செவ்வாய், மார்ச் 06, 2007

143 missed calls

miscal1நானும் நீயும் ஒரே ரிங்டோன்
வைத்து இருப்பது அறியாமல்
யாருடைய மொபைலிலோ அழைப்பு
வந்தபோது நான் இருவருமே அவரவர்
மொபைலை எடுத்துப் பார்த்துவிட்டு
நீ என்னையும்
நான் உன்னையும்
பார்த்து வழிந்தோமே ?
அந்த முதல் சந்திப்பு உனக்கு
ஞாபகம் இருக்கிறதா ?


miscal2


தோழிக்கு சொல்வதுபோல்
உன் மொபைல் எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்டபோது நீ அவசரமாக முறைத்து
மறுத்துவிட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என் மெசேஜ் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?


miscal3


முதன் முதலில் நான்
உன்னை மொபைலில் அழைத்தபோது
யாரென்றே தெரியாதது போல
ஆயிரம் கேள்வி கேட்டு
வெறுப்பேற்றினாயே
ஞாபகம் இருக்கிறதா ?


miscal4


அண்ணன் பக்கத்தில்
இருந்ததால் தான் அப்படி
பேசவேண்டி இருந்தது மன்னிச்சுகுங்க
என நீ அனுப்பிக்கொண்டே
இருந்த மெசேஜ்
என் இன்பாக்ஸையே
நிரப்பிவிட்டது உனக்கு
தெரியுமா ?


miscal5


ஏண்டா வாய் அசையுது
ஆனா ஒரு சத்தமும் கேட்கமாட்டீங்குதேடா
குசுகுசுன்னு அப்படி
என்னதான் ரகசியம் பேசுறியோ ?
என கேட்கும் அம்மாவிடம்
சொல்லி விடட்டுமா
அந்த ரகசியத்தை என நான்
உன்னிடம் கேட்டபோது
தைரியம் இருந்தா பண்ணிட்டு சொல்லுடா
என குறும்பாக நீ சொன்னது
ஞாபகம் இருக்கிறதா ?


miscal6


அவசரத்தில் நீ மொபைலை வைத்து
இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு
ஒரேயொருநாள் நான் உன்
மொபைலாக இருக்கிறேனே
என நான் கேட்டபோது
நீ கொட்டிய வெட்கத்தை
என் மனதினில் இன்னமும்
சேமித்து வைத்திருக்கிறேன்
தெரியுமா ?


miscal7


ஏன் இன்னும் இந்த பழைய
மொபைலையே வைத்துக்கொண்டு
மாரடிக்கிறே என கேலிபேசும்
நண்பர்களிடம் இதுதான்
நீ முதன்முதலில் கொடுத்த
முத்தம் சுமந்த மொபைல்
என கூறமுடியுமா ?


miscal8


இப்போவெல்லாம் நம்ம தம்பி
நைட்டு ரொம்ப நேரம் படிச்சுட்டு
லேட்டாதான் தூங்குறான் என
அப்பாவிடம் உற்சாகமாக
சொல்லிக்கொண்டிருக்கும்
அம்மாவுக்கு தெரியுமா
நான் படித்துக்கொண்டிருப்பது மாதிரி
நடித்துக்கொண்டிருப்பதே
நாம் அனுப்பிக்கொள்ளும்
மெசேஜ்களுக்குத்தான் என்று ?


miscal9


என் தோழியிடமிருந்து வந்திருந்த
ஒரு மெசேஜை நீ படித்துவிட்டு
என்னிடம் சண்டையிட்டு போன
அன்று முழுவதும் நான் உனக்கு
விளக்கம் சொல்லி சொல்லி
தேய்ந்தே போனது என்
மொபைலின் கீபேட் மட்டும் அல்ல
என் விரல்களும்தான்
என உனக்குத்தெரியுமா ?


miscal10


நண்பர்களுடன் இருக்கும்போது
நீ கேட்ட ‘உம்மா’ வை நான் தரவில்லை
என கோபமாக நீ மொபைலை அணைத்துவிட்டு
சென்றுவிட்டாய் என்பதற்காக அடுத்த நாள்
முழுவதும் மொபைலில்
நான் முத்தம் கொடுத்துக்கொண்டே
இருக்க தாங்க முடியாமல்
‘போதுண்டா பேசித்தொலைக்கிறேன்
நிறுத்து ப்ளீஸ்!’ என நீ கெஞ்சலாக
கேட்ட கொஞ்சலை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?miscal11


இந்த மொபைலை பார்க்கிறபோ
எல்லாம் உனக்கு என்ன தோணுது
என நீ கேட்டதற்கு நான் சொன்ன
பதிலுக்குப்பிறகு முறைத்துக் கொண்டே
மறைத்துக்கொண்டாயே
ஞாபகம் இருக்கிறதா ?

67 கருத்துகள்:

Unknown சொன்னது…

நவீன்,

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள் மொபைல் கவிதைகளோடு :-)
யாஹூ விடு தூது போல செல் விடு தூதும் அருமையான அனுபவக் கவிதைகள்!!!
வாழ்த்துக்கள்!!!

இராம்/Raam சொன்னது…

நவின்,

அழகாகவே சிணுங்குகின்றது உங்களின் காதல் ரிங்டோன் :)

ஜி சொன்னது…

ஆஹா.....

எக்கச்சக்கமா மிஸ்ட் கால் ஆகியிருக்குது போல உங்க வாழ்க்கைல....

சரி.. பல மேட்டர அங்கங்க மறச்சி மறச்சி விட்டுறுக்கீங்களே.... என்ன மாதிரி காதலிக்காதவங்களுக்கு அது எப்படி புரியும். அதுனால முழுசா போடுங்கப்பூ....

நந்தா சொன்னது…

வாங்க நவீன் ப்ரகாஷ்.
உங்க கவிதைகளின் ரசிகன் நான். போன மாதம் ரொம்பவே உஙளை எதிர் பார்த்தேன்.

எல்லா கவிதைகளுமே அருமையிலும் அருமை. கலக்குங்க.

பெயரில்லா சொன்னது…

இது மொபைல் தூதா?அடடா...இப்படி எல்லாம் யோசிக்கின்றீர்கள்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// அருட்பெருங்கோ said...
நவீன்,

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள் மொபைல் கவிதைகளோடு :-)
யாஹூ விடு தூது போல செல் விடு தூதும் அருமையான அனுபவக் கவிதைகள்!!!
வாழ்த்துக்கள்!!! ///

வாங்க அருட்பெருங்கோ :))
மிக்க நன்றி அருள் !! அனுபவம் அது இதுன்னு போகிற போக்கில் வாரிவிடுறீங்களே ஞாயமா ??;)))))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இராம் said...
நவின்,

அழகாகவே சிணுங்குகின்றது உங்களின் காதல் ரிங்டோன் :) //

வாங்க ராம் :)))
அழகாக தான் சிணுங்குகிறது உங்கள் விமர்சனமும் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஜி - Z said...
ஆஹா.....

எக்கச்சக்கமா மிஸ்ட் கால் ஆகியிருக்குது போல உங்க வாழ்க்கைல....//

வாங்க ஜி :)))
மிஸ்டு கால் சாதரணம் தானே ?;))))))))

//சரி.. பல மேட்டர அங்கங்க மறச்சி மறச்சி விட்டுறுக்கீங்களே.... என்ன மாதிரி காதலிக்காதவங்களுக்கு அது எப்படி புரியும். அதுனால முழுசா போடுங்கப்பூ.... //

ஜி இப்படியெல்லாம் சொன்னால் உண்மையாகிவிடுமா ?;)))) சும்மா புரியாதமாதிரி நடிக்காதீங்க :)))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Nandha said...
வாங்க நவீன் ப்ரகாஷ்.
உங்க கவிதைகளின் ரசிகன் நான். போன மாதம் ரொம்பவே உஙளை எதிர் பார்த்தேன்.

எல்லா கவிதைகளுமே அருமையிலும் அருமை. கலக்குங்க.//

வாங்க நந்தா :)))))
மிக்க மகிழ்ச்சி நந்தா !! போன மாதம் கொஞ்சம் வர இயலவில்லை .மன்னித்துக்கொள்ளுங்கள் !! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// துர்கா said...
இது மொபைல் தூதா?அடடா...இப்படி எல்லாம் யோசிக்கின்றீர்கள்!//

வாருங்கள் துர்கா :)))
இல்ல துர்கா !! மொபைல் தூதெல்லாம் இல்லை . சாதாரண கவிதைகள் தான் :))))))))))

பொன்ஸ்~~Poorna சொன்னது…

கவிதைகள் நல்லாஇருக்கு நவீன்.. ஆனா கொஞ்சம் ஏமாற்றம் தலைவா.. ஏன் இத்தனை நீள நீள கவிதைகளுக்கு மாறிவிட்டீர்கள்? நீளம் வார்த்தைச் சிக்கனத்தை அடித்துக் கொண்டு போய்விட்டதே.. :((

நாகை சிவா சொன்னது…

நவீன்
வழக்கம் போல் கவிதைகள் அருமை

நீங்க எழுதிய கவிதைகளும், படத்தில் இருக்கும் கவிதைகளும்.

இந்த இரண்டாவது கவிதைகள் எல்லாம் எங்க இருந்துங்க புடிக்குறீங்க நீங்க... அருமையோ அருமைங்க...

வெங்கட்ராமன் சொன்னது…

இத படிக்கிற
காதலிக்கிறவங்களெல்லாம்

இன்னைக்கு தூங்கப்போறதில்ல Network Traffic ஜாஸ்தியாகப் போகுது.

நான் நல்லா தூங்குவேன்.

கவிதைகள் நல்லாயிருக்கு.

பெயரில்லா சொன்னது…

மிக நன்றாக இருக்கின்றன...தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன்! நன்றி

http://www.desipundit.com/2007/03/06/mobilekavihthai/

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பொன்ஸ் said...
கவிதைகள் நல்லாஇருக்கு நவீன்.. ஆனா கொஞ்சம் ஏமாற்றம் தலைவா.. ஏன் இத்தனை நீள நீள கவிதைகளுக்கு மாறிவிட்டீர்கள்? நீளம் வார்த்தைச் சிக்கனத்தை அடித்துக் கொண்டு போய்விட்டதே.. :(( //

வாங்க பொன்ஸ் :)))
கொஞ்சம் என் கவிதை நடையை மாற்றிப்பார்த்தேன் பொன்ஸ் சோதனை முயற்சியாக !! :))) கொஞ்சம் பொருமையாகத்தான் வாசித்தால் என்னவாம் ?? ;)))

//Dubukku said...
மிக நன்றாக இருக்கின்றன...தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன்! நன்றி//

வாருங்கள் டுபுக்கு :)))
மிக்க நன்றி வந்தமைக்கும் இணைத்தமைக்கும் :)))))

Unknown சொன்னது…

கவிதைக்கான களம் நல்லாயிருக்கு நவீன் ஆனா கொஞ்சம் உரைநடையாய் தெரிகிறதே...

ஆனால் வழக்கம் போல் சிந்தனையில் குறும்புத் தனங்களின் வழமை குறையவில்லை நண்பா..

பெயரில்லா சொன்னது…

ரொம்ப சூப்பர்.
ஆனால்
மிஸ்டு கால்
நட்பு
காதலாகிப் போகும் போது...
மொபைல் எனும் கைக்குள்ளே உலகம்
தித்திப்பாகும்
மீண்டும் நட்பாக
மாற நேரும் போது
மொபைல் எனும் கைக்குள்ளே உலகம்
மரணத்தின் விழியாய்
அழைத்துக்கொண்டே இருக்கும்.....

சேதுக்கரசி சொன்னது…

கடைசிக் கவிதை கியூட்டா இருக்கு :-)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தேவ் | Dev said...
கவிதைக்கான களம் நல்லாயிருக்கு நவீன் ஆனா கொஞ்சம் உரைநடையாய் தெரிகிறதே...

ஆனால் வழக்கம் போல் சிந்தனையில் குறும்புத் தனங்களின் வழமை குறையவில்லை நண்பா.. //

வாருங்கள் தேவ் :))))
ஒருவேளை கொஞ்சம் நீளமான வரிகளால் அந்த உணர்வு ஏற்பட்டிருக்கலாமோ? இது எனக்கு ஒரு புதிய முயற்சி தேவ் ! நீளமான வரிகளாகத்தான் எழுதமுயற்சித்திருக்கிறேன் இதில் !! :))) விமர்சனதிற்கு நன்றி தேவ். வரும் நாட்களில் இன்னும் மெருகூட்ட முயற்சி செய்கிறேன் !:))))))))

சேதுக்கரசி சொன்னது…

என் பின்னூட்டம் வந்ததான்னு தெரியல.. கடைசிக் கவிதை கியூட்னு சொல்லியிருந்தேன் :)

dubukudisciple சொன்னது…

hi naveen!!
missed call and mobile vaithu ivalavu arumaiyaga kavithai ezhuthareengale...
poramaiya iruku...
namaku suttu potalum varala

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
ரொம்ப சூப்பர்.
ஆனால்
மிஸ்டு கால்
நட்பு
காதலாகிப் போகும் போது...
மொபைல் எனும் கைக்குள்ளே உலகம்
தித்திப்பாகும்
மீண்டும் நட்பாக
மாற நேரும் போது
மொபைல் எனும் கைக்குள்ளே உலகம்
மரணத்தின் விழியாய்
அழைத்துக்கொண்டே இருக்கும்..... //

வாங்க அனானி :))))
அழகான விமர்சன கவிதை ! :)) அருமையாக இருக்கிறது, மிக்க நன்றி ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேதுக்கரசி said...
கடைசிக் கவிதை கியூட்டா இருக்கு :-)
சேதுக்கரசி said...
என் பின்னூட்டம் வந்ததான்னு தெரியல.. கடைசிக் கவிதை கியூட்னு சொல்லியிருந்தேன் :)
//

வாங்க சேதுக்கரசி :)))
உங்கள் இரண்டு பின்னூட்டமும் வந்துவிட்டது !. தாமததிற்கு மன்னிக்கவும் ! :))) மிக்க நன்றி !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// dubukudisciple said...
hi naveen!!
missed call and mobile vaithu ivalavu arumaiyaga kavithai ezhuthareengale...
poramaiya iruku...
namaku suttu potalum varala //

வாங்க டுபுக்குட்டிசைபிள் !! :))))
மிக்க நன்றிங்க ! ஏன் பொறாமை ? கொஞ்சம் முயற்சித்து பாருங்க. அழகா வரும் உங்களுக்கு ! சரியா ? விரைவில் கவிதை எழுத வாழ்த்துக்கள் :)))

பெயரில்லா சொன்னது…

செல்போன் கவிதைகள் பிரமாதம் !!!

//நீ முதன்முதலில் கொடுத்த
முத்தம் சுமந்த மொபைல்//

பளிச் கவிதை !

பெயரில்லா சொன்னது…

//இந்த இரண்டாவது கவிதைகள் எல்லாம் எங்க இருந்துங்க புடிக்குறீங்க நீங்க... அருமையோ அருமைங்க... //

சிவா இதைதான் நானும் கேட்டேன்.இவர் இது எல்லாம் கற்பனை கவிதை என்று நழுவி விட்டார்.எனக்கு நம்பிக்கை இல்லை.இவரின் கவிதைகள் எல்லாம் மிகவும் அனுபவம் வாய்ந்த கவிதைகள் போல் எனக்கு படுகின்றது.

என்ன நவீன் நான் சொல்வது சரிதானே?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேவியர் said...
செல்போன் கவிதைகள் பிரமாதம் !!!

//நீ முதன்முதலில் கொடுத்த
முத்தம் சுமந்த மொபைல்//

பளிச் கவிதை ! //

வாருங்கள் சேவியர் :)))
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// துர்கா said...
//இந்த இரண்டாவது கவிதைகள் எல்லாம் எங்க இருந்துங்க புடிக்குறீங்க நீங்க... அருமையோ அருமைங்க... //

சிவா இதைதான் நானும் கேட்டேன்.இவர் இது எல்லாம் கற்பனை கவிதை என்று நழுவி விட்டார்.எனக்கு நம்பிக்கை இல்லை.இவரின் கவிதைகள் எல்லாம் மிகவும் அனுபவம் வாய்ந்த கவிதைகள் போல் எனக்கு படுகின்றது.

என்ன நவீன் நான் சொல்வது சரிதானே? //

ரொம்பவே சரி துர்கா :))))))))))))
என் கவிதைகள் மிகுந்த அனுபவம் இல்லாதவன் எழுதிய அனுபவம் வாய்ந்த கவிதைகள்தான் ! ;))))))))

பெயரில்லா சொன்னது…

//ரொம்பவே சரி துர்கா :))))))))))))
என் கவிதைகள் மிகுந்த அனுபவம் இல்லாதவன் எழுதிய அனுபவம் வாய்ந்த கவிதைகள்தான் ! ;)))))//


நான் நம்ப மாட்டேன்.இது அனுபவம் உள்ளவர் எழுதிய அனுபவ கவிதைகள் தான்!!! :)))))

சினேகிதி சொன்னது…

\\நான் படித்துக்கொண்டிருப்பது மாதிரி
நடித்துக்கொண்டிருப்பதே
நாம் அனுப்பிக்கொள்ளும்
மெசேஜ்களுக்குத்தான் என்று ?\\
:-)))

மதுமிதா சொன்னது…

///நண்பர்களிடம் இதுதான்
நீ முதன்முதலில் கொடுத்த
முத்தம் சுமந்த மொபைல்
என கூறமுடியுமா///

உண்மை சொல்ல முடியாது யாரிடமும்.

ஆதலினால் இந்த அனுபவங்களுக்காகவாவது செல் இல்லாதவர்கள் செல் வாங்கட்டும்

PRINCENRSAMA சொன்னது…

ரசித்து ரசித்து படித்துவிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போனால் நான் ரசித்ததற்கு அடையாளமே இல்லையே!
இன்னும் காதலிக்கவில்லை ஆயினும், காதலை கசிந்துருகி ரசிப்பவன் நான்!
வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழ வேண்டும் என்பதில் பெரும் ஆசை உள்ளவன். எனது இந்த நாளையே உங்கள் கவிதைகளால் ரசிக்க வைத்ததற்கு நன்றிகள் பற்பல! இயன்றால் என் மின்னஞ்சலுக்கு உங்கள் செல்பேசி எண்ணை அனுப்பிவையுங்கள். '143' அழைப்புகள் வராத நேரத்திலாவது என் பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

சத்தியா சொன்னது…

மொபைலின் சிணுங்கலில்
முத்தக் கவிதை மட்டுமல்ல
மொத்தக் கவிதையும் அழகுதான்!

வாழ்த்துக்கள் நவீன்.

பெயரில்லா சொன்னது…

புடிச்சிருக்கு. ரெம்ப புடிச்சிருக்கு.

கதிர் சொன்னது…

கவிதை ஒவ்வொன்றும் முத்துச்சரம் மாதிரி இருக்குங்க நவீன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சினேகிதி said...
\\நான் படித்துக்கொண்டிருப்பது மாதிரி
நடித்துக்கொண்டிருப்பதே
நாம் அனுப்பிக்கொள்ளும்
மெசேஜ்களுக்குத்தான் என்று ?\\
:-))) //

வாங்க சினேகிதி :))) நன்றி !

//மதுமிதா said...
///நண்பர்களிடம் இதுதான்
நீ முதன்முதலில் கொடுத்த
முத்தம் சுமந்த மொபைல்
என கூறமுடியுமா///

உண்மை சொல்ல முடியாது யாரிடமும்.

ஆதலினால் இந்த அனுபவங்களுக்காகவாவது செல் இல்லாதவர்கள் செல் வாங்கட்டும் //

வாருங்கள் மதுமிதா :))))
சில கற்பனையான உண்மைகள் ! :)))) மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !! :)))

// சத்தியா said...
மொபைலின் சிணுங்கலில்
முத்தக் கவிதை மட்டுமல்ல
மொத்தக் கவிதையும் அழகுதான்!

வாழ்த்துக்கள் நவீன். //

வாருங்கள் சத்தியா :))
நீண்ட நாட்களாக உங்களை காணோம் !! என்ன ஆயிற்று ? :)) ஆழகுக்கு அழகு சேர்கும் விமர்சனம். மிக்க நன்றி ! :))

//Anonymous said...
புடிச்சிருக்கு. ரெம்ப புடிச்சிருக்கு. //

வாருங்கள் அனானி !! கவித்துவமான விமர்சனம் ! மிக்க நன்றி ! :)))

பெயரில்லா சொன்னது…

Ring Tone போல் சிணுங்குகின்றது மொபைல் கவிதைகள் :-)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தம்பி said...
கவிதை ஒவ்வொன்றும் முத்துச்சரம் மாதிரி இருக்குங்க நவீன். //

வாங்க தம்பி :))
மிக்க நன்றி தம்பி !! சரமான சரளமான விமர்சனம் !:))

//subha said...
Ring Tone போல் சிணுங்குகின்றது மொபைல் கவிதைகள் :-) //

வாங்க சுபா :)))
மிக்க நன்றி சிணுங்கலான விமர்சனத்திற்கு ! :)))

வெற்றி சொன்னது…

நவீன்,
அருமையான கவிதை.

/* என் தோழியிடமிருந்து வந்திருந்த
ஒரு மெசேஜை நீ படித்துவிட்டு
என்னிடம் சண்டையிட்டு போன
அன்று முழுவதும் நான் உனக்கு
விளக்கம் சொல்லி சொல்லி
தேய்ந்தே போனது என்
மொபைலின் கீபேட் மட்டும் அல்ல
என் விரல்களும்தான்
என உனக்குத்தெரியுமா ? */

நல்ல ஒரு ஊடல். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

Unknown சொன்னது…

romba nalla anubavanthanungooooo,very nice

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// வெற்றி said...
நவீன்,
அருமையான கவிதை.

/* என் தோழியிடமிருந்து வந்திருந்த
ஒரு மெசேஜை நீ படித்துவிட்டு
என்னிடம் சண்டையிட்டு போன
அன்று முழுவதும் நான் உனக்கு
விளக்கம் சொல்லி சொல்லி
தேய்ந்தே போனது என்
மொபைலின் கீபேட் மட்டும் அல்ல
என் விரல்களும்தான்
என உனக்குத்தெரியுமா ? */

நல்ல ஒரு ஊடல். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். //

வாருங்கள் வெற்றி !! :)))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// sruthi said...
romba nalla anubavanthanungooooo,very nice //

வாருங்கள் ஸ்ருதி !! :))
நல்ல அனுபவம் என என் கவிதை படித்த அனுபவத்தி தானே சொல்கிறீர்கள்??:)))))

பெயரில்லா சொன்னது…

naveen enaku oru unmai therinchakanum,,,,,,,,,, unga kaadhali peri enna? enaku mattum sollunga pls....... kandipa anubavam illama intha madiri elutha chance illa,,,, kalakurenga,,,,,, unga kaadhali kuduthu vaithaval....
Sharmi

sharmi சொன்னது…

mobile illatha athmakal ethai patithal manathu enna padu pattumnu yosichengala naveen,,,, epati than nenga mattum ipati azhaga kavitha eluthurengalo?????? valthukal,,,,

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//naveen enaku oru unmai therinchakanum,,,,,,,,,, unga kaadhali peri enna? enaku mattum sollunga pls....... kandipa anubavam illama intha madiri elutha chance illa,,,, kalakurenga,,,,,, unga kaadhali kuduthu vaithaval....
Sharmi //

வாருங்கள் ஷர்மி :)))
இப்படி ஒரு அழகான பெயர் வைத்துக்கொண்டு என் மீது என்ன இது குற்றசாட்டு??:)))))

'தீக்குள் விரல் வைத்தால் என்ன ஆகும்?' என சொல்வதற்கு பெரிய அனுபவம் தேவையில்லை தானே??;))))) என் காதலி கவிதைதான் ஷர்மி !! வேறு யாரும் இல்லை. ப்ளீஸ் நம்புங்களேன் !! ;))))

//sharmi said...
mobile illatha athmakal ethai patithal manathu enna padu pattumnu yosichengala naveen,,,, epati than nenga mattum ipati azhaga kavitha eluthurengalo?????? valthukal,,,, //

ஷர்மி அனைவரும் சந்தோசப்பட தான் என் கவிதை கஷ்டப்பட இல்லை :))))))))) அழகான் கவிதை அழகான பொய் சொன்னதற்கு மிக நன்றி ஷர்மி !! :)))))))))

பெயரில்லா சொன்னது…

Nice....Cute....Chweet...

surya சொன்னது…

romba nalla irukku ungal kavithaigal
romba anupavithu yeluthina mathiri irukku
super

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இனியவள் புனிதா said...
Nice....Cute....Chweet... //

வாருங்கள் புனிதா :)))
மிக்க நன்றி !! நீண்ட நாட்களாக கணோம் ??!!:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//surya said...
romba nalla irukku ungal kavithaigal
romba anupavithu yeluthina mathiri irukku
super //

வாங்க சூர்யா !! :)))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !!! நான் கவிதைகளை ரொம்ப அனுபவித்துதான் எழுதுகிறேன் சூர்யா !! ;)))))

sharmi சொன்னது…

Naveen unga adutha kavithaikaga nan aavalotu kathiruken.Eppa yengaluku kavithai virunthu thara porenga?

susen சொன்னது…

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப
நல்லா இருக்கு கவிதைகள் அனைத்தும்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sharmi said...
Naveen unga adutha kavithaikaga nan aavalotu kathiruken.Eppa yengaluku kavithai virunthu thara porenga? //

வாங்க ஷர்மி :))
கூடிய விரைவில் எழுதுகிறேன். அதுவரை கொஞ்சம் பொருத்துகொள்ளுங்கள் ப்ளீஸ் !! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//susen said...
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப
நல்லா இருக்கு கவிதைகள் அனைத்தும்//

வாருங்கள் சூஸன் :))))
மிக்க்க்க்க்க நன்றி சூஸன்!!!! :)))))

Syam சொன்னது…

அட்றா...அட்றா...அட்றா சக்கை....பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க....கலக்கலா இருக்கு :-)

Syam சொன்னது…

ஆமா அது என்ன கணக்கு 143 :-)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Syam said...
அட்றா...அட்றா...அட்றா சக்கை....பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க....கலக்கலா இருக்கு :-) //

வாருங்கள் ஸ்யாம் :))))
மிக நன்றி வருகைகும் கலக்கலான தருகைக்கும் :)))

//ஆமா அது என்ன கணக்கு 143 :-)//

143 கணக்கு தெரியாதா உங்களுக்கு? ஆங்கிலத்தில் I LOVE YOU வார்த்ஹ்டி எண்ணிக்கையைக் குறிக்கும் நம்பர் அது !! ;)))

Unknown சொன்னது…

hi,just read ur mutthaboomi,just gr8

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//jagan said...
hi,just read ur mutthaboomi,just gr8//

வாங்க ஜெகன் :))
அட முத்தபூமிக்கு இங்கே விமர்சனமா? :)) மிக்க நன்றி ஜெகன் :))

பெயரில்லா சொன்னது…

\\அண்ணன் பக்கத்தில்
இருந்ததால் தான் அப்படி
பேசவேண்டி இருந்தது மன்னிச்சுகுங்க
என நீ அனுப்பிக்கொண்டே
இருந்த மெசேஜ்
என் இன்பாக்ஸையே
நிரப்பிவிட்டது உனக்கு
தெரியுமா ?\\

முதல் தடவை மன்னிப்பு கேட்டபோவே மன்னிச்சிருந்தா, ஏன் அவ்வளவு மெசேஜ் அனுப்ப போறா?
பாவம் பொண்ணு!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\அண்ணன் பக்கத்தில்
இருந்ததால் தான் அப்படி
பேசவேண்டி இருந்தது மன்னிச்சுகுங்க
என நீ அனுப்பிக்கொண்டே
இருந்த மெசேஜ்
என் இன்பாக்ஸையே
நிரப்பிவிட்டது உனக்கு
தெரியுமா ?\\

முதல் தடவை மன்னிப்பு கேட்டபோவே மன்னிச்சிருந்தா, ஏன் அவ்வளவு மெசேஜ் அனுப்ப போறா?
பாவம் பொண்ணு!!//

வாங்க அனானி :)))

அட அப்படியா? பொண்ணுமேல தப்பே இல்லாத மாதிரி பேசறீங்களே !!! கொஞ்சலும் கெஞ்சலும் இருந்தாதானே வாழ்க்கை சுவாரசியமா இருக்கும் ? என்ன சொல்றீங்க? :)))))) ரொம்ப நன்றிங்க !!!:))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

///Prince Ennares Periyar.S said...
ரசித்து ரசித்து படித்துவிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போனால் நான் ரசித்ததற்கு அடையாளமே இல்லையே!
இன்னும் காதலிக்கவில்லை ஆயினும், காதலை கசிந்துருகி ரசிப்பவன் நான்!
வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழ வேண்டும் என்பதில் பெரும் ஆசை உள்ளவன். எனது இந்த நாளையே உங்கள் கவிதைகளால் ரசிக்க வைத்ததற்கு நன்றிகள் பற்பல! //

வாருங்கள் ப்ரின்ஸ் :))))
அழகாக இருகிறது உங்கள் வாழ்க்கை ரசிப்பு :))) ஆஹா என் கவிதைகள் உங்க நாளையெ ரசிக்க வைத்தனவா?? மிக்க மகிழ்ச்சி ப்ரின்ஸ் :)))

//இயன்றால் என் மின்னஞ்சலுக்கு உங்கள் செல்பேசி எண்ணை அனுப்பிவையுங்கள். '143' அழைப்புகள் வராத நேரத்திலாவது என் பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.//
கண்டிப்பகா....அழகு வருகையும்.. தருகையும்...:)))

Divya சொன்னது…

\\தோழிக்கு சொல்வதுபோல்
உன் மொபைல் எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்டபோது நீ அவசரமாக முறைத்து
மறுத்துவிட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என் மெசாஜ் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?\

மேசேஜ் -> typo

நல்லாயிருக்கு கவிதை!

Divya சொன்னது…

\\நண்பர்களுடன் இருக்கும்போது
நீ கேட்ட ‘உம்மா’ வை நான் தரவில்லை
என கோபமாக நீ மொபைலை அணைத்துவிட்டு
சென்றுவிட்டாய் என்பதற்காக அடுத்த நாள்
முழுவதும் மொபைலில்
நான் முத்தம் கொடுத்துக்கொண்டே
இருக்க தாங்க முடியாமல்
‘போதுண்டா பேசித்தொலைக்கிறேன்
நிறுத்து ப்ளீஸ்!’ என நீ கெஞ்சலாக
கேட்ட கொஞ்சலை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? \\

'நாள் முழுவதும் முத்தமா?'
ஓவரு கற்பனை என்றாலும்......ரசிக்கும்படியாக உள்ளது!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\தோழிக்கு சொல்வதுபோல்
உன் மொபைல் எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்டபோது நீ அவசரமாக முறைத்து
மறுத்துவிட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என் மெசாஜ் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?\

மேசேஜ் -> typo

நல்லாயிருக்கு கவிதை!//

வாங்க திவ்யா :))

சரி செய்துவிட்டேன்.... :)))
மிக்க நன்றி....திருத்தத்திற்கும்... பாரட்டுக்கும் :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\நண்பர்களுடன் இருக்கும்போது
நீ கேட்ட ‘உம்மா’ வை நான் தரவில்லை
என கோபமாக நீ மொபைலை அணைத்துவிட்டு
சென்றுவிட்டாய் என்பதற்காக அடுத்த நாள்
முழுவதும் மொபைலில்
நான் முத்தம் கொடுத்துக்கொண்டே
இருக்க தாங்க முடியாமல்
‘போதுண்டா பேசித்தொலைக்கிறேன்
நிறுத்து ப்ளீஸ்!’ என நீ கெஞ்சலாக
கேட்ட கொஞ்சலை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? \\

'நாள் முழுவதும் முத்தமா?'
ஓவரு கற்பனை என்றாலும்......ரசிக்கும்படியாக உள்ளது!//

வாங்க திவ்யா :)))

ஏன் நாள் முழுதும் இருக்க முடியாதா என்ன..?? :))))))ஓவரா..?? ம்ம்ம்... :))) வருகை உவகை அளிக்கிறது... :)))

Shwetha Robert சொன்னது…

Many must have experienced these kinda incidents, write up is awesome,

liked this poem of yours so very much:-)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Shwetha Robert said...

Many must have experienced these kinda incidents, write up is awesome,

liked this poem of yours so very much:-) //

வாருங்கள் ஸ்வேதா...:))
ஆம் பலருடைய அனுபவங்களைக் கொண்டுதான்
எழுதினேன்..:))) உங்களுக்கும் மிகவும் பிடித்ததா..??
மிகுந்த மகிழ்ச்சி !! :))))