நீ இல்லாத
பொழுதுகளும்
நன்றாகத்தான்
இருக்கின்றன
இப்போதுதான்
உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்
பொழுதுகளும்
நன்றாகத்தான்
இருக்கின்றன
இப்போதுதான்
உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்
நீ ஓடிப்போகலாமா
எனக்கேட்டதும் நான்
தயாராவதற்குள்
என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?
எனக்கேட்டதும் நான்
தயாராவதற்குள்
என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?
உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !
சகிக்காது என நீதானே
கூறியிருக்கிறாய்
அதற்காகவாவது
என்னிடம் பேசிவிடேண்டி !
இருந்திருக்கலாம்
பேசிக்கொடுத்த
தொல்லையைவிட
உன் நினைவுகளின்
தொல்லை
அதிகமாக
இருக்கிறது.
பேசப்போவதில்லை
என
கூறிவிட்டு நீ மட்டும்
சென்றுவிட்டால் எப்படி
கூடவே உன் நினைவுகளையும்
கூட்டிக்கொண்டு போய்விடு
அவைகளின் அழிச்சாட்டியம்
தாங்கமுடியவில்லை !
சொன்னாய் எனக் கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !
இப்போதெல்லாம்
நம் நினைவுகளை
அசை போடுவதற்கு
ஊடல் வாழ்க !
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே
60 கருத்துகள்:
அழகான கவிதை அழகான மனதிலிருந்து.காதல் சொட்டுகின்றது உங்கள் கவிதையில்.
//ஏன் என்னிடம் பொய்
சொன்னாய் என கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !///
அய்யோ அப்படி என்றால் அவர்கள் அழகாக இல்லையா?இது மட்டும் உண்மையாக கதையாக இருந்தால்,நீ வசமாக மாட்டி இருப்பீர்கள் அவர்களிடம்!இந்த மாதிரி எத்தனை பேர்தான் இருப்பீர்களோ!
//நிறைய நேரம் கிடைக்கிறது
இப்போதெல்லாம்
நம் நினைவுகளை
அசை போடுவதற்கு
ஊடல் வாழ்க //
ஊடல் இல்லாத காதலில் சுவராசியமே இல்லை.அது உண்மைதான் நவீன்.உங்களுக்கு மட்டும் எப்படிதான் வித்தியசமாக கவிதை மழை பொழிகின்றதோ?மறுபடியும் ஒரு காதல் சொட்டும் கவிதை உங்களிடம் இருந்து பிறந்து இருக்கின்றது!வாழ்த்துக்கள்
குரு,
அழகான கவிதைகள்.....
//ஏன் என்னிடம் பொய்
சொன்னாய் என கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !//
இது சூப்பர்.
நவீன்,
ஊடல் கவிதைகள் அனைத்தும் அருமைதான் போங்க...
/நிறைய நேரம் கிடைக்கிறது
இப்போதெல்லாம்
நம் நினைவுகளை
அசை போடுவதற்கு
ஊடல் வாழ்க !/
தனிமை இனிமையா? கொடுமையா?
நீ இல்லாத
பொழுதுகளும்
நன்றாகத்தான்
இருக்கின்றன
இப்போதுதான்
உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்//
indhakaviidhai miga arumaiyaga vandhrukiradhu nanbrae..adikadi eludnhaga..namm pakkamum vanga..romba busy a??
உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !
//nalla yosichirukeenga
இனி உன்னிடம்
பேசப்போவதில்லை
என
கூறிவிட்டு நீ மட்டும்
சென்றுவிட்டால் எப்படி
கூடவே உன் நினைவுகளையும்
கூட்டிக்கொண்டு போய்விடு
அவைகளின் அழிச்சாட்டியம்
தாங்கமுடியவில்லை !
//
indha poem chance a illai romba sooperb
நவீன்,
அருமையான கவிதைகள்.
/*பேசிக்கொண்டாவது
இருந்திருக்கலாம்
பேசிக்கொடுத்த
தொல்லையைவிட
உன் நினைவுகளின்
தொல்லை
அதிகமாக
இருக்கிறது. */
உண்மையான வார்த்தைகள். இவ் வரிகளின் வலியை நான் அனுபவித்தவன்.
//துர்கா said...
அழகான கவிதை அழகான மனதிலிருந்து.காதல் சொட்டுகின்றது உங்கள் கவிதையில்.
மறுபடியும் ஒரு காதல் சொட்டும் கவிதை உங்களிடம் இருந்து பிறந்து இருக்கின்றது!வாழ்த்துக்கள் //
வாருங்கள் துர்கா :)))
மிக்க நன்றி துர்கா ! வரம் உங்கள் விமர்சனம் !
// இராம் said...
குரு,
அழகான கவிதைகள்.....
//ஏன் என்னிடம் பொய்
சொன்னாய் என கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !//
இது சூப்பர். //
வாங்க இராம் :)))
நான் குருவா ? என்ன இப்படி குருவாக்கிவிட்டீர்கள் என்னை ?? ;))) மிக்க நன்றி இராம் :))
//அருட்பெருங்கோ said...
நவீன்,
ஊடல் கவிதைகள் அனைத்தும் அருமைதான் போங்க...
/நிறைய நேரம் கிடைக்கிறது
இப்போதெல்லாம்
நம் நினைவுகளை
அசை போடுவதற்கு
ஊடல் வாழ்க !/
தனிமை இனிமையா? கொடுமையா? //
வாருங்கள் அருள் !! :)))
ரசிப்புக்கும் அளிப்புக்கும் மிக்க நன்றி !
தனிமை இனிமையாவதும் கொடுமையாவதும் நம்மிடம் தான் இருக்கிறது அல்லவா ?? :)))
Atheppadi Ungalukku mattum ippadi azhganal photos kidaikirathu, ungal kavithaikku yetra mathiri..... as usual kavithaiyum padangalum superb....
கார்த்திக் பிரபு said...
நீ இல்லாத
பொழுதுகளும்
நன்றாகத்தான்
இருக்கின்றன
இப்போதுதான்
உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்//
indhakaviidhai miga arumaiyaga vandhrukiradhu nanbrae..adikadi eludnhaga..namm pakkamum vanga..romba busy a??//
வாருங்கள் கார்த்திக் பிரபு :))
அருமையான விமர்சனதிற்கு மிக்க நன்றி கார்த்திக் :)) கொஞ்சம் வேலை அதனால் தான் அடிக்கடி எழுதமுடியவில்லை ! கண்டிப்பாக வருகிறேன் கோபித்துக்கொள்ளாதீர்கள் :)))
//வெற்றி said...
நவீன்,
அருமையான கவிதைகள்.
/*பேசிக்கொண்டாவது
இருந்திருக்கலாம்
பேசிக்கொடுத்த
தொல்லையைவிட
உன் நினைவுகளின்
தொல்லை
அதிகமாக
இருக்கிறது. */
உண்மையான வார்த்தைகள். இவ் வரிகளின் வலியை நான் அனுபவித்தவன். //
வாருங்கள் வெற்றி :))
வலிகளும் சுகமே நீ அளித்தபோது :))
வருகைக்கும் மனதை தொட்ட தருகைக்கும் மிக்க நன்றி வெற்றி !! :))
//kadaikoditamilan said...
Atheppadi Ungalukku mattum ippadi azhganal photos kidaikirathu, ungal kavithaikku yetra mathiri..... as usual kavithaiyum padangalum superb.... //
வாருங்கள் கடைகோடி தமிழன் :))
எல்லாம் உங்கள் தயவுதான் :)) மிக்க நன்றி தமிழன் வருகைக்கும் அயராத தருகைக்கும் :))
//ஏன் என்னிடம் பொய்
சொன்னாய் என கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !///
நீ அழகாக இருப்பதினால் நான் உன்னை காதலிக்க வில்லை.
நான் காதலிப்பதால் தான் நீ
அழகாய் இருக்கின்றாய்!
ஹி ஹி என் பங்குக்கு ஒன்று.இதில் கொஞ்சம் உண்மையும் கூட....ஏதோ மனதில் பட்டது.தப்பாக இருந்தால் மனிக்கவும்!
kova pada villay..but adikadi eludhnugal
படங்களும் கவிதையும் அருமை !!!!!
//துர்கா said...
நீ அழகாக இருப்பதினால் நான் உன்னை காதலிக்க வில்லை.
நான் காதலிப்பதால் தான் நீ
அழகாய் இருக்கின்றாய்!
ஹி ஹி என் பங்குக்கு ஒன்று.இதில் கொஞ்சம் உண்மையும் கூட....ஏதோ மனதில் பட்டது.தப்பாக இருந்தால் மனிக்கவும்! //
வாங்க துர்கா :))
நன்றாக இருக்கிறதே உங்கள் கவிதை !! :)) கொஞ்சமல்ல நிறையவே உண்மை இருக்கிறது :) தவறாகவே இல்லை சரியாகவே இருக்கிறது துர்கா !! நன்றி ! :)))
// கார்த்திக் பிரபு said...
kova pada villay..but adikadi eludhnugal //
மிக்க நன்றி கார்த்திக் :)) கண்டிப்பாக எழுதுகிறேன் :))
// செந்தழல் ரவி said...
படங்களும் கவிதையும் அருமை !!!!! //
வாருங்கள் செந்தழல் ரவி :))
மிக்க நன்றி !! வருகைக்கும் தருகைக்கும் :))
//வாங்க துர்கா :))
நன்றாக இருக்கிறதே உங்கள் கவிதை !! :)) கொஞ்சமல்ல நிறையவே உண்மை இருக்கிறது :) தவறாகவே இல்லை சரியாகவே இருக்கிறது துர்கா !! நன்றி ! :)))//
சரி மிகப் பெரும் கவிஞர் நீங்களே சொல்லும் பொழுது உங்கள் வார்த்தைக்கு மறு பேச்சு இல்லை ;-).அது இதை எங்கேயோ கேட்ட ஞாபகம்.copyrights என்னக்கு இல்லை.
//நீ ஓடிப்போகலாமா
எனக்கேட்டதும் நான்
தயாராவதற்குள்
என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?//
:( உங்களுக்கும் இதே நிலைமைதானா?
கவிதை அருமை :))
சூப்பர் கவிதை!படங்களும் அருமை
//ரசிகர் said...
//நீ ஓடிப்போகலாமா
எனக்கேட்டதும் நான்
தயாராவதற்குள்
என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?//
:( உங்களுக்கும் இதே நிலைமைதானா? //
வாங்க ரசிகரே :)))
நான் வெறும் கவிஞர் தான் ரசிகரே !! :)) வருகைக்கும் தருகைகும் மிக்க நன்றி !! :))
//திருக்குமரன் said...
கவிதை அருமை :)) //
வாருங்கள் திருக்குமரன் :)))
நன்றி நன்றி வருகைகும் தருகைகும் :))
//Anonymous said...
சூப்பர் கவிதை!படங்களும் அருமை//
வாங்க அனானி :))
விமர்சனம் கொள்ளை கொள்கிறது மனதை :))
காதற் குறும்புகளா! :-) கவிதைகளோடு கொடுத்திருக்கின்றீர்களே படங்கள்...மிகப் பொருத்தம்.
மனத்தை வருடும் வரிகள்... நல்லாயிருக்கு நவீன்.
//G.Ragavan said...
காதற் குறும்புகளா! :-) கவிதைகளோடு கொடுத்திருக்கின்றீர்களே படங்கள்...மிகப் பொருத்தம். //
வாருங்கள் ராகவன் :))
காதலில் குறும்பே அழகு இல்லையா ? :))
மிக்க நன்றி ராகவன் விமர்சனத்திற்கு :)))
//தேவ் | Dev said...
மனத்தை வருடும் வரிகள்... நல்லாயிருக்கு நவீன். //
வாருங்கள் தேவ் :))
மிக்க நன்றி தேவ் !!! :))
"உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !"...
அடடா!... நீங்க கழுதையா? இது வரை தெரியாமல் போச்சே? ம்... கழுதை கூட நல்லா கவிதை எழுதுதே?
"ஏன் என்னிடம் பொய்
சொன்னாய் என கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !"...
ம்... கவிதை அழகு!
ரசிக்கக் கூடிய கவிதைகள். வாழ்த்துக்கள் நவீன்.
அருமை நவீன்
//தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே//
நல்ல comparison - கடற்கரை மணல்,நினைவுகள்....
keep writing...
Hats off!
//சத்தியா said...
"உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !"...
அடடா!... நீங்க கழுதையா? இது வரை தெரியாமல் போச்சே? ம்... கழுதை கூட நல்லா கவிதை எழுதுதே?//
வாங்க சத்தியா :)))
என்னாங்க நக்கலா ?? ;))) எது எழுதுனா என்னா நல்லா இருக்குன்னு சொல்லீட்டீங்க என்ன பண்றது ?? ;))))))
//"ஏன் என்னிடம் பொய்
சொன்னாய் என கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !"...
ம்... கவிதை அழகு!
ரசிக்கக் கூடிய கவிதைகள். வாழ்த்துக்கள் நவீன். //
மிக்க நன்றி சத்தியா :)) மேன்மேலும் ரசிக்க வாங்க :)))
//ப்ரியன் said...
அருமை நவீன் //
வாருங்கள் கவிஞரே :))
தங்கள் தருகைக்கு மிக்க நன்றி !! :)))
//Deekshanya said...
//தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே//
நல்ல comparison - கடற்கரை மணல்,நினைவுகள்....
keep writing... //
வாருங்கள் தீக்ஷண்யா :))
உங்களின் ஊக்கம் என்னை மேன்மேலும் மெருகுபடுத்துகின்றது.
//Hats off! //
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :)))
அட நல்லாயிருகே..
உங்களால் முடிகிறது..
உணர்வுகளைத் தேடவும்...படைக்கவும்.
சின்ன..சின்ன வரிகளால்..எப்படி
வசீகரிக்க முடிகிறது
சொல்லித்தாருங்கள் காதலில் கரைந்து எங்கோ தொலைந்து தொலைக்கிறேன்
//sooryakumar said...
அட நல்லாயிருகே..
உங்களால் முடிகிறது..
உணர்வுகளைத் தேடவும்...படைக்கவும்.
சின்ன..சின்ன வரிகளால்..எப்படி
வசீகரிக்க முடிகிறது
சொல்லித்தாருங்கள் காதலில் கரைந்து எங்கோ தொலைந்து தொலைக்கிறேன் //
வாங்க சூர்யகுமார் :))
உணர்வுகளில் கரைந்ததற்கும் தொலைந்த உணர்களை சொன்னதற்கும் மிக்க நன்றி !! :))
அழகிய காதல் கவிதை
இல்லை இல்லை
காதல் கதை
"தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே"
காதல் நினைவுகள்
தொலைத்திடத்தான் முடியுமா?
\\நீ ஓடிப்போகலாமா
எனக்கேட்டதும் நான்
தயாராவதற்குள்
என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?\\
'லேச்சு போதாமா' ன்னு கேட்டுட்டு யாரும் நைஸா எஸ் ஆகிடாங்களோ??
\\உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !\\
சங்க தமிழில் கழுதை என்றால் அழகு என்று அர்த்தமாம்:))
அப்போ நீங்க கழுதையா??
\\நான் தாடி வைத்தால்
சகிக்காது என நீதானே
கூறியிருக்கிறாய்
அதற்காகவாவது
என்னிடம் பேசிவிடேண்டி !\\
அச்சோ தாடி வளரும் அளவுக்கு சோகமா??
அய்யோ பாவம்:((
\\பேசிக்கொண்டாவது
இருந்திருக்கலாம்
பேசிக்கொடுத்த
தொல்லையைவிட
உன் நினைவுகளின்
தொல்லை
அதிகமாக
இருக்கிறது.\\
பேசி தொல்லை கொடுத்தாங்களா??
அவங்க பேசுறதை நீங்க ரசிக்காம, தொல்லைன்னு மனசுல நினைச்சதால தான் தொலைஞ்சு போய்ட்டாங்க போலிருக்கு:)))
\\இனி உன்னிடம்
பேசப்போவதில்லை
என
கூறிவிட்டு நீ மட்டும்
சென்றுவிட்டால் எப்படி
கூடவே உன் நினைவுகளையும்
கூட்டிக்கொண்டு போய்விடு
அவைகளின் அழிச்சாட்டியம்
தாங்கமுடியவில்லை !\
எக்ஸ்ட்ரா டிக்கட் போட்டு உங்க நினைப்பை வேற கூட்டிட்டு போவாங்களா.....வேற வேலை இல்லையா அவங்களுக்கு, பாவம் நிம்மதியா போட்டும்னு விட மாட்டீங்க போலிருக்குதே:))
\\ஏன் என்னிடம் பொய்
சொன்னாய் எனக் கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !\
அய்யோ பாவம் கஷ்டபட்டு ஒரு பொய் சொல்றாரே......ரசிக்கிற மாதிரி நடிப்போம்னு அவங்க நடிச்சிருப்பாங்க,
அது புரியல உங்களுக்கு:))
உங்களுக்கு பொய் சொல்ல தெரிஞ்சா மாதிரி.....அவங்களுக்கும் நடிக்க தெரிஞ்சிருக்காதா??????
\நிறைய நேரம் கிடைக்கிறது
இப்போதெல்லாம்
நம் நினைவுகளை
அசை போடுவதற்கு
ஊடல் வாழ்க !\\
அது சரி......கூட இருக்கிறப்போ சண்டை போட்டுட்டு,
இல்லாதபோ நினைவுகளை அசை போட்டா என்ன....பசை போட்டா என்ன??
\\தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே\\
கடற்கரை மணல்.....நல்ல ஒரு உதாரணம், பாராட்டுக்கள்!!
கால்ல மண் ஒட்டிக்கிட்டா......துடைச்சு விட்டுக்கலாம்,
கழுவிக்கலாம்,
சுத்தம் பண்ணிக்கலாம்.........
ஆனால் பசக்கென்று ஒட்டிக்கொண்ட நினைவுகளை????
\\நீ இல்லாத
பொழுதுகளும்
நன்றாகத்தான்
இருக்கின்றன
இப்போதுதான்
உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்\\
அப்படியாவது நினைச்சா சரிதான்னு போய்ட்டாங்க போல:))
பாவம் அந்த பொண்ணு:((
//surya said...
அழகிய காதல் கவிதை
இல்லை இல்லை
காதல் கதை
"தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே"
காதல் நினைவுகள்
தொலைத்திடத்தான் முடியுமா? //
வாங்க சூர்யா... :)))
நம்மைத் தொலைத்த நினைவுகளை
எப்படித்தொலைக்க இயலும்....?? :)))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்....
// Divya said...
\\நீ ஓடிப்போகலாமா
எனக்கேட்டதும் நான்
தயாராவதற்குள்
என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?\\
'லேச்சு போதாமா' ன்னு கேட்டுட்டு யாரும் நைஸா எஸ் ஆகிடாங்களோ?? //
வாங்க திவ்யா....
அட லேச்சு போத்தாம்மான்னா என்னாங்க..??
நாக்கு தெலுகு தெல்லேது .... :)))))
நீண்ட நாட்களுக்கு முன் எழுதிய கவிதையை
ரசித்து படித்ததற்கு என்ன தரலாம் திவ்யாவுக்கு...??
:))))
//Divya said...
\\உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !\\
சங்க தமிழில் கழுதை என்றால் அழகு என்று அர்த்தமாம்:))
அப்போ நீங்க கழுதையா?? //
வாங்க திவ்யா....
அட நீங்க சொல்லற வார்த்தை சங்கத்தமிழ்ல
எல்லாம் இல்லை.. ஒருவேளை திவ்யத்தமிழ்ல
இருக்கோ என்னவோ...??!!!! :)))))
அப்படி இருந்தா நீங்கதாங்க சொல்லனும்..:))))
// Divya said...
\\நான் தாடி வைத்தால்
சகிக்காது என நீதானே
கூறியிருக்கிறாய்
அதற்காகவாவது
என்னிடம் பேசிவிடேண்டி !\\
அச்சோ தாடி வளரும் அளவுக்கு சோகமா??
அய்யோ பாவம்:(( //
வாங்க திவ்யா....
தாடிவெச்சா சோகமா என்ன...? ;)))
ஒருவேளை அந்தப் பொண்ணுகிட்டே
இவரோட Mach3 Turbo Razor மாட்டிகிச்சோ என்னவோ...?
:)))))))
//Divya said...
\\பேசிக்கொண்டாவது
இருந்திருக்கலாம்
பேசிக்கொடுத்த
தொல்லையைவிட
உன் நினைவுகளின்
தொல்லை
அதிகமாக
இருக்கிறது.\\
பேசி தொல்லை கொடுத்தாங்களா??
அவங்க பேசுறதை நீங்க ரசிக்காம, தொல்லைன்னு மனசுல நினைச்சதால தான் தொலைஞ்சு போய்ட்டாங்க போலிருக்கு:))) //
வாங்க திவ்யா....
அட அது எல்லாம் இன்பமான துன்பம்...:))))
காதலியின் பேச்சில் இவந்தாங்க தொலைந்து போனான்
அவளல்ல... கற்பனைல எழுதினால் கூட
இவ்வளவு கேள்விகளா.. ... ??? !!!!! :)))))))
// Divya said...
\\இனி உன்னிடம்
பேசப்போவதில்லை
என
கூறிவிட்டு நீ மட்டும்
சென்றுவிட்டால் எப்படி
கூடவே உன் நினைவுகளையும்
கூட்டிக்கொண்டு போய்விடு
அவைகளின் அழிச்சாட்டியம்
தாங்கமுடியவில்லை !\
எக்ஸ்ட்ரா டிக்கட் போட்டு உங்க நினைப்பை வேற கூட்டிட்டு போவாங்களா.....வேற வேலை இல்லையா அவங்களுக்கு, பாவம் நிம்மதியா போட்டும்னு விட மாட்டீங்க போலிருக்குதே:)) //
வாங்க திவ்யா....
அட எக்ஸ்ட்ரா டிக்கெட் எல்லாம் போடவே
தேவை இல்லீங்க... அவங்க மனசுக்குள்ளவே
இருக்கறதுக்கு எதுக்கு டிக்கெட்டு..?? யாரு பாவம்...???
அட நல்லா இருக்கே கதை...:))))
நக்கலு..??? ம்ம்ம்...... :)))))
//Divya said...
\\ஏன் என்னிடம் பொய்
சொன்னாய் எனக் கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !\
அய்யோ பாவம் கஷ்டபட்டு ஒரு பொய் சொல்றாரே......ரசிக்கிற மாதிரி நடிப்போம்னு அவங்க நடிச்சிருப்பாங்க,
அது புரியல உங்களுக்கு:))
உங்களுக்கு பொய் சொல்ல தெரிஞ்சா மாதிரி.....அவங்களுக்கும் நடிக்க தெரிஞ்சிருக்காதா??????//
வாங்க திவ்யா....
அடடா ரொம்பத்தான்... அழகா இருக்கேன்னு சொன்னா
கண்டிப்பா பொண்ணுங்க உண்மையாத்தான் ரசிப்பாங்கன்னு என்னோட
தோழி ஒருத்தி சொல்லி இருக்காங்க தெரியுமா..? :))))
// Divya said...
\நிறைய நேரம் கிடைக்கிறது
இப்போதெல்லாம்
நம் நினைவுகளை
அசை போடுவதற்கு
ஊடல் வாழ்க !\\
அது சரி......கூட இருக்கிறப்போ சண்டை போட்டுட்டு,
இல்லாதபோ நினைவுகளை அசை போட்டா என்ன....பசை போட்டா என்ன?? //
வாங்க திவ்யா....
காதலிகூட பேசக்கூட முடியலையேங்கற
துக்கத்தை மனசு நெறையா வச்சுகிட்டு
எவ்ளோ பாஸிடிவ்வா திங்க் பண்றாரு
அதையப் பாருங்க... தானா பசை போட்டு
ஒட்டிக்கும் அவரோட நல்ல மனசு........
// Divya said...
\\தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே\\
கடற்கரை மணல்.....நல்ல ஒரு உதாரணம், பாராட்டுக்கள்!! //
வாங்க திவ்யா... :)))
உங்க பாராட்டு எல்லாம் கிடைக்குது ...மகிழ்ச்சி...:))
// கால்ல மண் ஒட்டிக்கிட்டா......துடைச்சு விட்டுக்கலாம்,
கழுவிக்கலாம்,
சுத்தம் பண்ணிக்கலாம்.........
ஆனால் பசக்கென்று ஒட்டிக்கொண்ட நினைவுகளை????//
பசக்குன்னு ஒட்டிகிச்சா..?? அப்போ கொஞ்சம் கஷ்டம் தான்... கூட இருந்துட்டுப்போய் தொலையுதுன்னு விடவேண்டியதுதான்.. :)))
// Divya said...
\\நீ இல்லாத
பொழுதுகளும்
நன்றாகத்தான்
இருக்கின்றன
இப்போதுதான்
உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்\\
அப்படியாவது நினைச்சா சரிதான்னு போய்ட்டாங்க போல:))
பாவம் அந்த பொண்ணு:(( //
அதுசரி.... பொண்ணு பாவமா..?? இப்படிச் சொல்லிச் சொல்லியே மனசை ரணகளம் ஆக்கிருவங்க பொண்ணுங்க தெரியும்லா..?? ;))))
அடுத்த கவிதை எப்போ??
ப்ளீஸ்.....கவிதை எழுதுங்க நவீன்.
சின்ன கவிதையா இருந்தாகூட ப்ரவாயில்ல.....சீக்கிரம் இந்த மாதம் முடியும் முன் ஒரு கவிதை......ப்ளீஸ்......
Nalla rasanaiyana kaviathaigal.
கருத்துரையிடுக