யார் யாரோ பார்த்துப்
போகும் என் கவிதைகளை
என்றேனும் நீ
வாசித்திருக்கிறாயா?
போகும் என் கவிதைகளை
என்றேனும் நீ
வாசித்திருக்கிறாயா?
காலைப் பனியிலும்
மாலைகளின் மடியிலும்
வீழ்ந்து கிடக்கும்
உன் பற்றிய என்
கவிதைகளை என்றேனும்
நீ உணர்ந்திருக்கிறாயா?
இந்த மனசோட அட்டகாசம்
வர வர தாங்க முடியாலை
இன்னிக்கு காலையிலே
என்னைப் பார்த்து
சிரித்துவிட்டாயாம் !
போய் உடனே பேசுன்னு
ரொம்பத்தான் படுத்துது !
வர வர தாங்க முடியாலை
இன்னிக்கு காலையிலே
என்னைப் பார்த்து
சிரித்துவிட்டாயாம் !
போய் உடனே பேசுன்னு
ரொம்பத்தான் படுத்துது !
நீ இல்லாத என்
பயணங்களில்
கடந்து செல்கின்ற
ஒவ்வொரு
வேகத்தடையும்
உன் இதயத்
துடிப்பை எனக்கு
உணர்த்துகிறது
பயணங்களில்
கடந்து செல்கின்ற
ஒவ்வொரு
வேகத்தடையும்
உன் இதயத்
துடிப்பை எனக்கு
உணர்த்துகிறது
கருப்பாக
இருப்பதாக
குறைபட்டுக்
கொள்கிறாய்
சிலைகள்
எந்த நிறத்தில்
இருந்தால் என்ன?
இருப்பதாக
குறைபட்டுக்
கொள்கிறாய்
சிலைகள்
எந்த நிறத்தில்
இருந்தால் என்ன?
தாமதமாக வந்ததிற்காக
முத்தம் தரமாட்டேன் என
ஏன் அழிச்சாட்டியம் செய்கிறாய் ?
சரி நீ தரவேண்டாம் போ
நானே தந்துவிட்டுப்
போகிறேன் என்றாலும் ஏன்
முறைக்கிறாய் ?
முத்தம் தரமாட்டேன் என
ஏன் அழிச்சாட்டியம் செய்கிறாய் ?
சரி நீ தரவேண்டாம் போ
நானே தந்துவிட்டுப்
போகிறேன் என்றாலும் ஏன்
முறைக்கிறாய் ?
சிலசமயங்களில்
உன் பேச்சுக்கள்
லூசுத்தனமாக இருப்பாத
எனக்குப் படுகிறது என
தெரியாமல்
உன்னிடம்
சொல்லிவிட்டதற்காக
என்னிடம் பேசாமல்
இருந்த தினங்களில்
ஏண்டா லூசாடா நீ ?
எனக் கேட்ட
நண்பனை
அமைதியாகப்
பார்த்துக்கொண்டிருதேன் !
எனக்கெல்லாம்
காதல் என்பதே
வராது என
கல்லூரியில்
என் நண்பர்களிடம்
சொல்லிகொண்டிருதபோதுதான்
கொலுசு அணிந்து
வந்து காதல் என்னைப்
பார்த்து சிரித்தது !
காதல் என்பதே
வராது என
கல்லூரியில்
என் நண்பர்களிடம்
சொல்லிகொண்டிருதபோதுதான்
கொலுசு அணிந்து
வந்து காதல் என்னைப்
பார்த்து சிரித்தது !
சரி சரி போய்த்தொலை
உன்னைக் காதலித்துத்
தொலைக்கிறேன்
என்றாவது சொல்லிவிட்டு
போயேன்
இந்த மனசோட தொல்லை
தாங்கமுடியலை !
உன்னைக் காதலித்துத்
தொலைக்கிறேன்
என்றாவது சொல்லிவிட்டு
போயேன்
இந்த மனசோட தொல்லை
தாங்கமுடியலை !
என் நினைவு வந்தால்
என்ன செய்வாய் என
நீதானே என்னைக் கேட்டாய்
பின் எதற்கு பதிலைக்
கேட்டு கோபப்படுகிறாய்
அதுவும் சிரித்துக் கொண்டே !
என்ன செய்வாய் என
நீதானே என்னைக் கேட்டாய்
பின் எதற்கு பதிலைக்
கேட்டு கோபப்படுகிறாய்
அதுவும் சிரித்துக் கொண்டே !
பஸ்ஸ்டாப்புக்கு
வருவதற்குள்
நனைத்துவிட்ட
மழையை சபித்தபடி
நீ இருக்கிறாய்
நானோ நீ செல்ல
வேண்டிய பேருந்து
இப்போதைக்கு
வரக்கூடாது என
வரம்கேட்டு
வேண்டியபடி இருக்கிறேன் !
வருவதற்குள்
நனைத்துவிட்ட
மழையை சபித்தபடி
நீ இருக்கிறாய்
நானோ நீ செல்ல
வேண்டிய பேருந்து
இப்போதைக்கு
வரக்கூடாது என
வரம்கேட்டு
வேண்டியபடி இருக்கிறேன் !
எப்பவும் அதே
நெனப்புதானா
வேற நெனப்பே
இல்லையா
என அடிக்கடி
கேட்கிறாய்
கேட்கும்போதே
வழிந்து ஓடுகிறது
உன் அழகான
வெட்கம் !
வெட்கம் காட்டும்
நினைவுகள் வாழ்க !
நெனப்புதானா
வேற நெனப்பே
இல்லையா
என அடிக்கடி
கேட்கிறாய்
கேட்கும்போதே
வழிந்து ஓடுகிறது
உன் அழகான
வெட்கம் !
வெட்கம் காட்டும்
நினைவுகள் வாழ்க !
30 கருத்துகள்:
//s said...
அழகான வெளிப்பாடு. அதை மெருகேற்றும் புகைப்படங்கள்.//
வாங்க சக்தி :)
நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))
ம்ம்ம்....
//என் நினைவு வந்தால்
என்ன செய்வாய் என
நீதானே என்னைக் கேட்டாய்
பின் எதற்கு பதிலைக்
கேட்டு கோபப்படுகிறாய்
அதுவும் சிரித்துக் கொண்டே !
//
//கேட்கும்போதே
வழிந்து ஓடுகிறது
உன் அழகான
வெட்கம் !
//
இது ரெண்டும் நல்லா இருக்கு..
அடிக்கடி காணாம போய்டுவீங்களோ? வ.வா.சங்கம் கேள்விப் பட்டிருக்கீங்களா? அதுல தேவ் உங்களைப் பத்தி ஏதோ சொல்லி இருக்கார் பாருங்க :)
நவீன்,
அருமை. பல தடவைகள் படித்து இரசித்தேன். இனியும் படித்து இரசிப்பேன். எத்தனை தடவை படித்தாலும் தெவிட்டாத கவிதை.
/* பஸ்ஸ்டாப்புக்கு
வருவதற்குள்
நனைத்துவிட்ட
மழையை சபித்தபடி
நீ இருக்கிறாய் */
பஸ்ஸ்டாப்பு எனும் ஆங்கிலச் சொல்லுக்குப் பதிலாக பேருந்துத் தரிப்பிடம் என தமிழில் எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமென்பது என் கருத்து. நாம் ஈழத்தில் இப்படி ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது குறைவென்பதால் எனக்கு இப்படி எண்ணத்தோன்றியதோ தெரியாது.தவறாயின் மன்னித்துக் கொள்ளுங்கள்.
// பொன்ஸ் said...
ம்ம்ம்....
இது ரெண்டும் நல்லா இருக்கு..
அடிக்கடி காணாம போய்டுவீங்களோ? வ.வா.சங்கம் கேள்விப் பட்டிருக்கீங்களா? அதுல தேவ் உங்களைப் பத்தி ஏதோ சொல்லி இருக்கார் பாருங்க :) //
வாங்க பொன்ஸ் ! :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :))
ம்ம் தேவ் சொன்னதை நானும் பார்த்தேன் பொன்ஸ் :) வவாசங்கத்திப் பற்றி அறியாதவர்கள் இருக்கமுடியுமா??:))
//வெற்றி said...
நவீன்,
அருமை. பல தடவைகள் படித்து இரசித்தேன். இனியும் படித்து இரசிப்பேன். எத்தனை தடவை படித்தாலும் தெவிட்டாத கவிதை.//
வாருங்கள் வெற்றி !! :)) தங்களின் தொடர் வருகையும் தருகையும் மிக்க மகிழ்ச்சி :)
//பஸ்ஸ்டாப்பு எனும் ஆங்கிலச் சொல்லுக்குப் பதிலாக பேருந்துத் தரிப்பிடம் என தமிழில் எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமென்பது என் கருத்து. நாம் ஈழத்தில் இப்படி ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது குறைவென்பதால் எனக்கு இப்படி எண்ணத்தோன்றியதோ தெரியாது.தவறாயின் மன்னித்துக் கொள்ளுங்கள். //
இதில் மன்னிக்க என்ன இருக்கிறது ! :)நீங்க சொல்லுவது மிகவும் சரி! ஆங்கிலக் கலபில்லாமல் எழுதவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் 'பேருந்து தரிப்பிடம்' எனபது தமிழ் நாட்டில் யாராவது கேட்டால் அது என்ன என்று கேட்பார்கள்:)) ஏனென்றால் இங்கு ஆங்கைலக்கலப்பில்லா தமிழ் பேச்சு என்பது அரிது! பெரும்பாலும் ஆங்கிலக் கலப்பை தவிர்க்க முயற்சிக்கிறேன் :))
Hi vaanga...
romba naala aali kanom
naveen andha moondravadhu kavidhai soopero sooper..
and orey maadhiri artham tharum(2&3) kavidhaigalai orey postil eludhatheergal
nandri thodarndhu kalakungal..
//கருப்பாக
இருப்பதாக
குறைபட்டுக்
கொள்கிறாய்
சிலைகள்
எந்த நிறத்தில்
இருந்தால் என்ன?//
*******************
//எனக்கெல்லாம்
காதல் என்பதே
வராது என
கல்லூரியில்
என் நண்பர்களிடம்
சொல்லிகொண்டிருதபோதுதான்
கொலுசு அணிந்து
வந்து காதல் என்னைப்
பார்த்து சிரித்தது ! //
*******************
எப்படிங்க இதெல்லாம்?
அந்தக் காதல் தெய்வமோ, இல்லை இந்தக் காதல் தேவதையோ
உங்களுக்கு சீக்கிரம் வரம் கொடுப்பாதாகுக!
(ஏற்கனவே கிடைச்சிடுச்சா?)
ப்ரியமுடன்,
சேரல்.
//karthick said...
romba naala aali kanom
naveen andha moondravadhu kavidhai soopero sooper..
and orey maadhiri artham tharum(2&3) kavidhaigalai orey postil eludhatheergal
nandri thodarndhu kalakungal.. //
வாங்க கார்த்திக் :) நேரமின்மைதான்!தாங்கள் சிட்டிக்காடியமைக்கு மிக்க நன்றி:) இனி அப்படி நடந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறேன் பொருத்தருள்க!:))
//சேரல் said...
எப்படிங்க இதெல்லாம்?
அந்தக் காதல் தெய்வமோ, இல்லை இந்தக் காதல் தேவதையோ
உங்களுக்கு சீக்கிரம் வரம் கொடுப்பாதாகுக!//
வாருங்கள் சேரல் :)) நீங்கள் மிகுந்த ரசனைக்காரர் ஆயிற்றே :)) எல்லாம் உங்கள் ஆசிதான் சேரல் :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :))
//karthick said...
romba naala aali kanom
naveen andha moondravadhu kavidhai soopero sooper..
and orey maadhiri artham tharum(2&3) kavidhaigalai orey postil eludhatheergal
nandri thodarndhu kalakungal.. //
வாங்க கார்த்திக் :) நேரமின்மைதான்!தாங்கள் சிட்டிக்காடியமைக்கு மிக்க நன்றி:) இனி அப்படி நடந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறேன் பொருத்தருள்க!:))
//போய் உடனே பேசுன்னு
ரொம்பத்தான் படுத்துது //
உங்க கவிதையை படிச்சாலும் இப்படித்தான் மனசை ஏதோ படுத்துது.
//கொள்கிறாய்
சிலைகள்
எந்த நிறத்தில்
இருந்தால் என்ன?//
அற்புதம். அழகு, கருப்பு பெண்களுக்கு நல்ல அறிவுரை
//நானே தந்துவிட்டுப்
போகிறேன் என்றாலும் ஏன்
முறைக்கிறாய் ?//
குறும்பு, குசும்பு
வாருங்கள் இளா :) வரப்பிலிருந்து இளைப்பாற இங்கு வந்து விட்டுச் சொன்றதற்கு மிக்க நன்றி :)
/கருப்பாக
இருப்பதாக
குறைபட்டுக்
கொள்கிறாய்
சிலைகள்
எந்த நிறத்தில்
இருந்தால் என்ன?/
காதலை செதுக்குறீங்க...
/சரி சரி போய்த்தொலை
உன்னைக் காதலித்துத்
தொலைக்கிறேன்
என்றாவது சொல்லிவிட்டு
போயேன்
இந்த மனசோட தொல்லை
தாங்கமுடியலை !/
ஏற்கனவே தொலைந்து போனவரை காதலித்து வேறு தொலைக்க வேண்டுமா? :)
எல்லாமே நன்று நவீன்...
அழகாயுள்ளன
//அருட்பெருங்கோ said...
ஏற்கனவே தொலைந்து போனவரை காதலித்து வேறு தொலைக்க வேண்டுமா? :)
எல்லாமே நன்று நவீன்... //
வாங்க அருள் :) மிக்க நன்றி ! எங்கே உங்களை காணவில்லை? வேலை அதிகமா அருள் ? :)
// Chandravathanaa said...
அழகாயுள்ளன //
வாங்க சந்த்ரவதனா :) அழகுக்கு அழகு சேர்க்கின்றன தங்கள் விமர்சனம் :) நன்றி !
//எப்பவும் அதே
நெனப்புதானா
வேற நெனப்பே
இல்லையா
என அடிக்கடி
கேட்கிறாய்
கேட்கும்போதே
வழிந்து ஓடுகிறது
உன் அழகான
வெட்கம் !
வெட்கம் காட்டும்
நினைவுகள் வாழ்க ! //
நவின்,
அருமையாக இருக்குங்க.நான் கிட்டத்தட்ட இந்த வரிகளை மனப்பாடம் செய்துவிட்டேன்.
//ராம் said...
நவின்,
அருமையாக இருக்குங்க.நான் கிட்டத்தட்ட இந்த வரிகளை மனப்பாடம் செய்துவிட்டேன். //
வாருங்கள் ராம்:) மனனம் செய்துவிடீர்களா?:)) மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ராம் தங்களின் வருகையும் தருகையும் :)
/சரி சரி போய்த்தொலை
உன்னைக் காதலித்துத்
தொலைக்கிறேன்
என்றாவது சொல்லிவிட்டு
போயேன்
இந்த மனசோட தொல்லை
தாங்கமுடியலை !/
நவீன் நன்றாக இருக்கிறது!
இதயத்தின் வார்த்தைகளை
இனிமையாக வரைந்திருக்கிரீர்கள்
ஒரு தலை காதல் மிகவும் வருத்தமானது
ஆனால் சில இடங்களில், அவளும் அன்ப வயப்பட்டதுபோல் தெரிகிறது.
எல்லாக் கவிகளுமே நன்றாக உள்ளன. நன்றாக அனுபவித்து எழுதி இருக்கிறீங்கள்.
நவீன்...பாராட்டுக்கள்.... பாராட்டுக்கள்....
ரோம்ப ரசனை உள்ளவர்தான் நீங்கள்
:-) :-)
நேசமுடன்
-நித்தியா
//srivats said...
நவீன் நன்றாக இருக்கிறது!
இதயத்தின் வார்த்தைகளை
இனிமையாக வரைந்திருக்கிரீர்கள்//
வாருங்கள் ஸ்ரீவட்ஸ்:)) மிக்க நன்றி !
//ஒரு தலை காதல் மிகவும் வருத்தமானது
ஆனால் சில இடங்களில், அவளும் அன்ப வயப்பட்டதுபோல் தெரிகிறது. //
காதலில் ஏது ஒருதலை ? ஏதாவது action இருந்தால் தானேஏதாவது reaction தெரியும் ? ;)))
// சத்தியா said...
எல்லாக் கவிகளுமே நன்றாக உள்ளன. நன்றாக அனுபவித்து எழுதி இருக்கிறீங்கள்.
நவீன்...பாராட்டுக்கள்.... பாராட்டுக்கள்.... //
வாங்க சத்யா :) வருகைக்கும் தருகைக்கும் மிக்க மகிழ்ச்சி ! :)
// நித்தியா said...
ரோம்ப ரசனை உள்ளவர்தான் நீங்கள்
:-) :-)
நேசமுடன்
-நித்தியா //
வாங்க வாங்க நித்யா :)) நீண்ட நாட்களுகு பின் உங்கள் வரவு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது ! :))
\\யார் யாரோ பார்த்துப்
போகும் என் கவிதைகளை
என்றேனும் நீ
வாசித்திருக்கிறாயா?\\
அச்சச்சோ, யாருக்காக நீங்க கவிதை எழுதுறீங்களோ அவங்க இன்னும் உங்க கவிதைகளை வாசிக்கலியா???
ஒரு வேளை தமிழ் வாசிக்க தெரியாதோ அவங்களுக்கு?
\\சிலசமயங்களில்
உன் பேச்சுக்கள்
லூசுத்தனமாக இருப்பாத
எனக்குப் படுகிறது என
தெரியாமல்
உன்னிடம்
சொல்லிவிட்டதற்காக
என்னிடம் பேசாமல்
இருந்த தினங்களில்\\
இப்படியா நேரடியா உண்மையை சொல்றது, இது தான் லூசுத்தனம்.
இனிமேலாவது யோசிச்சு பேசுங்க கவிஞரே!
//Anonymous said...
\\யார் யாரோ பார்த்துப்
போகும் என் கவிதைகளை
என்றேனும் நீ
வாசித்திருக்கிறாயா?\\
அச்சச்சோ, யாருக்காக நீங்க கவிதை எழுதுறீங்களோ அவங்க இன்னும் உங்க கவிதைகளை வாசிக்கலியா???//
வாங்க அனானி :)))
ஒருவழியா வாசிச்சிட்டாங்களே !!!! என்ன கொஞ்ச நாளா காக்க வச்சுட்டாங்க :)))) போதுமா? :)))
//ஒரு வேளை தமிழ் வாசிக்க தெரியாதோ அவங்களுக்கு?//
அட நீங்க வேற நல்லா தெரியுமே கவிதை எழுதர அளவுக்கு :))))
\\சிலசமயங்களில்
உன் பேச்சுக்கள்
லூசுத்தனமாக இருப்பாத
எனக்குப் படுகிறது என
தெரியாமல்
உன்னிடம்
சொல்லிவிட்டதற்காக
என்னிடம் பேசாமல்
இருந்த தினங்களில்\\
//இப்படியா நேரடியா உண்மையை சொல்றது, இது தான் லூசுத்தனம்.
இனிமேலாவது யோசிச்சு பேசுங்க கவிஞரே!//
சரிங்க இனிமே யோசிச்சு பேசறேன் :))) சரியா? யோசிக்க கஷ்டமா இருந்தா உங்க கிட்டே ஆலோசனை கேட்கலாமா ? :)))))
\\எனக்கெல்லாம்
காதல் என்பதே
வராது என
கல்லூரியில்
என் நண்பர்களிடம்
சொல்லிகொண்டிருதபோதுதான்
கொலுசு அணிந்து
வந்து காதல் என்னைப்
பார்த்து சிரித்தது ! \\
எதுக்கு இப்படி 'எனக்கு காதல் வராது'னு தம்பட்டம் அடிக்கனும்........அப்புறம் இப்படி ஒரு கொலுசு சத்ததிற்கே தொபுகடீர்ன்னு விழனும் காதல் வலையில்! இதெல்லாம் தேவையா??
//Anonymous said...
\\எனக்கெல்லாம்
காதல் என்பதே
வராது என
கல்லூரியில்
என் நண்பர்களிடம்
சொல்லிகொண்டிருதபோதுதான்
கொலுசு அணிந்து
வந்து காதல் என்னைப்
பார்த்து சிரித்தது ! \\
எதுக்கு இப்படி 'எனக்கு காதல் வராது'னு தம்பட்டம் அடிக்கனும்........அப்புறம் இப்படி ஒரு கொலுசு சத்ததிற்கே தொபுகடீர்ன்னு விழனும் காதல் வலையில்! இதெல்லாம் தேவையா??//
வாங்க :)))
அட என்ன இது கொலுசு சத்தம்
பத்தி இப்படி சொல்லீட்டீங்க?? !!!!
கொலுசு சத்தம் அது அணிந்திருக்கிற
கால்களைப் பொருத்து இருக்கிறது
தெரியாதா? :))) சும்மா தம்பட்டம் அடிச்சாச்சு!!
இருந்தாலும் அது ஒரு இன்பியலான
தொபுக்கடீர்... இல்லையா?....:)))))
\\//இப்படியா நேரடியா உண்மையை சொல்றது, இது தான் லூசுத்தனம்.
இனிமேலாவது யோசிச்சு பேசுங்க கவிஞரே!//
சரிங்க இனிமே யோசிச்சு பேசறேன் :))) சரியா? யோசிக்க கஷ்டமா இருந்தா உங்க கிட்டே ஆலோசனை கேட்கலாமா ? :)))))\\
உங்களுக்கு அலோசனை சொல்ல நான் அலோசனை சங்கம் எதுவும் நடத்தலீங்க,
இருந்தாலும் இவ்வளவு பெரிய கவிஞர் நீங்க கேட்கிறீங்க, அதனால் என்னால் முடிந்த அலோசனை நிச்சயம் தருகிறேன்...
கருத்துரையிடுக