புதன், ஜனவரி 24, 2007

எம்குலப்பெண்களுக்கு...

sooraiபோதும் போதும்
என்றாலும்
விடாமல் என்
கற்பை சூறையாடுகிறது
இந்த மதிகெட்ட
ஆண்குலம்
தன் கண்களாலே


vilagum2பேருந்தில்
நடைபாதையில்
சாலையில்
கோவிலில்
எங்கும் எப்போதும்
ஏதோ ஒரு ஆண்
ஏதாவது விலகுமா என
முறைத்துக்கொண்டே
இருக்கிறான்


pirasavam


கொஞ்சம் வழிகேட்டால்
போதும் பிரசவ அறைக்கு
அனுப்பும் வரை
ஓய்வதில்லை
உன் குலம் !!


thaali4


தாலி
மெட்டி
குங்குமம்
எப்படியெல்லாமோ
வேலி போட்டு
அனுப்புகிறாய்
உன் சக ஆண்குலத்தின்
மீது அப்படியொரு
நம்பிக்கையா ?? !!maathavi5


தாயாக
தாசியாக
சேயாக
தோழியாக
தாதியாக
உனக்காக
எத்தனை அவதாரம்
எடுத்தாலும்
நீ மாதவிகளையே
போற்றுகிறாயே
ஏன் ?


parathai


ஒன்றுக்கு மேல்
கட்டிக்கொண்டால்
அதிர்ஷ்டகாரன் என
பெருமைப்படுகிறது
உன் குலம்
அதையே நான் செய்தால்
பரத்தை
எனத் தூற்றுகிறது
உன்குலம்saram7


என் உரிமைபூக்களைச்
சரமாக்கி
என் தலையிலேயே
சூடிவிடுவதற்கு
உன் இனத்திற்கு
உள்ள அறிவே தனி !!

54 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

சபாஷ் நவீன் பிரகாஷ்!

காதல் மட்டுமின்றி சமூக பார்வையுடனும் கவிதை புனைந்திருக்கிறீர்கள்!

அதையும் அழகாகவே!

பெயரில்லா சொன்னது…

superb!!!!!

பெயரில்லா சொன்னது…

எனக்கு அழுகை அழுகையாக வருகின்றது.ஆனந்த கண்ணீர் தான் நவீன்.கவிதையைப் பத்தி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நாமக்கல் சிபி said...
சபாஷ் நவீன் பிரகாஷ்!

காதல் மட்டுமின்றி சமூக பார்வையுடனும் கவிதை புனைந்திருக்கிறீர்கள்!

அதையும் அழகாகவே! //

வாருங்கள் சிபி :))))
அழகான விமர்சனம் உங்கள் மனதினைப்போலவே !! :)))மிக்க நன்றி !!

கஞ்சா கருப்பு சொன்னது…

நல்ல கவிதை. ஆண் பெண் கற்பு நிலைகளில் இந்த இரட்டை ஸ்டேண்டர்ட் எப்போதுமே இருக்கிறது.

ஆனால், "ஒன்றுக்கு மேல் கட்டிக் கொண்டால் அதிர்ஷ்டகாரன் என பெருமைப்படுகிறது உன் குலம்
அதையே நான் செய்தால் பரத்தை
எனத் தூற்றுகிறது உன்குலம்"
அப்படீங்கறீங்க?

"என் பிள்ளை ஆம்பளை, இப்படி அப்படித்தான் இருப்பான், பெண்ணான உனக்கு எங்கே போச்சு புத்தி", என்று தன்னிடம் தன் மகனைப் பற்றி கண்ணீருடன் புகார் சொல்லும் பெண்களிடம் சீறும் தாய்மார்களை என்னன்னு சொல்லுவீங்க?

முகம்மது யூனுஸ்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
superb!!!!! //

வாருங்கள் அனானி !! நன்றி !!

வெற்றி சொன்னது…

நவீன்,

வழமைபோல் நல்ல கவிதைகள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//துர்கா said...
எனக்கு அழுகை அழுகையாக வருகின்றது.ஆனந்த கண்ணீர் தான் நவீன்.கவிதையைப் பத்தி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை.... /

வாருங்கள் துர்கா :)))
ஆனந்த கண்ணீரா ?? :) சந்தோசமாக இருக்கிறது. மிக்க நன்றி துர்கா !!

பொன்ஸ்~~Poorna சொன்னது…

நல்ல கவிதைகள் நவீன்.. படங்கள் ஏனோ பொருந்தாது போல் ஒரு எண்ணம் :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Harry Potter said...
நல்ல கவிதை. ஆண் பெண் கற்பு நிலைகளில் இந்த இரட்டை ஸ்டேண்டர்ட் எப்போதுமே இருக்கிறது.//

வாருங்கள் யூனுஸ் :))
நீங்க சொல்லும் இரட்டை நிலைபற்றிதான் சொல்ல முயன்றிருக்கிறேன் !! :))

//ஆனால், "ஒன்றுக்கு மேல் கட்டிக் கொண்டால் அதிர்ஷ்டகாரன் என பெருமைப்படுகிறது உன் குலம்
அதையே நான் செய்தால் பரத்தை
எனத் தூற்றுகிறது உன்குலம்"
அப்படீங்கறீங்க?

"என் பிள்ளை ஆம்பளை, இப்படி அப்படித்தான் இருப்பான், பெண்ணான உனக்கு எங்கே போச்சு புத்தி", என்று தன்னிடம் தன் மகனைப் பற்றி கண்ணீருடன் புகார் சொல்லும் பெண்களிடம் சீறும் தாய்மார்களை என்னன்னு சொல்லுவீங்க?

முகம்மது யூனுஸ் //

தாய்மார்கள் ஒடுக்கப்பட்ட தலைமுறையாக இருப்பதினால் அவ்வாறு சொல்லுவார்களோ?? இதுதான் நீ ! இப்படித்தான் இவன்! இப்படித்தான் இருக்க வேண்டும் நீ! என வளர்க்கப்பட்ட தலைமுறை என்ன செய்யும் ??

வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி யூனுஸ் ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//வெற்றி said...
நவீன்,

வழமைபோல் நல்ல கவிதைகள். //

வாருங்கள் வெற்றி :))
தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்துவதற்கு மிக்க நன்றி வெற்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பொன்ஸ் said...
நல்ல கவிதைகள் நவீன்.. //

வாருங்கள் பொன்ஸ் :))
மிக்க நன்றி வருகைக்கு !

//படங்கள் ஏனோ பொருந்தாது போல் ஒரு எண்ணம் :) //

ஒருவேளை படங்களில் மண்வாசனை இல்லாதது காரணமாக இருக்கலாம்! :)) என்ன செய்வது ?:))

Unknown சொன்னது…

நவீன் உங்கள் கவிதைகள் மெல்ல மெல்ல சிகரங்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதற்கான சான்று தான் இந்தப் பதிவு.. அற்புதமானப் படைப்பு நவீன்...

செல்வநாயகி சொன்னது…

காதல்ரசம் சொட்டச்சொட்ட மட்டுமே எழுதிக்கொண்டிருந்த உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான முயற்சி:)) நன்று. சில சொற்களின் பிரயோகங்கள் தவிர்த்துப்பார்த்தால் உங்களின் இந்தக் கவிதைகள் அது பேசவரும் பொருளுக்காக எனக்கு(ம்) பிடித்திருக்கின்றன.

///தாய்மார்கள் ஒடுக்கப்பட்ட தலைமுறையாக இருப்பதினால் அவ்வாறு சொல்லுவார்களோ?? இதுதான் நீ ! இப்படித்தான் இவன்! இப்படித்தான் இருக்க வேண்டும் நீ! என வளர்க்கப்பட்ட தலைமுறை என்ன செய்யும் ?? ///


இந்த விளக்கம் உங்களின் நல்ல புரிதலைச் சொல்கிறது. நன்றி.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தேவ் | Dev said...
நவீன் உங்கள் கவிதைகள் மெல்ல மெல்ல சிகரங்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதற்கான சான்று தான் இந்தப் பதிவு.. அற்புதமானப் படைப்பு நவீன்... //

வாருங்கள் தேவ் !! :))
சிகரங்களையா?? :)) மிக்க மகிழ்ச்சி ! வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி தேவ் !! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//செல்வநாயகி said...
காதல்ரசம் சொட்டச்சொட்ட மட்டுமே எழுதிக்கொண்டிருந்த உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான முயற்சி:)) நன்று. சில சொற்களின் பிரயோகங்கள் தவிர்த்துப்பார்த்தால் உங்களின் இந்தக் கவிதைகள் அது பேசவரும் பொருளுக்காக எனக்கு(ம்) பிடித்திருக்கின்றன.//

வாருங்கள் செல்வநாயகி :))

பொருளுக்காக பிடித்தமைக்கு மகிழ்ச்சி !! :))

///தாய்மார்கள் ஒடுக்கப்பட்ட தலைமுறையாக இருப்பதினால் அவ்வாறு சொல்லுவார்களோ?? இதுதான் நீ ! இப்படித்தான் இவன்! இப்படித்தான் இருக்க வேண்டும் நீ! என வளர்க்கப்பட்ட தலைமுறை என்ன செய்யும் ?? ///


இந்த விளக்கம் உங்களின் நல்ல புரிதலைச் சொல்கிறது. நன்றி. //

மிக்க நன்றி !! வருகைக்கும் தருகைக்கும் !! :))

சுந்தர் / Sundar சொன்னது…

அருமை !
வாழ்த்துக்கள்

மாசிலா சொன்னது…

ஐயா நவீன் பிரகாஷ், எந்த கிரகத்தில் வாழ்கிறீர்கள்?
இப்போதெல்லாம் இநத உலகத்தை முழுதும் வீட்டிலிருந்து காடுவரை ஆட்டிப்படைக்கிறது பெண்கள்தான் தெரியுமா? மேலும் பெண்கள் நசுக்கப்பட்டவர்கள்போல் நடிப்பதில் ரொம்பவும் சாமர்த்தியமானவர்கள் தெரியுமோ? உண்மையில் ஆண்கள் எந்த அளவுக்கு துன்புறுத்த படுகிறார்களோ, அதே அளவுதான் பெண்களுக்கும் துன்பம். பெண்களுக்கு மற்ற ஆண்கள் தங்களை பார்ப்பது மிகவும் பிடிக்கும் தெரியுமோ? மறைந்த கலைஞர் சந்திரபாபுவின் 'பெண்களை நம்பாதே' கேடிருக்கிறீர்களா? கடைசியாக ஆண்களைவிட பெண்கள் அதிபுத்திசாலிகள் என்பதும் தெரியுமோ? அவர்கள் சிந்திக்கும் விதமே தனி ஐயா. உம்மை பாதுகாத்துக்கொள்ளுங்கள். பெண்களை இவ்வளவு தரக்குறைவாக எடைபோட்டு எழுதியிருக்கிறீர். நிச்சாயமாக சில பெண்கள் இதை படித்து உள்ளுக்குள் சிரித்து வெடித்திருந்திருப்பார்கள்! சில சண்டைக்கே வந்திருப்பர். நீங்கள் குறிப்பிடும் வகை பெண்கள் எல்லாம் 'அந்த காலத்தில்'தான். இப்போதெல்லாம் கதையே வேறு. இந்த கவிஞர்களே இப்படித்தான். கற்பனையிலேயே காலத்தை கழிப்பர். நிஜ உலகத்திற்கு இறங்கி வாரும். வந்த வேகத்தில் ஓடீயே போய்விடுவீர்!

இப்படி எழுதியதற்கு கோபிக்க வேண்டாம். உண்மையைத்தான் சொன்னேன். உங்கள்மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. வாதிப்போமே!

ம்ம்ம்....
இருந்தாலும் கவிதை ஓரளவு தேவலாம்.
நல்ல முயற்சி.

நன்றி. தொடர்க...
அன்புடன் மாசிலா.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சுந்தர் / Sundar said...
அருமை !
வாழ்த்துக்கள் //

வாருங்கள் சுந்தர் :))
மிக்க நன்றி சுந்தர். அறிந்ததை அறிவித்தமைக்கு :))

thiru சொன்னது…

நவீன்,

பு(பொ)துமை கருத்துக்கள் கவிதையில்! வாழ்த்துக்கள்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மாசிலா said...
ஐயா நவீன் பிரகாஷ், எந்த கிரகத்தில் வாழ்கிறீர்கள்? //

வாருங்கள் மாசிலா :)))
விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. நானும் உங்கள் கிரகத்தில் வசிக்கும் சக இனம் தான் :)))

//இப்போதெல்லாம் இநத உலகத்தை முழுதும் வீட்டிலிருந்து காடுவரை ஆட்டிப்படைக்கிறது பெண்கள்தான் தெரியுமா? மேலும் பெண்கள் நசுக்கப்பட்டவர்கள்போல் நடிப்பதில் ரொம்பவும் சாமர்த்தியமானவர்கள் தெரியுமோ? //

பெண்களில்லாமல் இவ்வுலகம் இல்லை. மனிதனை படைக்கும் குலத்திற்கு ஆட்டிப்படைக்க உரிமை இல்லையா? :)) அம்மாவாக , சகோதரியாக, மனைவியாக, தோழியாக பல பரிமாணங்களில் வீட்டிலிருந்து காடுவரை ஆட்டிப்படைக்கிறார்கள் என உயர்வு நவிர்ச்சியாகத்தான் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன் !! :))

//உண்மையில் ஆண்கள் எந்த அளவுக்கு துன்புறுத்த படுகிறார்களோ, அதே அளவுதான் பெண்களுக்கும் துன்பம். //

நீங்கள் கூறுவதில் நான் முரண்படுகிறேன் மாசிலா ! நான் உணர்ந்த கேட்ட பெண்களின் உணர்வுகளைத்தான் பிரதிபலித்திருக்கிறேன் ! :)) பெண்களுக்கு உடலியலாக ஏற்படும் துன்பங்கள் ஆண்களாகிய நமக்கு இல்லை என்பதை நீங்கள் அறியீர்களா??

//பெண்களுக்கு மற்ற ஆண்கள் தங்களை பார்ப்பது மிகவும் பிடிக்கும் தெரியுமோ? மறைந்த கலைஞர் சந்திரபாபுவின் 'பெண்களை நம்பாதே' கேடிருக்கிறீர்களா? //

இது சாதாரண மனஉணர்வு மாசிலா ! பெண்களை பார்க்கும் பார்வையில் காமம் விஞ்சியிருக்கும் வேளைகளில் தான் அவர்கள் அவ்வாறு அருவருப்பு உணர்வை அடைகிறார்கள்! அதைதான் நான் இங்கு கூறியிருக்கிறேன் !! பெண்களை நம்பாதே நான் கேட்டதில்லை. பெண்களை நம்பியதால் கெட்டதும் இல்லை !! :)))

//கடைசியாக ஆண்களைவிட பெண்கள் அதிபுத்திசாலிகள் என்பதும் தெரியுமோ? அவர்கள் சிந்திக்கும் விதமே தனி ஐயா. உம்மை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.//

பெண்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பதில் தவறென்ன? ஏன் என்னை பாதுகாதுக்கொள்ள வேண்டும்? எனக்கு புரியவில்லை மாசிலா:)) அவர்களை எனக்கு துன்பமிளைப்பவர்களாகப் பார்க்கவில்லை நான் !! :))

// பெண்களை இவ்வளவு தரக்குறைவாக எடைபோட்டு எழுதியிருக்கிறீர். நிச்சாயமாக சில பெண்கள் இதை படித்து உள்ளுக்குள் சிரித்து வெடித்திருந்திருப்பார்கள்! சில சண்டைக்கே வந்திருப்பர்.//

தரக்குறைவாக நான் எங்கே அவர்களை எடைப்போட்டு சொல்லியிருக்கிறேன் ?? எனக்குச் சொல்லமுடியுமா ? சில பெண்கள் சிரித்திருக்களாமோ என்னவே?! ஆனால் நான் உணர்ந்த கண்ட கேட்ட பெரும்பான்மையான பெண்களின் உணர்வுகள் தான் இவை !! :)))

//நீங்கள் குறிப்பிடும் வகை பெண்கள் எல்லாம் 'அந்த காலத்தில்'தான். இப்போதெல்லாம் கதையே வேறு. இந்த கவிஞர்களே இப்படித்தான். கற்பனையிலேயே காலத்தை கழிப்பர். நிஜ உலகத்திற்கு இறங்கி வாரும். வந்த வேகத்தில் ஓடீயே போய்விடுவீர்!//

மீண்டும் உங்கள் பார்வையில் வேறுபடுகிறேன் மாசிலா !! :))
இன்னும் கனன்று கொண்டுதான் இருக்கின்றன பெண்களுக்கான விதிமுறைகள். மறுத்துவிட முடியாது.
வெறும் கற்பனையிலேயே கவிதை எழுத முடியாது மாசிலா ! உலகமும் அதின் உயிர்களும் என் பார்வையில் என்றும் அழகாத்தான் தெரிகின்றன !! எங்கு ஓடினாலும் இங்குதான் திரும்பிவர முடியும் அல்லவா ? :))


//இப்படி எழுதியதற்கு கோபிக்க வேண்டாம். உண்மையைத்தான் சொன்னேன். உங்கள்மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. வாதிப்போமே! //

நிச்சயமாக கேபமே இல்லை மாசிலா !! உங்களின் கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டமைக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன் ! மேலும் வாதிப்போம் :))

//ம்ம்ம்....
இருந்தாலும் கவிதை ஓரளவு தேவலாம்.
நல்ல முயற்சி.

நன்றி. தொடர்க...
அன்புடன் மாசிலா. //

மிக்க நன்றி மாசிலா !! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//திரு said...
நவீன்,

பு(பொ)துமை கருத்துக்கள் கவிதையில்! வாழ்த்துக்கள்! //

வாருங்கள் திரு :))
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு !!

Sivabalan சொன்னது…

அருமை!!

நன்றாக எழுதியுள்ளீர்கள்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sivabalan said...
அருமை!!

நன்றாக எழுதியுள்ளீர்கள் //

வாருங்கள் சிவபாலன் :))
மிக்க நன்றி பாலன் ! :))

ஐந்திணை சொன்னது…

//
மாதவிகளையே
போற்றுகிறாயே
ஏன்?
//
இப்படிப்பட்ட ஆண்களுக்கு நல்ல சவுக்கடி!

சேதுக்கரசி சொன்னது…

//நல்ல கவிதைகள் நவீன்.. படங்கள் ஏனோ பொருந்தாது போல் ஒரு எண்ணம் :)//

அதே..அதே :)

ILA (a) இளா சொன்னது…

பெண்ணாய் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்மமா... பிறந்தாலோ...?

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் //

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//முகில் said...
//
மாதவிகளையே
போற்றுகிறாயே
ஏன்?
//
இப்படிப்பட்ட ஆண்களுக்கு நல்ல சவுக்கடி! //

வாருங்கள் முகில் !! :))
கருத்துக்கு மிக்க நன்றி !! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேதுக்கரசி said...
//நல்ல கவிதைகள் நவீன்.. படங்கள் ஏனோ பொருந்தாது போல் ஒரு எண்ணம் :)//

அதே..அதே :) //

வாருங்கள் சேதுக்கரசி :))
அடுத்தமுறை மேலும் கவனம் எடுதுக்கொள்கிறேன் :)) மிக்க நன்றி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ILA(a)இளா said...
பெண்ணாய் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்மமா... பிறந்தாலோ...? //

வாருங்கள் இளா :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//subha said...
வாழ்த்துக்கள் //

வாருங்கள் சுபா :))
மிக்க நன்றி !! :))

கார்த்திக் பிரபு சொன்னது…

ஹாய் நவீன் வந்து விட்டேன்..இனிமே நீங்க பதிவு போட்டா கண்டிப்பா சொல்லுங்க சரியா..

அப்புறம் கவிதைகள் நல்லா யிருக்கு..ஆண்களை ப்ற்றிய பலரது கடுப்பு பதிவுகள் இப்போது தான் முடிவுக்கு வந்த்ருக்கு..இந்த வேளையில் நீங்க இப்படி போட்டு தாக்கியிருக்கீங்க..

நானும் யோசிக்கிறேன்..ஆண்களுக்கு மட்டும் ஏன் இப்படி வக்கிர புத்தி..எனக்கு என்ன தோன்ற்கிறது தெரியுமா..பெண்களின் கற்பு மட்டுமே பெரிய விஷயமாக கருத படுவதால் மட்டுமே..ஆண்களின் கற்பு பற்றி யாருமே பேச வில்லை..

கோவலனை திட்டுவார்களே தவிர ..மாதவியை யாரும் ஒன்றும் சொல்வதில்லை..என்ன நான் சொல்வது சரி தானே??

மாசிலா சொன்னது…

உண்மையில் பெண்களின் சுதந்திரத்திற்காக நீர் பாடுபடுவில்லை அன்பரே. மாறாக அவர்களை பழையபடி அடிமைபடுத்தவே முயற்சிக்கிறீர். பல காலங்களாக அவர்களை இப்படி அடிமை படுத்தியதின் விளைவாகத்தான் அவர்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களின் சாதாரண பார்வைகூட ஒரு கொடூர காம பார்வையாக பார்க்கின்றனர். முக்கியமாக நான் சொல்லிக்கொள்ள விரும்பவது : தமிழ் பெண்களுக்கு இப்போது இருக்கும் அனைத்து சுதந்திரம் எனும் எல்லையில்லா பரந்த விடுதலையை ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டுவரும் முயற்சியே உங்களைப்போன்றவர்களின் வாதம். இது ஒரு ஆணாதிக்க வாதம்.

அன்புடன் மாசிலா!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கார்த்திக் பிரபு said...
ஹாய் நவீன் வந்து விட்டேன்..இனிமே நீங்க பதிவு போட்டா கண்டிப்பா சொல்லுங்க சரியா..//

வாருங்கள் கார்த்திக் பிரபு :))
கண்டிப்பாகச்சொல்கிறேன் :))

//அப்புறம் கவிதைகள் நல்லா யிருக்கு..ஆண்களை ப்ற்றிய பலரது கடுப்பு பதிவுகள் இப்போது தான் முடிவுக்கு வந்த்ருக்கு..இந்த வேளையில் நீங்க இப்படி போட்டு தாக்கியிருக்கீங்க..//

கவலை வேண்டாம் ! கலவரம் ஏற்படுத்தும் எண்ணமில்லை:))

//நானும் யோசிக்கிறேன்..ஆண்களுக்கு மட்டும் ஏன் இப்படி வக்கிர புத்தி..எனக்கு என்ன தோன்ற்கிறது தெரியுமா..பெண்களின் கற்பு மட்டுமே பெரிய விஷயமாக கருத படுவதால் மட்டுமே..ஆண்களின் கற்பு பற்றி யாருமே பேச வில்லை..

கோவலனை திட்டுவார்களே தவிர ..மாதவியை யாரும் ஒன்றும் சொல்வதில்லை..என்ன நான் சொல்வது சரி தானே?? //

நீங்க சொல்வது மிகச் சரியே கார்த்திக் :)) மிக்க நன்றி விரிவான கருத்துக்களுக்கு :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மாசிலா said...
உண்மையில் பெண்களின் சுதந்திரத்திற்காக நீர் பாடுபடுவில்லை அன்பரே.//

வாருங்கள் மாசிலா :))))
நீங்கள் சொல்வது மிகச்சரியே !!

//மாறாக அவர்களை பழையபடி அடிமைபடுத்தவே முயற்சிக்கிறீர்.//

நீங்கள் சொல்வது மிகத்தவறு மாசிலா !!:))))

// பல காலங்களாக அவர்களை இப்படி அடிமை படுத்தியதின் விளைவாகத்தான் அவர்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களின் சாதாரண பார்வைகூட ஒரு கொடூர காம பார்வையாக பார்க்கின்றனர். //

இது உங்களின் பார்வையாக இருக்கலாம். இதிலிருந்து என் பார்வை வேறுபடுகிறது மாசிலா !! :)))

//முக்கியமாக நான் சொல்லிக்கொள்ள விரும்பவது : தமிழ் பெண்களுக்கு இப்போது இருக்கும் அனைத்து சுதந்திரம் எனும் எல்லையில்லா பரந்த விடுதலையை ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டுவரும் முயற்சியே உங்களைப்போன்றவர்களின் வாதம். இது ஒரு ஆணாதிக்க வாதம்.

அன்புடன் மாசிலா! //

நான் என்ன வாதித்தேன் ?? ஆணாதிக்கமா ?? எங்கே ?? என் படைப்பு உங்களின் பார்வையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது மாசிலா !! மீண்டும் ஒருமுறை வாசித்துப்பார்க்க வேண்டுகிறேன் !! :)))

மீண்டும் வந்து தங்களின் எண்ணங்களை பகிர்ந்துகொண்டமைக்காக மிக்க நன்றி !:))))

சத்தியா சொன்னது…

சமூகப் பார்வையுடன் எழுதிய கவிதைகளுக்கு எனது பாராட்டுக்கள்!!!

என்னைப் பொறுத்தவரையில் அத்தனையுமே நல்ல கவிதைகள் நவீன்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சத்தியா said...
சமூகப் பார்வையுடன் எழுதிய கவிதைகளுக்கு எனது பாராட்டுக்கள்!!!

என்னைப் பொறுத்தவரையில் அத்தனையுமே நல்ல கவிதைகள் நவீன் //

வாருங்கள் சத்தியா :)))
பராட்டுகளுக்கும் கருத்துகும் மிக்க நன்றி சத்தியா :))))

மங்கை சொன்னது…

//தாயாக
தாசியாக
சேயாக
தோழியாக
தாதியாக
உனக்காக
எத்தனை அவதாரம்
எடுத்தாலும்
நீ மாதவிகளையே
போற்றுகிறாயே
ஏன் ?/


பல பெண்களின் இன்றைய நிலையை அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்

பாராட்டுக்கள்

ச.பிரேம்குமார் சொன்னது…

ம்ம்ம், காதல் கவிஞர் நவீன் பிரகாஷ் கவிதைகளா இது? சரி சரி, ஒரு குடும்பஸ்தன் கலை வருது தல...

இது ஒரு மாதிரி 'சேம் ஸைடு கோல்' என்றாலும், கொஞ்சம் மறுக்க முடியாத உண்மைதான்.

//போதும் போதும்
என்றாலும்
விடாமல் என்
கற்பை சூறையாடுகிறது
இந்த மதிகெட்ட
ஆண்குலம்
தன் கண்களாலே//

//என் உரிமைபூக்களைச்
சரமாக்கி
என் தலையிலேயே
சூடிவிடுவதற்கு
உன் இனத்திற்கு
உள்ள அறிவே தனி !! //

இவையிரண்டும் மிக அருமை. வாழ்த்துக்கள்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மங்கை said...
//தாயாக
தாசியாக
சேயாக
தோழியாக
தாதியாக
உனக்காக
எத்தனை அவதாரம்
எடுத்தாலும்
நீ மாதவிகளையே
போற்றுகிறாயே
ஏன் ?/


பல பெண்களின் இன்றைய நிலையை அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்

பாராட்டுக்கள் //

வாருங்கள் மங்கை :))
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி மங்கை !! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பிரேம்குமார் said...
ம்ம்ம், காதல் கவிஞர் நவீன் பிரகாஷ் கவிதைகளா இது? சரி சரி, ஒரு குடும்பஸ்தன் கலை வருது தல...

இது ஒரு மாதிரி 'சேம் ஸைடு கோல்' என்றாலும், கொஞ்சம் மறுக்க முடியாத உண்மைதான். //

வாருங்கள் பிரேம்குமார் :))
குடும்பஸ்தன் கலையா ?? :))) குடும்பஸ்தன் இப்படி எழுதமாட்டார் பிரேம் :))

//போதும் போதும்
என்றாலும்
விடாமல் என்
கற்பை சூறையாடுகிறது
இந்த மதிகெட்ட
ஆண்குலம்
தன் கண்களாலே//

//என் உரிமைபூக்களைச்
சரமாக்கி
என் தலையிலேயே
சூடிவிடுவதற்கு
உன் இனத்திற்கு
உள்ள அறிவே தனி !! //

//இவையிரண்டும் மிக அருமை. வாழ்த்துக்கள் //

வந்தமைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள் பல !! :))

ப்ரியன் சொன்னது…

அருமை நவீன்...காதலை தாண்டி கவிதைகள் மகிழ்ச்சியாய் இருக்கிறது காண...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ப்ரியன் said...
அருமை நவீன்...காதலை தாண்டி கவிதைகள் மகிழ்ச்சியாய் இருக்கிறது காண... //

வாருங்கள் ப்ரியன் :))
கவிதைகள் காதலை சில சமயம் தான் தாண்டுகின்றன எனக்கு :))) மிக்க நன்றி ப்ரியன் கருத்துக்கு !!

மஞ்சூர் ராசா சொன்னது…

புகைப்படங்கள் கவிதை பேசுகின்றன

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மஞ்சூர் ராசா said...
புகைப்படங்கள் கவிதை பேசுகின்றன//

வாருங்கள் மஞ்சூர் ராசா :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !!

பெயரில்லா சொன்னது…

Nice poems keep it up

பெயரில்லா சொன்னது…

நல்ல விஷயம் தான்....ஆண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுவது என்பது...பெண்களின் சந்தோஷம்..துக்கம்...விடுதலை..அடிமைத்தனம் எல்லாவ
ற்றிற்குமே ஆண்கள் தான் யோசிக்க வேண்டியுள்ளது என்பது தான் நம் நாட்டின் சாபக்கேடு.... எனினும் உம் நேர்மைக்கு நன்றி.....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இனியவள் புனிதா said...
Nice poems keep it up //

வாருங்கள் புனிதா :))
மிக்க நன்றி !!:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அமுதா said...
நல்ல விஷயம் தான்....ஆண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுவது என்பது...பெண்களின் சந்தோஷம்..துக்கம்...விடுதலை..அடிமைத்தனம் எல்லாவ
ற்றிற்குமே ஆண்கள் தான் யோசிக்க வேண்டியுள்ளது என்பது தான் நம் நாட்டின் சாபக்கேடு.... எனினும் உம் நேர்மைக்கு நன்றி..... //

வாருங்கள் அமுதா :)))
மிகவும் கோபமாக இருப்பீர்கள் போல் இருக்கிறதே !! ஆண்கள் யோசித்தான் ஏன் சாபக்கேடு? கோபம் வேண்டாம் அமுதா !! :))))) மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !!

Unknown சொன்னது…

அருமை அருமை...

Divya சொன்னது…

பெண்களின் சார்பில் ஆண்களை சாடும் கேள்வி கணைகள் அருமை:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// anil said...

அருமை அருமை... //

வாங்க அனில்...:))
மிக்க நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

பெண்களின் சார்பில் ஆண்களை சாடும் கேள்வி கணைகள் அருமை:)) //

வாங்க திவ்யா...:)))
வருகைக்கும் தருகைக்கும்
மிக்க நன்றி,.....:))))