செவ்வாய், நவம்பர் 22, 2005

ஏற்கனவே...





“ ஏண்டா ! இங்க மெட்ராஸ்ல தான் Differrent Language கத்துக்கறதுக்கு சான்ஸ் இருக்கே ஏன் different ஆ ஏதாச்சும் ட்ரை பண்ண கூடாது?” அருண் கேட்டபோது நாங்கள் மதியம் குறிஞ்சி ஓட்டல் பிரியாணியை வெட்டிவிட்டு சாப்பிட்ட மப்பில் இருந்தோம்.

“ என்ன இந்தி படிக்கலாமா ? இல்ல தெலுங்கு ? கேட்ட ஆனந்தை “ அற்பனே ! “ என்ற பார்வை பார்த்தேன். அதை புரிந்துகொண்டு “ சரி நீயே சொல்லு பார்க்கலாம் !” என்றான்.

“ ஏண்டா லோக்கலாவே இருக்கீங்க ? வாங்க international level க்கு French, German இல்ல Russian என்ன சொல்றீங்க ? “

“ super டா நான் ரெடி! அருணிடமிருந்து வந்த ஆதரவினால் என் கோரிக்கை மெஜாரிட்டி பெற்று German படிப்பது என தீர்மானம் நிறைவேறியது. படிப்பதற்கு கம்பெனியில் இருந்து லோன் அரேன்ச் பண்ணிதர ஆனந்த் ஒப்புக்கொண்டான்.

தினமும் சாயங்காலம் 3 மணி நேரம் வாரம் 6 நாட்கள் என ஒரே மாதத்தில் எங்கள் German அறிவை வளர்த்துவிடுவதாக மார்தட்டினாள் அந்த Councellor.மேலும் இது summer crash course இதைவிட்டால் நீங்கள் 4 மாதம் part time படிக்கவேண்டும் என கூறியதால் ஒரு மாதத்திலேயே எங்கள் German பசி தீர்க்க வேண்டிய எங்கள் ஆவலினால் சேர்ந்தோம்.

German வகுப்பு முதல் நாளே களைகட்டியது. எங்கள் வகுப்பு மொத்தம் 15 பேர்தான். அதில் 5 பெண்கள் மீதமுள்ள ஆண்களில் 5 வது படிக்கும் மகேஷ் முதல் Retired ஆகி 6 வருடம் ஆன அய்யாவு வரை அனைவரும் இருந்தனர்.

எந்த நாட்டு மொழி படித்தால் என்ன? நம்ம கலாசாரத்தை விட்டுகொடுக்க முடியுமா? நம் குலவழக்கப்படி ஆண்கள் ஒரு குழுவாகவும் பெண்கள் தனிக்குழுவாகவும் அமர்ந்திருந்தனர். நல்லவேளை எந்த தாத்தாவும் பாட்டியை படிக்க அனுப்பவில்லை போலும், but எல்லா party யும் 50 மார்க்குக்கு மேல் தாராளமாக கொடுக்ககூடிய level-ல் இருந்தது.

என்னதான் தேனி கூட்டம் இருந்தாலும் ஒரேயொரு ராணி தேனி இருப்பதைப் போல் அந்த குழாமில் ஒரே ஒரு பெண், எங்கள் பாஷையில் சொல்வதென்றால் super figure பெயர் ரேகா எனக்கூவியது. ரேகாவிற்கு மருண்ட விழிகள், சிரித்தால் குழிவிழும் கன்னம் ( ஒரு பக்கம் மட்டும் ) பால்கோவா நிறம், அழகான உடல்வாகு, நீண்ட கூந்தல் என சொல்லிக்கொண்டே போகலாம். ரேகா ரோட்டில் நடந்து போனால் கடப்பவர்கள் நிச்சயமாக ஒருமுறை திரும்பி பார்க்காவிட்டால் ஒன்று அவர்கள் குருடர்களாக இருப்பார்கள் இல்லை பெண்களாக இருப்பார்கள். “ கல்லை கண்டால் நாயை காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் “ என்பது போல அழகான பெண்களுக்கு நல்ல குரல் இருக்காது, நல்ல குரல் இருந்தால் அழகு இருக்காது. ஆனால் இது எதுவுமே ரேகாவிடம் apply செய்யமுடியாது. ஏனெனில் ரேகா பேசினால் ஏன் இருமினால் கூட அதில் ஒரு ரிதம் இருந்தது.

எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !
- தபு சங்கர்

( “ போதும்டா ஊத்துனது மேல சொல்டா ! “ என நீங்கள் கேட்பது புரிகிறது. இன்னும் ஒரேயொரு பெண்ணைப்பற்றி மட்டும் சொல்லிவிடுகிறேன்.)

“ மாயா “ ! பேரைப்போலவே மாயாஜாலம் செய்யும் பிகர். ரேகா அழகென்றால் மாயா ஒரு ஆர்ப்பாட்டம். மாயாவிற்கு பாவம் Elementary school ல் எடுத்துக்கொடுத்த Dress தான் இன்றும் அவர்கள் வீட்டிலே பிறந்து 16 வருடங்கள் ஆனாலும் அவர்கள் பெண் இன்னும் ஒரு குழந்தை என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் போலும். Dress எல்லாம் இவ்வளவு tight –ஆ இருக்கே பாவம் மூச்சுவிடவே ரொம்ப சிரமமாக இருக்குமே என பரிதாபப்படுவோம் நாங்கள். ஆனால் மாயா மூச்சு விட்டாலோ நங்கள் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுவோம். மாயாவின் Tailor வேறு சுரிதார் கழுத்தில் தன் திறமையை நிரூபிக்க எத்தனித்து ஏகத்துக்கு வெட்டித்தள்ளிவிட board டை பார்ப்பதா இல்லை tailor ன் திறமையைப் பார்ப்பதா என ஏகத்துக்கு எங்கள் கண்கள் தத்தளித்தது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஜெர்மன் வேறு சுவாரஸ்யமாக இருந்தது.
“ சே! Free time ல் extra ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளலாமென்றால் எவ்ளோ distraction ! பேசாமல் பச்சோந்தியைப் போல இரு கண்களுக்கும் இரு different Vision இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் ” பெருமூச்சு விடத்தான் முடிந்தது. இப்படி என் மூளை multitasking ல் அல்லாடிக் கொண்டிருக்க அருணும், ஆனந்தும் இந்த கவலையே இல்லாமல் ஏதோ ஜெர்மன் இலக்கணத்தையே போய் மாத்தப்போற மாதிரி விழுந்து விழுந்து கற்றுக்கொண்டு இருந்தார்கள்.

German ல் வாக்கியம்( sentence ) அமைத்து பேசுவது ஒரு பயிற்சி. அனைவரும் exercise book ல் இருந்ததையே கிளிப்பிள்ளை மாதிரி படிக்க நாங்கள் மட்டும் ஆனந்த் உதவியுடன் burger ரை பஜ்ஜியக்கி sauce சை சட்டினியாக்கி பேசிய டையலாக் மிகுந்த வரவேற்பை பெற்றது. அன்று முதல் எங்கள் டீம்மிக்கு டையலாக் வந்தாலே அனைவரும் எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.நாங்களும் அவர்களை ஏமாற்றாமல் சமாளித்தோம். ( பின்னே ரேகா வேறு பார்க்கிறா சிரிக்கிறா சும்மாவா? ). இதனால் நான் வேறுவழியின்றி ஆனந்தின் extra உதவியுடன் ஜெர்மன் கற்றுகொள்ள ஆரம்பித்தேன். மாயாவேறு அடிக்கடி தன் பேனாவைத் தவறவிட்டு எங்கள் கவனத்தை சிதறடித்துக் கொண்டிருந்தாள். இருப்பினும் எங்கள் அறிவு தாகம் ரேகாவிற்காக மேலும் வலுவடைந்தும் கொண்டிருந்தது.

நன்றாக ஓடிக்கொண்டிருந்த வண்டி பஞ்சரானதைப் போல் ஆனந்துக்கும் அருணுக்கும் ஆபீஸில் shift மாறிவிட்டது. அவர்களால் இனி evening class க்கு வரமுடியாது. ‘ ஐயகோ ! இனி என்ன செய்வேன் ? ‘ என மனது புலம்பினாலும்
‘ சரி வேறு வழியில்லேன்னா ஜெர்மன் சொந்தமா படிக்க வேண்டியதுதான். ஆனந்தும் அருணும் பகல் நேர வகுப்புக்கு மாறிக்கொள்ள, நான் மட்டும் இப்பொழுது class-ல். ஒரு வழியாக competitors ஒழிந்தார்கள் என சந்தோஷமாக இருந்தாலும், ஆனந்தை வைத்து ஒப்பேத்திக்கொண்டிருந்த ஜெர்மன் dialougues ஐ எப்படி சமாளிக்கப் போகிறேன் என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. பின்வந்த நாட்களில் இரவில் ஆனந்திடம் ஜெர்மன் சந்தேகங்களை கேட்ட என்னை வினோதமாக பார்த்த ஆனந்த் “ என்னடா engineering exam க்கே இப்படி படிக்க மாட்டே, என்ன விஷயம் ? “ என்றவனை “ டேய், இப்பவாச்சும் உருப்படலாமேன்னு “ எனக்கூறி தற்காலிகமாக அமைதிப்படுத்திவைத்தேன்.

இத்தனை நாளும் எங்கள் டீமைப் பார்த்து சிரித்துவந்த ரேகா இப்பொழுது தனித்துவிடப்பட்ட என்னைப் பார்க்க ஆரம்பித்தாள். நானும் ஆனந்திடம் tution பெற்று class-ல் பழைய dignity-ஐ வேறு maintain செய்திருந்தேன். அதுவரை ரேகாவின் பார்வையை சாதாரண tonic காக எடுத்துக்கொண்டிருந்த நான் பின் வந்த நாட்களில் அந்த tonic என்னுள் ஏதோ chemical-ஐ சுரக்க வைத்ததை உணர ஆரம்பித்தேன்.

என்னைத்தான் பார்க்கிறாளா, வேறு யாரையுமா என்ற என் சந்தேகத்தை சில டெஸ்டுகள் வைத்து தீர்த்துக்கொண்டேன். ( அவளின் நேர் பின்னால் கடைசி bench-ல் அமர்ந்தேன் - திரும்பிப் பார்க்கிறாள், கூட்டத்தில் ஒளிந்து அமர்ந்தேன் - தேடுகிறாள்)
எங்கள் கண்கள் பலமுறைப் புணர்ந்தன. பின் வந்த நாட்களில் என் தூக்கம் என்னிடமிருந்து Volantary Retirement வாங்கியிருந்தது. அப்படியே உணர்வுகளை ஏமாற்றி கண்களை மூடினாலும் டிசைன் டிசைனாக “ FTV” ரேஞ்சுக்கு என் கனவில் ரேகா CatWalk நடத்தி ரேகா என்னை சாகடித்தாள்.

இதற்கு முன் யாராவது
இப்படி உன்னைப் பார்த்ததுண்டா?
எப்படி?
“ ஹய் பொம்மை ! “ என்று !

- தபு சங்கர்

வழக்கமாக நண்பர்கள் யாராவது இது போன்ற அறிகுறிகளுடன் இருந்தால் என்னிடம்தான் Consultation க்கு வருவார்கள். ( “ டேய் ! ரொம்ப அலப்பரை உடாதே ! “ என நீங்கள் கத்துவது கேட்கிறது. என்ன செய்வது என் மீது அவர்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை ) இரண்டு மூன்று கேள்விகளில் அவர்களின் நோயை உறுதிப்படுத்திவிடுவேன்.. ( நோய் என்னடா என்கிறீர்களா? காதல் நோய்தான்! ) ஆனால் எனக்கு என்று வரும்போது அவ்வாறு உடனே முடிவு எடுத்து Declare செய்யமுடியவில்லை. எந்த கனத்திலும் காதல் எனக்கூறி Sixer வாங்கிவிடக்கூடாது என உறுதியாக இருந்தேன்.

எனவே எப்படி Chemistry Lab-ல் சில Confirmatory Test செய்வார்களோ அதைப்போல சில டெஸ்ட்களை வைக்க ஆசைப்பட்டேன். என்னைத்தான் பார்க்கிறாளா? – ஆமாம் . சில சமயம் நான் வரும்வரை அவள் தேடுகிறாள் என அறிந்தேன். இறுதி நாள் நெருங்க நெருங்க எங்கள் பார்வைகளின் frequency யும் கன்னா பின்னாவென எகிறியது. சரி ஆவது ஆகட்டும் இன்னும் Class முடிய 2 நாட்கள்தான் முடிந்துவிட்டால் பார்ப்பதே அரிதாகிவிடும். சரி என்ன பண்ண போறே? எனக்கு நானே கேட்டபொழுது வெளிப்பட்ட ஐடியாதான் Card கொடுப்பது.

கஷ்டப்பட்டு ஒரு Card ஐ select செய்து அதில் என் பெயரையும் போன் நம்பரையும் எழுதி என் இதயத்தில் வைத்தேன். ( Pocket ல தான். அது என் இதயத்துக்குப் பக்கத்துலதானே இருக்கு ?! )

அடுத்த நாள் Class ஆரம்பிக்க 5 நிமிடத்துக்கு முன்பே வந்தேன். என்ன ஒரு Co- incidence ?! நான் வந்து என் Bike கை நிறுத்தவும் ரேகா நுழையவும் சரியாக இருந்தது. தலையைக் குனிந்தபடியே என்னை கடக்க ம்முற்பட்ட ரேகாவை,

“ Excuse Me ரேகா “

“ Yes “ என்று நிமிர்ந்து பார்த்தவளிடம் என இதயத்தில் இருந்த Card ஐ எடுத்துக்கொடுத்தேன்.

“ What is this ? “ என வாங்கியவளிடம்

“ Open பண்ணிப்பாரு தெரியும் “ எனக்கூறிவிட்டு நடந்தேன்.

( “ யப்பா ஒரு கொலை செய்யக்கூட தைரியம் வேண்டாம். ஒரு பெண்ணிடம் Propose செய்வது இருக்கிறதே ! அய்யோ Great தைரியம் வேண்டும் Brother )

Class ஆரம்பித்தது. வழக்கம் போல் எங்கள் பார்வைகள் தொடர்ந்தன. ( Yes ! Workout ஆய்டுச்சு போல இருக்கே!! ) மனதுக்குள்ளேயே குத்து டான்ஸ் ஆடினேன். ரேகாவோடு என்னுடைய பைக்கில் ECR ல் பறந்தேன். Tea Break ல் ரேகாவிடம் கேட்டேன்.

“ So ! எப்போ எனக்கு Call பண்ணபோறே? “
“ No ! I wont ! “ என மறுத்தாள்.
“ ஏன் ? “
“ I already have one ! “
“ excuse me ! “
“ I already have one ! ”
“ Ok ! Pen இருக்கா? “
கொடுத்தாள். கார்டை திரும்ப வாங்கி ரேகாவை அடித்துவிட்டு மாயா என்று எழுதினேன்.




“ இவை இப்படித்தான் என்று
நான் நினைத்துக்கொண்டிருப்பவற்றை கூட
எவ்வளவு சுலபமாய் பொய்யாக்கிவிடுகிறாய்?
உதிர்வதென்பது எப்போதும்
சோகமானதுதான்
எனகின்ற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து உதிர்கிற
ஒரு சின்ன புன்னகை
பொய்யாக்கிவிடுகிறதே ! “

- தபு சங்கர்

10 கருத்துகள்:

அன்பு சொன்னது…

கதைக்கு கவிதையா...
கவிதைக்கு கதையா!?

பி.கு: நான் இங்கு கவிதையென்று குறிப்பிடுவது தபு சங்கர் எழுதியதையும்தான்!

எதை ஞாபகப்படுத்துனீங்களோ இல்லையோ...
குறிஞ்சி ஓட்டல் பிரியாணியை - இந்தப்பசில ஞாபகப்படுத்தீட்டீங்களே... நல்லாருங்க:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

அன்பு உங்கள் அன்புக்கு நான் அடிமை.ஆனால் நீங்கள் குறிஞ்சி ஓட்டல் பிரியாணிக்கு அடிமையாயிருக்கீங்களே!!

உங்கள் விமர்சனத்திர்க்கு மிக்க நன்றி.உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

dondu(#11168674346665545885) சொன்னது…

Haben Sie Deutsch schliesslich gelernt oder nicht?

Mit freundlichen Gruessen,
Dondu Raghavan

பெயரில்லா சொன்னது…

டாய்....
இது நிஜமா??? கதையா???
அப்புறம் ஏண்டா அந்த பார்வை விட்டா... அவ????

இருந்தாலும்...சுவையான அனுபவம் தான்...

மார்ஷ்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

ராகவன் sir,
ஒரளவு ஜெர்மன் தெரிஞ்சுகிட்டேன்.யாரிடமும் சொல்லாதீர்கள்.நீங்கள் என்ன எழுதியிருந்தீர்கள் என traslator ல் கொடுத்துதான் தெரிந்து கொண்டேன்.உங்கள் பினூட்டத்திற்கு மிக்க நன்றி.உங்கள் நண்பர்களிடமும் என்னை அறிமுகப்படுத்துங்கள்.

அன்பு சொன்னது…

//ஆனால் நீங்கள் குறிஞ்சி ஓட்டல் பிரியாணிக்கு அடிமையாயிருக்கீங்களே!!

அப்படில்லாம் ஒண்ணுமில்ல... ஒரு ரகசியம் - அங்க இதுவரைக்கும் ஒருமுறை கூட பிரியாணி சாப்பிட்டது இல்லை. அதைவிட மொத்தமே ஓரிருமுறைதான் சென்றிருப்பேன். மாமா ரொம்ப சிலாகிப்பார்... அதை வச்சு எழுதினேன்:)

Unknown சொன்னது…

Konjam overda!!!!!!!!


Mappilai

பெயரில்லா சொன்னது…

\\கார்டை திரும்ப வாங்கி ரேகாவை அடித்துவிட்டு மாயா என்று எழுதினேன்.\\

மறுபடியும் ரேகா அவேலபிளாயிருந்தா, மாயா கிட்ட கொடுத்த கார்ட வாங்கி ரேகா கிட்ட கொடுத்துடுவீங்களோ???

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//riaz said...
Konjam overda!!!!!!!!


Mappilai//

வாடா மாப்ளே :)))
அட எனக்கும் தெரியுது அவ பண்ணுறது ஓவர்ன்னு என்ன பண்ண சொல்றே? அப்படி பண்ணிட்டாளே !! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\கார்டை திரும்ப வாங்கி ரேகாவை அடித்துவிட்டு மாயா என்று எழுதினேன்.\\

மறுபடியும் ரேகா அவேலபிளாயிருந்தா, மாயா கிட்ட கொடுத்த கார்ட வாங்கி ரேகா கிட்ட கொடுத்துடுவீங்களோ???//

ஆஹா வாங்க அனானி :)))

ரொம்ப டென்சன் ஆகாதீங்க :)) ஆக்சுவலா நடந்தது வேற!!! நாந்தான் ஒரு க்ளைமேக்ஸ் டச் கொடுக்கத்தான் மாத்தினேன் போதுமா ?? :)))))