வியாழன், அக்டோபர் 18, 2007

கொஞ்சுவது சினம்...

Image Hosted by ImageShack.us

உன்
கோபத்தைவிட
உன்
கண்ணீர்துளிகள்தாம்
என்னை
அதிகம்
காயப்படுத்துகின்றன
தெரியுமா ?




Image Hosted by ImageShack.us


கோபமாக திட்டுவதாக
நினைத்துக்கொண்டு
நீ செய்யும்
அழிச்சாட்டியங்களை
எங்கேயடி கற்றுக்கொண்டாய் ?



Image Hosted by ImageShack.us


நீ
கோபப்பட்டால்
கொஞ்சத்தான்
தோன்றுகிறது
ஆனாலும்
கெஞ்சுவதுபோல்
நடிக்கிறேன்
தெரியுமா ?



Image Hosted by ImageShack.us

நீ
கோபப்பட்டால்
அழகாய் இருக்கிறாய்
என சொன்னதற்காக
இப்படி அடிக்கடி
கோபப்பட்டால்
எப்படி?



Image Hosted by ImageShack.us


இப்படி என்னுடன்
கோபித்துக்கொண்டு
பேசாமலே இருக்கப்
போவதாக நீ சொன்னதற்கு
ரொம்ப தேங்ஸ் டி
இனி நான் உன்னிடம்
என்ன குறும்பு செய்தாலும்
நீ என்னை திட்ட முடியாதே !!!



Image Hosted by ImageShack.us


நீ என்னை
திட்டும்போதுகூட
சிரித்துக்கொண்டிருப்பதாக
சண்டைபோடுகிறாய்
என்ன செய்வது?
கோபமான உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது போடி...


Image Hosted by ImageShack.us


நீ வார்த்தைகளால்
என்னுடன் வாதிட்டால்
விட்டிருக்கமாட்டேன்
கண்ணீர்களால்
எதிர்கொண்டால்
என்ன செய்வேன் ?



Image Hosted by ImageShack.us



ஒவ்வொருமுறையும்
நம் சண்டைகளின்
முடிவு
மேலும் சண்டையிடத்
தூண்டுகின்றன



Image Hosted by ImageShack.us


கோபித்துக்கொண்டு
நீ
சாப்பிடாமல் இருந்த
அன்றுதான் தெரிந்தது
நீ என் தூக்கம்
தின்ற ராட்சஷி
என...



Image Hosted by ImageShack.us



உன்னைப்பார்த்தால்
மட்டும் இந்தப் பாழாய்ப்போன
கோபம் எங்கே போய்த்
தொலையுமோ ?



Image Hosted by ImageShack.us


அழகான பெண்களை
பார்த்தால் எனக்கு
உன் ஞாபகம் தான்
வருகிறது தெரியுமா?
நாம் இப்படி பார்க்கிறதை
நீ பார்த்தால்
என்ன ஆகுமோ என..



Image Hosted by ImageShack.us


முடிந்து விட்ட நம்
சண்டையில் யார் ஆரம்பித்தது
இந்த சண்டையை என்ற
சண்டையை புதிதாக
ஆரம்பித்து விட்டாய்
ஏண்டி இப்படி?



Image Hosted by ImageShack.us

என்னைத் திட்டிவிட்டு
போயேன்!
ஏன் இப்படி
மெளனமாக இருந்து
கொல்கிறாய் ?



Image Hosted by ImageShack.us


யாருக்கும் தெரியாமல்
நீ என்னவோ
முத்தம் கொடுத்து
சென்றுவிட்டாய்
ஏன் இப்படி என்னைக்
கடனாளியாக்குகிறாய்?



Image Hosted by ImageShack.us


கொஞ்சிக்கொஞ்சியே
என்னை
நீ கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றிக்கொண்டிருக்கிறாய்
தெரியுமாடி என்
செல்லத்திருடி?


51 கருத்துகள்:

ஸ்ரீ சொன்னது…

நான் தான் பஸ்ட் :))))

கொஞ்சிட்டீங்க சாரி கொன்னுட்டீங்க. அருமை பிரதர்.

பெயரில்லா சொன்னது…

:)gf kaiyala bayangrama adi vaangingala kavinjare??over romance ah irruku

பெயரில்லா சொன்னது…

//அழகான பெண்களை
பார்த்தால் எனக்கு
உன் ஞாபகம் தான்
வருகிறது தெரியுமா?
நாம் இப்படி பார்க்கிறதை
நீ பார்த்தால்
என்ன ஆகுமோ என..///

vera enna aagum?veetula ullathu ellam parakum,possibly unga mandai kuda udaiyalam

பெயரில்லா சொன்னது…

//நீ என்னை
திட்டும்போதுகூட
சிரித்துக்கொண்டிருப்பதாக
சண்டைபோடுகிறாய்
என்ன செய்வது?
கோபமான உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது போடி...//


ithu eppadiya artham.
nalla kathudi loosu,ennaku ennanu
nakkala siripangaley..athu mathiri nu ninaichen.nijamave rasipingala...adada...neega ivlavu nallavara naveen...

பெயரில்லா சொன்னது…

நவீன் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.

எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு. செமை ரொமாண்டிக்கா இருக்கு.

படங்களும் கலக்கல்தான்.

என்ன பண்றது வயசு அப்படி.

ஜே கே | J K சொன்னது…

எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸ்ரீ said...
நான் தான் பஸ்ட் :))))

கொஞ்சிட்டீங்க சாரி கொன்னுட்டீங்க. அருமை பிரதர்.//

வாங்க ஸ்ரீ :))
அட கொஞ்சலான கமெண்டா இருக்கே !!! ரொம்ப தேங்ஸ் ஸ்ரீ:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//துர்கா|thurgah said...
:)gf kaiyala bayangrama adi vaangingala kavinjare??over romance ah irruku//

வாங்க துர்கா:)))
அப்படியா தெரியுது ?? :))) ரொம்ப தேங்ஸ் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//துர்கா|thurgah said...
//அழகான பெண்களை
பார்த்தால் எனக்கு
உன் ஞாபகம் தான்
வருகிறது தெரியுமா?
நாம் இப்படி பார்க்கிறதை
நீ பார்த்தால்
என்ன ஆகுமோ என..///

vera enna aagum?veetula ullathu ellam parakum,possibly unga mandai kuda udaiyalam//

அட துர்கா
இப்படிதான் கோபம் வந்தா பொண்ணுங்க மண்டையெல்லாம் உடைப்பாங்களா?? தெரியாதே :))))

//நீ என்னை
திட்டும்போதுகூட
சிரித்துக்கொண்டிருப்பதாக
சண்டைபோடுகிறாய்
என்ன செய்வது?
கோபமான உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது போடி...//


//ithu eppadiya artham.
nalla kathudi loosu,ennaku ennanu
nakkala siripangaley..athu mathiri nu ninaichen.nijamave rasipingala...adada...neega ivlavu nallavara naveen...//

ஆஹா இப்படியெல்லாம் என்னைய பத்தி தப்பா சொல்லாதீங்க துர்கா நான் நல்ல பையந்தானே :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நந்தா said...
நவீன் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.

எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு. செமை ரொமாண்டிக்கா இருக்கு.

படங்களும் கலக்கல்தான்.

என்ன பண்றது வயசு அப்படி.//

வாங்க நந்தா :))))
ஆஹா உங்களோட கமெண்ட் என் பாக்கியம் :))) வயசு அப்படியா? அப்படீன்னா என்னாங்க நந்தா ?? ;))))))

யாழ்_அகத்தியன் சொன்னது…

நீண்ட நாட்களூக்கு பிறகு
வந்து இருக்கிஈங்க கவிதை
அருமை தொடர்ந்தும் விடாமல்
எழுதுங்கள்

எழில்பாரதி சொன்னது…

நவின்

கவிதைகள் எல்லாமே அருமை!!!!!


நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல கவிதைகள்!!!!!

மங்களூர் சிவா சொன்னது…

wow !!!

ரொம்ப நல்ல வரிகள் அதை மிஞ்சும் அதைவிட நல்ல படங்கள்.

இராம்/Raam சொன்னது…

நவின்,

வழக்கம் போல் அருமையான கவிதைகள்... :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//யாழ்_அகத்தியன் said...
நீண்ட நாட்களூக்கு பிறகு
வந்து இருக்கிஈங்க கவிதை
அருமை தொடர்ந்தும் விடாமல்
எழுதுங்கள்//

வாருங்கள் யாழ் அகத்தியன் :))
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது தான் :))) என்ன செய்வது கவிதை எழுத சிலசமயம் தருணம் வாய்க்க வேண்டும் அல்லவா?? :))) மிக்க நன்றி உங்கள் ஊக்கத்திற்கு ... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில் said...
நவின்

கவிதைகள் எல்லாமே அருமை!!!!!


நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல கவிதைகள்!!!!!//

வாருங்கள் எழில் :))
மிக்க நன்றி எழில். நீண்ட இடைவேளைக்கு பிறகும் ஞாபகமாய் வந்ததற்கு ... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மங்களூர் சிவா said...
wow !!!

ரொம்ப நல்ல வரிகள் அதை மிஞ்சும் அதைவிட நல்ல படங்கள்.//

வாருங்கள் சிவா :)))
அனைத்தையும் மிஞ்சும் உங்கள் பின்னூட்டம் :)) மிக்க நன்றி சிவா !!

Divya சொன்னது…

கோபத்தை கொஞ்சலினாலும், கெஞ்சலினாலும் கரைக்கும் வித்தையை எங்கே கற்றுக்கொண்டீர்கள் கவிஞரே!!

கோபம் கொண்ட முகத்தையும் ரசிக்கும் உங்கள் ரசனையை என்னவென்று சொல்வது???

அருமையான் கவிதை நவீன்.

Divya சொன்னது…

\உன்னைப்பார்த்தால்
மட்டும் இந்தப் பாழாய்ப்போன
கோபம் எங்கோ போய்த்
தொலையுமோ ?\

கோபம் 'எங்கே' போய்த் தொலையுமோ............திருத்தம் உள்ளது போல் தோன்றியது!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
கோபத்தை கொஞ்சலினாலும், கெஞ்சலினாலும் கரைக்கும் வித்தையை எங்கே கற்றுக்கொண்டீர்கள் கவிஞரே!!//

வாங்க திவ்யா :))))
கோபத்தை கொஞ்சம் கெஞ்சி கொஞ்சம் கொஞ்சிதானே கரைக்கமுடியும்? எல்லாம் குழந்தைகளை கொஞ்சுகிற கெஞ்சுகிற அம்மாக்களிடமிருந்துதான் திவ்யா ;))))

//கோபம் கொண்ட முகத்தையும் ரசிக்கும் உங்கள் ரசனையை என்னவென்று சொல்வது???

அருமையான் கவிதை நவீன்.//

அட ரொம்ப புகழாதீங்க திவ்யா வெட்கமா இருக்கு :))) மிக்க நன்றி ரசிப்புக்கும் அழகான ரசனைக்கும் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\உன்னைப்பார்த்தால்
மட்டும் இந்தப் பாழாய்ப்போன
கோபம் எங்கோ போய்த்
தொலையுமோ ?\

கோபம் 'எங்கே' போய்த் தொலையுமோ............திருத்தம் உள்ளது போல் தோன்றியது!//

ஆமான் திவ்யா :)) திருத்திவிட்டேன். டைபிங் மிஸ்டேக் :)) கவனித்து சொன்னதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ் :)))

ஜி சொன்னது…

அருமையான கவிதை வரிகள்...

cheena (சீனா) சொன்னது…

கவிதைகல் அதிலும் காதல் கவிதைகள் அருமை- அழகு தமிழ் - எளிமையான சொற்கள் - உடனே மனதில் பதியும் கருத்துகள் - வாழ்த்துகள்

கண்ணீர்த்துளிகள் எப்போதுமே மனதை நெகிழ்த்திவிடும். தெரியாமலா பெண்கள் அதை ஒரு ஆயுதமாகப் பயன் படுத்துகிறார்கள்

cheena (சீனா) சொன்னது…

//கோபித்துக்கொண்டு
நீ
சாப்பிடாமல் இருந்த
அன்றுதான் தெரிந்தது
நீ என் தூக்கம்
தின்ற ராட்சஷி
என...//

கருத்துச் செறிவு பாராட்டத்தக்கது. அவனின் தூக்கத்தைத் தின்று அழகாக தூங்கும் அவள். நன்று - அருமை

cheena (சீனா) சொன்னது…

//என்னைத் திட்டிவிட்டு
போயேன்!
ஏன் இப்படி
மொளனமாக இருந்து
கொல்கிறாய் ?//

மவுனம் ஒரு பயங்கரமான ஆயுதம். ஆணும் பெண்ணும் - இரு பால்ரும் பயன் படுத்துகிறார்கள். வாய் திறந்து திட்டித் தீர்த்து சண்டை இட்டுக் கொள்வதை விட இந்த மவுனம் எதிராளியைக் கொன்றுவிடும்.

It's me....NAAN.....Nanae thaan சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு

இரசித்த lines

"உன்
கோபத்தைவிட
உன்
கண்ணீர்துளிகள்தாம்
என்னை
அதிகம்
காயப்படுத்துகின்றன
தெரியுமா ?"


"நீ
கோபப்பட்டால்
கொஞ்சத்தான்
தோன்றுகிறது
ஆனாலும்
கெஞ்சுவதுபோல்
நடிக்கிறேன்
தெரியுமா ?"

"கோபித்துக்கொண்டு
நீ
சாப்பிடாமல் இருந்த
அன்றுதான் தெரிந்தது
நீ என் தூக்கம்
தின்ற ராட்சஷி
என..."

கார்த்திக் பிரபு சொன்னது…

summa summa nalla irukunnu solla mudiyadhu :)

ada pongappa , eppadi pa ipadilam

sari onnu soluunga engirundhu ippadi photos kidaikudhu ungalauku mattum

mail me gkpstar@gmail.com when u have time , i need some details abt the photos

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//It's me....NAAN.....Nanae thaan said...
ரொம்ப நல்லா இருக்கு

இரசித்த lines//

வாங்க நான் :))
உங்களை எப்படி கூப்பிடுவது? :)) மிக்க நன்றிங்க ரசிப்புக்கும் அருமையான தருகைக்கும் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கார்த்திக் பிரபு said...
summa summa nalla irukunnu solla mudiyadhu :)

ada pongappa , eppadi pa ipadilam

sari onnu soluunga engirundhu ippadi photos kidaikudhu ungalauku mattum //

வாங்க கார்த்திக் பிரபு:))))
எப்படி இருக்கிறீர்கள்? மிக்க நன்றி கார்த்திக் :))) எல்லாம் போட்டோக்களும் இணையத்தில் இருந்துதான் எடுக்கிறேன் :)))

//mail me gkpstar@gmail.com when u have time , i need some details abt the photos//

கண்டிப்பாக மெயில் அனுபுகிறேன் கார்த்திக் சரியா? :)))

தமிழன்-கறுப்பி... சொன்னது…

wowww..... woww...
mmm...mmmmm...
ennappa varththai varamadden enkirathu kalakkuringa...
(niraya thairiyamthan vangiyathayellam eluthuvathatku)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamilan... said...
wowww..... woww...
mmm...mmmmm...
ennappa varththai varamadden enkirathu kalakkuringa...
(niraya thairiyamthan vangiyathayellam eluthuvathatku)//

வாருங்கள் தமிழன் :)))
வார்த்தை வரவில்லையா?:))) மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும் :)))

பெயரில்லா சொன்னது…

\\நீ
கோபப்பட்டால்
கொஞ்சத்தான்
தோன்றுகிறது
ஆனாலும்
கெஞ்சுவதுபோல்
நடிக்கிறேன்
தெரியுமா ?\\

உங்க நடிப்புக்கு அவார்ட் கொடுத்திடலாமா?

\\ஒவ்வொருமுறையும்
நம் சண்டைகளின்
முடிவு
மேலும் சண்டையிடத்
தூண்டுகின்றன\

சரியான சண்டைக்கோழியா இருப்பீங்க போலிருக்கு, எல்லா கவிதையிலும் ஒரே சண்டை+ கோபம் தான்..........அதன் பின் ஒரு கொஞ்சல், என்ன தலைவா, என்ன இது!!


\\அழகான பெண்களை
பார்த்தால் எனக்கு
உன் ஞாபகம் தான்
வருகிறது தெரியுமா?
நாம் இப்படி பார்க்கிறதை
நீ பார்த்தால்
என்ன ஆகுமோ என..\\

என்ன ஆகுமோன்னு ஒரு பயம் இருந்தாலும், சைட் அடிக்கிறது விட்றதில்ல, கரெக்டா??

\\முடிந்து விட்ட நம்
சண்டையில் யார் ஆரம்பித்தது
இந்த சண்டையை என்ற
சண்டையை புதிதாக
ஆரம்பித்து விட்டாய்
ஏண்டி இப்படி?\\

இதென்ன சின்ன புள்ளைதனமா இருக்கு???

\\என்னைத் திட்டிவிட்டு
போயேன்!
ஏன் இப்படி
மொளனமாக இருந்து
கொல்கிறாய் ?\\\

'மெளனமாக' -> typo


\\யாருக்கும் தெரியாமல்
நீ என்னவோ
முத்தம் கொடுத்து
சென்றுவிட்டாய்
ஏன் இப்படி என்னைக்
கடனாளியாக்குகிறாய்?\\

கடனை வட்டியோட திருப்பி கொடுப்பீங்களா??


\\கொஞ்சிக்கொஞ்சியே
என்னை
நீ கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றிக்கொண்டிருக்கிறாய்
தெரியுமாடி என்
செல்லத்திருடி?\\

கொஞ்சம் கொஞ்சமாவே மாறுங்க பாஸ் !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\நீ
கோபப்பட்டால்
கொஞ்சத்தான்
தோன்றுகிறது
ஆனாலும்
கெஞ்சுவதுபோல்
நடிக்கிறேன்
தெரியுமா ?\\

உங்க நடிப்புக்கு அவார்ட் கொடுத்திடலாமா?//

வாங்க அனானி :)))

ஆஹா நீங்க ஆஸ்கார் கமிட்டியில இருக்கறீங்களா? அட கோவமா இருக்கறா மாதிரி நடிக்கிரவங்களுக்கு என்ன கொடுக்கலாம் ? கொஞ்சம் சொல்லிட்டு போங்க ப்ளீஸ் ... :))))

\\ஒவ்வொருமுறையும்
நம் சண்டைகளின்
முடிவு
மேலும் சண்டையிடத்
தூண்டுகின்றன\

//சரியான சண்டைக்கோழியா இருப்பீங்க போலிருக்கு, எல்லா கவிதையிலும் ஒரே சண்டை+ கோபம் தான்..........அதன் பின் ஒரு கொஞ்சல், என்ன தலைவா, என்ன இது!!//

அட இப்படி தலைப்பை வச்சிகிட்டு அதுக்கு தகுந்தபடி எழுதவேணாமா ?? :)))


\\அழகான பெண்களை
பார்த்தால் எனக்கு
உன் ஞாபகம் தான்
வருகிறது தெரியுமா?
நாம் இப்படி பார்க்கிறதை
நீ பார்த்தால்
என்ன ஆகுமோ என..\\

என்ன ஆகுமோன்னு ஒரு பயம் இருந்தாலும், சைட் அடிக்கிறது விட்றதில்ல, கரெக்டா??//

ஹஹஹ்ஹஹ என்னாங்க இது அழகை ரசிக்கிரது தப்பா என்ன? சைட் அடிக்கிறது எல்லாம் ஒரு general knowledge க்குதான் தெரியுமா உங்களுக்கு ??? ;))))))

\\முடிந்து விட்ட நம்
சண்டையில் யார் ஆரம்பித்தது
இந்த சண்டையை என்ற
சண்டையை புதிதாக
ஆரம்பித்து விட்டாய்
ஏண்டி இப்படி?\\

இதென்ன சின்ன புள்ளைதனமா இருக்கு???//

அட இந்த பொண்ணுங்களே இப்படித்தாங்க தெரியாதா உங்களுக்கு?? :))))

\\என்னைத் திட்டிவிட்டு
போயேன்!
ஏன் இப்படி
மொளனமாக இருந்து
கொல்கிறாய் ?\\\

'மெளனமாக' -> typo//

மாத்திடறேன் !! தேங்ஸ் !!


\\யாருக்கும் தெரியாமல்
நீ என்னவோ
முத்தம் கொடுத்து
சென்றுவிட்டாய்
ஏன் இப்படி என்னைக்
கடனாளியாக்குகிறாய்?\\

கடனை வட்டியோட திருப்பி கொடுப்பீங்களா??//

:))) என்ன இப்படி கேட்டுட்டீங்க?? வட்டி குட்டியோட திருப்பி கொடுக்கலைனா எப்படி?? அதெல்லாம் நாங்க ஒழுன்ங்கா கொடுத்துடுவோம் :))))


\\கொஞ்சிக்கொஞ்சியே
என்னை
நீ கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றிக்கொண்டிருக்கிறாய்
தெரியுமாடி என்
செல்லத்திருடி?\\

கொஞ்சம் கொஞ்சமாவே மாறுங்க பாஸ் !!//

அப்படீங்கறீங்களா? அப்படியே ஆகக்கடவது !! :)))

இவ்வளவு விரிவா விமர்சன்ம் பண்ணியதற்கு மிக்க நன்றி !!;)))))

காரூரன் சொன்னது…

வர்ணமும் வர்ணனையும் அருமை. ரொம்பவே ரசிக்கத் தெரிந்தவர் போலும் :‍‍)

குசும்பன் சொன்னது…

நவீன் சமீப காலமாகதான் உங்க பதிவை படிக்க ஆரம்பித்தேன், வலைசரத்தில் உங்க பதிவை லிங் கொடுக்க சேமித்து வைத்ததில் இருந்து உங்க பக்கம் மிகவும் விரும்பும் பக்கமாக ஆகி விட்டது.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//காரூரன் said...
வர்ணமும் வர்ணனையும் அருமை. ரொம்பவே ரசிக்கத் தெரிந்தவர் போலும் :‍‍)//

வாங்க காரூரன் :)))
மிக்க நன்றி !! ரசிப்பு தானே அனைத்துக்கும் காரணம் ?? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//குசும்பன் said...
நவீன் சமீப காலமாகதான் உங்க பதிவை படிக்க ஆரம்பித்தேன், வலைசரத்தில் உங்க பதிவை லிங் கொடுக்க சேமித்து வைத்ததில் இருந்து உங்க பக்கம் மிகவும் விரும்பும் பக்கமாக ஆகி விட்டது.//

வாருங்கள் குசும்பன் :)))
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது குசும்பன் :))) எல்லாம் இறைவன் அருள் !!

Unknown சொன்னது…

காதல் (கவிதைகள்னு சொல்றத விட இது பொருத்தமா இருக்கும்) + படங்கள் எல்லாமே செம ரொமான்டிக் :-)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அருட்பெருங்கோ said...
காதல் (கவிதைகள்னு சொல்றத விட இது பொருத்தமா இருக்கும்) + படங்கள் எல்லாமே செம ரொமான்டிக் :-)//

வாங்க அருள் :))
அஹா காதலே காதலைப்பற்றி இப்படி சொன்னா என்ன பண்ணுவேன் நான் :))))

vinu சொன்னது…

i hope u remember me since i am quite busy unfortunatle couldnt read your pages on few months nice all once again as u did casual. my wishes to your partner she is the most gifted women in this whole aorld i think take care

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//vinu said...
i hope u remember me since i am quite busy unfortunatle couldnt read your pages on few months nice all once again as u did casual. my wishes to your partner she is the most gifted women in this whole world i think take care//

வாங்க வினு :)))))
உங்களை மறப்பேனா ? :)) மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி வினு :))
அட என்னாங்க இது இப்படியெல்லாம் சொல்லிட்டு என்னைய திக்குமுக்காட வைக்கிறீங்க :)))) நன்றி !

Rasiga சொன்னது…

கெஞ்சலும்,கொஞ்சலுமாக காதல் ததும்பும் வரிகள் அபாரம்!

கவிதையுடன் ஒன்றிப்போக வைத்தது ஒவ்வொரு வரிகளும்.

Dreamzz சொன்னது…

WOW! nice! really nice!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//rasiga said...
கெஞ்சலும்,கொஞ்சலுமாக காதல் ததும்பும் வரிகள் அபாரம்!

கவிதையுடன் ஒன்றிப்போக வைத்தது ஒவ்வொரு வரிகளும்.//

வாருங்கள் ரசிகா :)))
கொஞ்சி கெஞ்சி வரும் காதல் எப்போதுமே அழகுதானே ?? :))))
மிக்க மகிழ்ச்சி வருகைக்கும் தருகைக்கும் ... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Dreamzz said...
WOW! nice! really nice!//

மிக்க நன்றி ட்ரீம்ஸ் :)))

பெயரில்லா சொன்னது…

Very nice friend. Keep it up.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Anonymous said...
Very nice friend. Keep it up.//

வாங்க அனானி :))
மிக்க நன்றி :)) பேர் சொல்லிட்டு போங்க சரியா ? :)))

Aruna சொன்னது…

//முடிந்து விட்ட நம்
சண்டையில் யார் ஆரம்பித்தது
இந்த சண்டையை என்ற
சண்டையை புதிதாக
ஆரம்பித்து விட்டாய்
ஏண்டி இப்படி?//

//ஒவ்வொருமுறையும்
நம் சண்டைகளின்
முடிவு
மேலும் சண்டையிடத்
தூண்டுகின்றன//

அடடா ...சன்டைகள் முடிவதில்லையோ????
கவிதை ரொம்ப அற்புதமாக இருந்தது!

அன்புடன் அருணா

Lakshmi Sahambari சொன்னது…

////
அழகான பெண்களை
பார்த்தால் எனக்கு
உன் ஞாபகம் தான்
வருகிறது தெரியுமா?
நாம் இப்படி பார்க்கிறதை
நீ பார்த்தால்
என்ன ஆகுமோ என..
////

Raasikumpadiyana Kavalai - Azhagu!!
Koodave Nanbargalin uraiyadalum :-)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//aruna said...
//முடிந்து விட்ட நம்
சண்டையில் யார் ஆரம்பித்தது
இந்த சண்டையை என்ற
சண்டையை புதிதாக
ஆரம்பித்து விட்டாய்
ஏண்டி இப்படி?//

//ஒவ்வொருமுறையும்
நம் சண்டைகளின்
முடிவு
மேலும் சண்டையிடத்
தூண்டுகின்றன//

அடடா ...சன்டைகள் முடிவதில்லையோ????
கவிதை ரொம்ப அற்புதமாக இருந்தது!

அன்புடன் அருணா //

வாங்க அருணா :)))
முதன் முறை வருகையோ..?? :))) மிக்க மகிழ்ச்சி... அற்புதமான வருகைக்கும் அன்பான தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Lakshmi Sahambari said...
////
அழகான பெண்களை
பார்த்தால் எனக்கு
உன் ஞாபகம் தான்
வருகிறது தெரியுமா?
நாம் இப்படி பார்க்கிறதை
நீ பார்த்தால்
என்ன ஆகுமோ என..
////

Raasikumpadiyana Kavalai - Azhagu!!
Koodave Nanbargalin uraiyadalum :-)/

வாங்க லக்ஷ்மி சாஹம்பரி :)))
அழகுக்கு அழகு சேர்க்கிறது தங்களின் ரசிப்பும்... மிக்க நன்றி !!! :)))