியே நுங்கு உறிஞ்சறமாதிரி உறிஞ்சுனேன்னு வையி. அதாண்டா டேஸ்டே ! “ இது ரியாஸ்.

“ டேய் குண்டா பீரை open பண்ணினோடயே ஒரே மூச்சுல பாட்டிலை காலி பண்ணினாதான் அது பீரு இல்லைனா அது வெறும் மோரு ! “ இது ஐந்து பாட்டில் பீர் அடிச்சாலும் அசராத ராஜேஷ்.

“ பீரும் காதலும் ஒன்னுதான் மச்சி. பீரையும் காதலையும் ‘ பட் ‘ ன்னு open பண்ணணும். இல்லேன்னா பொங்கிடும் “ இது காதல் மன்னன் அசோக்.

“ பீர் அடிச்சுட்டு பாட்டிலை கவுத்துடா நீ கவுந்துடாதே! அப்புறம் உன்னய தூக்க ‘ பொக்லேன் ’ தான் வரணும் “ பயமுறுத்தினான் ரவி.

இப்படியாக அய்யனாருக்கு நேர்ந்துவிட்ட மஞ்சள் தெளித்த ஆடு மாதிரி தயார் செய்யப்பட்டேன்.

ஒருவழியாக அந்த நாளும் வந்தது. Bar ல் எனக்கு இருமருங்கிலும் பீர் அடித்து கொட்டை போட்ட அனுபவஸ்தர்கள் அமர்ந்திருந்தனர். எனக்கு ஒரு பாட்டில் பீர் ஆர்டர் செய்யப்பட்டது.எனக்கு முன் ஒரு கோப்பையில் பீர். பீருடன் கோப்பையைப் பார்க்க அழகாகதான் இருந்தது. மீன் தொட்டியில் aerator போட்டால் வரும் குமிழிகளைப் போல் சும்மாவே வந்துகொண்டு இருந்தது. பொன்னிறத்தில் பீர் என்னைப்பார்த்து கண்ணடிதுக் கொண்டிருந்தது.

“ மாப்ளே ‘ Cheers ! “ சொன்னதுக்கப்புறம் பீரை sip பண்ணிட்டுதான் கீழே வக்கனும் .அது தான் ! Party manners “ என் ரூம் மேட் ஜெகன் என் காதுக்குள் கிசுகிசுத்தான்.

“ இவ்ளோ நாளா நம்ம class mate டா இருந்த குண்டன் இன்னில இருந்து Glass mate ஆய்ட்டான். அவனுக்கு ஒரு ‘ ஓ ‘ போட்டு Cheers சொல்லுங்கடா ! “

“ Cheers ! “

பல கோப்பைகள் என் கோப்பையை முத்தமிட்டுச்சென்றன. வெட்கத்துடன் கோப்பையை sip செய்தேன். “ Yea!! “ நண்பர்கள் ஆர்ப்பரித்தனர். என் முகம் பச்சைப் புளியங்காயை மென்றவன் போல் ஆனது.
“ என்னடா இப்படி இருக்கு ! “ பரிதாபமாக கேட்டவன் வாயில் சூடான கோழிக்கால் தினிக்கப்பட்டது.

“ மச்சி ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும் ! போக போக பாரேன் சும்மா தூக்கிடும் ! “ அனுபவஸ்தவர்கள் ஆசுவாசப்படுத்தினார்கள்.

கசப்பும் துவர்ப்பும் சேர்ந்தமாதிரி ஒரு சுவை எப்படித்தான் இதை குடிக்கிறார்களோ !!! ஐயகோ மாட்டிக்கொண்டேனே!! அதன் மணம் வேறு என் குடலைப் புரட்டியது. ஒரு ப்ளேட் சிக்கன் 65 காலி செய்தேன்.

“ டேய் குண்டனை அடக்கு. டாய் பீரையும் சேர்த்து உள்ள தள்ளு! எஸ்கேப் ஆகாதே !! ஆங்காங்கே குரல்கள் எழுந்தன.

சரி ஆவது ஆகட்டும் என ஒரே மூச்சில் முக்கால் mug கை காலி செய்தேன்.
“ அவ்வளவுதான் மாப்ளே common you can make it !!!” எதோ ஒரே ஓவரில் ஆறு sixers அடித்த Batsman ரேஞ்சுக்கு எனக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. அனைத்து பாராட்டுகளையும் century அடித்த சச்சின் போல தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொண்டேன்.

இரண்டே நிமிடங்கள்தான் என் முகத்தை புன்னகை தவழ வைத்துக்கொண்டிருக்க முடிந்தது. அதன் பின் எல்லாம் முடிந்தது.பீர் தன் வேலையைக் காட்டத்தொடங்கியது. Automatic காக என் முகம் விளக்கெண்ணெய் குடித்தவன் போல் ஆகியது. மானாவாரியாக ஏப்பம் வரத்தொடங்கியது. ஏப்பமெல்லம் பீர் நாற்றம் !!! .குடலைப் புரட்டியது. French Fries சும் Thangri kabab களும் கூட என்னைக்காப்பற்ற முடியவில்லை. இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது. ‘ தேன் மாதிரி இருக்கும்னு சொல்லி என்னைக் கவுத்திட்டீங்களேடா !!! ‘
“ எங்கேடா டாய்லெட் !!!” அலறிக்கொண்டே ஓடினேன்.16 comments:

டி ராஜ்/ DRaj said...

//குடிகாரர்களின் குழாமில் நான் குடிக்காமல் இருப்பதால் எனக்கு கணக்குப்பிள்ளை பதவியும் கிடைத்தது.//
அட, எல்லா காலேஜுலயும் அப்படித்தானா ;)

Naveen Prakash said...

ஆமாங்க ராஜ்.நீங்களும் கணக்குப்பிள்ளையா? :)

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

Marsh said...

"Naveeeeen"...."Naveeeeen"
ன்னு நான் கூப்பிட கூப்பிட,
அந்த Naveen,பீர் நுரையா பொங்கி வழிந்து ஒழிந்து போனது அன்னிக்கு தான்......
-மார்ஷ்

Anonymous said...

Simply superbbbbbbbbbb!,

Ovuoru manitharukulla olinthikitiruka thirammaiya mattravaridam sonnal than ella visayamum puriyum.

ithu Ovuoru india kudimaganum therunchikunum, Appa than naadu muneramudiyum.

ANNIYAN

Naveen Prakash said...

மார்ஷ் என்ன சொல்ல வர்றே?? :))

Naveen Prakash said...

வாங்க அந்நியன் :) நாடு முன்னேற அளவுக்கெல்லாம் நம்ம கதை இல்லைங்க :)

Sivaji said...

machi ne etha col ma

Anonymous said...

Dai naveen,

Nee beerai YESTERDAY qtithavan
Nee Naveenprakash Blogger TODAY write chiydavan,..keep continue all the wishes.

rafi.

riaz said...

Dai gundu!!!!!!!!!!!!

yaenda manaththa vankurae

Mappilai

நவீன் ப்ரகாஷ் said...

//Sivaji said...
machi ne etha col ma //

வாங்க சிவாஜி :)))
நான் ஐஐடி ன்னு சொல்லிக்க ஆசைதான் ஆனா இல்லையே என்ன பண்ணுவேன் ;)))))))))

நவீன் ப்ரகாஷ் said...

//Dai naveen,

Nee beerai YESTERDAY qtithavan
Nee Naveenprakash Blogger TODAY write chiydavan,..keep continue all the wishes.

rafi. //

வாடா Rafi :)))
என்னடா சும்மா கமெண்லயே கலக்குறே??;)))) ரொம்ப தேங்ஸ்டா !!!!))))

நவீன் ப்ரகாஷ் said...

//riaz said...
Dai gundu!!!!!!!!!!!!

yaenda manaththa vankurae

Mappilai //

வாடா மாப்ளே!! :)))))))))))
அட நீயெல்லாம் என் ப்ளாக் பக்கம் ஒதுங்கறியா?? :)))) மாப்ளே என்ன இப்படி சொல்லீட்டே ?? நான் மானத்தி வாங்கறனா?? ஹஹஹஹ அடப்பாவி சரி சரி லூஸ்ல விடு! இதெல்லாம் வரலாறு மாப்ளே !!!:))))))

sudar mani said...

o.k. Friend,

now ? u continue? .....

நவீன் ப்ரகாஷ் said...

//sudar mani said...

o.k. Friend,

now ? u continue? .....//

welcom sudar.. :))
No ma... :)))

Cuba said...

paditha enna "இந்த பீர் எப்படி இருக்கும் ?" enra questionku answer kidaithu vittathu. Super

நவீன் ப்ரகாஷ் said...

// Cuba said...

paditha enna "இந்த பீர் எப்படி இருக்கும் ?" enra questionku answer kidaithu vittathu. Super//

:))) hahahha...