வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006

பொய்மையும் பெண்மையிடத்து

பொய் சொல்ல மாட்டேன்


இனிமே என் கிட்டே
பொய் சொன்னா
அவ்வளவுதான்
என கடுமையாக
முகத்தை வைத்துக்கொண்டு
சொல்கிறாய்
‘சாரிம்மா இனிமே
நான் பொய்யே
சொல்ல மாட்டேன்’
என நான் மீண்டும் ஒரு
பொய் சொன்னால்தான்
நீ சிரிக்கிறாய்!

போடா பொறுக்கி
<
ஏதோ சொல்லிவிட்டதற்காக
என் முகத்தில் இனி
முழிக்காதே என
சொல்லிவிட்டாய்.
சரி இனி தினமும்
காலையில் கண்ணை
மூடிக்கொண்டே உனக்கு
முத்தம் தர வேண்டியதுதான் போல
என நான் சொன்னதும்
போடா பொறுக்கி என
செல்லமாக திட்டிவிட்டு
வேகமாக வந்து ஒட்டிக்கொள்கிறாய்
அழகான வெட்கத்துடன் !

Image Hosted by ImageShack.us

என்னைக்காவது
உண்மையை சொல்லி
இருக்கியா என
நீ கோபமாக
கேட்டபொழுது
நான் பரிதாபமாக முகத்தை
வைத்துக்கொண்டு
கோபதிலயும் நீ
அழகாத்தாண்டி இருக்கே
எனக்கூறியதும்
அதுவரை
உன் முகத்தில் நிலைகொண்டிருந்த
கோபப்புயல்
வெட்கப் புயலாக
மாறியது !

கோபமான அழகு

ஏன் அடிக்கடி
நான் கோபப்படுற மாதிரி
நடந்துக்குறே என
நீ கேட்டபொழுது
கோபமா நீ இருக்கும் போது
உன் உதடு துடிக்கிறதைப்
பார்க்க அழகா இருக்கு
அதான் என நான் பயந்தவாறே
கூறிய பொய்யைக் கேட்டு
திடீரென ஏற்பட்ட உன்
வெட்கத்தை மறைக்க
முயன்றது உண்மையாகவே
அழகாக இருந்ததடி !


ஐஸ் வைக்காதீங்க


இந்தப் புடவை
அழகா இருக்கா
என உனக்குப் பிடித்த
புடவையை காட்டி கேட்கிறாய்
அழகாத்தான் இருக்கு
ஆனா உன்னைவிட இல்லை
என நான் கூறியதைக்
கேட்டு ‘போதும் ரொம்ப
ஐஸ் வைக்காதீங்க’
என என் பொய்யை
ரசித்துக்கொண்டே
சொல்கிறாய்

57 கருத்துகள்:

கைப்புள்ள சொன்னது…

எப்பிடிங்கையா இப்பிடியெல்லாம்? குறள் வரிலேருந்து மொத வரியை எடுத்து உண்மை=பெண்மைங்கிற லெவலுக்கு ஈக்வேசன் எழுதி ஒட்டு மொத்த தாய்குலத்தோட அன்பையும் வாங்கிட்டீங்க. பேசாம தேர்தல்ல நில்லுங்க. வழக்கம் போல அதே ஜில்ஜில். சூப்பர். ஒரு பேச்சிலர் மனசு என்ன பாடுபடும்னு மட்டும் யோசிச்சி எதோ பாத்து பண்ணுங்க.

ILA (a) இளா சொன்னது…

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே.

பொய்யில இவ்வளவு வகைகளா?
பொய்யும் கூட இவ்வளவு அழகா?
இந்தக்கவிதையில் இவ்வளவு பொய்யா?
பொய்யே கவிதாயா?
இல்லை கவிதையே பொய்யா?

Unknown சொன்னது…

நவீன்.. இந்தக் கவிதைத் தோரணங்கள் நல்லாயிருக்கு.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கைப்புள்ள said...
வழக்கம் போல அதே ஜில்ஜில். சூப்பர். ஒரு பேச்சிலர் மனசு என்ன பாடுபடும்னு மட்டும் யோசிச்சி எதோ பாத்து பண்ணுங்க. //

வாங்க கைப்புள்ள :)) மிக்க நன்றி !
என்னங்க பேசிலர்களுக்காகத்தானே இந்தக் கவிதையே !! :))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

பின்னீட்டீங்க

ப்ரியன் சொன்னது…

பொய்யும் பெண்மையும் கலந்ததுதான் காதல்ன்னு கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க 6 அரு தலவா அத்தனை கவிதைகளும் 'இச்!இச்!' ரகம்...

ப்ரியன் சொன்னது…

/*என்னங்க பேசிலர்களுக்காகத்தானே இந்தக் கவிதையே !! :)) */

அவர்களின் வயிறு எரியவா நவீன்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ILA(a)இளா said...
பொய்யில இவ்வளவு வகைகளா?
பொய்யும் கூட இவ்வளவு அழகா?
இந்தக்கவிதையில் இவ்வளவு பொய்யா?
பொய்யே கவிதாயா?
இல்லை கவிதையே பொய்யா? //

வாங்க இளா :)

கவிதையில் பொய்யில்லை பொய்யை கவிதையாக்கியிருக்கிறேன் !! :))

உங்களுக்கா பொய் பற்றித்தெரியாது? ;))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Dev said...
நவீன்.. இந்தக் கவிதைத் தோரணங்கள் நல்லாயிருக்கு. //

நன்றி தேவ் :))

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

நவீன்..
இந்த பொண்னுங்க எல்லாம் ரொம்ப அழகா இருகாங்க.. :))))

இராம்/Raam சொன்னது…

நவின்,

அருமையாக இருக்கின்றன உங்கள் கவிதை வரிகள். அது எப்பிடிங்க இவ்வளவு எதார்த்தமாக எழுதுகிறீர். கொஞ்சம் கத்துகுடுங்களேன்.

Anu சொன்னது…

A very nice one.
These lies(but actually truth) are required to make life more beautiful

Anu சொன்னது…

Bharathi
appa kalyanathukku readynu solringala

பாலச்சந்திரன் சொன்னது…

கவிதைகள் மிகவும் அருமை!
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் கவிதை(காதலிக்கும்)!!!!!!!!!

Unknown சொன்னது…

பொய்கள் ரசிக்கப்படும்...

அவை உங்கள் கவிதைகளைப் போல அழகாய் இருக்கும்பட்சத்தில்!!!

சரிதானே நவீன்??

(எப்பவாவது தான் வர்றீங்க...ஆனா நல்லக் கவிதைகளோட வந்து எங்க மனச அள்ளிட்றீங்க!! )

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//குமரன் எண்ணம் said...
பின்னீட்டீங்க //

நன்றி குமரன் :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ப்ரியன் said...
பொய்யும் பெண்மையும் கலந்ததுதான் காதல்ன்னு கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க 6 அரு தலவா அத்தனை கவிதைகளும் 'இச்!இச்!' ரகம்... //

மிக்க நன்றி ப்ரியன் !! அழகான விமர்சனம் ப்ரியன் :)

//அவர்களின் வயிறு எரியவா நவீன் //

இல்லை இல்லை ப்ரியன் !! என்ன இப்படி சொல்லீட்டீங்க !!

பெத்தராயுடு சொன்னது…

காதலின் நுண்ணிய உணர்வுகளை சிறப்பாகப் படம்பிடித்துள்ளதற்கு பாராட்டுகள்.

ஆனால், இப்படைப்பு சற்று உரைநடைத்தனத்துடன் இருப்பதுபோல் தோன்றுகிறது.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// யெஸ்.பாலபாரதி said...
நவீன்..
இந்த பொண்னுங்க எல்லாம் ரொம்ப அழகா இருகாங்க.. :)))) //

வாங்க பாலா :)) நன்றி !! உங்களுக்கு அனிதா பதில் சொல்லியிருக்காங்க பாருங்க :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ராம் said...
நவின்,

அருமையாக இருக்கின்றன உங்கள் கவிதை வரிகள். அது எப்பிடிங்க இவ்வளவு எதார்த்தமாக எழுதுகிறீர். கொஞ்சம் கத்துகுடுங்களேன். //

வாங்க ராம் :)) மிக்க நன்றிங்க ! எப்படி கத்துக்குடுக்கறது மீன் குஞ்சுக்கு நீந்த கத்துக்கொடுக்கனுமா என்ன?? ;))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// அனிதா பவன்குமார் said...
A very nice one.
These lies(but actually truth) are required to make life more beautiful //

வாங்க அனிதா :)) சரியாகச் சொன்னீர்கள் ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// பாலச்சந்திரன் said...
கவிதைகள் மிகவும் அருமை!
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் கவிதை(காதலிக்கும்)!!!!!!!!! //

வாங்க பாலச்சந்திரன் :) மிக்க நன்றி ! கவிதைதாங்க என் காதலி :)))

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

//அனிதா பவன்குமார் said...

Bharathi
appa kalyanathukku readynu solringala //

அடியாத்தீ.. இது என்ன வம்பா இருக்குது???
அழகா இருக்குறவங்கள பாத்து அழகா இருக்காங்கன்னு சொல்லக்கூடாதா என்ன..?

Anu சொன்னது…

// பாலச்சந்திரன் said...
கவிதைகள் மிகவும் அருமை!
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் கவிதை(காதலிக்கும்)!!!!!!!!! //

வாங்க பாலச்சந்திரன் :) மிக்க நன்றி ! கவிதைதாங்க என் காதலி :)))


andha kavidhaikkuthan avar vaazhtha solraru naveen
(ellarukkum avanga avanga kadali kavidhai dane)

ப்ரியன் சொன்னது…

/*கவிதைதாங்க என் காதலி :)))*/

அட எவ்வளவு அழகான 'பொய்' ;)

நாமக்கல் சிபி சொன்னது…

கவிதை நன்றாக இருகிறது என்று நான் சொன்னால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்தானே!

(உண்மையிலேயே நன்றாக இருக்கிறது)
:)

இராம்/Raam சொன்னது…

//வாங்க ராம் :)) மிக்க நன்றிங்க !
எப்படி கத்துக்குடுக்கறது//

:-))

//மீன் குஞ்சுக்கு நீந்த கத்துக்கொடுக்கனுமா என்ன?? ;)) //

நவின் இப்பதாங்க நான் உங்களைமாதிரியே எழுதமுயற்சி பண்ணுறேன். அதுக்காகவாச்சும் கொஞ்சுண்டு டிரயனிங்க் பிளிஸ்.....:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// அருட்பெருங்கோ said...
பொய்கள் ரசிக்கப்படும்...//

வாருங்கள் அருட்பெருங்கோ :)) பொய்கள் பொய்க்காது பேசிமிடத்தில் பேசினால் :)) நன்றி !:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பெத்த ராயுடு said...
காதலின் நுண்ணிய உணர்வுகளை சிறப்பாகப் படம்பிடித்துள்ளதற்கு பாராட்டுகள்.//

மிக்க நன்றி பெத்த ராயுடு !:))

///ஆனால், இப்படைப்பு சற்று உரைநடைத்தனத்துடன் இருப்பதுபோல் தோன்றுகிறது. //

உரைநடையில்தான் எழுதியிருக்கிறேன். கவிதைக்கான இலக்கணங்கள் இல்லாமல் சம்பவங்களை மட்டும் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அனிதா பவன்குமார் said...
andha kavidhaikkuthan avar vaazhtha solraru naveen
(ellarukkum avanga avanga kadali kavidhai dane)//

அப்படியா சொல்லியிருக்கிறார்?? :))
சரியகச் சொல்லியிருக்கிறீர்கள் அனிதா (எனக்கு வாக்களித்தமைக்கு நன்றிங்க ! ):))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ப்ரியன் said...
/*கவிதைதாங்க என் காதலி :)))*/

அட எவ்வளவு அழகான 'பொய்' ;) //

ப்ரியன் என்னை மாடிவிடாமல் விட மாட்டீர்களா?? ;))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
கவிதை நன்றாக இருகிறது என்று நான் சொன்னால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்தானே!

(உண்மையிலேயே நன்றாக இருக்கிறது)
:) //

வாங்க வாங்க சிபி :)) மிக்க நன்றிங்க !!! அதுவும் நீங்க சொன்னா இரட்டிப்பு சந்தோஷங்க சிபி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ராம் said...
கொஞ்சுண்டு டிரயனிங்க் பிளிஸ்.....:) //

சரிங்க ராம் :))) இப்படி ஓட்டரீங்களே என்னை !! :))

ப்ரியன் சொன்னது…

//அனிதா பவன்குமார் said...
andha kavidhaikkuthan avar vaazhtha solraru naveen
(ellarukkum avanga avanga kadali kavidhai dane)//

அனிதா காதலியே ஒரு அழகிய கவிதைதானே ;)

ப்ரியன் சொன்னது…

/*அட எவ்வளவு அழகான 'பொய்' ;) //

ப்ரியன் என்னை மாடிவிடாமல் விட மாட்டீர்களா?? ;))*/

;) அது எப்படிங்க நீங்க மட்டும் தப்பிக்கலாம்

&

பொய் -> கவிதை இப்ப படிங்க :)

சத்தியா சொன்னது…

அட... அட... அட... அடுக்கடுக்காய் எத்தினை பொய்கள்? இப்படி அடிக்கடி பொய் பொய் சொல்லி ஐஸ் வைக்கிறீங்கள் போல?

கவிதைகள் ரசிக்கக் கூடியதாக இருந்தன.
வாழ்த்துக்கள் நவீன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ப்ரியன் said...
/*அட எவ்வளவு அழகான 'பொய்' ;) //

பொய் -> கவிதை இப்ப படிங்க :) //

அட ஆமாம் :)) நல்லா இருக்கே இது !!:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சத்தியா said...
அட... அட... அட... அடுக்கடுக்காய் எத்தினை பொய்கள்? இப்படி அடிக்கடி பொய் பொய் சொல்லி ஐஸ் வைக்கிறீங்கள் போல?//

வாங்க சத்தியா :)) நான் யாரையும் ஐஸ் வைக்கவில்லையே !! யாரு ஏமாறப்போறா?? :)) மிக்க நன்றி !

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

நாவீன்,
கவிதைகள் அனைத்துமே அருமை!!!
அதற்க்குத் தகுந்தாற்போல் தாங்கள் தேர்ந்தெடுத்த படங்களும் கவிதையே!!!

வாழ்த்துக்கள்!! "நல்ல" கவிதைகள் படைத்தமைக்கு...

அன்புடன்...
சரவணன்.

பெயரில்லா சொன்னது…

குசும்பு தேவி "speaking"you know who i am right?
.....எவ்வளவு அழகான பொய் நவீன்.உங்கள் அளவுக்கு கவிதையில் ஞானம் எனக்கு இல்லை.ஆனால் என்னால் ரசிக்க முடிந்தது.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

உங்கள் நண்பன் said...
//நவீன்,
கவிதைகள் அனைத்துமே அருமை!!!
அதற்க்குத் தகுந்தாற்போல் தாங்கள் தேர்ந்தெடுத்த படங்களும் கவிதையே!!!

வாழ்த்துக்கள்!! "நல்ல" கவிதைகள் படைத்தமைக்கு...

அன்புடன்...
சரவணன். //

வாருங்கள் சரவணன் :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எவ்வளவு அழகான பொய் நவீன்.உங்கள் அளவுக்கு கவிதையில் ஞானம் எனக்கு இல்லை.ஆனால் என்னால் ரசிக்க முடிந்தது.//

வாருங்கள் தேவி! என் கவிதைகளை தாங்கள் ரசிக்க முடிந்தது என் பாக்கியம் :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :)

இராம்/Raam சொன்னது…

//சரிங்க ராம் :))) இப்படி ஓட்டரீங்களே என்னை !! :)) //

நவீன்,

என்னாங்க இப்பிடி சொல்லிட்டீங்க. நான் சொன்னதெல்லாம் ஒரு குரு பக்திக்காக தான்....

கார்த்திக் பிரபு சொன்னது…

தலவா உங்களின் இந்தக் கவிதைகளை படிக்காமல் விட்டு விட்டேன்..கடைசியில் எப்படி எப்படியோ
தேடி வந்து விட்டேன்

உண்மையை சொல்லவா முதல் இரண்டு கவிதைகளும் மிகவும் அருமை..ஆனால் கடைசி இரண்டு கவிதைகள் சுமார் தான்..நீங்களே மீண்டும் படித்து பாருங்களேன் நான் சொல்வது புரியும்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ராம் said...
//சரிங்க ராம் :))) இப்படி ஓட்டரீங்களே என்னை !! :)) //

நவீன்,

என்னாங்க இப்பிடி சொல்லிட்டீங்க. நான் சொன்னதெல்லாம் ஒரு குரு பக்திக்காக தான்....//

அட என்னங்க ராம் குரு அதுன்லாம் சொல்லிகிட்டு! மறுபடியும் ஓட்டறீங்களே :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// கார்த்திக் பிரபு said...
தலவா உங்களின் இந்தக் கவிதைகளை படிக்காமல் விட்டு விட்டேன்..கடைசியில் எப்படி எப்படியோ
தேடி வந்து விட்டேன்

உண்மையை சொல்லவா முதல் இரண்டு கவிதைகளும் மிகவும் அருமை..ஆனால் கடைசி இரண்டு கவிதைகள் சுமார் தான்..நீங்களே மீண்டும் படித்து பாருங்களேன் நான் சொல்வது புரியும் //

வாருங்கள் கார்த்திக் :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !! அடுத்த முறை சரி செய்து விட முயற்சிக்கிறேன் கார்த்திக். விமர்சனத்திற்கு மிக்க நன்றி :)))

பெயரில்லா சொன்னது…

simply superb - surya

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
simply superb - surya//

மிக்க நன்றி சூர்யா:))

Divya சொன்னது…

நவீன் உங்கள் கவிதை அருமை - இது பொய்யல்ல

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
நவீன் உங்கள் கவிதை அருமை - இது பொய்யல்ல //

வாருங்கள் திவ்யா :))
உங்கள் வார்த்தை பொய்யாகவே இருந்தாலும் மெய்யாகவே தான் நான் எடுத்துக்கொள்வேன் தெரியுமா ??;)))
அழகான பொய்க்கு நன்றி :))

rahini சொன்னது…

oh sinna varikal aanal
sikaram thodum setppak kalai pool sethukkiya kavithai vaalthukkal

piriya

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//rahini said...
oh sinna varikal aanal
sikaram thodum setppak kalai pool sethukkiya kavithai vaalthukkal

piriya //

வாருங்கள் ப்ரியா :))
செதுக்கும் என்னை உங்கள் கருத்துக்கள் :) மிக்க நன்றி !

G3 சொன்னது…

Came here through vavasangam.. Superb kavithaigal.. Edha paarataradhu edha vidaradhunnae theriyala :)

Poi porumaiya unga meedhi postlaan padichittu varen :)

அரை பிளேடு சொன்னது…

கவித எல்லாம் ஜோரா கீதுப்பா..

நல்லதுக்கா வேண்டி எம்மாம் பொய்வேணா ஜொள்ளலாம்..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//G3 said...
Came here through vavasangam.. Superb kavithaigal.. Edha paarataradhu edha vidaradhunnae theriyala :)

Poi porumaiya unga meedhi postlaan padichittu varen :) //

வாருங்கள் G3 :))
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !! பொறுமையாக படியுங்கள். மீண்டும் வாருங்கள் :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அரை பிளேடு said...
கவித எல்லாம் ஜோரா கீதுப்பா..

நல்லதுக்கா வேண்டி எம்மாம் பொய்வேணா ஜொள்ளலாம்.. //

வாங்க அரை பிளேடு :))

பொய் சொல்லனும். பொய் ஜொள்ளினா கண்டு பிடித்துவிடுவார்கள். ஜாக்கிரதை ;)) வருகைக்கு மிக்க நன்றி :))

venkatx5 சொன்னது…

சூப்பர் நவீன்.. படம்-லாம் எங்க இருந்து பிடிக்கறீங்க?? கொஞ்சம் சொல்லுங்களேன்..