சனி, ஏப்ரல் 25, 2015

ஏனென்றால் போதை என்பேன்…
ஒரேயொரு பெக் 
என்றுதான் ஆரம்பித்தன
நம் பார்வைகள்


பல சைட் டிஷ்களுக்கு 
மத்தியில் தங்கமாக மின்னும்
விஸ்கி போல உன் 
தோழிகள் மத்தியில்
இருக்கிறாய்


எந்தக் கோப்பையில்
இருந்தாலும் கிளர்ச்சியூட்டும்
வோட்கா போலவே
எந்த உடையிலும்
ததும்பியிருகிறாய்


டக்கீலாவெல்லாம் 
தோற்றுத்தான் 
போகின்றது
நீ அப்படிப் 
பார்க்கின்றபோது


எந்தக் கலரில் 
இருந்தாலும் 
போதையேற்றும்
ரம் போலவே
நீயும் 
உன் வெட்கங்களும்


தயக்கத்துடன் ஆரம்பிக்கும்
முதல் ரவுண்ட் போலவே
ஆரம்பிக்கின்றன
நம் முத்தங்களும்


எப்பொழுது திறந்தாலும்
பொங்கி வழியும் பீர் போலவே
எப்பொழுதும் உன்னைப் பார்த்து
பொங்கும் மனதை
என்ன செய்ய...