புதன், பிப்ரவரி 07, 2007

முத்தபூமி ...

முத்தபூமி1
ரத்தம் தோய்ந்த
வாட்கள்
யுத்தத்திற்கழகு !
முத்தம் தோய்ந்த
இதழ்கள்
காதலுக்கழகு !


முத்தபூமி2நம் உதடுகள்
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்
பார்
நம்மை பேசவே
விடாமல்
அழிச்சாட்டியம்
செய்கின்றன !


முத்தபூமி3


எத்தனை முறை
படித்தாலும் மேலும்
மேலும் படிக்கத்
தூண்டுகிறது
உன் இதழ்கள் மட்டும்தான் !


முத்தபூமி4


சீக்கிரம் ஈரமாக்கிக்கொள்
உன் இதழ்களை
எனக்குத் தாகமாக
இருக்கிறது !முத்தபூமி5


இப்படி வாய் ஓயாமல்
பேசிக்கொண்டே இருக்கிறாயே
கொஞ்சநேரம் சும்மா
இருக்க மாட்டாயா என
நான் கேட்டால்
நீ சும்மா இருந்தால்
நான்வேறு என்ன செய்வது? என
குறும்பாக கேட்கிறயே
கள்ளி !


முத்தபூமி6


இதழும் இதழ்
சார்ந்த பகுதிகளும் தான்
முத்தம் விளைய
ஏற்ற நிலப்பரப்பு
என யார் சொன்னது?
நீ மொத்தமுமே
முத்தம் விதைக்க
ஏற்ற நிலப்பரப்புதான் !


முத்தபூமி7


பேசாமல் இருக்கமாட்டாயா
எனக்கேட்கிறாய்
இப்படி சொன்னால் எப்படி?
பேசாமல் தானே
முத்தம் கொடுக்கிறேன் !


முத்தபூமி8


ச்சீய் ...
இதைப் போயெல்லாமா
ரசிப்பார்கள் என கேட்கிறாய்
உனக்கென்ன தெரியும்
உன் ஈரமான இதழ் வரிகளின்
அழகு !!


முத்தபூமி9


கொஞ்சம் பயம்
நிறைய வெட்கம்
கொஞ்சம் கொஞ்சல்
நிறைய கெஞ்சல்
கொஞ்சம் நஞ்சு
நிறைய அமுதம்
எல்லாம் கலந்தது
இதழ்களில் கொடுத்தான் !


முத்தபூமி10

நெற்றியில்
கன்னத்தில்
காது மடல்களில்
இதழின் ஓரங்களில்
இதழின் மையங்களில்
கழுத்தினில்
அதன் சுற்றுப்புறங்களில்
அதன் கீழும்
இறைந்து
கிடக்கிறதடா
உன் முத்தங்கள் !
எப்படி குளிப்பேன் ?!முத்தபூமி11

கனவுகளில்
கூட
உன் உதடுகள்
சும்மா இருப்பதில்லை
ச்சீய் போடா பிசாசே
ஏன் என்னை
இப்படி இன்பமாக
துன்புறுத்துகிறாய் ?


முத்தபூமி12


நீ ஒரு சரியான
திருடண்டா
எப்படியெல்லாம்
என்னைடமிருந்து
முத்தங்களை
திருடலாம்
என கற்றுக்கொண்டிருக்கிறாய்!


முத்தபூமி13


பேசாமல் இருந்தால்
சும்மாதானே இருக்கிறது
இதழ்கள் என
முத்தத்தை ஆரம்பித்து
விடுகிறாய்
பேசிக்கொண்டிருந்தாலோ
ஏன் இப்படி ஓயாமல்
பேசிக்கொண்டிருக்கிறாய்
என இதழ்களைக்
கவ்விவிடுகிறாய்
முத்தத்திருடா !


'முத்தபூமி14

முதன் முதலில்
நீ என்னிடம்
திருடிய முத்ததை
எங்கேயடா ஒளித்து
வைத்திருக்கிறாய் எனக்
கேட்டால்
இங்கேதான் எடுத்துக்கொள்
என் உன் இதழ்களைக்
காட்டுகிறாய்
திருட்டுப்பயலே
இருஇரு நானே தேடி
எடுத்துக்கொள்கிறேன் !


முத்தபூமி15


உன் இதழ்களை
விட
அதன் மேலிருக்கும்
உன் மீசை செய்யும்
குறும்பு எனக்குப்
பிடித்திருக்கிறது !

63 கருத்துகள்:

சுந்தர் / Sundar சொன்னது…

படங்களும் அருமை

Unknown சொன்னது…

நவீன் முத்தப் பூமியில் உங்கள் கவிதைகளின் தாக்குதல் தாங்க முடியவில்லை.. அற்புதம்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சுந்தர் / Sundar said...
படங்களும் அருமை //

வாருங்கள் சுந்தர்:))
மிக்க நன்றி !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தேவ் | Dev said...
நவீன் முத்தப் பூமியில் உங்கள் கவிதைகளின் தாக்குதல் தாங்க முடியவில்லை.. அற்புதம் //

வாருங்கள் தேவ் :))))
கவிதைகளின் தாக்குதல்களா ?? :))) அழகான விமர்சனம் ! நன்றி தேவ் !!:))

பெயரில்லா சொன்னது…

யாரிடமோ வாங்கி எழுதிய மாதிரி உள்ளதே!ஹி ஹி.முத்தங்களில் இவ்வளவு விஷயம் இருக்கின்றதா?சரி அனுபவசாலி நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும்.இப்படி எல்லாம் கவிதை எழுதி ஏன் வெட்டகப்பட வைக்கின்றீர்கள்...படிக்கின்ற எனக்கே இப்படி என்றால்,உண்மையில் வாங்கியவர்களின் நிலமை???

இராம்/Raam சொன்னது…

நவின்,

அட்டகாசமா இருக்குங்க..... :)

பெயரில்லா சொன்னது…

கவிஞரே,
கவிதை அழகு.Your poem got the 3 S

Sexy,Superb,Simply the Best...

எளிமையாக கவிதையில் அழகான காதல் தெரிகின்றது!வாழ்த்துக்கள்

கப்பி | Kappi சொன்னது…

அருமை நவீன் ப்ரகாஷ்! :)

பெயரில்லா சொன்னது…

சத்தத்தோடு பேசிய முத்தங்கள்
இங்கு சத்தம் இல்லமால்
உங்கள் கவிதையில்
காதல் பேசுகின்றது...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ரசிகை said...
யாரிடமோ வாங்கி எழுதிய மாதிரி உள்ளதே!ஹி ஹி.முத்தங்களில் இவ்வளவு விஷயம் இருக்கின்றதா?சரி அனுபவசாலி நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும்.//

வாங்க ரசிகை :))))
யாரிடமும் வாங்கிஎழுதியதில்லை. :)) அனுபவசாலியெல்லாம் இல்லீங்க !! என்ன இப்படி மாட்டி விடறீங்க ?! நான் சின்னப்பையங்க !! :))))))

//இப்படி எல்லாம் கவிதை எழுதி ஏன் வெட்டகப்பட வைக்கின்றீர்கள்...படிக்கின்ற எனக்கே இப்படி என்றால்,உண்மையில் வாங்கியவர்களின் நிலமை??? //

அழகான விமர்சனம் ரசிகை !மிகவும் ரசித்தேன் மிக்க நன்றி !! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// கப்பி பய said...
அருமை நவீன் ப்ரகாஷ்! :) //

வாருங்கள் கப்பி :)))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
சத்தத்தோடு பேசிய முத்தங்கள்
இங்கு சத்தம் இல்லமால்
உங்கள் கவிதையில்
காதல் பேசுகின்றது... //

வாங்க அனானி :)))
விமர்சனமே கவிதையாக பேசுகிறது :))) மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம் said...
நவின்,

அட்டகாசமா இருக்குங்க..... :) //

வாருங்கள் ராம் :))
மிக்க நன்றி ராம் ! வருகைகும் அட்டகசமான தருகைக்கும் ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// thurgah said...
கவிஞரே,
கவிதை அழகு.Your poem got the 3 S

Sexy,Superb,Simply the Best...//

வாருங்கள் துர்கா :))
அழகான விமர்சனம் குறும்பான விமர்சனம் !;)) மிக்க மகிழ்ச்சி !!

//எளிமையாக கவிதையில் அழகான காதல் தெரிகின்றது!வாழ்த்துக்கள் //

நன்றி துர்கா :)) வாழ்த்துதல்களுக்கு !

பெயரில்லா சொன்னது…

முத்த மழையில் நனையவில்லை நன்பரே
குளித்துவிட்டேன்.............. கவிதைகள் அருமை..... வாழ்த்துக்கள்.....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பாலச்சந்திரன் said...
முத்த மழையில் நனையவில்லை நன்பரே
குளித்துவிட்டேன்.............. கவிதைகள் அருமை..... வாழ்த்துக்கள்..... //

வாங்க பாலசந்திரன் :)))
மிக்க நன்றி ! நனைந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டதற்கு :)))

சேதுக்கரசி சொன்னது…

சூப்பர் :-)

பெயரில்லா சொன்னது…

Really fantastic. keep it up.

Sha

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேதுக்கரசி said...
சூப்பர் :-) //

வாருங்கள் சேதுக்கரசி :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
Really fantastic. keep it up.

Sha //

வாருங்கள் ஷா :))
மிக்க நன்றி :))

பெயரில்லா சொன்னது…

Very Romantic..... I applied leave today after reading your poems.....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
Very Romantic..... I applied leave today after reading your poems..... //

வாருங்கள் அனானி :))))))))
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது :))) வாழ்க்கையை ரசியுங்கள் !! ;)))))) மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !!:))

பெயரில்லா சொன்னது…

hey,
its over yar.couldnot move to next line in all the lines. haha.simply superb.

சத்தியா சொன்னது…

கனவுகளில்
கூட
உன் உதடுகள்
சும்மா இருப்பதில்லை
ச்சீய் போடா பிசாசே
ஏன் என்னை
இப்படி இன்பமாக
துன்புறுத்துகிறாய் ?

ஆஹா!... முத்தக் கவிதை எல்லாம் அட்டகாசம் நவீன். முத்தக் கவிதையில் முக்குளித்து... திக்குமுக்காடி... அனுபவித்து எழுதி இருக்கிறீங்களே?

ம்ம்... பாராட்டுக்கள் நவீன்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
hey,
its over yar.couldnot move to next line in all the lines. haha.simply superb. //

வாருங்கள் அனானி :))
மிக்க மகிழ்ச்சி !! வருகைக்கும் தருகைக்கும் நன்றி ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சத்தியா said...
ஆஹா!... முத்தக் கவிதை எல்லாம் அட்டகாசம் நவீன். முத்தக் கவிதையில் முக்குளித்து... திக்குமுக்காடி... அனுபவித்து எழுதி இருக்கிறீங்களே?

ம்ம்... பாராட்டுக்கள் நவீன்! //

வாங்க சத்தியா :)))
காதலை கற்பனையில் அனுபவித்துதான் எழுதினேன் சத்தியா ;)))))

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சத்தியா !!

Unknown சொன்னது…

நவீன்... முத்த பூமி,,, கலவர.. ச்சீ ச்சீ காதல் வர பூமியாக இருக்கிறது... :)

வாழ்த்துக்கள்...

/கனவுகளில்
கூட
உன் உதடுகள்
சும்மா இருப்பதில்லை
ச்சீய் போடா பிசாசே
ஏன் என்னை
இப்படி இன்பமாக
துன்புறுத்துகிறாய் ?/

பெண்மொழியில் நீங்கள் எழுதியதைப் போலவே ஆண்மொழியில் இப்படி எழுதினேன் நான்...

கனவுகளிலும் முத்தமிட்டு
என்னைக்
கடனாளியாக்காதே...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அருட்பெருங்கோ said...
நவீன்... முத்த பூமி,,, கலவர.. ச்சீ ச்சீ காதல் வர பூமியாக இருக்கிறது... :)

வாழ்த்துக்கள்...//

வாங்க அருள் :)))
அழகான விமர்சனம் ! மிக்க நன்றி !:))

/கனவுகளில்
கூட
உன் உதடுகள்
சும்மா இருப்பதில்லை
ச்சீய் போடா பிசாசே
ஏன் என்னை
இப்படி இன்பமாக
துன்புறுத்துகிறாய் ?/

//பெண்மொழியில் நீங்கள் எழுதியதைப் போலவே ஆண்மொழியில் இப்படி எழுதினேன் நான்...

கனவுகளிலும் முத்தமிட்டு
என்னைக்
கடனாளியாக்காதே... //

அருமையாக இருக்கிறது ! இப்படி கடன் பட்டால் நெஞ்சமெல்லாம் கலக்கம் இருக்கவே இருக்காது இல்லையா?:))))

சத்தியா சொன்னது…

"வாங்க சத்தியா :)))
காதலை கற்பனையில் அனுபவித்துதான் எழுதினேன் சத்தியா ;)))))"...

அட!... போங்க நவீன். எத்தனை காலத்துக்குத்தான் கற்பனையிலே முக்குளிக்கப் போறீங்க?

ம்... கற்பனை என்றாலும்
கவிதைகள் அழகுதான்.

ஜி சொன்னது…

enunga annaatchi...
english padathula paathuttu ippathaan konjamaa india cinemaala mutha kaatchihala edukuraanga..

neenga athuku ilakanathula irunthu ilakiyam varai solreenga....

attahaasamaana kavithaihal...

ஜி சொன்னது…

//ரசிகை said...
யாரிடமோ வாங்கி எழுதிய மாதிரி உள்ளதே!ஹி ஹி.முத்தங்களில் இவ்வளவு விஷயம் இருக்கின்றதா?சரி அனுபவசாலி நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும்.இப்படி எல்லாம் கவிதை எழுதி ஏன் வெட்டகப்பட வைக்கின்றீர்கள்...படிக்கின்ற எனக்கே இப்படி என்றால்,உண்மையில் வாங்கியவர்களின் நிலமை??? //

Naveen sir...
ungalukku rasikarhala vida rasikaihalthaan athihamnu oru nanbar sonnaanga.. unmathaan polirukkuthu ;)))

சிறில் அலெக்ஸ் சொன்னது…

வழக்கம்போல கலக்கிட்டீங்க.
நானும் கொஞ்சம் எழுதியிருக்கேன். காதலர் தின ஸ்பெசலா வெளியிடப் போறேன்.

:)

உங்களுக்குப் போடியா..

:))

கார்த்திக் பிரபு சொன்னது…

காதலர் தின ஸ்பெசலா?? நல்லாயிருக்கு.என் நண்பர்களுக்கெல்லாம் பார்வேர்டு பண்ணினேன்..உங்க யூ ஆர் எல் லும் கொடுத்திருக்கேன்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சத்தியா said...
"வாங்க சத்தியா :)))
காதலை கற்பனையில் அனுபவித்துதான் எழுதினேன் சத்தியா ;)))))"...

அட!... போங்க நவீன். எத்தனை காலத்துக்குத்தான் கற்பனையிலே முக்குளிக்கப் போறீங்க? //

அட இப்படி சொல்லீட்டீங்களே சத்தியா :)))

//ம்... கற்பனை என்றாலும்
கவிதைகள் அழகுதான். //

ஆனாலும் உங்களுக்கு பெரிய மனசுதான் :)) மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஜி said...
enunga annaatchi...
english padathula paathuttu ippathaan konjamaa india cinemaala mutha kaatchihala edukuraanga..

neenga athuku ilakanathula irunthu ilakiyam varai solreenga....//

வாங்க ஜி :)))))
நானா இலக்கணதிலே இருந்து சொல்லுகிறேன் ! நம்ம வள்ளுவர் 2000 வருஷத்துக்கு முன்னாடியே என்ன சொல்லி இருக்கிறார் என்றால்

"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர் "

:)))

//attahaasamaana kavithaihal...//

மிக்க நன்றி ஜி ! வருகைக்கும் தருகைக்கும் ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஜி said...
Naveen sir...
ungalukku rasikarhala vida rasikaihalthaan athihamnu oru nanbar sonnaanga.. unmathaan polirukkuthu ;))) //

வாங்க ஜி :))
யாருங்க அந்த நண்பர் உங்களுக்கு தவறான தகவல்களை தருவது ?? ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சிறில் அலெக்ஸ் said...
வழக்கம்போல கலக்கிட்டீங்க.
நானும் கொஞ்சம் எழுதியிருக்கேன். காதலர் தின ஸ்பெசலா வெளியிடப் போறேன்.

:)

உங்களுக்குப் போட்டியா..

:)) //

வாங்க சிறில் :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !!

அட ரொமப தன்னடக்கம் உங்களுக்கு. உங்களின் கவிதைகள் அனைத்துமே மிக அருமை சிறில் !! :)) அட எனக்கு போட்டியாகவா ?? :))))) ஏன் என்னை போட்டியாக நினைக்கிறீர்கள் சிறில் ? :))))) உங்களின் இடத்தை நான் நெருங்க முடியாது என்பதுதான் உண்மை :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// கார்த்திக் பிரபு said...
காதலர் தின ஸ்பெசலா?? நல்லாயிருக்கு.என் நண்பர்களுக்கெல்லாம் பார்வேர்டு பண்ணினேன்..உங்க யூ ஆர் எல் லும் கொடுத்திருக்கேன் //

வாருங்கள் கார்த்திக் :))
மிக்க மகிழ்ச்சி கார்த்திக் ! வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !! :))

பெயரில்லா சொன்னது…

//Naveen sir...
ungalukku rasikarhala vida rasikaihalthaan athihamnu oru nanbar sonnaanga.. unmathaan polirukkuthu ;)))
//

ஜி தப்பாக சொல்லிகின்றீர்களே.கவிஞர் அவர்களுக்கு ரசிகர்களும் அதிகம்தான்.

Swamy Srinivasan aka Kittu Mama சொன்னது…

காதலர் தினத்துக்கு ஏற்ற kavidhaigal Naveen, pics, all kavidais were excellent !

Happy Valentine's day !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Kittu said...
காதலர் தினத்துக்கு ஏற்ற kavidhaigal Naveen, pics, all kavidais were excellent !

Happy Valentine's day ! //

வாருங்கள் கிட்டு :))
மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும் !

காதலர் தின வாழ்த்துக்கள் !! :))

ப்ரியன் சொன்னது…

/*ரத்தம் தோய்ந்த
வாட்கள்
யுத்தத்திற்கழகு !
முத்தம் தோய்ந்த
இதழ்கள்
காதலுக்கழகு !*/

காதல் தோய்ந்த கவிதைகள் நவீனின் அழகு

/*நம் உதடுகள்
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்
பார்
நம்மை பேசவே
விடாமல்
அழிச்சாட்டியம்
செய்கின்றன !*/

இதழும் இதழும் பேசும் போது பேச்சுக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு

/*எத்தனை முறை
படித்தாலும் மேலும்
மேலும் படிக்கத்
தூண்டுகிறது
உன் இதழ்கள் மட்டும்தான் !*/

அதனால்தான் இன்னும் காதல் பள்ளியில் உங்களுக்கு முதலிடம்

/*சீக்கிரம் ஈரமாக்கிக்கொள்
உன் இதழ்களை
எனக்குத் தாகமாக
இருக்கிறது !*/

எதனை குடிக்கப் போகிறாய்
எச்சிலையா?
உயிரையா?
*
எதனால் ஈரமாக்க
எச்சிலினாலா?
எனது உயிரினாலா?

/*இப்படி வாய் ஓயாமல்
பேசிக்கொண்டே இருக்கிறாயே
கொஞ்சநேரம் சும்மா
இருக்க மாட்டாயா என
நான் கேட்டால்
நீ சும்மா இருந்தால்
நான்வேறு என்ன செய்வது? என
குறும்பாக கேட்கிறயே
கள்ளி !*/

உன் இதழை கொண்டு பூட்டு போட வேண்டியதுதானே

/*இதழும் இதழ்
சார்ந்த பகுதிகளும் தான்
முத்தம் விளைய
ஏற்ற நிலப்பரப்பு
என யார் சொன்னது?
நீ மொத்தமுமே
முத்தம் விதைக்க
ஏற்ற நிலப்பரப்புதான் !*/

நீ எங்கு விதைத்தாலும் என்னில் விளைவது இதழில்தானே

/*
பேசாமல் இருக்கமாட்டாயா
எனக்கேட்கிறாய்
இப்படி சொன்னால் எப்படி?
பேசாமல் தானே
முத்தம் கொடுக்கிறேன் !*/

பேசாமல்தான் தருகிறாய் உயிர்தான் உச்சஸ்தணியில் புலம்ப ஆரம்பித்துவிடுகிறது...

ப்ரியன் சொன்னது…

/*ச்சீய் ...
இதைப் போயெல்லாமா
ரசிப்பார்கள் என கேட்கிறாய்
உனக்கென்ன தெரியும்
உன் ஈரமான இதழ் வரிகளின்
அழகு !!*/

தெரியுமா
இதழ்களின் ரேகையில்தான்
உயிரின் ஜாதகம் இருக்காம்.

ப்ரியன் சொன்னது…

எல்லா கவிதையும் ஆருமை நவீன்...

எல்லா கவிதைக்கும் பதி எழுத ஆசைதான் நேரம் தடுக்கிறது...பகுதி எழுதிவிட்டேன் மீதி நேரம் கிடைக்கும்போது

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ப்ரியன் said...

//காதல் தோய்ந்த கவிதைகள் நவீனின் அழகு//

//எதனை குடிக்கப் போகிறாய்
எச்சிலையா?
உயிரையா?
*
எதனால் ஈரமாக்க
எச்சிலினாலா?
எனது உயிரினாலா?//

வாருங்கள் ப்ரியன் :))
பின்னூட்டமே கவிதையான அழகு !!! :))

//எல்லா கவிதையும் ஆருமை நவீன்...

எல்லா கவிதைக்கும் பதி எழுத ஆசைதான் நேரம் தடுக்கிறது...பகுதி எழுதிவிட்டேன் மீதி நேரம் கிடைக்கும்போது //

மிக்க நன்றி ப்ரியன் !! உங்களின் பொன்னான நேரத்தை என் கவிதைகளில் கரைத்ததற்கு மிக்க நன்றி !! :)) நேரம் கிடைக்கும் போது மீண்டும் வாருங்கள் !! :))

பெயரில்லா சொன்னது…

நவீன், அட்டகாசமா இருக்கின்றன உங்கள் கவிதைகளும், இந்த படங்களும் !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இர‌.கதிரவன் said...
நவீன், அட்டகாசமா இருக்கின்றன உங்கள் கவிதைகளும், இந்த படங்களும் !! //

வாருங்கள் கதிரவன் :))
அட்டகாசமாக இருப்பது உங்களின் ரசிப்பும் தான் கதிரவன் ! :)) மிக்க நன்றி !! :))

பெயரில்லா சொன்னது…

மீண்டும்வந்து வாசித்து நேசித்தேன் நண்பரே...

கவிதைகள் எல்லாம் கவிதைக் 'கள்'. படங்கள் எல்லாம் போதைகள் :)

பெயரில்லா சொன்னது…

உன் முத்த சத்தங்கள்
இரவின் நிசப்பத்தையும்
கிழிக்கின்றது.

நவீனின் முத்தக் கவிதைகளோ
வெட்கத்தை அவிழ்கின்றது

வாழ்த்துக்கள்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேவியர் said...
மீண்டும்வந்து வாசித்து நேசித்தேன் நண்பரே...

கவிதைகள் எல்லாம் கவிதைக் 'கள்'. படங்கள் எல்லாம் போதைகள் :) //

வாருங்கள் சேவியர் :)))
கவிதை"கள்" லா ?? போதையேற்றுகிறது உங்கள் விமர்சனம் :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
உன் முத்த சத்தங்கள்
இரவின் நிசப்பத்தையும்
கிழிக்கின்றது.

நவீனின் முத்தக் கவிதைகளோ
வெட்கத்தை அவிழ்கின்றது

வாழ்த்துக்கள் //

வாருங்கள் அனானி :))))
வெட்கம் அவிழ்க்கிறதா கவிதைகள்?? :)))) மிக ரசித்தேன். மிக்க நன்றி !! :)))

பெயரில்லா சொன்னது…

naveen padithu muditha palamani neram aakium unkal kavithai in thakkathil irunthu mela mutiyavillai,,,,,,, kadhal rasam sottukirathu,,,,, undana en kadhalanitam mutham kattka thondrukirathu,,,,,

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
naveen padithu muditha palamani neram aakium unkal kavithai in thakkathil irunthu mela mutiyavillai,,,,,,, kadhal rasam sottukirathu,,,,, undana en kadhalanitam mutham kattka thondrukirathu,,,,, //

வாங்க அனானி :)))
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது !! :))) மீண்டும் மீண்டும் வந்து காதல் மழையில் நனையுங்கள் !! :))))

Unknown சொன்னது…

simply super

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Meenakshi said...
simply super //

வாருங்கள் மீனாட்சி :)))
மிக்க நன்றி !! :))

நாமக்கல் சிபி சொன்னது…

இதழ் மேல் பதித்த முத்தம்
இணைந்த இதயங்களின் சத்தம்
இது தேவை எனக்கு நித்தம்
காதலால் எனக்குள் யுத்தம்!

மங்களூர் சிவா சொன்னது…

அண்ணாத்தே இப்பதான் குசும்பன் ப்ளாக்ல இருந்து லின்க் புடிச்சு வரேன்.

போட்டோ எல்லாம் சூப்பர் அதனாலதானோ என்னமோ நடுவுல கிறுக்கியிருக்கிறதை படிக்க முடியலை.

மங்களூர் சிவா

மதுமிதா சொன்னது…

இதுக்கு எப்படி கமெண்ட் எழுதப் போறேன்

சான்ஸே இல்லை

நவீன் ப்ரகாஷ் பிடிங்க பட்டத்தை

சத்தமின்றி
முத்தப்போர் தொடுத்து
வெற்றி பெற்ற வீரன்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
இதழ் மேல் பதித்த முத்தம்
இணைந்த இதயங்களின் சத்தம்
இது தேவை எனக்கு நித்தம்
காதலால் எனக்குள் யுத்தம்!//

வாருங்கள் சிபி :)))
அட அட அட என்னா ஒரு அழகான முத்தசந்தம் :))) கவிதை அழகு சிபி :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//mglrssr said...
அண்ணாத்தே இப்பதான் குசும்பன் ப்ளாக்ல இருந்து லின்க் புடிச்சு வரேன்.

போட்டோ எல்லாம் சூப்பர் அதனாலதானோ என்னமோ நடுவுல கிறுக்கியிருக்கிறதை படிக்க முடியலை.

மங்களூர் சிவா//

வாருங்கள் சிவா :)))
அட கிறுக்கி இருக்கறது புரியலைன்னா விடுங்க தல. புடிச்ச போட்டோவைப் பாருங்க சரியா ?? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மதுமிதா said...
இதுக்கு எப்படி கமெண்ட் எழுதப் போறேன்

சான்ஸே இல்லை//

வாருங்கள் மதுமிதா :)))
உங்களிடமிருந்து இப்படி ஒரு பாராட்டா எனக்கு ?? :)))) மிக்க நன்றி :)))

//நவீன் ப்ரகாஷ் பிடிங்க பட்டத்தை

சத்தமின்றி
முத்தப்போர் தொடுத்து
வெற்றி பெற்ற வீரன்//

ரொம்ப புகழாதீங்க மதுமிதா எனக்கு கூச்சமா இருக்கு :))))))))

பெயரில்லா சொன்னது…

Very living Lines, Simply best expressions I ever had before....
Keep doing Navin.... I really touched by this lines..

Dani

velladurai சொன்னது…

சூப்பரு