வியாழன், நவம்பர் 16, 2006

எனக்கு மதம் பிடிக்கிறது

மதமில்லா மதம்மதம்
பிடிக்காத
மதம்
பிடிக்கும்
மதம்
இல்லாத
மதம்
இருக்கிறதா ?அண்டம் கடவுள்


அண்டம் காக்கும்
கடவுளைப் பார்க்க
காத்திருக்கிறேன்
தரிசன
வரிசையில்

கடவுள் காட்சிஎனக்கு மட்டும்
காட்சி தருகிறார்
என் கடவுள்
விஷேச கட்டணத்தில்நான் பாவிநான் ஒரு
பாவி என்று
மற்றொரு பாவி
சொல்லிக்கொண்டிருக்கிறார்
என் கடவுள்என் கடவுள்
காக்கும் கடவுள்
என் மதத்தினரை
மட்டும்உண்டியல்

இது உண்டியல்
அல்ல
நான் தெரிந்தேசெய்த
தவறுகளை
அங்கீகரிக்க
நான் கடவுளுக்கு
அளிக்கும்
தூண்டில்
குலதெய்வம்


தெய்வம்
எனக்குச் சொந்தமா
தெரியாது
ஆனால்
எனக்குச் சொந்தமாக
குலதெய்வமே
இருக்கிறது


கடவுளை தேடி
கடவுளைத்தேடி
சென்ற
இடமெல்லாம்
நான்
இருந்தேன்
கடவுள் மட்டும் இல்லைமதம் உயர்வு
என் கடவுள்
மட்டுமே
உயர்ந்தவர்
என்று
தாழ்ந்தவர்கள்
சண்டையிட்டுக்கொள்கிறார்கள்மத மனிதன்மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லைதிருடர்
என்னைக் காப்பாற்ற
வேண்டிய கடவுளுக்கு
திருடர்களிடம்
தன்னைக் காப்பாற்ற
இயலவில்லைஅந்நியர்கள்அந்நியர்கள்
யாரும்
உட்பிரவேசிக்கக்கூடாது
என கடவுளின்
சந்நிதானத்தில்
கடவுளுக்கு
அந்நியமானவர்கள்
எழுதிவைத்திருக்கிறார்கள்தாயுள்ளம்
தாயுள்ளம் கொண்ட
கடவுள்
தாயார்கள் தொட்டாலே
தீட்டாகிவிடும்
மாயம் என்ன ?
தீண்டாமை
தீண்டாமை நன்று
கடவுளின் பெயரால்
சக மனிதனின்
உணர்வுகளை
தீண்டாமை நன்று

63 கருத்துகள்:

thiru சொன்னது…

நவீன்ம்

நறுக்கென மனதை தொடும் வரிகள்! அத்தனையும் நிஜம். தாகூரின் வரிகளை நினைவுபடுத்துகிறது.

வாழ்த்துக்கள் நண்பரே!

கலை சொன்னது…

அருமையான கவிதைகள்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

///
தாயுள்ளம் கொண்ட
கடவுள்
தாயார்கள் தொட்டாலே
தீட்டாகிவிடும்
மாயம் என்ன ?
///

கலக்கீட்டீங்க தலை. மதம் என்னும் மாயை சூழ்ந்ததால் மனிதம், கடவுள் இரண்டுமே இன்று மறக்கடிக்கப் படுகிறது.

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

அருமை

பெயரில்லா சொன்னது…

நவீன் நீங்க இப்படி எல்லாம் எழுதுவீங்களா?முதல் முதலாக உங்களைப் புதிதாக பார்ப்பது போல் இருகின்றது

ILA (a) இளா சொன்னது…

வார்த்தைகள் இல்லை, வணங்குகிறேன்

ILA (a) இளா சொன்னது…

இந்தப் பதிவை சங்கம் பரிந்துரைக்கிறது

மாசிலா சொன்னது…

திறமையான கருத்துள்ள குறுங்கவிதைகள்.
படங்களும் கவி பேசுகின்றன.

அனைத்தும் முத்துக்கள்.

நன்றி.
தொடர்க.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//திரு said...
நவீன்ம்

நறுக்கென மனதை தொடும் வரிகள்! அத்தனையும் நிஜம். தாகூரின் வரிகளை நினைவுபடுத்துகிறது.

வாழ்த்துக்கள் நண்பரே! //

வாருங்கள் திரு :))

தாகூரின் வரிகளையா ?? மிக்க நன்றி திரு ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கலை said...
அருமையான கவிதைகள். //

வாங்க கலை !
வருகையும் தருகையும் அருமை !! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//செந்தில் குமரன் said...
///
தாயுள்ளம் கொண்ட
கடவுள்
தாயார்கள் தொட்டாலே
தீட்டாகிவிடும்
மாயம் என்ன ?
///

கலக்கீட்டீங்க தலை. மதம் என்னும் மாயை சூழ்ந்ததால் மனிதம், கடவுள் இரண்டுமே இன்று மறக்கடிக்கப் படுகிறது. //

வாங்க செந்தில்குமரன் :))
மதம் பிடித்த மனிதர்களால் ஆளப்படுகிறது மதங்கள் :((

மிக்க நன்றி செந்தில் :))

பொன்ஸ்~~Poorna சொன்னது…

நவீன்,
என்னய்யா ஆச்சு? வழக்கம்போல் காதல் சொட்டச் சொட்ட எழுதி இருப்பீங்கன்னு வந்தேன்..

சரி, குழந்தைங்க படமா போட்டிருக்கீங்களேன்னு இந்தத் தெய்வங்கள் பத்தினதா இருக்கும்னு நினைச்சா, கலக்கிட்டீங்கய்யா!!

//மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லை
//
அற்புதமா இருக்கு இந்த வரிகள்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

///தாயுள்ளம் கொண்ட
கடவுள்
தாயார்கள் தொட்டாலே
தீட்டாகிவிடும்
மாயம் என்ன ?
//
இதுக்கும் ஒரு +

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நீலகண்டன் said...
அருமை //

வாங்க நீலகண்டன் :))

மிக்க நன்றி ! :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//துர்கா said...
நவீன் நீங்க இப்படி எல்லாம் எழுதுவீங்களா?முதல் முதலாக உங்களைப் புதிதாக பார்ப்பது போல் இருகின்றது //

வாங்க துர்கா :))
புதிதாக பாருங்கள் துர்கா. மேலும் எழுத தூண்டும் அல்லவா ?? :)) நன்றி வருகைக்கும் தருகைக்கும் !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ILA(a)இளா said...
வார்த்தைகள் இல்லை, வணங்குகிறேன்//

வாங்க இளா :))

அய்யய்யோ இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க !!! :)))

//இந்தப் பதிவை சங்கம் பரிந்துரைக்கிறது //

மிக்க நன்றி இளா :))

சத்தியா சொன்னது…

"கடவுளைத்தேடி
சென்ற
இடமெல்லாம்
நான்
இருந்தேன்
கடவுள் மட்டும் இல்லை"...

குட்டிக் குட்டிக் கவிதைகள் என்றாலும் அத்தனையும் அருமை!

வாழ்த்துக்கள் நவீன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பொன்ஸ் said...
நவீன்,
என்னய்யா ஆச்சு? வழக்கம்போல் காதல் சொட்டச் சொட்ட எழுதி இருப்பீங்கன்னு வந்தேன்..//

வாங்க பொன்ஸ் :))

ஏமாத்திட்டேனா ?

//சரி, குழந்தைங்க படமா போட்டிருக்கீங்களேன்னு இந்தத் தெய்வங்கள் பத்தினதா இருக்கும்னு நினைச்சா, கலக்கிட்டீங்கய்யா!!//

மிக்க நன்றி பொன்ஸ் :))

//மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லை
//
அற்புதமா இருக்கு இந்த வரிகள் //

வருகையும் தருகையும் அற்புதம் :))

இராம்/Raam சொன்னது…

நவின்,

அற்புதமான கவிதைகள்... அருமை ஒவ்வொன்றும்!!!

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

கலக்கல் கருத்துக்கள் !
மிக நன்று !

எழில் சொன்னது…

மிகச்சிறப்பான பதிவு. ஓஷோவை, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை படிக்கும் உணர்வை கொடுக்கிறது

நாமக்கல் சிபி சொன்னது…

இருபத்தோராம் நூற்றாண்டின் சிறந்த கவிதை. பாராட்டுக்கள் நவீன் பிரகாஷ்!

////மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லை
//

வாவ்! எவ்வளவு அருமையான கருத்தை சுருக்கமா அதுவும் சூப்பரா சொல்லியிருக்கீங்க!

கப்பி | Kappi சொன்னது…

அருமை நவீன்!

பெயரில்லா சொன்னது…

நன்றான கவிதைப் பொறிகள்<
அழகான படங்களுடன்
Saturday, November 11, 2006
அன்றான நாளில்
மதத்தைப் பற்றி
நான் வைத்த கவிதையை
தாங்கள் அறிய வேண்டி
http://memonkavi.blogspot.com/
பாராட்டுக்க்கள்!

Divya சொன்னது…

'மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லை'

அற்புதமான வரிகள்,
அருமையான கவிதை,
அழகான படங்கள்,
அசத்தல் நவீன்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சத்தியா said...
"கடவுளைத்தேடி
சென்ற
இடமெல்லாம்
நான்
இருந்தேன்
கடவுள் மட்டும் இல்லை"...

குட்டிக் குட்டிக் கவிதைகள் என்றாலும் அத்தனையும் அருமை!

வாழ்த்துக்கள் நவீன். //

வாங்க சத்யா :))
ஈகைக்கு மிக்க நன்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ராம் said...
நவின்,

அற்புதமான கவிதைகள்... அருமை ஒவ்வொன்றும்!!!//

வாருங்கள் ராம் :))
உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
இருபத்தோராம் நூற்றாண்டின் சிறந்த கவிதை. பாராட்டுக்கள் நவீன் பிரகாஷ்!

////மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லை
//

வாவ்! எவ்வளவு அருமையான கருத்தை சுருக்கமா அதுவும் சூப்பரா சொல்லியிருக்கீங்க! //

வாருங்கள் சிபி :))
மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு !! ரொம்ம பாராட்டுகிறீர்கள் கூச்சமாக இருக்கிறது :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கப்பி பய said...
அருமை நவீன்! //

வாருங்கள் கப்பி :))
வருகைக்கு நன்றி :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மேமன்கவி பக்கம் said...
நன்றான கவிதைப் பொறிகள்
பாராட்டுக்க்கள்! //

வாருங்கள் மேமன்கவி :))
மிகுந்த நன்றிகள். தங்கள் வருகைக்கும் தருகைக்கும் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கோவி.கண்ணன் [GK] said...
கலக்கல் கருத்துக்கள் !
மிக நன்று ! //

வாருங்கள் GK :))
கலக்கலான விமர்சனத்திற்கு நன்றி !!! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில் said...
மிகச்சிறப்பான பதிவு. ஓஷோவை, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை படிக்கும் உணர்வை கொடுக்கிறது //

வாருங்கள் எழில் :))
உங்கள் உணர்வுகள் என்னைப் பொருமைப்படுத்துகின்றன எழில் :)) மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
'மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லை'

அற்புதமான வரிகள்,
அருமையான கவிதை,
அழகான படங்கள்,
அசத்தல் நவீன்! //

வாருங்கள் திவ்யா :))
நன்றி திவ்யா !! வரிகள் அழகாகின்றன விமர்சனங்களால் !! :))

கைப்புள்ள சொன்னது…

நவீன்,
அருமை. உங்களுடைய இன்னொரு பரிமாணத்தையும் இன்று தெரிந்து கொண்டேன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கைப்புள்ள said...
நவீன்,
அருமை. உங்களுடைய இன்னொரு பரிமாணத்தையும் இன்று தெரிந்து கொண்டேன்.//

வாருங்கள் கைபுள்ள :))
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :))

கவிதா | Kavitha சொன்னது…

நவீன், சூப்பரா இருக்கு.. நல்ல கவிதை, அனுபவத்து சொல்லிய அற்புதமான வார்த்தைகள்.. நன்றி நல்ல கவிதை தந்ததற்கு.. !!

மனதின் ஓசை சொன்னது…

நெஞ்சில் சுட்ட நெஞ்சை தொட்ட வரிகள்..

சேதுக்கரசி சொன்னது…

நவீன்... (என்னை ஞாபகமிருக்கிறதா?) இன்று புதிதாகப் பிறந்திருக்கிறீர்களா? வித்தியாசமான முயற்சி அருமையாய் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கவிதா said...
நவீன், சூப்பரா இருக்கு.. நல்ல கவிதை, அனுபவத்து சொல்லிய அற்புதமான வார்த்தைகள்.. நன்றி நல்ல கவிதை தந்ததற்கு.. !! //

வாருங்கள் கவிதா :))
நன்றியா ? நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் உங்களின் வருகைக்கு ? :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மனதின் ஓசை said...
நெஞ்சில் சுட்ட நெஞ்சை தொட்ட வரிகள்..//

வாருங்கள் மனதின் ஓசை :)
உணர்வுகளுக்கு மிக்க நன்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேதுக்கரசி said...
நவீன்... (என்னை ஞாபகமிருக்கிறதா?)

வாருங்கள் சேதுக்கரசி :)
உங்களை மறக்க முடியுமா ? நன்றாகவே ஞாபகம் இருக்கிறது !

//இன்று புதிதாகப் பிறந்திருக்கிறீர்களா? வித்தியாசமான முயற்சி அருமையாய் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்! //

புதியதாய் பிறந்திருப்பதாய் உணர்கிறீர்களா ?? மிகுந்த சந்தோசம் சேதுக்கரசி :) மிக்க நன்றி !

பெயரில்லா சொன்னது…

கவிதை புதுமை...வரிகள் அருமை..வாழ்த்துகள் நவீன்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இனியவள் புனிதா said...
கவிதை புதுமை...வரிகள் அருமை..வாழ்த்துகள் நவீன்... //

வாருங்கள் புனிதா :))
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி :)

Machi சொன்னது…

நவீன் கலக்கறப்பா. படமும் கவிதையும் அற்புதம். எங்கையா இந்த மாதிரி படத்தையெல்லாம் புடிக்கிற? நமக்கு கவிதை புரியர மாதிரி எழுதுற ஒன்னு ரெண்டு ஆளுல நவீனும் ஒருத்தர்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//குறும்பன் said...
நவீன் கலக்கறப்பா. படமும் கவிதையும் அற்புதம். எங்கையா இந்த மாதிரி படத்தையெல்லாம் புடிக்கிற? நமக்கு கவிதை புரியர மாதிரி எழுதுற ஒன்னு ரெண்டு ஆளுல நவீனும் ஒருத்தர். //

வாங்க குறும்பன் :))
மிக்க நன்றி !! ரொம்ப சந்தோசம் குறும்பன் என் கவிதைகளை புரிந்துகொண்டமைக்கு :)))

பட்டிக்காட்டான் சொன்னது…

//எனக்கு மட்டும்
காட்சி தருகிறார்
என் கடவுள்
விஷேச கட்டணத்தில்//


//தெய்வம்
எனக்குச் சொந்தமா
தெரியாது
ஆனால்
எனக்குச் சொந்தமாக
குலதெய்வமே
இருக்கிறது//

நல்ல கவிதை...வாழ்த்துக்கள்..

ஆழியூரான்(பீட்டா கோளாறினால் பட்டிக்காட்டானாக..)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பட்டிக்காட்டான் said...
நல்ல கவிதை...வாழ்த்துக்கள்..

ஆழியூரான்(பீட்டா கோளாறினால் பட்டிக்காட்டானாக..) //

வாங்க ஆழியூரான் :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !! கவலைப்படாதீர்கள் சரியாகிவிடும் :))

பெயரில்லா சொன்னது…

கவிதையில் கவிதை இருக்கும் ஆனால் இங்கு செய்தி!.

சூப்பர்.

தருமி சொன்னது…

புதிதாகப் பார்த்த பதிவு; பதிவர்.

வரிகளில் உள்ள ஆழம் உண்மையிலேயே சிலிர்க்க வைத்தது; மிக்க சந்தோஷம்.

அதைவிடவும், வந்த பின்னூட்டங்களின் தொனி, நாளை நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை தருவதாக உள்ளதால் மேலும் சந்தோஷம்.

பெயரில்லா சொன்னது…

VAZHTHHUKKAL.

INIYA VARTHAIGAL

AZHNTHA KARUTHUKKAL

GNABAGAM VARUTHE

FORGET GOD THINK OF MAN!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸயீத் said...
கவிதையில் கவிதை இருக்கும் ஆனால் இங்கு செய்தி!.

சூப்பர். //

வாருங்கள் ஸயீத் :))
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sam said...
புதிதாகப் பார்த்த பதிவு; பதிவர்.

வரிகளில் உள்ள ஆழம் உண்மையிலேயே சிலிர்க்க வைத்தது; மிக்க சந்தோஷம்.//

வாருங்கள் தருமி சார் :))
முதன்முறையாக வந்தமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது :))


//அதைவிடவும், வந்த பின்னூட்டங்களின் தொனி, நாளை நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை தருவதாக உள்ளதால் மேலும் சந்தோஷம். //

வருகையும் தருகையும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhan said...
VAZHTHHUKKAL.

INIYA VARTHAIGAL

AZHNTHA KARUTHUKKAL

GNABAGAM VARUTHE

FORGET GOD THINK OF MAN! //

வாருங்கள் தமிழன் :))
மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள் !! வருகைக்கு மிக்க நன்றி :))

பெயரில்லா சொன்னது…

Pramadham ponga...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Narendran said...
Pramadham ponga... //

வாருங்கள் நரேந்திரன் :))
மிக்க நன்றி :))

பெயரில்லா சொன்னது…

நறுக்கென்ற அருமையான வரிகள். தொடரட்டும்......வாழ்த்துக்கள்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஆதிபகவன் said...
நறுக்கென்ற அருமையான வரிகள். தொடரட்டும்......வாழ்த்துக்கள் //

வாருங்கள் ஆதி :))
வாழ்த்துக்கு மிக்க நன்றி :))

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

அருமையான கவிதைகள். அவற்றின் கருத்துக்கு வலு சேர்க்கும் படங்கள்.

மீன் சந்தைக் கூச்சல்களுக்கு நடுவில் மூன்று நாள் தாமதமாய் கவனிக்க நேர்ந்ததாலும் இதமான உணர்வைத் தருகிறது.

இந்த மீன் சந்தை கூச்சல்கள் ஒரு நாள் ஓயும்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கோபி(Gopi) said...
அருமையான கவிதைகள். அவற்றின் கருத்துக்கு வலு சேர்க்கும் படங்கள்.

மீன் சந்தைக் கூச்சல்களுக்கு நடுவில் மூன்று நாள் தாமதமாய் கவனிக்க நேர்ந்ததாலும் இதமான உணர்வைத் தருகிறது.

இந்த மீன் சந்தை கூச்சல்கள் ஒரு நாள் ஓயும். //

வாருங்கள் கோபி :))
நல்ல உணர்வுகள் !! நல்ல விமர்சனம். நம்பிக்கை தானே வாழ்க்கை !! மிக்க நன்றி கோபி !!

Ramya சொன்னது…

Nice site.n excellent kavithaigal

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Ramya said...
Nice site.n excellent kavithaigal//

வாங்க ரம்யா:))
வருகைக்கும் அழகான தருகைக்கும் மிக்க நன்றி :)))

Gopu Natarajan சொன்னது…

தங்களது மதம் பற்றிய கவிதை நன்றாக இருந்தது ....
எனது மதம் பற்றிய கவிதையை படிக்க .... http://tamilwebworld.blogspot.com

- கோபு நடராசன்

Gopu Natarajan சொன்னது…

நவீனம் தங்களது பெயரில் மட்டுமல்ல .... கவிதைகளிலும் ....
பாராட்டுக்கள் ....

- கோபு நடராசன்
.... http://tamilwebworld.blogspot.com