செவ்வாய், அக்டோபர் 24, 2006

யாரும் பார்க்கவில்லை




பூக்கள்





என் முகம் அழகாயில்லை
என ஏன் தினம் தினம்
அலுத்துக்கொள்கிறாய்?
பூக்கள் எப்படியிருந்தாலும்
அழகுதான்




கோபமே இல்லை





போடா இப்பொழுதெல்லாம்
நீ திட்டினால் கூட எனக்கு
கோபமே வருவதில்லை
என செல்லமாக நீ
உதடு சுழித்தபோது
ஏற்பட்ட சுழலில்
அமிழ்ந்து போனது
என் கோபம்








பேசித்தொலை






நீ பேசப்போவதில்லை
என பறை சாற்றுவதுக்கு
இப்படி 1000 SMS அனுப்பி
என்னைப் படுத்துவதற்கு
பதில் என்னிடம் நீ
பேசித்தொலைத்திருக்கலாம்





உதடு க்ரீம்






என் முன்னால் இப்படி இனி
ஐஸ்கீரீம் சாப்பிடாதே
எனக்கும் இப்போதே
சாப்பிட வேண்டும் போல்
தோன்றுகிறது
உன் இதழ்களின் க்ரீமை






யாரும் பார்க்கவில்லை






நல்லவேளை
நீ வெட்கப்படும்போது
என்னைதவிர யாரும்
பார்க்கவில்லை
அப்புறம் அவனவன் உன்னை
காதலிக்க ஆரம்பித்து விடுவான்




சும்மா இரு







எல்லாரும் பார்க்கிறார்கள்
சும்மா இரு என சொல்கிறாய்
யாரும் இல்லாத இடத்தினில்
வந்தாலோ யாரும் பார்த்து
விட போகிறார்கள்
சும்மா இரு என்கிறாய்

43 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கவிதைகளும்... படங்களும்.... அருமை !

Unknown சொன்னது…

//என் முன்னால் இப்படி இனி
ஐஸ்கீரீம் சாப்பிடாதே
எனக்கும் இப்போதே
சாப்பிட வேண்டும் போல்
தோன்றுகிறது
உன் இதழ்களின் க்ரீமை//

சும்மா சில்லுன்னு இருக்கு இந்தக் காதல்.

கடல்கணேசன் சொன்னது…

வந்து விட்டீர்(கள்).. வாழ்த்துக்கள்.

நாகை சிவா சொன்னது…

படங்களும் அருமை, கவிதைகளும் அருமை. படங்களால் கவிதை இன்னும் மெருகேறி உள்ளது.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேவியர் said...
கவிதைகளும்... படங்களும்.... அருமை ! //

வாருங்கள் சேவியர் :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தேவ் | Dev said...
//என் முன்னால் இப்படி இனி
ஐஸ்கீரீம் சாப்பிடாதே
எனக்கும் இப்போதே
சாப்பிட வேண்டும் போல்
தோன்றுகிறது
உன் இதழ்களின் க்ரீமை//

சும்மா சில்லுன்னு இருக்கு இந்தக் காதல். //

வாங்க தேவ் :)) உங்கள் விமர்சனம் அதைவிட சில்லென்று இருக்கிறது !! நன்றி தேவ் ! :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கடல்கணேசன் said...
வந்து விட்டீர்(கள்).. வாழ்த்துக்கள். //

வாருங்கள் கணேசன் :)) மிக்க நன்றி :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நாகை சிவா said...
படங்களும் அருமை, கவிதைகளும் அருமை. படங்களால் கவிதை இன்னும் மெருகேறி உள்ளது. //

வாங்க சிவா :)) கவிதைகள் படிப்பவர்களால் மேலும் அழகு பெறுகின்றன. தருகைக்கு மிக்க நன்றி சிவா !!

கைப்புள்ள சொன்னது…

வழக்கம் போல கவிதையும் ஜில்...படங்கள் டபுள் ஜில் ஜில்...

அசத்தறீங்க. ஆனா ப்ரோஃபைல்ல ஏன் இம்புட்டு சோகமா நிக்கீங்க?

துளிர் சொன்னது…

கவிதைகளும்... படங்களும்.... அருமை !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// கைப்புள்ள said...
வழக்கம் போல கவிதையும் ஜில்...படங்கள் டபுள் ஜில் ஜில்...//

வாங்க கைப்புள்ளே :))

வருகைக்கும் தருகைக்கும் ரொம்ப நன்றிங்க !! :))

//அசத்தறீங்க. ஆனா ப்ரோஃபைல்ல ஏன் இம்புட்டு சோகமா நிக்கீங்க? //

அப்படியா சொல்றீங்க ? சிந்தனை பண்றபோ எடுத்ததுங்க அதுதான் அப்படி இருக்கு ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//துளிர் said...
கவிதைகளும்... படங்களும்.... அருமை ! //

வாங்க துளிர் !! :))

முதன் முறையாக என் வலையில் துளிர்த்திருக்கிறீர்கள்!! மிக்க நன்றி !!

பெயரில்லா சொன்னது…

வழக்கம் போல கவிதைகளும்... படங்களும்.... அருமை !

சத்தியா சொன்னது…

அப்பப்பா!... சொல்லி வேலையே இல்லை. அசத்திட்டீங்க போங்க.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//காண்டீபன் said...
வழக்கம் போல கவிதைகளும்... படங்களும்.... அருமை ! //

வாங்க காண்டீபன் :))

மிக்க நன்றி! அருமை தங்கள் வருகையும் தருகையும் !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சத்தியா said...
அப்பப்பா!... சொல்லி வேலையே இல்லை. அசத்திட்டீங்க போங்க. //

வாங்க சத்யா :))

என்ன இப்படி சொல்லி விட்டீர்கள். உங்களை விடவா நான் அசத்துகிறேன். :)) மிக்க நன்றி !

kadaikoditamilan சொன்னது…

Summa pinnuringa ponga.....kadal kadli mel mattumala...ungal kavithaiyilumthan....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//kadaikoditamilan said...
Summa pinnuringa ponga.....kadal kadli mel mattumala...ungal kavithaiyilumthan....//

வாருங்கள் கடைகோடி தமிழன் :))

காதலான விமர்சனதிற்கு மிக்க நன்றி !!

தாரிணி சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தாலும் அந்த குறும்பு இன்னும் மாறாமல் உள்ளது.. நான் என்ன புதிதாய் சொல்லிவிடப் போகிறேன்..

அடுத்த பயணத்தின் ஆரம்பமே அற்புதமாக உள்ளது.. தொடரட்டும் உங்கள் சில்மிஷங்கள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தாரிணி said...
நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தாலும் அந்த குறும்பு இன்னும் மாறாமல் உள்ளது.. நான் என்ன புதிதாய் சொல்லிவிடப் போகிறேன்..

அடுத்த பயணத்தின் ஆரம்பமே அற்புதமாக உள்ளது.. தொடரட்டும் உங்கள் சில்மிஷங்கள். //

வாருங்கள் தாரிணி :))

சில்மிஷங்கள் தொடரும் :)) மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))

ஆவி அண்ணாச்சி சொன்னது…

கவிதையாலயே கொல்றீங்களே நவீன் பிரகாஷ் அவர்களே!

U.P.Tharsan சொன்னது…

அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஆவி அண்ணாச்சி said...
கவிதையாலயே கொல்றீங்களே நவீன் பிரகாஷ் அவர்களே! //

வாங்க ஆவி அண்ணாச்சி :))
கவிதையாலே நான் கொல்றனா ? ஆவியாக வந்ததற்கு மிக்க நன்றி அண்ணாச்சி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//U.P.Tharsan said...
அருமையா இருக்கு வாழ்த்துக்கள் //

வாங்க தர்சன் :)) மிக்க நன்றி :))

ILA (a) இளா சொன்னது…

சில்லுன்னு ஒரு ஐஸ்கிரீம்
தனிமையும் தடவலும்

இராம்/Raam சொன்னது…

குரு,

சூப்பராக இருந்தது ஒவ்வொரு கவிதைகளும்......

பெயரில்லா சொன்னது…

என் முகம் அழகாயில்லை
என ஏன் தினம் தினம்
அலுத்துக்கொள்கிறாய்?
பூக்கள் எப்படியிருந்தாலும்
அழகுதான்



பூக்களை மிகவும் ரசிக்க தெரிந்தவர் போலும்...

கவிதைகளும் படங்களும் மிகவும் அருமை!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ILA(a)இளா said...
சில்லுன்னு ஒரு ஐஸ்கிரீம்
தனிமையும் தடவலும் //

வாங்க இளா :)) சில்லுன்னு இருக்கு உங்க விமர்சனம்.மிக்க நன்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ராம் said...
குரு,

சூப்பராக இருந்தது ஒவ்வொரு கவிதைகளும்...... //

வாங்க சிஷ்யரே ராம் :))

என்னங்க ராம் இப்படி குருவாக்கீட்டீங்க?? வருகைக்கும் தருகைக்கும் நன்றி :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சுபா said...
என் முகம் அழகாயில்லை
என ஏன் தினம் தினம்
அலுத்துக்கொள்கிறாய்?
பூக்கள் எப்படியிருந்தாலும்
அழகுதான்

பூக்களை மிகவும் ரசிக்க தெரிந்தவர் போலும்...

கவிதைகளும் படங்களும் மிகவும் அருமை!!! //

வாங்க சுபா. பூக்கள் பிடிக்காதவர் உண்டோ ? :)) பூத்தமைக்கு மிக்க நன்றி ! :))

கார்த்திக் பிரபு சொன்னது…

kadaisi irandum arumai..adhilum last one sooper thalaiva..marravai sumar ragam thanm..pls boss english kalakatheenga..adhu sari enna alaye kanom romba nala>?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கார்த்திக் பிரபு said...
kadaisi irandum arumai..adhilum last one sooper thalaiva..marravai sumar ragam thanm..pls boss english kalakatheenga..adhu sari enna alaye kanom romba nala>? //

வாங்க கார்த்திக் :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் ! ஆலோசனைக்கு நன்றி கார்த்திக். ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சிக்கிறேன் :) என்ன செய்வது SMS எனற இடத்தில் குறுஞ்செய்தி என சொன்னால் சற்று அந்நியப்படுகிறதல்லவா ?

Santhosh சொன்னது…

கவிதைகள் நல்லா இருக்கு நவீன். அதிலும் முதல் கவிதை சூப்பர்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சந்தோஷ் said...
கவிதைகள் நல்லா இருக்கு நவீன். அதிலும் முதல் கவிதை சூப்பர் //

வாங்க சந்தோஷ்:))
வருகைக்கும் தருகைக்கும் நன்றி :))

Unknown சொன்னது…

/என் முகம் அழகாயில்லை
என ஏன் தினம் தினம்
அலுத்துக்கொள்கிறாய்?
பூக்கள் எப்படியிருந்தாலும்
அழகுதான்
/

வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு!

/என் முன்னால் இப்படி இனி
ஐஸ்கீரீம் சாப்பிடாதே
எனக்கும் இப்போதே
சாப்பிட வேண்டும் போல்
தோன்றுகிறது
உன் இதழ்களின் க்ரீமை/

ஐஸ்!! ஐஸ்!! :))

/எல்லாரும் பார்க்கிறார்கள்
சும்மா இரு என சொல்கிறாய்
யாரும் இல்லாத இடத்தினில்
வந்தாலோ யாரும் பார்த்து
விட போகிறார்கள்
சும்மா இரு என்கிறாய்/

காதல் முரண்???

படித்தேன்... ரசித்தேன்...

Divya சொன்னது…

Apt picture selection Naveen, keep up your good work!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அருட்பெருங்கோ said...

படித்தேன்... ரசித்தேன்... //

வாருங்க அருள் :))
தேன்!! தேன்!!உங்கள் வருகையும் விமர்சனமும் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
Apt picture selection Naveen, keep up your good work! //

வாங்க திவ்யா :))

வருகைக்கும் தருகைக்கும் நன்றிகள் பல :))

சேதுக்கரசி சொன்னது…

நீண்ட விடுமுறையில் சென்றுவிட்டதால் காதல் சொட்டும் உங்கள் கவிதைகளை சமீபத்தில் வாசிக்க இயலவில்லை. இப்போது வாசித்து ஒரு நல்ல relaxing break எடுத்துக்கொண்டேன். சூப்பர்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேதுக்கரசி said...
நீண்ட விடுமுறையில் சென்றுவிட்டதால் காதல் சொட்டும் உங்கள் கவிதைகளை சமீபத்தில் வாசிக்க இயலவில்லை. இப்போது வாசித்து ஒரு நல்ல relaxing break எடுத்துக்கொண்டேன். சூப்பர். //

வாங்க சேதுக்கரசி :))
நன்றாக ரிலாக்ஸ் செய்து கொண்டீர்களா ? :)) மிக்க நன்றி !! வருகை மகிழ்ச்சியளிக்கிறது !!

பெயரில்லா சொன்னது…

\\எல்லாரும் பார்க்கிறார்கள்
சும்மா இரு என சொல்கிறாய்
யாரும் இல்லாத இடத்தினில்
வந்தாலோ யாரும் பார்த்து
விட போகிறார்கள்
சும்மா இரு என்கிறாய்\

என்னமோ சும்மா இருன்னு சொன்னயுடனேயே கேட்டுடறமாதிரி சலிச்சிக்கிறீங்க கவிஞரே!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\எல்லாரும் பார்க்கிறார்கள்
சும்மா இரு என சொல்கிறாய்
யாரும் இல்லாத இடத்தினில்
வந்தாலோ யாரும் பார்த்து
விட போகிறார்கள்
சும்மா இரு என்கிறாய்\

என்னமோ சும்மா இருன்னு சொன்னயுடனேயே கேட்டுடறமாதிரி சலிச்சிக்கிறீங்க கவிஞரே!!//

வாங்க :)) என்ன சலிச்சுக்கறேனா?
அட சும்மா இருன்னு சொன்னா
சும்மா இருக்கற மாதிரி
நடிக்கவாச்சும் செய்யனும் இல்லயா?
;))))) அதான்...

kovai sathish சொன்னது…

nalla irukku nanbaa...thodarattum...