புதன், ஜூலை 16, 2008

கொஞ்சம் கொஞ்சேன்....கொஞ்சம் பேசிவிடேன்
என்னிடம்..
கோபத்திலும் நீ அழகாக
இருக்கிறாய் என்ற பொய்யை
எத்தனைமுறைதான்
சொல்வது
செல்லக் குரங்கே..??
நான் நல்லா இருக்கிறேனா
இல்லை என் சுரிதார் நல்லா இருக்கா
எனக் கேட்கிறாய்..
இரண்டுபேருமே
சேர்ந்திருந்தாலும் அழகுதான்
சேராமலிருந்தாலும் அழகுதான்
எனச் சொன்னால் ஏண்டி
அடிக்க வருகிறாய் ...??
என்னிடம் உனக்கு
என்ன பிடிக்கும் என
நீ தானே கேட்டாய்...??
சொல்லவா இல்லைக்
காட்டவா எனச்
சொன்னதற்குப் போய்
இப்படிக் கிள்ளுகிறாயே
ராட்சசி...
ஹய்யோ உன்னைப் போய்
எந்த லூசுடா காதலிப்பா...
எனக் கேட்கிறாய்
நீ என்னவோ
பெரிய அறிவாளி
என நினைத்துக்கொண்டு...
ஒரேயொரு முத்தம்
கொடுடி என
இனியும் உன்னைக்
கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டேன்..
தேவையில்லாமல் என்னைத்
திருடனாக்காதே...
உன்னைக் கெஞ்சக் கெஞ்ச
ரொம்பத்தான்
மிஞ்சுகிறாய் நீ..
என்னடா
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
எனக்கோபமாகக் கேட்கிறாய்
உன்னைத்தான் என்ற
உண்மை உணராமல்...

என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...

உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...

என்னைவிட உன்னை
இப்படி இறுக்கிப்
பிடித்திருக்கும் உன்
உடைமீது கூட
இப்பொழுதெல்லாம்
பொறாமை வருகிறது
தெரியுமா...?
நீ ஒன்றும் பெரிய
அழகியெல்லாம் இல்லை
ஏதோ நான் காதலிப்பதால்
பேரழகியாகத்தெரிகிறாய்
என உண்மையை சொன்னால்
ஏண்டி இப்படி முறைக்கிறாய்..?
உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...

85 கருத்துகள்:

Divya சொன்னது…

\\நான் நல்லா இருக்கிறேனா
இல்லை என் சுரிதார் நல்லா இருக்கா
எனக் கேட்கிறாய்..
இரண்டுபேருமே
சேர்ந்திருந்தாலும் அழகுதான்
சேராமலிருந்தாலும் அழகுதான்
எனச் சொன்னால் ஏண்டி
அடிக்க வருகிறாய் ...??\\

குறும்பு கொப்பளிக்கிறது வார்த்தைகளில்:))

Divya சொன்னது…

\\உன்னைக் கெஞ்சக் கெஞ்ச
ரொம்பத்தான்
மிஞ்சுகிறாய் நீ..
என்னடா
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
எனக்கோபமாகக் கேட்கிறாய்
உன்னைக் கெஞ்சக் கெஞ்ச
ரொம்பத்தான்
மிஞ்சுகிறாய் நீ..
என்னடா
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
எனக்கோபமாகக் கேட்கிறாய்
உன்னைத்தான் என்ற
உண்மை உணராமல்......\\

உன்னைத்தான் என்ற
உண்மை உணராமல்-> ரசித்தேன் இவ்வரிகளை, அழகு!!

Divya சொன்னது…

\\என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...\\

வார்த்தைகள் சும்மா புகுந்து விளையாடுது......அருமை அருமை!!!

Divya சொன்னது…

\\உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...\\

ஆஹா.......அப்படியா???

உங்கள் கவிதைகளை ரசிக்கும் மானிடர் எங்களை........அற்பம்னு சொல்லிடீங்களே கவிஞரே:(

Divya சொன்னது…

\\நீ ஒன்றும் பெரிய
அழகியெல்லாம் இல்லை
ஏதோ நான் காதலிப்பதால்
பேரழகியாகத்தெரிகிறாய்
என உண்மையை சொன்னால்
ஏண்டி இப்படி முறைக்கிறாய்..?\\

காதலிப்பதால் பேரழகியாகிவிடுவாங்களா??

நல்லாயிருக்கு இந்த வரிகள்!!

Divya சொன்னது…

\\உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...\\

காதலுக்கே அழகு இந்த possesivenss தானே!!

கவிதைகள் முழுவதுமாய் அழகோ அழகு,
வாழ்த்துக்கள் நவீன்!!

பெயரில்லா சொன்னது…

எல்லா கவிதையையும் இரசித்தேன்... :)

Unknown சொன்னது…

அச்சச்சோ என்ன அண்ணா இவ்ளோ ரொமேன்டிக்கா?? :-)
நல்லா இருக்கு..!! :D

MSK / Saravana சொன்னது…

அடப்போங்கப்பா.. இவருக்கு இதே வேலையாபோச்சு..
வயித்தெரிச்சல கெளப்பிக்கிட்டு..

;)

எழில்பாரதி சொன்னது…

அருமையான கவிதைகள்!!!!

காதல் தெரிக்கிறது கவிதைகளில்

எழில்பாரதி சொன்னது…

//உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...//

அட அப்படியா!!!!

FunScribbler சொன்னது…

//ஒரேயொரு முத்தம்
கொடுடி என
இனியும் உன்னைக்
கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டேன்..
தேவையில்லாமல் என்னைத்
திருடனாக்காதே...//

அட நல்லா இருக்கே!! எப்படியலாம் யோசிக்கிறாங்கய்யா..:))

FunScribbler சொன்னது…

//உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...//

ஹாலோ,உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?? ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்! :))

FunScribbler சொன்னது…

//என்னைவிட உன்னை
இப்படி இறுக்கிப்
பிடித்திருக்கும் உன்
உடைமீது கூட
இப்பொழுதெல்லாம்
பொறாமை வருகிறது
தெரியுமா...?//

நவீன், எங்கயோ போயிட்டீங்க!!! கலக்குங்கய்யா!:))

கோவை விஜய் சொன்னது…

வார்த்தைகள் களிநடனம் புரிகின்றன.தொடர்புடைய படங்களும் சிரிக்கின்றன அருமையான தொகுப்பு.

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்

Aruna சொன்னது…

As usual....fun with words!!!!
nice..

anbudan aruNa

Santhosh சொன்னது…

சூப்பரு வழக்கம் போல..

பெயரில்லா சொன்னது…

தல கொஞ்சியே கொன்னுட்டீங்க :)

\\என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...\\

சூப்பரப்பு

பெயரில்லா சொன்னது…

உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...

i have no words to say...wonderful naveen....

இராம்/Raam சொன்னது…

அருமை....!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//என்னைவிட உன்னை
இப்படி இறுக்கிப்
பிடித்திருக்கும் உன்
உடைமீது கூட
இப்பொழுதெல்லாம்
பொறாமை வருகிறது
தெரியுமா...?//

அவ்வ்வ்வ்வ்!!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நான் நல்லா இருக்கிறேனா
இல்லை என் சுரிதார் நல்லா இருக்கா
எனக் கேட்கிறாய்..
இரண்டுபேருமே
சேர்ந்திருந்தாலும் அழகுதான்
சேராமலிருந்தாலும் அழகுதான்
எனச் சொன்னால் ஏண்டி
அடிக்க வருகிறாய் ...??//

கவிஞரே எனக்கு ஒரு டவுட்டு :) எதால அடி வாங்குனீங்க??

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...//

சூப்பருங்கோ!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\நான் நல்லா இருக்கிறேனா
இல்லை என் சுரிதார் நல்லா இருக்கா
எனக் கேட்கிறாய்..
இரண்டுபேருமே
சேர்ந்திருந்தாலும் அழகுதான்
சேராமலிருந்தாலும் அழகுதான்
எனச் சொன்னால் ஏண்டி
அடிக்க வருகிறாய் ...??\\

குறும்பு கொப்பளிக்கிறது வார்த்தைகளில்:)) //

வாங்க திவ்யா.. :))
என்னாங்க இது நான் சீரியசா சொன்னா குறும்புன்னு சொல்லறீங்க..?? ;))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

\\உன்னைக் கெஞ்சக் கெஞ்ச
ரொம்பத்தான்
மிஞ்சுகிறாய் நீ..
என்னடா
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
எனக்கோபமாகக் கேட்கிறாய்
உன்னைக் கெஞ்சக் கெஞ்ச
ரொம்பத்தான்
மிஞ்சுகிறாய் நீ..
என்னடா
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
எனக்கோபமாகக் கேட்கிறாய்
உன்னைத்தான் என்ற
உண்மை உணராமல்......\\

உன்னைத்தான் என்ற
உண்மை உணராமல்-> ரசித்தேன் இவ்வரிகளை, அழகு!! //

அழகான ரசிப்புக்கு நன்றி திவ்யா...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

Divya said...

\\என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...\\

வார்த்தைகள் சும்மா புகுந்து விளையாடுது......அருமை அருமை!!!//

அப்படியா என்ன...? :))) நன்றி நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

Divya said...

\\உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...\\

ஆஹா.......அப்படியா???

உங்கள் கவிதைகளை ரசிக்கும் மானிடர் எங்களை........அற்பம்னு சொல்லிடீங்களே கவிஞரே:(

அஹா இப்படி எல்லாம் சொல்லிகிட்டு இருக்காதீங்க.. இதெல்லாம் சும்மா.... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\நீ ஒன்றும் பெரிய
அழகியெல்லாம் இல்லை
ஏதோ நான் காதலிப்பதால்
பேரழகியாகத்தெரிகிறாய்
என உண்மையை சொன்னால்
ஏண்டி இப்படி முறைக்கிறாய்..?\\

காதலிப்பதால் பேரழகியாகிவிடுவாங்களா??

நல்லாயிருக்கு இந்த வரிகள்!!//

பின்னே...?? மாட்டார்களா என்ன..?? பாராட்டிற்கு நன்றி கதா... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...\\

காதலுக்கே அழகு இந்த possesivenss தானே!!

கவிதைகள் முழுவதுமாய் அழகோ அழகு,
வாழ்த்துக்கள் நவீன்!! //

ம்ம்ம் அழகுதான்... :)))

வருகையும் தருகையும் அழகோ அழகு திவ்யா....:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இனியவள் புனிதா said...

எல்லா கவிதையையும் இரசித்தேன்... :) //

வாருங்கள் புனிதா... :))

மிக்க நன்றி ரசிப்புக்கும் அழகான தருகைகும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sri said...

அச்சச்சோ என்ன அண்ணா இவ்ளோ ரொமேன்டிக்கா?? :-)
நல்லா இருக்கு..!! :D //

வாம்மா ஸ்ரீ... :)))
இப்படி கேட்டா என்ன பண்ண நான்...??? ;))) மிக்க நன்றி ஸ்ரீ...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//M.Saravana Kumar said...

அடப்போங்கப்பா.. இவருக்கு இதே வேலையாபோச்சு..
வயித்தெரிச்சல கெளப்பிக்கிட்டு..

;) //

வாங்க சரவணன்...
என்ன சரவணன் நான் அப்படியெல்லாம் கெளப்பிவிடுவேனா..?? :))))
மிக்க நன்றி .... :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில்பாரதி said...

அருமையான கவிதைகள்!!!!

காதல் தெரிக்கிறது கவிதைகளில் //

வாங்க எழில்... :)))
காதல் தெரிக்கிறதா..? அஹா...:))) மிக்க நன்றி....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// எழில்பாரதி said...

//உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...//

அட அப்படியா!!!! //

அட அப்படித்தான்... :)))
மிக்க நன்றி எழில் 'அட' போட்ட பின்னூட்டத்திற்கு... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhmaangani said...

//ஒரேயொரு முத்தம்
கொடுடி என
இனியும் உன்னைக்
கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டேன்..
தேவையில்லாமல் என்னைத்
திருடனாக்காதே...//

அட நல்லா இருக்கே!! எப்படியலாம் யோசிக்கிறாங்கய்யா..:))//

அட இது நல்லா இருக்கே... தமிழ்மாங்கனியை விடவா நான் யோசிச்சிட்டேன்...?? ;)))))
நன்றி தமிழ்... :)))

கயல்விழி சொன்னது…

//ஹாலோ,உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?? ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்! :))//

:) :)

\\உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...\\

ரொம்ப அழகான கவிதை. I am so glad I read your blog.

கயல்விழி சொன்னது…

ஒரு சின்ன சஜஷன்,

வெள்ளைக்கார ஜோடிகளின் படத்தை போடுவது போல, இந்திய ஜோடிகளின் படத்தைப்போட்டு கவிதை எழுதினால் ஒரு நேட்டிவிட்டி இருப்பதோடு நம்மை தொடர்பு படுத்திப்பார்க்கவும் வசதியாக இருக்கும் இல்லையா?

Divyapriya சொன்னது…

//நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...//

ரொம்ப அழகான வர்ணனை...

பெயரில்லா சொன்னது…

//ஹய்யோ உன்னைப் போய்
எந்த லூசுடா காதலிப்பா...
எனக் கேட்கிறாய்
நீ என்னவோ
பெரிய அறிவாளி
என நினைத்துக்கொண்டு...//

hahaha

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhmaangani said...

//உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...//

ஹாலோ,உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?? ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்! :))//

ஹலோ தமிழ்... என்ன இது
இந்தப் பேதைக்கு எதற்கு போதை...?? ;)))))) என்ன நடக்கட்டும்...?? ;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhmaangani said...

//என்னைவிட உன்னை
இப்படி இறுக்கிப்
பிடித்திருக்கும் உன்
உடைமீது கூட
இப்பொழுதெல்லாம்
பொறாமை வருகிறது
தெரியுமா...?//

நவீன், எங்கயோ போயிட்டீங்க!!! கலக்குங்கய்யா!:)) //

தமிழ்...
மிக்க மகிழ்ச்சி... தமிழின் வருகைக்கும் தருகைக்கும்... ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//விஜய் said...

வார்த்தைகள் களிநடனம் புரிகின்றன.தொடர்புடைய படங்களும் சிரிக்கின்றன அருமையான தொகுப்பு.

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய் //

வாங்க விஜய்... :))
நன்றி.. நன்றி... கண்டிப்பாக வருகிறேன்.... ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Aruna said...

As usual....fun with words!!!!
nice..

anbudan aruNa //

வாருங்கள் அருணா.. :))
மிக்க நன்றி அழகான வருகைக்கு.... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சந்தோஷ் = Santhosh said...

சூப்பரு வழக்கம் போல.. //

வாங்க சந்தோஷ்... :)))
நீண்ட நாட்களுக்குப் பின் இங்கே.... மிக்க மகிழ்ச்சி... :)))))

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\
கொஞ்சம் பேசிவிடேன்
என்னிடம்..
கோபத்திலும் நீ அழகாக
இருக்கிறாய் என்ற பொய்யை
எத்தனைமுறைதான்
சொல்வது
செல்லக் குரங்கே..??
\

முடிவா என்ன சொல்ல வாறிங்க..;)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஸ்ரீ said...

தல கொஞ்சியே கொன்னுட்டீங்க :)

\\என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...\\

சூப்பரப்பு //

வாங்க ஸ்ரீ... :)))
அட என்னாங்க கொஞ்சினேன் நான்.. உங்க கவிதைகளை விடவா..?? :)))

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\\
நான் நல்லா இருக்கிறேனா
இல்லை என் சுரிதார் நல்லா இருக்கா
எனக் கேட்கிறாய்..
இரண்டுபேருமே
சேர்ந்திருந்தாலும் அழகுதான்
சேராமலிருந்தாலும் அழகுதான்
எனச் சொன்னால் ஏண்டி
அடிக்க வருகிறாய் ...??
\\\

அண்ணே முடியல...;)

நாங்கள்ளாம் பாலை வனத்துல இருக்கிறோம்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\\
என்னிடம் உனக்கு
என்ன பிடிக்கும் என
நீ தானே கேட்டாய்...??
சொல்லவா இல்லைக்
காட்டவா எனச்
சொன்னதற்குப் போய்
இப்படிக் கிள்ளுகிறாயே
ராட்சசி...
\\\

அடஅடஅடடா...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\\
ஒரேயொரு முத்தம்
கொடுடி என
இனியும் உன்னைக்
கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டேன்..
தேவையில்லாமல் என்னைத்
திருடனாக்காதே...
///

ஏன் இதுக்கு முன்னால நீங்க திருடினதே இல்லையா அண்ணன்..;))
இந்த பொய்தானே வேணாம்கிறது..!

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\\
உன்னைக் கெஞ்சக் கெஞ்ச
ரொம்பத்தான்
மிஞ்சுகிறாய் நீ..
என்னடா
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
எனக்கோபமாகக் கேட்கிறாய்
உன்னைத்தான் என்ற
உண்மை உணராமல்...
\\\

ம்ம்ம்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

////
என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...
///

கலக்கல்...! :)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\\
உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...
\\\

அது எங்களுக்கு தெரியும் காதலரே... எப்ப உண்மையை ஒப்புக்க போறிங்க...;)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\\
என்னைவிட உன்னை
இப்படி இறுக்கிப்
பிடித்திருக்கும் உன்
உடைமீது கூட
இப்பொழுதெல்லாம்
பொறாமை வருகிறது
தெரியுமா...?
\\\
அடஅடஅடடா...! :)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

///
உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ..
///

நல்லாருக்கு...!

தமிழன்-கறுப்பி... சொன்னது…

மொத்தம் அழகழகான தருணங்கள்...!

கொஞ்சல்கள் சூப்பர்...!

காதலும் அதன் கலையும் இவையல்லவோ அண்ணன்....

ஆதலினால் கவிதை செய்க...!

(ஒரு கவிதையை காதலிப்பதும் கவிதைதானே! )

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//subha said...
உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...

i have no words to say...wonderful naveen....//

வாங்க சுபா.. :))
மிக்க நன்றி... அழகான வருகைக்கும் மிக அழகான உணர்வுகளுக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம்/Raam said...
அருமை....!! //

வாங்க ராம்.. :))
எப்படி இருக்கிறீர்கள்..?? மிக்க நன்றி தவறாத வருகைக்கும் அழகான தருகைக்கும்....:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
//என்னைவிட உன்னை
இப்படி இறுக்கிப்
பிடித்திருக்கும் உன்
உடைமீது கூட
இப்பொழுதெல்லாம்
பொறாமை வருகிறது
தெரியுமா...?//

அவ்வ்வ்வ்வ்!!! //

வாங்க சதீஷ்...:))
என்ன இப்படி ஒரு ரியாக்சன்..?? :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
//நான் நல்லா இருக்கிறேனா
இல்லை என் சுரிதார் நல்லா இருக்கா
எனக் கேட்கிறாய்..
இரண்டுபேருமே
சேர்ந்திருந்தாலும் அழகுதான்
சேராமலிருந்தாலும் அழகுதான்
எனச் சொன்னால் ஏண்டி
அடிக்க வருகிறாய் ...??//

கவிஞரே எனக்கு ஒரு டவுட்டு :) எதால அடி வாங்குனீங்க?? //

சதீஷ்..:)))
டவுட்டு எல்லாம் இல்லை... நானே கற்பனையிலே எழுதிகிட்டு இருக்கிறேன் .. இப்படி ஏடாகூடமா கேள்வி கேட்டால் என்ன செய்வேன்..?? ;))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
//என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...//

சூப்பருங்கோ!! //

வாங்க சதீஷ்.. :))
மிக்க நன்றி... சூப்பரான வருகைக்கும் கலக்கலான தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கயல்விழி said...
//ஹாலோ,உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?? ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்! :))//

:) :)

\\உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...\\

ரொம்ப அழகான கவிதை. I am so glad I read your blog. //

வாங்க கயல்விழி... :))
முதன் வருகைக்கு மிக்க நன்றி... !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கயல்விழி said...
ஒரு சின்ன சஜஷன்,

வெள்ளைக்கார ஜோடிகளின் படத்தை போடுவது போல, இந்திய ஜோடிகளின் படத்தைப்போட்டு கவிதை எழுதினால் ஒரு நேட்டிவிட்டி இருப்பதோடு நம்மை தொடர்பு படுத்திப்பார்க்கவும் வசதியாக இருக்கும் இல்லையா? //

நீங்க சொல்லறதும் சரிதான் கயல்... ஆனா நம்ம இந்திய ஜோடிகள் படங்கள் கிடப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது... அதனால் தான்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divyapriya said...
//நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...//

ரொம்ப அழகான வர்ணனை... //

வாங்க திவ்யா..:))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்... நீங்களும் திவ்யாவா..?? நீங்க எந்த திவ்யாங்க..?? ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//malar said...
//ஹய்யோ உன்னைப் போய்
எந்த லூசுடா காதலிப்பா...
எனக் கேட்கிறாய்
நீ என்னவோ
பெரிய அறிவாளி
என நினைத்துக்கொண்டு...//

hahaha //

வாங்க மலர்..::))
என்னங்க சிரிப்பு..?? ;)))) முதன் முறை இங்கு மலர்ந்தமைக்கு மிக்க நன்றி... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...
\
கொஞ்சம் பேசிவிடேன்
என்னிடம்..
கோபத்திலும் நீ அழகாக
இருக்கிறாய் என்ற பொய்யை
எத்தனைமுறைதான்
சொல்வது
செல்லக் குரங்கே..??
\

முடிவா என்ன சொல்ல வாறிங்க..;) //

வாங்க தமிழன்...
இப்படி எல்லாம் என்னைய கேள்வி கேட்டா நான் அழுதுடுவேன்.. :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...
\\\
நான் நல்லா இருக்கிறேனா
இல்லை என் சுரிதார் நல்லா இருக்கா
எனக் கேட்கிறாய்..
இரண்டுபேருமே
சேர்ந்திருந்தாலும் அழகுதான்
சேராமலிருந்தாலும் அழகுதான்
எனச் சொன்னால் ஏண்டி
அடிக்க வருகிறாய் ...??
\\\

அண்ணே முடியல...;)

நாங்கள்ளாம் பாலை வனத்துல இருக்கிறோம்... //

அஹா தமிழன் ஏன்...??
உங்க எழுத்தைப் படிச்சா பாலைவனத்திலே இருக்கற மாதிரி தெரியலையே..

சேலை வனத்திலே தான் இருக்கிற மாதிரி தெரியுது.. :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...
\\\
என்னிடம் உனக்கு
என்ன பிடிக்கும் என
நீ தானே கேட்டாய்...??
சொல்லவா இல்லைக்
காட்டவா எனச்
சொன்னதற்குப் போய்
இப்படிக் கிள்ளுகிறாயே
ராட்சசி...
\\\

அடஅடஅடடா... //

தமிழன்...
மிக்க நன்றி அட போட வைக்கும் பின்னூட்டத்திற்கு.... :)))

Vijay சொன்னது…

\\ஹய்யோ உன்னைப் போய்
எந்த லூசுடா காதலிப்பா...
எனக் கேட்கிறாய்
நீ என்னவோ
பெரிய அறிவாளி
என நினைத்துக்கொண்டு...\\

யதார்த்தமான உண்மை :)

Literally amazing kavithai.

Vijay

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...

\\\
ஒரேயொரு முத்தம்
கொடுடி என
இனியும் உன்னைக்
கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டேன்..
தேவையில்லாமல் என்னைத்
திருடனாக்காதே...
///

ஏன் இதுக்கு முன்னால நீங்க திருடினதே இல்லையா அண்ணன்..;))
இந்த பொய்தானே வேணாம்கிறது..! //

நானா திருட்டா..?? என்ன பேச்சு பேசுறீங்க தமிழன்..?? தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை திருட்டுனு உங்களுக்கு தெரியாதா..?? ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...

\\\
உன்னைக் கெஞ்சக் கெஞ்ச
ரொம்பத்தான்
மிஞ்சுகிறாய் நீ..
என்னடா
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
எனக்கோபமாகக் கேட்கிறாய்
உன்னைத்தான் என்ற
உண்மை உணராமல்...
\\\

ம்ம்ம்... //

என்ன தமிழன்..

ம்ம்ம்ம்....?? ;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...

\\\
உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...
\\\

அது எங்களுக்கு தெரியும் காதலரே... எப்ப உண்மையை ஒப்புக்க போறிங்க...;) //

எந்த உண்மையை ஒப்புக்கனும் தமிழன்..?? நான் ஒரு கவிதைக் காதலன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே..!! ;)))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...

\\\
என்னைவிட உன்னை
இப்படி இறுக்கிப்
பிடித்திருக்கும் உன்
உடைமீது கூட
இப்பொழுதெல்லாம்
பொறாமை வருகிறது
தெரியுமா...?
\\\
அடஅடஅடடா...! :) //

வாங்க தமிழன்..
திரும்பவும் அட... :))) நல்லாருக்கு... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...

///
உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ..
///

நல்லாருக்கு...! //

வாங்க தமிழன்..
விமர்சன மழையில் நனைத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டீர்கள்.. :))) மிக்க நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//விஜய் said...

\\ஹய்யோ உன்னைப் போய்
எந்த லூசுடா காதலிப்பா...
எனக் கேட்கிறாய்
நீ என்னவோ
பெரிய அறிவாளி
என நினைத்துக்கொண்டு...\\

யதார்த்தமான உண்மை :)

Literally amazing kavithai.

Vijay //

வாங்க விஜய்..:))
மிக்க நன்றி... அழகான வருகைகும் மிக அழகான தருகைகும்... :))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...

மொத்தம் அழகழகான தருணங்கள்...!

கொஞ்சல்கள் சூப்பர்...!

காதலும் அதன் கலையும் இவையல்லவோ அண்ணன்....

ஆதலினால் கவிதை செய்க...!

(ஒரு கவிதையை காதலிப்பதும் கவிதைதானே! //

வாங்க தமிழன்..
கவிதையைதான் காதலிக்கிறேன் என கவிஞர் உங்களுக்கு தெரியாதா..? ;)))

மிக அழகான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி :)))

Karthik சொன்னது…

Kurumbu vilayadugirathu nanbare ...Ungal kavithaigalil...Good enjoyed poems with a humour...I willbe back often...

Ravishna சொன்னது…

முடியல நவீன் பிரகாஷ். எப்டி இப்டிலாம் உங்களால மட்டும் முடியுது?????
எனக்கும் சொல்லி குடுங்க....இல்ல அப்புறம் என் வைதேர்ச்சள்ள உங்க ப்ளாக் அவ்ளோ தான்

--ரவிஷ்னா

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Karthik said...

Kurumbu vilayadugirathu nanbare ...Ungal kavithaigalil...Good enjoyed poems with a humour...I willbe back often... //

வாருங்கள் கார்ததிக் :)))

குறும்பு விளையாடுகிறதா..? :)))
மிக்க நன்றி !!! மீண்டும் மீண்டும்
வாருங்கள்..:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Ravishna said...

முடியல நவீன் பிரகாஷ். எப்டி இப்டிலாம் உங்களால மட்டும் முடியுது?????
எனக்கும் சொல்லி குடுங்க....இல்ல அப்புறம் என் வைதேர்ச்சள்ள உங்க ப்ளாக் அவ்ளோ தான்

--ரவிஷ்னா //

வாருங்கள் ரவிஷ்னா.. :))))

அட சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு எல்லாம்
நான் பெரிய ஆள் இல்லீங்க.:))))

மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... தங்கள்
வருகையும் தருகையும்,...!!!

பெயரில்லா சொன்னது…

Hi Naveen

Supera iruku...
romba nal kalichu innaiku than padichen...
Ipadi thool kilapirukeinga...

Sophia

Baskaran சொன்னது…

நவீன் நல்லா இருக்கு உங்க கவிதை துளிகள் மன்னிக்கவும் மழை...

உன் காதலில்
தோற்றதினால்
க‌விஞன் ஆனேன்....
உன் காதலில்
ஜெயித்திருந்தால்...??

‍- ‍‍உங்கள் கவிதை மழையில்
நனைந்த ஒரு ரசிகன்....

கவிதையுடன்,
பாஸ்கரன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sophia said...

Hi Naveen

Supera iruku...
romba nal kalichu innaiku than padichen...
Ipadi thool kilapirukeinga...

Sophia //

வாங்க சோஃபியா.. :))

எப்படி இருக்கிறீர்கள்..? நீண்ட நாட்களுக்குப் பின் வந்தமைக்கு மிக்க நன்றி..
தூள் எல்லாம் கெளப்பலைங்க..
எல்லாம் உங்களைப் போன்ற ரசிகர்களின் உற்சாகம் தான்... :))))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்.... :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// baskaran said...

நவீன் நல்லா இருக்கு உங்க கவிதை துளிகள் மன்னிக்கவும் மழை...//

வாங்க பாஸ்கரன்.. :)))

அட கவிதை உங்கள் விமர்சனமே அழகாக இருக்கிறதே!!:))

// உன் காதலில்
தோற்றதினால்
க‌விஞன் ஆனேன்....
உன் காதலில்
ஜெயித்திருந்தால்...??

‍- ‍‍உங்கள் கவிதை மழையில்
நனைந்த ஒரு ரசிகன்....

கவிதையுடன்,
பாஸ்கரன். //

அழகான கவிதையில் நீங்கள் மட்டும் அல்ல என்னையும் நனைய வைத்துவிட்டீர்கள்...:)) இவ்வளவு அழகாக எழுதும் நீங்களும் கவிதைகள் எழுதலாமே பாஸ்கர்.. !!!

Bubeshkumar சொன்னது…

// உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...//

Romance thanga mudila..mihavum azhahana kavithai..vazthukkal

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Bubeshkumar said...

// உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...//

Romance thanga mudila..mihavum azhahana kavithai..vazthukkal//

வாருங்கள் பூபேஷ்.. :)))

தாங்க முடியலயா..?? :)))))

சிரிப்பை வரவழைத்தது....

மிக்க நன்றி பூபேஷ்... மீண்டும் வாருங்கள்...:))