புதன், டிசம்பர் 05, 2007

நட்போடு காதலித்து...


அனைவரிடமும்
நட்புகொள்ள
முடியும்
ஆனால்
உன்னிடம் மட்டும் தான்
காதல்
கொள்ளமுடியும்
தெரிந்துகொள்ளடி...

காதலித்தால்
நம் நட்பு சாகும் என்கிறாய்
சாகும் வரை நட்போடு
இருக்கத்தான் உன்னைக்
காதலிக்கிறேன்
உணர்ந்து கொள்ளடி..
உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?
நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்நண்பனே காதலனாக
முடியாது என்கிறாய் நீ
காதல் சொல்ல வருபவன்
நண்பனாகும் போது
நட்போடு வருபவன்
காதலனாக முடியாதா என்ன?

எனக்கு நீ எப்பொழுதுமே
நண்பனாக வேண்டும்
என்கிறாய்
எனக்கு நீ எப்பொழுதுமே
நட்பான மனைவியாக
வேண்டும் என்றுதான்
சொல்கிறேன்
நான்..

நான் பிடிவாதக்காரி
என்கிறாய்
எனக்குப்பிடித்த..
என்னைப் பிடித்த..
வாதக்காரி நீ...நட்பைதான் நான்
காதலிக்கிறேன்
என்கிறாய்
காதலிடம்
நட்பாய்
இருக்கிறேன் நான்
என் காதல் நீஎல்லாரும் எனக்கு
ஒன்றுதான் என்கிறாய்
எனக்கும் காதலி
நீ ஒன்று மட்டும்தான்நட்பு எல்லாவற்றையும்
கொடுக்கும்
காதலைத்தவிர...
காதல் எல்லாவற்றையும்
கொடுக்கும்
நட்பையும் சேர்த்து
தெரியுமா??நான்
நானாக
இருக்க
வைத்தது
நட்பு...
நான்
நீயாக
உணரவைத்தது
காதல்..


59 கருத்துகள்:

Divya சொன்னது…

கவிஞரே கவிதை வரிகள் அனைத்தும் அருமை!

நட்பையும், காதலையும் பிரித்துப்பார்காமல்.......நட்பும் காதலாகலாம் என்று அழுத்தி உணர்த்துகிறது உங்கள் கவிதை!

பாராட்டுக்கள் நவீன்!

Divya சொன்னது…

\\காதலித்தால்
நம் நட்பு சாகும் என்கிறாய்
சாகும் வரை நட்போடு
இருக்கத்தான் உன்னைக்
காதலிக்கிறேன்
உணர்ந்து கொள்ளடி..\\

காதலும் நட்ப்பில் ஒருவகையா??

Divya சொன்னது…

\\உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?\\

ஆஹா இந்த வரி சூப்பராயிருக்குதே!
ஈர்க்கும் வகையில் எதுவுமே செய்யாமல், அவள் அவளாக இருந்த போது அவள் மேல் ஈர்க்கின்றது தான் காதல்!! வாவ்!

Divya சொன்னது…

\\நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்\\

காதலில்லாத ஆன் பெண் நட்பே இருக்க முடியாதா??

Divya சொன்னது…

\\நான்
நானாக
இருக்க
வைத்தது
நட்பு...
நான்
நீயாக
உணரவைத்தது
காதல்..\

சும்மா நச்சுன்னு இருக்குது இந்த வரிகள்!! அசத்தல் வரிகள் கவிஞரே!!

இராம்/Raam சொன்னது…

நவீன்,


கவிதைகள் வழக்கம் போலே எல்லாம் நன்றாக இருந்தன... :)

ஒப்பிட்டு முரண்க்கு அறிவுமதியின் 'நட்புக்காலம்' மனதில் வந்ததை தவிர்க்க முடியவில்லை.... :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இராம்/Raam said...
நவீன்,


கவிதைகள் வழக்கம் போலே எல்லாம் நன்றாக இருந்தன... :)

ஒப்பிட்டு முரண்க்கு அறிவுமதியின் 'நட்புக்காலம்' மனதில் வந்ததை தவிர்க்க முடியவில்லை.... :)//

வாங்க ராம் :)))
மிக்க நன்றி ராம் :))
கவிஞர் அறிவுமதியின் நட்புகாலம் நான் மிகவும் ரசிக்கும் கவிதை ... அங்கு நட்பு முதன்மைபடுத்தப்படுகிறது.. நான் நட்பினால் உருவாகும் காதலைச் சொல்ல முயற்சித்திருக்கிறேன்... :)))))

எழில்பாரதி சொன்னது…

கவிதைகள் அழகாக இருக்கு....
பட‌ங்க‌ளும் அருமை!!!!

//நான்
நானாக
இருக்க
வைத்தது
நட்பு...
நான்
நீயாக
உணரவைத்தது
காதல்..//


அருமையான‌ வ‌ரிக‌ள்!!!!

பெயரில்லா சொன்னது…

Naveen first time am coming... realyyy superbb... love in friendship theme is lovable... keep it up...

- Gloriya

யாழ்_அகத்தியன் சொன்னது…

"""உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?"""

கவிதைகள் அழகாக இருக்கு
வாழ்த்துக்கள்

சேதுக்கரசி சொன்னது…

//நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்//

சூப்பர்! :-) ரொம்ப நாளாச்சோ பதிவு போட்டு?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
கவிஞரே கவிதை வரிகள் அனைத்தும் அருமை!

நட்பையும், காதலையும் பிரித்துப்பார்காமல்.......நட்பும் காதலாகலாம் என்று அழுத்தி உணர்த்துகிறது உங்கள் கவிதை!

பாராட்டுக்கள் நவீன்!//

வாங்க திவ்யா :)))
ஆம் நட்பும் காதலானால் மேலும் அழகாகும் இல்லையா? மிக்க நன்றி :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\காதலித்தால்
நம் நட்பு சாகும் என்கிறாய்
சாகும் வரை நட்போடு
இருக்கத்தான் உன்னைக்
காதலிக்கிறேன்
உணர்ந்து கொள்ளடி..\\

காதலும் நட்ப்பில் ஒருவகையா??//

ம்ம்ம் இருக்கலாம் திவ்யா.... :))) நட்பான காதல் ஒரு சுகம் இல்லையா?

சுநந்தா சொன்னது…

காதலால் நட்பு வரலாம்
நட்பால் காதல் வராது..
நட்பினால் காதல்
வந்தது என்றால்
முதலில் வந்தது
காதலே அன்றி
நட்பாகவே
இருந்திருக்காது
எவ்வளவு அழகு
வரிகளைப்போட்டு
நவீன் கவிதை
சொல்லி இருப்பினும்
காதல் காதல் தான்...
நட்பு நட்பு தான்.

:-):-)வாழ்த்துக்கள் நவீன்.

Unknown சொன்னது…

//நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்//

கலக்கல் நவீன்.... மிகவும் ரசித்து படித்தேன் ...

Creativity சொன்னது…

hi gundz paravailla povoda serntha narum mankum rathai nirupichutai, enna puriyallaya nee ennoda frndunu sollurathuku intha poovuku remba perumaya iruku gundz

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?\\

ஆஹா இந்த வரி சூப்பராயிருக்குதே!
ஈர்க்கும் வகையில் எதுவுமே செய்யாமல், அவள் அவளாக இருந்த போது அவள் மேல் ஈர்க்கின்றது தான் காதல்!! வாவ்!//

ஆம் திவ்யா :))))
ஈர்ப்புகள் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது... அவள் அவளாக இருக்கும் போது அழகாக இருந்ததால் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லவா ?? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்\\

காதலில்லாத ஆன் பெண் நட்பே இருக்க முடியாதா??//

திவ்யா :)))
இல்லாம ஏன் ??? காதலில்லாத நட்பு இருக்கிறதுதான் ... நட்பான காதல் என்பது அவளை அவளாகவே நேசிப்பது ... ம்ம்ம்ம் காதல் தோழின்னு சொல்லலாம்....;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\நான்
நானாக
இருக்க
வைத்தது
நட்பு...
நான்
நீயாக
உணரவைத்தது
காதல்..\

சும்மா நச்சுன்னு இருக்குது இந்த வரிகள்!! அசத்தல் வரிகள் கவிஞரே!!//

மிக்க மகிழ்ச்சி திவ்யா :)))
அழகான வருகைக்கும்...
நேசமான ரசிப்புக்கும்...
நட்பான விமர்சனத்திற்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில் said...
கவிதைகள் அழகாக இருக்கு....
பட‌ங்க‌ளும் அருமை!!!!

//நான்
நானாக
இருக்க
வைத்தது
நட்பு...
நான்
நீயாக
உணரவைத்தது
காதல்..//


அருமையான‌ வ‌ரிக‌ள்!!!!//

வாங்க எழில் :))))
மிக்க நன்றி எழில்.. நட்பான தருகைக்கு...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
Naveen first time am coming... realyyy superbb... love in friendship theme is lovable... keep it up...

- Gloriya//

வாங்க க்ளோரியா :)))
ஆஹா என்ன இப்படி சொல்லிட்டீங்க... மிக்க நன்றி.... உங்கள் ஊக்கமான வரிகள் எனக்கு ஒரு டானிக்.. :)))

பெயரில்லா சொன்னது…

புகைப்படமெல்லாம் அருமையா இருக்கு. கவிதையெல்லாம் மாக்காத்தனமாஇருக்கு.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேதுக்கரசி said...
//நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்//

சூப்பர்! :-) ரொம்ப நாளாச்சோ பதிவு போட்டு?//

வாருங்கள் சேதுக்கரசி :)))
எப்படி இருக்கிறீர்கள்?? நீண்ட நாட்களாக வரவிலையே நீங்கள்?? நான் போன கூட ஒரு கவிதை எழுதியிருகிறேனே... படிக்கவில்லையா?? :)))

தங்கள் வருகையும் தருகையும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Nilakkaalam said...
காதலால் நட்பு வரலாம்
நட்பால் காதல் வராது..

வருக நிலா :)))))
உங்கள் கருத்தினில் நான் முரண்படுகின்றேன் நிலா ...காதலால் நட்பு வந்தால் ஏன் நட்பால் காதல் வராது ?? எல்லா நிகழ்வுகளுமே ஒரு cyclic தானே நிலா???

//நட்பினால் காதல்
வந்தது என்றால்
முதலில் வந்தது
காதலே அன்றி
நட்பாகவே
இருந்திருக்காது//

நிலா மீண்டும் நான் முரண்படுகின்றேன்..
பார்த்த உடனே வருவது காதலாகத்தான் இருக்க வேண்டுமா ?? இனக்கவச்சியாகக் கூட இருக்கலாம் அல்லவா?? நட்பாய் பழக ஆரம்பித்து நன்கு புரிந்து கொண்டு நட்பாய் இருந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இருக்கும் போது ஏற்படும் காதல் தவறா??

//எவ்வளவு அழகு
வரிகளைப்போட்டு
நவீன் கவிதை
சொல்லி இருப்பினும்
காதல் காதல் தான்...
நட்பு நட்பு தான்.//

நிலா :))) நான் ஏதும் உயர்வு நவிர்ச்சியை என் கவிதைகளில் பயன்படுத்துவதே இல்லையே ... சாதாரண எளிய தமிழ் தானே உபயோகிக்கிறேன் ?? :)))

நட்பு நட்புதான்.. காதல் காதல் தான் நிலா... ஒரு நட்பு காதலாக பரிணாம வளர்ச்சியடைவதைத்தான் நான் இங்கே சொல்லியிருக்கிறேன் ... :))))

//:-):-)வாழ்த்துக்கள் நவீன்.//

மிக்க நன்றி நிலா... வருகைகும் அழகான விமர்சனத்திற்கும் ...

ஸ்ரீ சொன்னது…

//
நான் பிடிவாதக்காரி
என்கிறாய்
எனக்குப்பிடித்த..
என்னைப் பிடித்த..
வாதக்காரி நீ...
//

எல்லாம் அழகு என்றாலும் இது ரொம்ப அழகு :)

வாதம் தானே பெண்களுக்கு அழகே!!!

Info Sec சொன்னது…

நட்பு எல்லாவற்றையும்
கொடுக்கும்
காதலைத்தவிர...
காதல் எல்லாவற்றையும்
கொடுக்கும்
நட்பையும் சேர்த்து
தெரியுமா??

A different definition for love in friendship...
All the poems are really nice!!!!!
Enjoyed:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தேவ் | Dev said...
//நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்//

கலக்கல் நவீன்.... மிகவும் ரசித்து படித்தேன் ...//

வாங்க தேவ் :)))
நீண்ட நாட்களுக்குப்பின் ஆதலினாலில் தேவ் ... :))) மிக்க மகிழ்ச்சி தேவ்.. தருகையும் அசத்தல்... :)))

மங்களூர் சிவா சொன்னது…

நச்சுனு ஒரு கவிதை!!

Marutham சொன்னது…

AWESOME naveen !!

Arumayilum arumai..
"Oru pennukku, Kanavaridam oru nanbanai paarpadhai vida inimayana anubavam veredhilum irukaadhu !"

Kadhal natpil malarvadhu perum kutramum illai!

Kadhal ~ Malarum poovaipondradhu , malarum nerathil malarndhey theerum...
Engu epadi malara vendum endru naam kuripittu sola mudiyadhu ..

cheena (சீனா) சொன்னது…

நவீன், பவிதை அருமை - அதை விட அருமை தேடிப்பிடித்து சரியான படங்களை இணைத்தது.

நட்பா - காதலா - நட்புடன் காதலா - காதலுடன் கூடிய நட்பா - இர்ணடையும் பிரிக்க இயலுமா ? நட்பு வேறு காதல் வேறு - சொல்ல முடியுமா - மிக மெல்லிய கோடு அல்லவா ?

ம்ம்ம் அத்தனை வைர வரிகளும் அனுபவித்து எழுதப் பட்டிருக்கின்றன. நன்று

வாழ்த்துகள்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Creativity said...
hi gundz paravailla povoda serntha narum mankum rathai nirupichutai, enna puriyallaya nee ennoda frndunu sollurathuku intha poovuku remba perumaya iruku gundz//

வாடா மாறா :))))
அடிங்க.... என்ன நக்கலா?? ;))))) சரி சரி உனக்கு அதான் ஆசைன்னா இருந்துட்டு போகட்டுமே... பெருமைப்பட்டுகோடா... :)))) பூ மலரவே மாட்டீங்குதே என்ன விஷயம்?? :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//யாழ்_அகத்தியன் said...
"""உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?"""

கவிதைகள் அழகாக இருக்கு
வாழ்த்துக்கள்//

வாருங்கள் யாழ் அகத்தியன் :)))))
தவறாமல் தாங்கள் அளிக்கும் பின்னூட்டம் என் முன்னேற்றத்திற்கு காரணம்... மிக்க மகிழ்ச்சி வருகைக்கும் தருகைக்கும் .. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மடப்பயல் said...
புகைப்படமெல்லாம் அருமையா இருக்கு. கவிதையெல்லாம் மாக்காத்தனமாஇருக்கு.//

வாங்க மடப்பயல் :)))))
அட அதென்னாங்க மாக்காத்தனம் ?? :))) நன்றி வருகைக்கும்.. தருகைக்கும்.. :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸ்ரீ said...
//
நான் பிடிவாதக்காரி
என்கிறாய்
எனக்குப்பிடித்த..
என்னைப் பிடித்த..
வாதக்காரி நீ...
//

எல்லாம் அழகு என்றாலும் இது ரொம்ப அழகு :)//

வாங்க ஸ்ரீ :))))
அழகு உங்களின் பின்னூட்டமும் தான்.... :)))

//வாதம் தானே பெண்களுக்கு அழகே!!!//

ஆஹா பல வாத அனுபவம் இருக்கும் போல இருக்கே ஸ்ரீ ?? :))))))

மிக்க நன்றி ஸ்ரீ :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//subha said...
நட்பு எல்லாவற்றையும்
கொடுக்கும்
காதலைத்தவிர...
காதல் எல்லாவற்றையும்
கொடுக்கும்
நட்பையும் சேர்த்து
தெரியுமா??

A different definition for love in friendship...
All the poems are really nice!!!!!
Enjoyed:)//

வாங்க சுபா :)))
ரொம்ப என்ஜாய் பண்ணுனீங்களா ?? மிக்க மகிழ்ச்சி :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மங்களூர் சிவா said...
நச்சுனு ஒரு கவிதை!!//

வாங்க சிவா :)))
ரொம்ப நச்சுன்னு இருக்கு உங்க பின்னூட்டம்.. நன்றி :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Marutham said...
AWESOME naveen !!//

வாங்க மருதம் :)))

//Arumayilum arumai..
"Oru pennukku, Kanavaridam oru nanbanai paarpadhai vida inimayana anubavam veredhilum irukaadhu !" //

மிக்க நன்றி என் கருத்துக்களை மேலும் வலிமையோட வலியுறுத்தி கூறியமைக்கு...

//Kadhal natpil malarvadhu perum kutramum illai! //
ஆமாம்... :))))

//Kadhal ~ Malarum poovaipondradhu , malarum nerathil malarndhey theerum...
Engu epadi malara vendum endru naam kuripittu sola mudiyadhu ..//

மிகச்சரியாக கூறியிருக்கிறீர்கள் மருதம் ... அப்படி திட்டமிட்டு மலர காதல் ஒன்றும் planned project இல்லையே .. :)))

மிக்க மகிழ்ச்சி.. வருகைக்கும் அழகான தருகைக்கும் நன்றி !! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//cheena (சீனா) said...
நவீன், பவிதை அருமை - அதை விட அருமை தேடிப்பிடித்து சரியான படங்களை இணைத்தது.

நட்பா - காதலா - நட்புடன் காதலா - காதலுடன் கூடிய நட்பா - இர்ணடையும் பிரிக்க இயலுமா ? நட்பு வேறு காதல் வேறு - சொல்ல முடியுமா - மிக மெல்லிய கோடு அல்லவா ?

ம்ம்ம் அத்தனை வைர வரிகளும் அனுபவித்து எழுதப் பட்டிருக்கின்றன. நன்று

வாழ்த்துகள்//

வாருங்கள் சீனா :))))))
மிக்க மகிழ்ச்சி :)))) ஆமாம்...
நட்பினும் மெல்லிது காதல் அல்லவா ?? :))))
அட வைர வரிகளா?? :))))
அழகான விமர்சனத்திற்கு மிக்க நன்றி !! :))))

Rasiga சொன்னது…

நட்ப்பையும் காதலையும் பிரிப்பது மிக மெல்லிய கோடு தான் எனினும், அதனை தாண்டிவர நண்பன் தன் தோழியை வற்புறுத்துவது அபத்தமானது!

காதலை போன்றே, நட்பும் புனிதமானது!
நண்பன் என்றே மட்டும் கருதும் பெண்ணிடம் காதல் செய்ய வற்புறுத்துவது [ நியாயப்படுத்துவது] முறையாகுமா?? அந்த காதல் உணர்வு அவளுக்கும் இயல்பாக அல்லவா மலரவேண்டும்?

கவிதையின் கருத்துக்களுக்கு முரண்பட்டாலும்,
கவிதை வரிகளும், அதற்கு பொருத்தமான படங்களையும் மனமார பாராட்டுக்கிறேன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//rasiga said...
நட்ப்பையும் காதலையும் பிரிப்பது மிக மெல்லிய கோடு தான் எனினும், அதனை தாண்டிவர நண்பன் தன் தோழியை வற்புறுத்துவது அபத்தமானது!//

வாங்க ரசிகா :)))

ரசிகா இதில் அபத்தம் எங்கு வந்தது?
சொல்லப்படாத காதல் குடத்திலிட்ட விளக்குபோல... யாருக்குமே தெரியாது.. இதில் வற்புறுத்தல் இல்லை.. நட்பாய் இருப்பதால் நண்பனை காதலிக்கவே கூடாது என்ற எண்ணம் தவறு எனச் சொல்லி இருக்கிறேன்...

//காதலை போன்றே, நட்பும் புனிதமானது!
நண்பன் என்றே மட்டும் கருதும் பெண்ணிடம் காதல் செய்ய வற்புறுத்துவது [ நியாயப்படுத்துவது] முறையாகுமா?? அந்த காதல் உணர்வு அவளுக்கும் இயல்பாக அல்லவா மலரவேண்டும்?//

ரசிகா இங்கே எதில் வற்புறுத்தல் இருக்கிறது?? நட்பாய் இருப்பதால் நண்பன் மேல் காதல் கொள்வது பாவம் என நினைக்கும் பெண்ணின் மனநிலையை மாற்ற முயற்ச்சிக்கும் ஒரு காதலான தோழனின் பார்வையில் தான் கவிதையை கையாண்டிருக்கிறேன் ... :))) காதலை வலிய வரவழைக்க இங்கே முயற்சிக்கவில்லை... ஏற்கனவே இருக்கும் உணர்வை உணரச்செய்யதான் தோழன் முயற்சி செய்கிறான்... :))))

//கவிதையின் கருத்துக்களுக்கு முரண்பட்டாலும்,
கவிதை வரிகளும், அதற்கு பொருத்தமான படங்களையும் மனமார பாராட்டுக்கிறேன்.//

மிக்க மகிழ்ச்சி ரசிகா.. :)))
உங்களின் விரிவான விமர்சனத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகளுக்கும் தலைவணங்குகிறேன்... :))))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

தங்களின் வரிகளின் நான் என்றும் இரசித்துப்படிப்பவை ஆனால் இதுவரை தொடர்பு கொண்டதில்லை. நான் இரசிக்கும் பதிவேடுகளில் தங்களதும் ஒன்று. எனது சிறுமுயர்ச்சிகளைபற்றி தங்களின் கருத்துக்க்ளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

FunScribbler சொன்னது…

ரொம்ப சூப்பர்!!

Dreamzz சொன்னது…

kavidhai nachunu irukku!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
தங்களின் வரிகளின் நான் என்றும் இரசித்துப்படிப்பவை ஆனால் இதுவரை தொடர்பு கொண்டதில்லை. நான் இரசிக்கும் பதிவேடுகளில் தங்களதும் ஒன்று. எனது சிறுமுயர்ச்சிகளைபற்றி தங்களின் கருத்துக்க்ளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்//

வாருங்கள் சதிஷ் :)))
மிக்க நன்றி வருகைக்கு... உங்கள் முயற்சிகள் அருமை.. மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் ..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhmaagani said...
ரொம்ப சூப்பர்!!//

வாருங்கள் தமிழ் :)))
மிக்க நன்றி... சூப்பரான வருகைக்கு.. :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Dreamzz said...
kavidhai nachunu irukku!//

வாங்க ட்ரீம்ஸ் :))
' நச்' சென்ற தருகைக்கும் மிக்க நன்றி :)))

சிறில் அலெக்ஸ் சொன்னது…

கவிதை போட்டி அறிவிப்பு

புகுந்து ஆட அழைக்கிறேன்.

காஞ்சனை சொன்னது…

//நான்
நானாக
இருக்க
வைத்தது
நட்பு...
நான்
நீயாக
உணரவைத்தது
காதல்..//

அருமை.. :)

- சகாரா.

பெயரில்லா சொன்னது…

ur poems are very nice...some poems touched...keep on rocking....

Dayaa
http://dayaa.wordpress.com

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சிறில் அலெக்ஸ் said...
கவிதை போட்டி அறிவிப்பு

புகுந்து ஆட அழைக்கிறேன்.//

வாருங்கள் அலெக்ஸ் :))
கண்டிப்பாக வருகிறேன்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சகாரா said...
//நான்
நானாக
இருக்க
வைத்தது
நட்பு...
நான்
நீயாக
உணரவைத்தது
காதல்..//

அருமை.. :)

- சகாரா.//

வாருங்கள் சகாரா :))
பாலைவன சோலை உங்கள் விமர்சனம் ... :)) மிக்க நன்றி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Anonymous said...
ur poems are very nice...some poems touched...keep on rocking....

Dayaa
http://dayaa.wordpress.com//

வாருங்கள் தயா :)))
மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்./...

பெயரில்லா சொன்னது…

APPA KAVITHAIKAL ANAITHUM ENNAI NEKIZHA VAIKKIRATHU!!!

Cuba சொன்னது…

first time i am reading love in friendship but most of the poet's poem said about love at first sight. I agree with you. One can understand another through friendship then only love.
Miga arrumaiyana kavithai i enjoyed this lot.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Cuba said...

first time i am reading love in friendship but most of the poet's poem said about love at first sight. I agree with you. One can understand another through friendship then only love.
Miga arrumaiyana kavithai i enjoyed this lot.//

Thanks a lot Cuba..:)

பெயரில்லா சொன்னது…

Nivetha: A guy told me that he want to marry me...but dont love me... i told him that i want to be a best friend for him but he dont accept it...he told that the relationship between me and him must be a husband and wife relationship....when i read this poem then i think this is written for me by him...but he haven't any interest in writting poems...if he write a poem like this then definitely i will love him and marry him....really

பெயரில்லா சொன்னது…

A guy told me that he want to marry me but dont love me...but i told him to that i want to be a best friend for him,but he dont accept it...when i read this poem i feel this is for me written by him...but he dont know writting poems...if he write a poem like this then i will definitely love and marry him....what a beautiful lines... ONLY ONE QUESTION TO YOU PLS ANS IT: Is any girl like me in ur life...?

saran சொன்னது…

vanakam naveen,
na saran, natpin piragu kadhal sariya thavaranu sandhegam irundhadhu ivlo nal ! ana adhu evlo alagana anbunu unga kavidha mulama therinjukite .... xcellllllllllent sir .... great !

saran சொன்னது…

u r the best