வியாழன், டிசம்பர் 20, 2007

கொஞ்சம் காதலித்துத் தொலையேன்...ஏண்டா இப்படிக் காதலிச்சு என்
உயிரை வாங்கற..?
என அழகாக நீ
அலுத்துக்கொள்ளும்போது
என் உயிரை வாங்குவது
என்னவோ நீதான்...

எப்படி என்னை
உன்னுடன் கூட்டிபோவது
எனக்கேட்கிறாய்
நான் வேண்டுமானால்
உன் துப்பட்டாவுக்குள்
ஒளிந்துகொள்ளட்டுமா?


தாவணி கட்டினால்
இடுப்பு தெரியும்
கட்டமாட்டேன் என
ஏன் அடம் பிடிக்கிறாய்?
சரி விடு அப்போ
என்னையாவது
கட்டிக்கொள்
உன் இடுப்பை மறைத்துத்
தொலைக்கிறேன்

நீ எனக்குச் சேலை கட்டக்
கற்றுக்கொடுப்பதற்குள்
போதும் போதும்
என்றாகிவிடுகிறது போடா..
கட்ட ஆரம்பிப்பதற்குள்
என்னைக் கட்டிக்
கொல்கிறாய்...

எனக்கு கல்யாணம்
கட்டிக்கவே பிடிக்கலை
எனச் சொல்லிவிட்டு
சென்றால் எப்படி??
அப்படியென்றால்
என்னையாவது
கட்டிக்கொள்ளேண்டி ??

எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?

உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!


அட இவ்வளவு மென்மையான
மனசா உனக்கு என நிஜமாகவே
நான் கேட்டால் ஏண்டி
உடனே என்னை முறைத்துவிட்டு
மறைத்துக்கொள்கிறாய்???
நான் நெஜம்மா மனசைத்தான் கேட்டேன்
தெரியுமா ?


உன்னையெல்லாம்
எப்படி காதலித்துத்
தொலைத்தேன் ??
பாழாய்ப்போன மனம்
உன் பின்னே
ஒரு நாய்க்குட்டியைப் போல்
ஓடி என் உயிரை எடுக்கிறது...


நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறதுExcuse me !
என்னைக் கொஞ்சம்
கண்டுபிடித்துத்
தரமுடியுமா ?
உன் கண்ணுக்குள்
தான் எங்கோ
தொலைந்துபோனேன்
எத்தனை முறை
நீ கேட்டாலும் பதில்
சொல்ல அலுக்காத
கேள்வி ...
என்னை அவ்வளவு
பிடிச்சுருக்காடா..??
என்னைக் கட்டிகொள்
என நான் கேட்டது
என்னைக் காதலில்
கட்டிக் கொல் என்ற
அர்த்தத்தில் தான்...


போன ஜென்மத்தில்
நீ ஒரு கொள்ளைக்காரியாகத்தான்
இருந்திருக்க வேண்டும்
அடிக்கடி கொள்ளை
போகிறது என் மனம்
உன் சிரிப்பினால்..


உன் அழகே
அழகான உன்
சிந்தனைதான்
தெரியுமா?


உன்னைக் கட்டிகிறவ
கொடுத்து வச்சவடா என்கிறாய்
அந்தக்கொடுத்து வச்சவ
யாருன்னு தெரியணுமா ?
போய்க் கண்ணாடியிலே பாருடி
முட்டாளே...

63 கருத்துகள்:

Divya சொன்னது…

வழக்கம்போல் அழகான காதல் கவிதை கவிஞர் நவீன்! பாராட்டுக்கள்!!

Divya சொன்னது…

\\எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?\

அபாரம்! எப்படிங்க இப்படியெல்லாம் கற்பனை பண்ண முடியுது உங்களால் மட்டும்!
ரசித்தேன் இவ்வரிகளை!

Dreamzz சொன்னது…

//எனக்கு கல்யாணம்
கட்டிக்கவே பிடிக்கலை
எனச் சொல்லிவிட்டு
சென்றால் எப்படி??
அப்படியென்றால்
என்னையாவது
கட்டிக்கொள்ளேண்டி ??
//

superu!

Dreamzz சொன்னது…

//என்னைக் கட்டிகொள்
என நான் கேட்டது
என்னைக் காதலில்
கட்டிக் கொல் என்ற
அர்த்தத்தில் தான்...//
konnuteenga! ithu top!

ஜே கே | J K சொன்னது…

எல்லாமே சூப்பர்.

ஜே கே | J K சொன்னது…

//உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!//

வட்டி மட்டும் தானா, இல்ல வட்டி குட்டி போட்டு குட்டி மறுபடி வட்டி போட்டு அப்படி எதாவது நடக்குதா?...

எழில்பாரதி சொன்னது…

நவின் கலக்கிடிங்க போங்க!!!

கவிதைகள் அனைத்தும் அருமை!!!
அதிலும் இக்கவிதை மிக அருமை

"எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?"வாழ்த்துக‌ள்!!!!

இம்சை அரசி சொன்னது…

//உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!
//

simple interest or compound interest??? ;)))

இம்சை அரசி சொன்னது…

எப்படி இப்படியெல்லாம் உங்களுக்கு மட்டும் ஊற்றெடுக்குது???

எல்லாமே அட்டகாசம் :)))

இராம்/Raam சொன்னது…

அட்டகாசம் நவீன்.. :)

///
நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறது//

மிகவும் ரசித்த வரிகள்.... :)

புரட்சி தமிழன் சொன்னது…

//வட்டி மட்டும் தானா, இல்ல வட்டி குட்டி போட்டு குட்டி மறுபடி வட்டி போட்டு அப்படி எதாவது நடக்குதா?...
//
அட கந்துவட்டிப்பா அது ரொம்ம்ப அதிகமாக இருக்கும்.

கவிதை எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.

இது என்ன காதலின் ஆரம்பமா இல்லை முதிர்ச்சியா.

ரசிகன் சொன்னது…

// நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறது//

ஆஹா..சூப்பருங்க...

ரசிகன் சொன்னது…

இப்பத்தான் மொத முறை வர்ரேன் .. எல்லாமே தேன் துளிகள். இனி அடிக்கடி வந்து சுவைத்துட்டு போறேன்..

ரசிகன் சொன்னது…

// இம்சை அரசி said...

//உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!
//

simple interest or compound interest??? ;)))//

சந்தேகமே இல்லை .இது நம்ம இம்சை அரசிதான்..:))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
வழக்கம்போல் அழகான காதல் கவிதை கவிஞர் நவீன்! பாராட்டுக்கள்!!//

வாங்க திவ்யா :))
வழக்கம் போல் ?? :))) மிக்க மகிழ்ச்சி உங்கள் பாரட்டுகளுக்கு .. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?\

அபாரம்! எப்படிங்க இப்படியெல்லாம் கற்பனை பண்ண முடியுது உங்களால் மட்டும்!
ரசித்தேன் இவ்வரிகளை!//

வாங்க திவ்யா :))
அட அபாரம் எல்லாம் இல்லீங்க.. எல்லாம் உங்களைப்போன்ற ரசிகர்கள் கொடுக்கும் ஊக்கம் தான் ;)))மிக்க நன்றி திவ்யா :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Dreamzz said...
//எனக்கு கல்யாணம்
கட்டிக்கவே பிடிக்கலை
எனச் சொல்லிவிட்டு
சென்றால் எப்படி??
அப்படியென்றால்
என்னையாவது
கட்டிக்கொள்ளேண்டி ??
//

superu!//

வாங்க ட்ரீம்ஸ் :))
superu உங்க கமெண்டும் தான் ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Dreamzz said...
//என்னைக் கட்டிகொள்
என நான் கேட்டது
என்னைக் காதலில்
கட்டிக் கொல் என்ற
அர்த்தத்தில் தான்...//
konnuteenga! ithu top!//

வாங்க ட்ரீம்ஸ் :))
கொன்னுட்டீங்களா ?? :)))) ஹஹ்ஹஹ ரசித்தேன் நானும் :)) மிக்க நன்றி ட்ரீம்ஸ் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// J K said...
எல்லாமே சூப்பர்.//

வாங்க ஜேகே :))
எப்படி இருக்கீங்க ?? :)) ரொம்ப நன்றி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// J K said...
எல்லாமே சூப்பர்.//

வாங்க ஜேகே :))
எப்படி இருக்கீங்க ?? :)) ரொம்ப நன்றி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// J K said...
//உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!//

வட்டி மட்டும் தானா, இல்ல வட்டி குட்டி போட்டு குட்டி மறுபடி வட்டி போட்டு அப்படி எதாவது நடக்குதா?...//

வாங்க ஜேகே :)))
என்ன இது சந்தேகம் ?? :))) வட்டின்னாலே அது குட்டி போட்டுகிட்டு தானே இருக்கும் ?? ;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// எழில் said...
நவின் கலக்கிடிங்க போங்க!!!

கவிதைகள் அனைத்தும் அருமை!!!
அதிலும் இக்கவிதை மிக அருமை

"எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?"

வாழ்த்துக‌ள்!!!!//

வாங்க எழில் :))
அட கலக்கீட்டனா நான் ??;)))) அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க !!! மிக்க நன்றி எழில் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இம்சை அரசி said...
//உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!
//

simple interest or compound interest??? ;)))//

வாங்க இம்சை அரசி :)))
இப்படி இம்சைய கொடுக்கறதுக்குன்னே கேள்வி கேட்பீங்களா ?? எனக்கு இந்த intrest மேல எப்பவுமே intrest இருந்தது இல்லீங்க .. :)))) அப்படீங்க என்னானு கொஞ்சம் சொல்லீட்டு போங்களேன்... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இம்சை அரசி said...
எப்படி இப்படியெல்லாம் உங்களுக்கு மட்டும் ஊற்றெடுக்குது???

எல்லாமே அட்டகாசம் :)))//

வாங்க இம்சை அரசி :)))
அட அட அட என்ன இப்படி கேட்டு என்னைய நெளிய வைக்கிறீங்க ?? :)))) அதெல்லாம் எப்பவாச்சும் இப்படி ஊத்தெடுக்குங்க :)))
மிக்க நன்றி அரசி !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம்/Raam said...
அட்டகாசம் நவீன்.. :)

///
நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறது//

மிகவும் ரசித்த வரிகள்.... :)//

வாங்க ராம் :)))
எப்படிஉ இருக்கீங்க ?? :))) மிக்க நன்றி அழகான ரசிப்புக்கும் தவறாத வருகைக்கும் !! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// புரட்சி தமிழன் said...
//வட்டி மட்டும் தானா, இல்ல வட்டி குட்டி போட்டு குட்டி மறுபடி வட்டி போட்டு அப்படி எதாவது நடக்குதா?...
//
அட கந்துவட்டிப்பா அது ரொம்ம்ப அதிகமாக இருக்கும்.

கவிதை எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.

இது என்ன காதலின் ஆரம்பமா இல்லை முதிர்ச்சியா.//

வாங்க புரட்சித்தமிழன் :))))
அட கந்துவட்டியா ?? :)))) மிக நல்ல கற்பனைதான் போங்க .. :))

இது காதலின் முதிர்ச்சியான ஆரம்பம்.. ஆரம்பமான முதிர்ச்சி... எப்படி வேணும்னாலும் வச்சுக்கலாம்.. என்ன குழப்பமா இருக்கா ?? :)))) காதல்ல இதெல்லாம் சகஜம் தானுங்க தமிழன் ?? :))) மிக்க நன்றி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ரசிகன் said...
இப்பத்தான் மொத முறை வர்ரேன் .. எல்லாமே தேன் துளிகள். இனி அடிக்கடி வந்து சுவைத்துட்டு போறேன்..//

வாங்க ரசிகன் :)))
முதன் முறையா வாறீங்களா ?? :))) மிக்க மகிழ்ச்சி !! தேன் துளிகள் உங்கள் விமர்சனங்களும் தான் !! மிக்க நன்றி அடிக்கடி சுவைக்க வாருங்கள் !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ரசிகன் said...
// நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறது//

ஆஹா..சூப்பருங்க...//

வாங்க ரசிகன் :)))
மிக்க நன்றி :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ரசிகன் said...
// இம்சை அரசி said...

//உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!
//

simple interest or compound interest??? ;)))//

சந்தேகமே இல்லை .இது நம்ம இம்சை அரசிதான்..:))))//

அட இது இம்சை அரசிதான்னு அவ்ளோ உறுதியா சொல்லுறீங்களா ?? :))) நீங்கதானாம் இம்சை அரசி இது !! :)))

பெயரில்லா சொன்னது…

//உன்னையெல்லாம்
எப்படி காதலித்துத்
தொலைத்தேன் ??
பாழாய்ப்போன மனம்
உன் பின்னே
ஒரு நாய்க்குட்டியைப் போல்
ஓடி என் உயிரை எடுக்கிறது...
//
தபுசங்கர் இதே போன்றதொரு கவிதையை எழுதியிருக்கிறாரே ?

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//
நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறது
//
எப்படி உங்களால் மட்டும்!! :)

நிறைய எழுதுங்கள்... பாராட்டுக்கள்!!

Rasiga சொன்னது…

\\எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?\\

அபாரமான வரிகள்,
அழகான காதல் கவிதை,!
ரசித்தேன் ஒவ்வொரு வரிகளையும்,
பாராட்டுக்கள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// மரவண்டு-கணேஷ் said...
//உன்னையெல்லாம்
எப்படி காதலித்துத்
தொலைத்தேன் ??
பாழாய்ப்போன மனம்
உன் பின்னே
ஒரு நாய்க்குட்டியைப் போல்
ஓடி என் உயிரை எடுக்கிறது...
//
தபுசங்கர் இதே போன்றதொரு கவிதையை எழுதியிருக்கிறாரே ?//

வாருங்கள் மரவண்டு :))
அப்படியா என்னா? தெரியவில்லையே எனக்கு...நானும் அவரும் ஒரேமாதிரி சிந்தித்துவிட்டோம் போல இருக்கே .. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// sathish said...
//
நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறது
//
எப்படி உங்களால் மட்டும்!! :)

நிறைய எழுதுங்கள்... பாராட்டுக்கள்!!//

வாங்க சங்கர் :)))
அட என்ன என்னால் மட்டும் ??... நீங்கள் மட்டும் என்ன எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள் !!!
மிக்க நன்றி சங்கர் வருகைக்கும் மேலான தருகைக்கும்.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Rasiga said...
\\எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?\\

அபாரமான வரிகள்,
அழகான காதல் கவிதை,!
ரசித்தேன் ஒவ்வொரு வரிகளையும்,
பாராட்டுக்கள்.//

வாருங்கள் ரசிக்கா :)))
அட உங்களுக்கும் பிடித்துவிட்டவரிகளா அவைகள் ?? :)))
நான் மிகவும் ரசித்து எழுதினதுன் இதுதான் ரசிகா :))) மிக்க நன்றி ரசிகா.. அழகான ரசனைக்கு.. :))))

இராம்/Raam சொன்னது…

//மரவண்டு-கணேஷ் said...

//உன்னையெல்லாம்
எப்படி காதலித்துத்
தொலைத்தேன் ??
பாழாய்ப்போன மனம்
உன் பின்னே
ஒரு நாய்க்குட்டியைப் போல்
ஓடி என் உயிரை எடுக்கிறது...
//
தபுசங்கர் இதே போன்றதொரு கவிதையை எழுதியிருக்கிறாரே ?//தபூ சங்கரின் கவிதை:-

என்னுடையது என்று நினைத்துத்தான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்.
ஆனால்
முதல்முறை உன்னைப்பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஒடுகிறதே
இந்த மனசு.

கணேஷ்,

சங்கரின் ஒப்புமை வேறுவிதம் நவீனின் ஒப்புமை வேறுவிதமென நான் நினைக்கிறேன்... :) நவின் சரியா???

Rasiga சொன்னது…

\\ நவீன் ப்ரகாஷ் said...
// sathish said...
//
நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறது
//
எப்படி உங்களால் மட்டும்!! :)

நிறைய எழுதுங்கள்... பாராட்டுக்கள்!!//

வாங்க சங்கர் :)))
அட என்ன என்னால் மட்டும் ??... நீங்கள் மட்டும் என்ன எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள் !!!
மிக்க நன்றி சங்கர் வருகைக்கும் மேலான தருகைக்கும்.. :)))\

'சதீஷ்' என்ற பெயர் தங்களுக்கு 'சங்கராக' தெரிவது ஏனோ??

காதல் மயக்கம் கவிஞரையும் விட்டு வைக்கவில்லை போலும்.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//வாங்க சங்கர் :)))
அட என்ன என்னால் மட்டும் ??... நீங்கள் மட்டும் என்ன எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள் !!!
மிக்க நன்றி சங்கர் வருகைக்கும் மேலான தருகைக்கும்.. :)))
//

எனது பெயர் சதீஷ் என்று ஞாபகம் :)

பெயரில்லா சொன்னது…

நவீன்... கவிதை அழகா, பாவனா அழகான்னு பட்டிமன்றமே நடத்தலாம் :)

அருமையான காதல் ரசம்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம்/Raam said...

கணேஷ்,

சங்கரின் ஒப்புமை வேறுவிதம் நவீனின் ஒப்புமை வேறுவிதமென நான் நினைக்கிறேன்... :) நவின் சரியா???//

மிக்க நன்றி ராம் :))
தபூ சங்கரின் கவிதையையும் தந்ததற்கு மிக்க நன்றி...
நான் எப்போதோ படித்தது தான்... ஒப்புமை வேறுதான்..
என்ன கணேஷ் சொல்கிறீர்கள் ??? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Rasiga said...
'சதீஷ்' என்ற பெயர் தங்களுக்கு 'சங்கராக' தெரிவது ஏனோ??

காதல் மயக்கம் கவிஞரையும் விட்டு வைக்கவில்லை போலும்.//

வாங்க ரசிகா :)))

ஆகா வம்பிலே மாட்டிகிட்டேனா... ஏதோ ஒரு மயக்கம் ... தப்பா எழுதிவிட்டேன்.. மன்னிச்சு விடுங்களேன் ப்ளீஸ்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
//வாங்க சங்கர் :)))
அட என்ன என்னால் மட்டும் ??... நீங்கள் மட்டும் என்ன எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள் !!!
மிக்க நன்றி சங்கர் வருகைக்கும் மேலான தருகைக்கும்.. :)))
//

எனது பெயர் சதீஷ் என்று ஞாபகம் :)//

வாங்க சதீஷ் :)))
நன்றாக ஞாபகம் இருக்கிறது சதீஷ் :))) ரசிகா கூட சுட்டிக்காட்டி இருந்தார்கள்... ஏதோ ஞாபகத்தில் தவறாக குறிப்பிட்டு விட்டேன்.. மன்னிச்சிடுங்க சரியா :))) ...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேவியர் said...
நவீன்... கவிதை அழகா, பாவனா அழகான்னு பட்டிமன்றமே நடத்தலாம் :)

அருமையான காதல் ரசம்.//

வாருஙகள் சேவியர் :)))

நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் வருகை பரவசம்... மிக்க நன்றி ..:))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நவீன் ப்ரகாஷ் said...
நன்றாக ஞாபகம் இருக்கிறது சதீஷ் :))) ரசிகா கூட சுட்டிக்காட்டி இருந்தார்கள்... ஏதோ ஞாபகத்தில் தவறாக குறிப்பிட்டு விட்டேன்.. மன்னிச்சிடுங்க சரியா :))) ...
//

ஒரு தடவை ஏரியா பக்கம் வந்துட்டு போங்க கன்டிப்பா மன்னிச்சிடுறேன் :))

Rasiga சொன்னது…

\\//Rasiga said...
'சதீஷ்' என்ற பெயர் தங்களுக்கு 'சங்கராக' தெரிவது ஏனோ??

காதல் மயக்கம் கவிஞரையும் விட்டு வைக்கவில்லை போலும்.//

வாங்க ரசிகா :)))

ஆகா வம்பிலே மாட்டிகிட்டேனா... ஏதோ ஒரு மயக்கம் ... தப்பா எழுதிவிட்டேன்.. மன்னிச்சு விடுங்களேன் ப்ளீஸ்... :)))\\

ஏதோ ஒரு மயக்கமா??
புரிகிறது,நன்றாக புரிகிறது!

இதெல்லாம் ரொம்ப சகஜம்மப்பா, மன்னிச்சுட்டோம்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நவீன்!!

பெயரில்லா சொன்னது…

Hi Naveen, visited your blog after a long time..and I remembered me..
Nice posts - Vijay

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

sathish said...
//நவீன் ப்ரகாஷ் said...
நன்றாக ஞாபகம் இருக்கிறது சதீஷ் :))) ரசிகா கூட சுட்டிக்காட்டி இருந்தார்கள்... ஏதோ ஞாபகத்தில் தவறாக குறிப்பிட்டு விட்டேன்.. மன்னிச்சிடுங்க சரியா :))) ...
//

ஒரு தடவை ஏரியா பக்கம் வந்துட்டு போங்க கன்டிப்பா மன்னிச்சிடுறேன் :))//

வாங்க சதீஷ் :))
கண்டிப்பா வாரேன்... என்ன இப்படி கேட்டுடீங்க ..:))))

// sathish said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நவீன்!!//

மிக்க நன்றி சதீஷ் :)))
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Rasiga said...
\\//Rasiga said...
'சதீஷ்' என்ற பெயர் தங்களுக்கு 'சங்கராக' தெரிவது ஏனோ??

காதல் மயக்கம் கவிஞரையும் விட்டு வைக்கவில்லை போலும்.//

வாங்க ரசிகா :)))

ஆகா வம்பிலே மாட்டிகிட்டேனா... ஏதோ ஒரு மயக்கம் ... தப்பா எழுதிவிட்டேன்.. மன்னிச்சு விடுங்களேன் ப்ளீஸ்... :)))\\

ஏதோ ஒரு மயக்கமா??
புரிகிறது,நன்றாக புரிகிறது!

இதெல்லாம் ரொம்ப சகஜம்மப்பா, மன்னிச்சுட்டோம்!//

ஆஹா ரசிகா :)))
என்னை வாரிவிடறதுன்னு முடிவோடதான் இருக்கீங்க போல.. :))))

ஆமாங்க கவிஞர்கள் எல்லாம் அப்படியே ஒரு கற்பனைல இருக்கனும்ல... அதான் அப்படி சொன்னேன்... நீங்களும் கவிதை எழுதறனால உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் இல்லையா :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Anonymous said...
Hi Naveen, visited your blog after a long time..and I remembered me..
Nice posts - Vijay//

வாங்க விஜய் :)))
எப்படி இருக்கீங்க... உங்களை பார்த்தீங்களா ..?? ஆஹா ரொம்ப டச் பண்ணீட்டிங்க போங்க...:))))

பெயரில்லா சொன்னது…

\\உன்னைக் கட்டிகிறவ
கொடுத்து வச்சவடா என்கிறாய்
அந்தக்கொடுத்து வச்சவ
யாருன்னு தெரியணுமா ?
போய்க் கண்ணாடியிலே பாருடி
முட்டாளே...\\

உன்னைக் கட்டிக்கிறவன்னு வேற யாரையோ கைகாட்டிட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாத்துருக்கா பொண்ணு,

நீங்க நெத்தியடியா 'நீ தான் அந்த பொண்ணு, போய் கண்ணாடில போய் பாரு' அப்படின்னு சொல்லிட்டீங்களே, பாவம் பொண்ணு!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\உன்னைக் கட்டிகிறவ
கொடுத்து வச்சவடா என்கிறாய்
அந்தக்கொடுத்து வச்சவ
யாருன்னு தெரியணுமா ?
போய்க் கண்ணாடியிலே பாருடி
முட்டாளே...\\

உன்னைக் கட்டிக்கிறவன்னு வேற யாரையோ கைகாட்டிட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாத்துருக்கா பொண்ணு,

நீங்க நெத்தியடியா 'நீ தான் அந்த பொண்ணு, போய் கண்ணாடில போய் பாரு' அப்படின்னு சொல்லிட்டீங்களே, பாவம் பொண்ணு!//

வாங்க அனானி :))) ( பேர் இல்லீங்களா? )

நீங்க நெனச்சது சரிதான்.. ஆனா இது கவிதை தாங்க... ஹஹஹஹ்
அந்தபொண்ணு பாவமா என்ன ? நீங்க வேற... கொஞ்சம் லூசுப்பொண்ணுங்களுக்கெல்லாம் இப்படி சொன்னா கூட புரியாதுன்னு என்னோட ப்ரெண்ட்ஸ் சொல்றாங்கங்க... அப்படியா என்ன ?? :)))))))))))

ஸ்ரீ சொன்னது…

வழக்கம் போல் காதலும் கவிதையும் அழகு என்றாலும், படங்களில் காதல் இல்லை கொஞ்சம் சினிமாதனமான காதலே தென்பட்டது :(.

பெயரில்லா சொன்னது…

\\வாங்க அனானி :))) ( பேர் இல்லீங்களா? )

நீங்க நெனச்சது சரிதான்.. ஆனா இது கவிதை தாங்க... ஹஹஹஹ்
அந்தபொண்ணு பாவமா என்ன ? நீங்க வேற... கொஞ்சம் லூசுப்பொண்ணுங்களுக்கெல்லாம் இப்படி சொன்னா கூட புரியாதுன்னு என்னோட ப்ரெண்ட்ஸ் சொல்றாங்கங்க... அப்படியா என்ன ?? :)))))))))))\\

காதலை சொல்றவிதத்துல சொல்லனும்!

புரியறமாதிரி சொல்லதெரியாத, அந்த பொண்ணை லூசுன்னு சொல்ற உங்க ஃப்ரண்ட்ஸ் தான் லூசு.....அவங்களுக்கு நீங்க வக்காலத்தா??

சரி, உங்களுக்காச்சும் புரியற மாதிரி காதல சொல்ல தெரியுமா? இல்ல இப்படி தத்தக்கா பித்தக்கான்னு கவிதை எழுதி தான் காதல சொல்லுவீங்களா?

-ஸ்வேதா பிரகாஷினி [ அனானி கமெண்ட் போட்டா பெயர் கேட்டீங்க...இப்போ ஒகே வா?]

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஸ்ரீ said...
வழக்கம் போல் காதலும் கவிதையும் அழகு என்றாலும், படங்களில் காதல் இல்லை கொஞ்சம் சினிமாதனமான காதலே தென்பட்டது :(.//

வாங்க ஸ்ரீ :)))
மிக்க நன்றி !! வருகைக்கும் அழகான தருகைக்கும்... :))))

கவிதையில் வரும் உணர்வுகளை மட்டும் படங்களோடு சம்பத்தப்படுத்தினால் இந்த சினிமாத்தனம் தெரியாது என நினைக்கிறேன் ஸ்ரீ :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\வாங்க அனானி :))) ( பேர் இல்லீங்களா? )

நீங்க நெனச்சது சரிதான்.. ஆனா இது கவிதை தாங்க... ஹஹஹஹ்
அந்தபொண்ணு பாவமா என்ன ? நீங்க வேற... கொஞ்சம் லூசுப்பொண்ணுங்களுக்கெல்லாம் இப்படி சொன்னா கூட புரியாதுன்னு என்னோட ப்ரெண்ட்ஸ் சொல்றாங்கங்க... அப்படியா என்ன ?? :)))))))))))\\

காதலை சொல்றவிதத்துல சொல்லனும்!

புரியறமாதிரி சொல்லதெரியாத, அந்த பொண்ணை லூசுன்னு சொல்ற உங்க ஃப்ரண்ட்ஸ் தான் லூசு.....அவங்களுக்கு நீங்க வக்காலத்தா?? //

வாங்க ஸ்வேதா பிரகாஷினி :)))
அழகான பெயர்.. :)) இவ்ளோ அழகான பெயரை வெச்சுகிட்டு ஏன் இப்படி கோபப்படுறீங்க பிரகாஷினி ?? :)))) அட நான் வக்காலத்து எல்லாம் வாங்கலைங்க..

காதலை புரியற மாதிரி சொல்லனும் சரிதான்... புரியாதமாதிரியே நடிக்கிறவங்களைத் தான் அப்படி சொன்னாங்க ... மத்தபடி அந்தப் பொண்ணைப்பத்தி தப்பா எல்லாம் சொல்லலை போதுமா ?? :)))


//சரி, உங்களுக்காச்சும் புரியற மாதிரி காதல சொல்ல தெரியுமா? இல்ல இப்படி தத்தக்கா பித்தக்கான்னு கவிதை எழுதி தான் காதல சொல்லுவீங்களா?

-ஸ்வேதா பிரகாஷினி [ அனானி கமெண்ட் போட்டா பெயர் கேட்டீங்க...இப்போ ஒகே வா?] //

காதலை இப்படித்தான் சொல்லனும்னு இலக்கணம் ஏதும் இல்லீங்களே... எதிர்பார்த்துகிட்டு இருக்கறப்போ எதிர்பாராம சொல்லறதும்தான் அழகு இல்லையா...??

அட என்னைய கேட்கறீங்களா..?? :))))) கவிஞரா இருந்தா இதாங்க பிரச்சனையே.. நாம எழுதரதை கவிதையா மட்டும் தான் பார்த்தேன்னு பாராட்டிட்டு போய்டுவாங்க... நீங்கதான் இதுக்கு ஐடியா கொடுக்கணும் ... :))))

ச.பிரேம்குமார் சொன்னது…

அடடடா, இதென்ன இந்த முறை ஒரே இந்திய முகங்களா இருக்கு? மத்தபடி கவிதைகள் வழக்கம் போல் கவிதைகள் அருமை!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பிரேம்குமார் said...
அடடடா, இதென்ன இந்த முறை ஒரே இந்திய முகங்களா இருக்கு? மத்தபடி கவிதைகள் வழக்கம் போல் கவிதைகள் அருமை!//

வாங்க ப்ரேம் :)))
மிக்க நன்றி வருகைக்கும்
துடிப்பான தருகைக்கும் :))

ஏன் இந்திய முகங்கள்
பொருந்தவில்லையா ப்ரேம் ?? :)))
அடுத்த முறை மாற்றி விடுகிறேன்
சரியா ? :)))

பெயரில்லா சொன்னது…

:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// துர்கா said...
:)//

வாங்க துர்கா :))
மிக்க நன்றி !

Praveena சொன்னது…

காதலிக்கு 'காதலை' உணர்த்தும் கவிதை அழகோ அழகு!!

கெஞ்சிக்கேட்ட காதல் கொஞ்சுகிறதா....இல்லியா??

\\தாவணி கட்டினால்
இடுப்பு தெரியும்
கட்டமாட்டேன் என
ஏன் அடம் பிடிக்கிறாய்?
சரி விடு அப்போ
என்னையாவது
கட்டிக்கொள்
உன் இடுப்பை மறைத்துத்
தொலைக்கிறேன்\\

ரசிக்கும்படியான குறும்பு.....அதுவே காதலுக்கு அழகு!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Praveena Jennifer Jacob said...
காதலிக்கு 'காதலை' உணர்த்தும் கவிதை அழகோ அழகு!!

கெஞ்சிக்கேட்ட காதல் கொஞ்சுகிறதா....இல்லியா?? //

வாங்க ப்ரவீணா :)))

காதல் கொஞ்சவும் செய்யும் மிஞ்சவும் செய்யும்.... இல்லையா..?:)))

\\தாவணி கட்டினால்
இடுப்பு தெரியும்
கட்டமாட்டேன் என
ஏன் அடம் பிடிக்கிறாய்?
சரி விடு அப்போ
என்னையாவது
கட்டிக்கொள்
உன் இடுப்பை மறைத்துத்
தொலைக்கிறேன்\\

ரசிக்கும்படியான குறும்பு.....அதுவே காதலுக்கு அழகு!!//

ரசித்த குறும்பு ரசித்தேன்...மிக்க நன்றி !!! :))

இரசிகை சொன்னது…

ithana per solleettaanga..
naan yethai solla!