Monday, December 29, 2008

தடம் எண் 143ல் கொஞ்சல் Express...


இரயிலில் செல்லும் போது
என்னை உன்னால் எதுவுமே
செய்ய முடியாதே என என்னிடம்
பழிப்பு காட்டுகின்றாயாடி...??
இப்படியெல்லாம் தேவை
இல்லாமல் என்னை
சீண்டிவிட்டு....
அப்புறம் என்னைக்
குற்றப்படுத்தாதே...


நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்..
ஆனால் யாருக்குமே தெரியாமல்
உன் விரல்கள் போடும்
கும்மாளம் யாருக்கடா
தெரியும்
என்னைத்தவிர..??!!


உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி...


இரவினில் நன்றாக தூங்கியபடியே
பயணம் செய்யலாம் என்று
சொல்லி என்னை ரயிலில் அழைத்து
வந்து இப்படியெல்லாம் காதுக்குள்
பேசினால் எப்படிடா என்னால்
தனியாகத் தூங்கமுடியும்...?!!


எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?


பார்ப்பவர்கள் எல்லாம்
நீ ஏதோ என்னிடம்
ரகசியம் பேசுவதாக
நினைத்துக்கொள்கிறார்கள்..
திருட்டுப்பயல் உன்னைப்
பற்றி எனக்குத் தெரியதா..?
ச்ச்சீய்ய்... போடா....


இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?


இனி இரயில் பயணங்களில்
எல்லாம் என் அருகில்
அமராதே... மற்றவர்கள்
முன்பு நான் உன் குறும்பு
விரல்களால் நெளியாமல்
இருக்க படும் பாடு
உனக்கென்னடா தெரியும்...


கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...


இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...


முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு
இதழ் முழுதும்
சிணுங்கல்கள் வழிய
யாரும் அறியாமல்
ரயிலில் நீ
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?

பின்குறிப்பு :‍‍‍‍

தோழி காயத்ரியின் கவிதைக் கருவிற்காக நான் முயற்சி செய்தது...

காயத்ரியின் இரயில் பயணத்தில் ஒரு காதல் கவிதை!

இதே கவிதைக்கருவிற்கு கவிஞர் ஸ்ரீ எழுதிய ர‌(ம)யில் காதலன்


110 comments:

Divya said...

சில்மிஷ 'காதலுடன்' ரயிலில்.......கவிதை அழகாக பயணிக்கிறது!!

வாழ்த்துக்கள்!!!

Divya said...

ஆணும் பெண்ணும் உரையாடுவதுபோல் கவிதை வனைந்திருப்பது வித்தியாசமான அழகுடன் மிளிர்கிறது:))))

பாராட்டுக்கள் நவீன்!!

Divya said...

\\பார்பவர்கள் எல்லாம்
நீ ஏதோ என்னிடம்
ரகசியம் பேசுவதாக
நினைத்துக்கொள்கிறார்கள்..
திருட்டுப்பயல் உன்னைப்
பற்றி எனக்குத் தெரியதா..?
ச்ச்சீய்ய்... போடா....\\

இப்படி கொஞ்சிட்டு போனா.........சகபயணிகள் நிலைமை ரொம்ப கஷ்டம் சார்:))

Divya said...

\\முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு
இதழ் முழுதும்
சிணுங்கள்கள் வழிய
யாரும் அறியாமல்
ரயிலில் நீ
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?\\


இந்த கன்னுகுட்டி......ஆட்டுகுட்டி வார்த்தை எல்லாம் எங்கிருந்து கத்துக்கிறீங்க கவிஞரே???

Divya said...

\\இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?\\


மனதை கொள்ளை கொள்ளும் வரிகள்.....ரொம்ப நல்லா இருக்கு!!!!

Divya said...

ரயிலில் குறும்புடன் 'காதல்' பயணித்தது போல்.......உங்கள் கவி பயணமும் தொடரட்டும் கவிஞரே!!

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நாடோடி இலக்கியன் said...

//கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...//

இது கலக்கல்

வாழ்த்துகள்..!

cheena (சீனா) said...

அன்பின் நவீன்

வேகமாகச் செல்லும் புகைவண்டியின் வேகத்தை விட வேகமான குறும்பான காதல் - படங்களோ......... சூப்பர்

நல்ல கவிதை - கதை - நல்வாழ்த்துகள்

ஆளவந்தான் said...

//
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?
//
அருமை.

Ravishna said...

ஐயோ எப்டி இப்டிலாம் கலக்குறிங்க.
எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்.
நானும் பொலச்சுத்த்து போறேன்....

--ரவிஷ்னா

புதியவன் said...

//இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...//

இது கலக்கல் Express...

வாழ்த்துக்கள் கவிஞரே...

திகழ்மிளிர் said...

/இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா../

/உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி.../

அருமையான வரிகள்

வாழ்த்துகள்

அத்திரி said...

//கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..//


ம்ம்ம்ம்.....பொய்க்கோபம் அழகானது.

இளமைக்குறும்பு பொங்கி வழிகிறது

ஸ்ரீமதி said...

அண்ணா அழகான ரயில் காதல் கவிதைகள் உங்களிடமிருந்து... சூப்பர்... அனைத்தும் அழகு.. :))))))

ஸ்ரீமதி said...

//கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...//

அழகு :)))

ஸ்ரீமதி said...

//இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...//

:))))))))

Thamizhmaangani said...

ஆஹா நவீன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க!

/நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்..
ஆனால் யாருக்குமே தெரியாமல்
உன் விரல்கள் போடும்
கும்மாளம் யாருக்கடா
தெரியும்
என்னைத்தவிர..??!!//

நவீன் கவிதைகள் என்று சொல்ல இது ஒன்று போதாதா! அருமை அருமை...

Thamizhmaangani said...

//எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?//

வாவ்....பின்னுறீங்க போங்க... themeக்கு ஏத்த உணர்வுகளை அழகாய் கவிதையாய் உருவம் தந்து இருக்கீங்க! ரொம்ப அழகான வரிகள்!

Thamizhmaangani said...

//அழகான வெட்கங்களைத்தவிர....?//

ம்ம்ம்...இந்த ஒரு வரி வைத்தே ஆயிரம் கவிதைகள் எழுதலாமே!:) சூப்பர்!

Thamizhmaangani said...

//இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...//

ஹாஹா... நல்ல இருக்குப்பா! ரசித்து படித்தேன்.

Subbu said...

Nice Naveen

அதிரை ஜமால் said...

\\நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்..
ஆனால் யாருக்குமே தெரியாமல்
உன் விரல்கள் போடும்
கும்மாளம் யாருக்கடா
தெரியும்
என்னைத்தவிர..??!!\\

ஆஹா ஆஹா ...

அதிரை ஜமால் said...

\\உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி...\\

அருகே வந்தால்

விரல் கோலமா

இதழ் கோலமா

அதிரை ஜமால் said...

\\இரவினில் நன்றாக தூங்கியபடியே
பயணம் செய்யலாம் என்று
சொல்லி என்னை ரயிலில் அழைத்து
வந்து இப்படியெல்லாம் காதுக்குள்
பேசினால் எப்படிடா என்னால்
தனியாகத் தூங்கமுடியும்...?!!\\

தனியா ஏன் அதான் நான் ...

அதிரை ஜமால் said...

\\எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?\\

நல்ல அனுபவம் ...

அதிரை ஜமால் said...

\\கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...\\

சிம்ப்ளி ரொமாண்டிக்

அதிரை ஜமால் said...

இளமையும் இனிமையும்

உங்கள் மெயில்
ஒரு அழகு காதல் இரயில்

எழில்பாரதி said...

தலைப்பே அசத்தல இருக்கு கவிஞரே!!!!!

கவிதைகள் அனைத்தும் அருமையோ அருமை!!!!

உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்!!!

thevanmayam said...

எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?///

ரொம்ப ரகசியமான கவிதைகள்!11
தேவா...

reena said...

//இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?
//
தங்கள் கவிதைகள் கூட அழகாய் கொள்ளையடித்து விடுகின்றன படிப்பவர் இதயங்களை... எப்படி இதெல்லாம்??? :))))))

reena said...

//முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு..//

அடடா.. அப்புறம்?:))))

reena said...

//இதழ் முழுதும்
சிணுங்கல்கள் வழிய//

நோட் பண்ணுங்கப்பா இதையெல்லாம்!!!

Divyapriya said...

//தடம் எண் 143ல் கொஞ்சல் Express...//

தலைப்பே அமர்க்களம்…கவிதைகளை பத்தி சொல்லவே வேண்டாம்….

தமிழன்-கறுப்பி... said...

தனித்தனியா வேற சொல்லணுமா எல்லாமே கலக்கல்...

தமிழன்-கறுப்பி... said...

\\
கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...
\\

சூப்பரு...:)

ஆனா அவளுகள்தான் கேட்டக மாட்டேங்கறாளுகளே..;)

தமிழன்-கறுப்பி... said...

படங்களுக்கு ஏற்றாற்போல கவிதைகள் அதிலும் இரண்டாவது கவிதைக்கு படம்தான் சாடசி...

தமிழன்-கறுப்பி... said...

உண்மைதான் அண்ணன் பயணங்கள் தருகிற அனுபவங்கள் வித்தியாசமானவைதான் என்றாலும் அவளோடு பயணகிக்கையில் அது தனி த்ரில்தான்...:)

சுபா said...

மிக அழகான படைப்பு நவீன்!
வாழ்த்துக்கள்...

sathish said...

//இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...
//

vazakamaana azhagu konjal therihirathu kavingare :)

sathish said...

//முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு
இதழ் முழுதும்
சிணுங்கல்கள் வழிய
யாரும் அறியாமல்
ரயிலில் நீ
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?//

azhagu :)

sathish said...

சற்றே சில இடங்களில் இரயில் தடம் புரளுதோ :) கவிதைகள் சிலவற்றில் உங்களின் வழக்கமான தித்திப்பு missing.

இனியவள் புனிதா said...

இரசிக்க வைக்கும் அழகான கவிதை கொஞ்சல்கள் :-)

Saravana Kumar MSK said...

வழக்கம் போல கலக்கல் நவீன்..

சில்மிஷ 'காதலுடன்' ரயிலில்.......கவிதை அழகாக பயணிக்கிறது!!

Saravana Kumar MSK said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
:)

காண்டீபன் said...

அழகான கவிதை கோப்பு.

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே..

Mohamed Husain said...

Hi Naveen, through somebody I got ur Blog link. I have gone through everything and all are very good. I appreciate ur effort. I usually check if there is any updates in ur blog or not. Continue the good work...

இளைய கவி said...

பட்டாசு கவிதை தல
கலக்கீட்டீங்க

ஸ்ரீ said...

அடடா நாங்க என்ன தான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் நவீன் எழுதும் போது இருக்கும் லாவகம் வர மறுக்கின்றதே?

அழகா இருந்ததுங்க நவீன் ரயில் பயணம். வாழ்த்துக்கள்.

ஸாவரியா said...

லல்லு சார்...இங்க ஒருத்தர் சில்மிஷ ரயில் ஓட்டிகிட்டு இருக்கிறார் பாருங்க...ஆத்தாடி டிக்கெட் எல்லாம் வித்து போச்சாமே இந்த ரயிலுக்கு...
நாங்களும் எழுதோறமே...எதையோ கட்ட வண்டி மாதிரி....
கலக்குறீங்க நவீன்!
2009 ஒரு பம்பர் (கு)கலக்கல் ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்
அன்புடன்
ஸாவரியா

gayathri said...

me they 50 th pa

gayathri said...

இனி இரயில் பயணங்களில்
எல்லாம் என் அருகில்
அமராதே... மற்றவர்கள்
முன்பு நான் உன் குறும்பு
விரல்களால் நெளியாமல்
இருக்க படும் பாடு
உனக்கென்னடா தெரியும்

நல்ல கவிதை

பிரபு said...

உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி...

///////

ஆஹா அசத்துரிங்க

kajan's said...

/நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்
நல்லாதான் இருக்கு

நவீன் ப்ரகாஷ் said...

// Divya said...

சில்மிஷ 'காதலுடன்' ரயிலில்.......கவிதை அழகாக பயணிக்கிறது!!

வாழ்த்துக்கள்!!! //

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திவ்யா... :))

நவீன் ப்ரகாஷ் said...

// Divya said...

ஆணும் பெண்ணும் உரையாடுவதுபோல் கவிதை வனைந்திருப்பது வித்தியாசமான அழகுடன் மிளிர்கிறது:))))

பாராட்டுக்கள் நவீன்!! //

அட நீங்க சொன்னதுக்கப்புறம் தான் நானே கவனிக்கிறேன்... அப்படி அமைந்துவிட்டது..:)))

நவீன் ப்ரகாஷ் said...

//Divya said...

\\பார்பவர்கள் எல்லாம்
நீ ஏதோ என்னிடம்
ரகசியம் பேசுவதாக
நினைத்துக்கொள்கிறார்கள்..
திருட்டுப்பயல் உன்னைப்
பற்றி எனக்குத் தெரியதா..?
ச்ச்சீய்ய்... போடா....\\

இப்படி கொஞ்சிட்டு போனா.........சகபயணிகள் நிலைமை ரொம்ப கஷ்டம் சார்:)) //

என்ன இப்படி சொல்லுறீங்க..?
சக பயணிகள் எல்லாம் தூங்கிடுவாங்க திவ்யா... :))))

நவீன் ப்ரகாஷ் said...

//Divya said...

\\முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு
இதழ் முழுதும்
சிணுங்கள்கள் வழிய
யாரும் அறியாமல்
ரயிலில் நீ
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?\\


இந்த கன்னுகுட்டி......ஆட்டுகுட்டி வார்த்தை எல்லாம் எங்கிருந்து கத்துக்கிறீங்க கவிஞரே??? //

இப்படி நக்கலா..? :)))
இதைய கத்துக்க நான் தொல்காப்பியம் எல்லாம் படிச்சேன்னு சொன்னா நம்பனும் ஒகேவா..? :))))

நவீன் ப்ரகாஷ் said...

// Divya said...

\\இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?\\


மனதை கொள்ளை கொள்ளும் வரிகள்.....ரொம்ப நல்லா இருக்கு!!!! //

கொள்ளை கொண்டுடுச்சா...?? நிரம்ப மகிழ்ச்சி திவ்யா...:)))

நவீன் ப்ரகாஷ் said...

//Divya said...

\\இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?\\


மனதை கொள்ளை கொள்ளும் வரிகள்.....ரொம்ப நல்லா இருக்கு!!!!//

நன்றி...
நன்றி...
நன்றி...

வருகையும் தருகையும் மிகுந்த மகிழ்ச்சி திவ்யா.. !! :))

நவீன் ப்ரகாஷ் said...

// நாடோடி இலக்கியன் said...

//கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...//

இது கலக்கல்

வாழ்த்துகள்..! //

வாருங்கள் நாடோடி இலக்கியன்...:))
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது தங்களின் வருகையும் தருகையும்..!!

நவீன் ப்ரகாஷ் said...

//cheena (சீனா) said...

அன்பின் நவீன்

வேகமாகச் செல்லும் புகைவண்டியின் வேகத்தை விட வேகமான குறும்பான காதல் - படங்களோ......... சூப்பர்

நல்ல கவிதை - கதை - நல்வாழ்த்துகள் //

வாருங்கள் சீனா சார்.. :))

எபப்டி இருக்கிறீர்கள்..? மிகுந்த மகிழ்ச்சி வருகைகும் அழகான வாழ்த்துகளுக்கும்...:))

நவீன் ப்ரகாஷ் said...

//ஆளவந்தான் said...

//
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?
//
அருமை.//

வாருங்கள் ஆளவந்தான்...:))

வருகைக்கும் ரசிப்பை அளித்ததற்கும் மிக்க நன்றி..:)))

நவீன் ப்ரகாஷ் said...

// Ravishna said...

ஐயோ எப்டி இப்டிலாம் கலக்குறிங்க.
எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்.
நானும் பொலச்சுத்த்து போறேன்....

--ரவிஷ்னா //

வாங்க ரவி..:)))

என்ன இப்படி சொல்லிட்டீங்க..? உங்களுக்கு இல்லாததா..? தாராளமாக... :))) மிக்க நன்றி ரவி !! :))

நவீன் ப்ரகாஷ் said...

// புதியவன் said...

//இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...//

இது கலக்கல் Express...

வாழ்த்துக்கள் கவிஞரே... //

வாருங்கள் புதியவன்...:)))

woww... அழகான பின்னூட்டம்... மிக ரசித்தேன்...மிக்க நன்றி புதியவன்.. :))

நவீன் ப்ரகாஷ் said...

// திகழ்மிளிர் said...

/இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா../

/உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி.../

அருமையான வரிகள்

வாழ்த்துகள் //

வாருங்கள் திகழ்மிளிர்... :)))

அருமையான தருகையும் அழகான வருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... :)))

நவீன் ப்ரகாஷ் said...

// அத்திரி said...

//கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..//


ம்ம்ம்ம்.....பொய்க்கோபம் அழகானது.

இளமைக்குறும்பு பொங்கி வழிகிறது //

வாருங்கள் அத்திரி...

தங்களின் பெயரே புதிதாய் இருக்கிறதே...!

மிக்க நன்றி அழகான வருகைகும் அருமையான தருகைக்கும்.. :)))

நவீன் ப்ரகாஷ் said...

// ஸ்ரீமதி said...

அண்ணா அழகான ரயில் காதல் கவிதைகள் உங்களிடமிருந்து... சூப்பர்... அனைத்தும் அழகு.. :))))))//

வாங்க ஸ்ரீமதி...:))
சூப்பரான வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது ஸ்ரீ...:))

நவீன் ப்ரகாஷ் said...

//ஸ்ரீமதி said...

//கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...//

அழகு :))) //

மிக்க நன்றி ஸ்ரீ...:)))

நவீன் ப்ரகாஷ் said...

// ஸ்ரீமதி said...

//இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...//

:)))))))) //

ரொம்ப சிரிச்சிட்டீங்க நீங்க.. :)))))

மிக்க மகிழ்ச்சி...:))

நவீன் ப்ரகாஷ் said...

// Thamizhmaangani said...

ஆஹா நவீன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க! //

வாங்க காயத்ரி...:))

லேட்டா வந்தேன்னு திட்டாம விட்டதுக்கு ரொம்ப நன்றி :)))

/நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்..
ஆனால் யாருக்குமே தெரியாமல்
உன் விரல்கள் போடும்
கும்மாளம் யாருக்கடா
தெரியும்
என்னைத்தவிர..??!!//

நவீன் கவிதைகள் என்று சொல்ல இது ஒன்று போதாதா! அருமை அருமை... //

:)))) அப்படியா காயத்ரி..? :)) நன்றி நன்றி.. :))

நவீன் ப்ரகாஷ் said...

// Thamizhmaangani said...

//எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?//

வாவ்....பின்னுறீங்க போங்க... themeக்கு ஏத்த உணர்வுகளை அழகாய் கவிதையாய் உருவம் தந்து இருக்கீங்க! ரொம்ப அழகான வரிகள்!//

எல்லாம் உங்களைப் போன்றவர்களின் உற்சாகம் தான் காரணம் காயத்ரி... மிக்க நன்றி..:)))

நவீன் ப்ரகாஷ் said...

// Thamizhmaangani said...

//அழகான வெட்கங்களைத்தவிர....?//

ம்ம்ம்...இந்த ஒரு வரி வைத்தே ஆயிரம் கவிதைகள் எழுதலாமே!:) சூப்பர்! //

:)))) ஆமாம் இல்லை..?? !!!

நவீன் ப்ரகாஷ் said...

//Thamizhmaangani said...

//இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...//

ஹாஹா... நல்ல இருக்குப்பா! ரசித்து படித்தேன். //

மிக்க நன்றி காயத்ரி... அழகான ரசிப்புக்கும்... மிக விரிவான விமர்சனத்திற்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் said...

// Subbu said...

Nice Naveen //

மிக்க நன்றி சுப்பு...:)))

நவீன் ப்ரகாஷ் said...

// அதிரை ஜமால் said...

\\நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்..
ஆனால் யாருக்குமே தெரியாமல்
உன் விரல்கள் போடும்
கும்மாளம் யாருக்கடா
தெரியும்
என்னைத்தவிர..??!!\\

ஆஹா ஆஹா .. //

வாருங்கள் ஜமால்... :)))
இரண்டே வார்த்தைகளில் இவ்வளவு பெரிய பாராட்டா..? மிக்க மகிழ்ச்சி..:))))

நவீன் ப்ரகாஷ் said...

//அதிரை ஜமால் said...

\\உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி...\\

அருகே வந்தால்

விரல் கோலமா

இதழ் கோலமா //

எதாக இருந்தாலும் கோலம் அழகுதான் இல்லையா..?? :))))

நவீன் ப்ரகாஷ் said...

// அதிரை ஜமால் said...

\\இரவினில் நன்றாக தூங்கியபடியே
பயணம் செய்யலாம் என்று
சொல்லி என்னை ரயிலில் அழைத்து
வந்து இப்படியெல்லாம் காதுக்குள்
பேசினால் எப்படிடா என்னால்
தனியாகத் தூங்கமுடியும்...?!!\\

தனியா ஏன் அதான் நான் ... //

:))))))

நவீன் ப்ரகாஷ் said...

// அதிரை ஜமால் said...

\\எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?\\

நல்ல அனுபவம் ... //

அனுபவமா... ??? கற்பனைங்க ஜமால்...:)))

நவீன் ப்ரகாஷ் said...

// அதிரை ஜமால் said...

\\கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...\\

சிம்ப்ளி ரொமாண்டிக் //

நன்றி நன்றி... :)))மிக்க நன்றி...!!!

நவீன் ப்ரகாஷ் said...

//அதிரை ஜமால் said...

இளமையும் இனிமையும்

உங்கள் மெயில்
ஒரு அழகு காதல் இரயில் //

மிகுந்த மகிழ்ச்சி ஜமால்... அழகான அருகைக்கும் வரிகளுக்கும்...:)))

நவீன் ப்ரகாஷ் said...

// எழில்பாரதி said...

தலைப்பே அசத்தல இருக்கு கவிஞரே!!!!!

கவிதைகள் அனைத்தும் அருமையோ அருமை!!!!

உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்!!! //

தலைப்பே அசத்தலா எழில்...?? :))) நன்றி நன்றி..:))

மிகுந்த மகிழ்ச்சி எழில்.... அருமையான வருகைக்கும் வாழ்த்தான தருகைக்கும்..:)))

நவீன் ப்ரகாஷ் said...

//thevanmayam said...

எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?///

ரொம்ப ரகசியமான கவிதைகள்!
தேவா... //

வாருங்கள் தேவா... :)))

ரகசியாமான ரசிப்புகள் எல்லாமே கவிதைகள் தானே..:))))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்..:)))

நவீன் ப்ரகாஷ் said...

//reena said...

//இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?
//
தங்கள் கவிதைகள் கூட அழகாய் கொள்ளையடித்து விடுகின்றன படிப்பவர் இதயங்களை... எப்படி இதெல்லாம்??? :)))))) //

வாருங்கள் ரீனா.. :))

அஹா... பின்னூட்டமே கவிதை மாதிரி அழகான பொய்யா இருக்கே... :))))

எல்லாம் உங்கள மாதிரி கவிதைபிரியர்களின் உற்சாகம் தான் ரீனா.. :)))

நவீன் ப்ரகாஷ் said...

// reena said...

//முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு..//

அடடா.. அப்புறம்?:)))) //

அப்புறம் என்ன ரீனா...
பவுடர் பூசிய மேக்கப்பே தேவை இல்லைன்னு வச்சுக்கலாம்..:)))

நவீன் ப்ரகாஷ் said...

// reena said...

//இதழ் முழுதும்
சிணுங்கல்கள் வழிய//

நோட் பண்ணுங்கப்பா இதையெல்லாம்!!! //

இதையெல்லாம் நோட் பண்ண கூடாது ரீனா... ரசிக்கனும் ஒகேவா..? ;))))

வருகையும் தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது..மிக்க நன்றி !! :))

நவீன் ப்ரகாஷ் said...

//Divyapriya said...

//தடம் எண் 143ல் கொஞ்சல் Express...//

தலைப்பே அமர்க்களம்…கவிதைகளை பத்தி சொல்லவே வேண்டாம்….//

வாருங்கள் திவ்யப்ரியா...:)))
கவிதைகளைப் பத்தி சொல்ல வேணாம்னு சொன்னா எப்படிங்க..? ஏதாச்சும் சொல்லிட்டுதான் போறது...!!! ;))))

அமர்களமான வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி ப்ரியா...:)))

நவீன் ப்ரகாஷ் said...

//தமிழன்-கறுப்பி... said...

தனித்தனியா வேற சொல்லணுமா எல்லாமே கலக்கல்...//

வாங்க தமிழன்...:)))

எப்படி இருக்கீங்க..?? எனக்கு கலக்கலே உங்க வருகைதான்.. :)))

நவீன் ப்ரகாஷ் said...

// தமிழன்-கறுப்பி... said...

\\
கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...
\\

சூப்பரு...:)

ஆனா அவளுகள்தான் கேட்டக மாட்டேங்கறாளுகளே..;) //

கேட்கமாடேங்கறாங்களா..?? அப்போ சும்மா விடக்கூடாதுங்க தமிழன்..என்ன சரிதானே..?? ;)))))

நவீன் ப்ரகாஷ் said...

// தமிழன்-கறுப்பி... said...

படங்களுக்கு ஏற்றாற்போல கவிதைகள் அதிலும் இரண்டாவது கவிதைக்கு படம்தான் சாடசி... //

அப்படியா..? :)))

நன்றி நன்றி...!!!

நவீன் ப்ரகாஷ் said...

// தமிழன்-கறுப்பி... said...

உண்மைதான் அண்ணன் பயணங்கள் தருகிற அனுபவங்கள் வித்தியாசமானவைதான் என்றாலும் அவளோடு பயணகிக்கையில் அது தனி த்ரில்தான்...:) //

ஆமாம் தமிழன்... நீங்க சொன்னா அது மிகசரியாகத் தான் இருக்கும் தான்..;)))))

வருகையும் அழகான தருகையும் தங்கள் தமிழ் போலவே மிக வளமையாக இருக்கிறது... மிக்க நன்றி !! :)))

நவீன் ப்ரகாஷ் said...

//சுபா said...

மிக அழகான படைப்பு நவீன்!
வாழ்த்துக்கள்... //

வாங்க சுபா.. :)))

என்ன இப்படி ரெண்டே வரில குறள் மாதிரி சொல்லிட்டு போறீங்க...?? ;))))

மிக்க நன்றி...!!!

நவீன் ப்ரகாஷ் said...

//.sathish said...

//இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...
//

vazakamaana azhagu konjal therihirathu kavingare :) //

வாங்க கவிஞரே..:)))

எப்படி இருக்கீங்க..?? அச்சசோ வழக்கமான கொஞ்சல் தான் தெரியுதா..? அப்போ கொஞ்சம் கொஞ்சலை மாத்திட்டறேன்.. ;)))))

நவீன் ப்ரகாஷ் said...

//sathish said...

//முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு
இதழ் முழுதும்
சிணுங்கல்கள் வழிய
யாரும் அறியாமல்
ரயிலில் நீ
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?//

azhagu :) //

ஒற்றை வார்த்தை கவி மாதிரி இருக்குங்க இந்த அழகு... கவிஞர்னா சும்மாவா..?? ;))))

நவீன் ப்ரகாஷ் said...

// sathish said...

சற்றே சில இடங்களில் இரயில் தடம் புரளுதோ :) கவிதைகள் சிலவற்றில் உங்களின் வழக்கமான தித்திப்பு missing. //

அட தடம் புரளுதா..? என்ன இப்படி சொல்லிட்டீங்க.. இனி கொஞ்சம் கொஞ்சலை தூக்கலா போட்டு காதலை பாகா காய்ச்சி தித்திப்பை அதிகப்படுத்திபார்கிறேன்.. சரிங்களா கவிஞரே..?? :)))0

மிக்க நன்றி சதீஷ் அழகான வருகைக்கும் தருகைக்கும்...:)))

நவீன் ப்ரகாஷ் said...

//இனியவள் புனிதா said...

இரசிக்க வைக்கும் அழகான கவிதை கொஞ்சல்கள் :-) //

வாங்க புனிதா..:)))
எப்படி இருக்கிறீர்கள் கவிஞரே...??

தங்களின் ரசிப்பு என பாக்கியம்.. :)) மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்.. :))

நவீன் ப்ரகாஷ் said...

// Saravana Kumar MSK said...

வழக்கம் போல கலக்கல் நவீன்..

சில்மிஷ 'காதலுடன்' ரயிலில்.......கவிதை அழகாக பயணிக்கிறது!! //

வாங்க சரவணகுமார்... :)))

அழகான வருகையுடன் சில்மிஷமான தருகையும் அழகு... மிக்க நன்றி கவிஞரே.. :))))

நவீன் ப்ரகாஷ் said...

//Saravana Kumar MSK said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
:) //

மிக்க நன்றி சரவணன்..
தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... !! :)))

நவீன் ப்ரகாஷ் said...

//காண்டீபன் said...

அழகான கவிதை கோப்பு.

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே..//

வாங்க காண்டீபன்.. :)))

மிக்க நன்றி..!!

தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!! :)))

நவீன் ப்ரகாஷ் said...

// Mohamed Husain said...

Hi Naveen, through somebody I got ur Blog link. I have gone through everything and all are very good. I appreciate ur effort. I usually check if there is any updates in ur blog or not. Continue the good work... //

வாருங்கள் முகமது ஹுசைன்..:)))

மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது தங்களின் வருகையும் உணர்வுகளின் பகிர்வும்...:))

மீண்டும் மீண்டும் வாருங்கள் ஹுசைன்...!! :)))

நவீன் ப்ரகாஷ் said...

// இளைய கவி said...

பட்டாசு கவிதை தல
கலக்கீட்டீங்க //

வாங்க இளையகவி..

பட்டாசு கெளப்புதா...? நன்றி நன்றி... :)))

நவீன் ப்ரகாஷ் said...

// ஸ்ரீ said...

அடடா நாங்க என்ன தான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் நவீன் எழுதும் போது இருக்கும் லாவகம் வர மறுக்கின்றதே?

அழகா இருந்ததுங்க நவீன் ரயில் பயணம். வாழ்த்துக்கள்.//

வாங்க ஸ்ரீ :)))

ஆஹா இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா ஸ்ரீ..? உங்க கவிதைகளைவிடவா தல..?? :)))

பயணத்தில் கலந்து கொண்டமைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி ஸ்ரீ...:)))

நவீன் ப்ரகாஷ் said...

// ஸாவரியா said...

லல்லு சார்...இங்க ஒருத்தர் சில்மிஷ ரயில் ஓட்டிகிட்டு இருக்கிறார் பாருங்க...ஆத்தாடி டிக்கெட் எல்லாம் வித்து போச்சாமே இந்த ரயிலுக்கு...
நாங்களும் எழுதோறமே...எதையோ கட்ட வண்டி மாதிரி....
கலக்குறீங்க நவீன்!
2009 ஒரு பம்பர் (கு)கலக்கல் ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்
அன்புடன்
ஸாவரியா //

ஹஹஹஹ.. வாங்க ஸாவரியா..
என்ன இப்படி சொல்லாம கொள்ளாம லல்லுகிட்டே எல்லாம் கம்ளெய்ண்ட் பண்ணுறீங்க..?? ;))))


மிக்க மகிழ்ச்சியளிக்கிறது தங்களின் வருகை...!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிஞரே...!! :)))

நவீன் ப்ரகாஷ் said...

//gayathri said...

me they 50 th pa //

வாங்க காயத்ரி... :)))

மிக்க மகிழ்ச்சி அரைசத்திற்கு..:)))

நவீன் ப்ரகாஷ் said...

// gayathri said...

இனி இரயில் பயணங்களில்
எல்லாம் என் அருகில்
அமராதே... மற்றவர்கள்
முன்பு நான் உன் குறும்பு
விரல்களால் நெளியாமல்
இருக்க படும் பாடு
உனக்கென்னடா தெரியும்

நல்ல கவிதை //

அட என்னங்க காயத்ரி..?? அவ்ளோதானா..?? உங்ககிட்டே இருந்து இன்னும் எதிர்பார்கறேன்..!! ;)))))

மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது தங்களின் வருகையும் தருகையும்...:))

நவீன் ப்ரகாஷ் said...

// பிரபு said...

உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி...

///////

ஆஹா அசத்துரிங்க //

வாங்க பிரபு...:)))

எப்படி இருக்கீங்க..??

அசத்தலுக்கு காரணம் தங்களின் உற்சாகம் தான் பிரபு....!! :))

நன்றி வருகைக்கும் தருகைகும்...:))

நவீன் ப்ரகாஷ் said...

// kajan's said...

/நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்
நல்லாதான் இருக்கு //

வாருங்கள் கஜன்..:)))
அழகான பெயர்...!!

மிக்க நன்றி முதன் வருகைக்கும் தருகைக்கும்...:)))

logu.. said...

\\KALAKKALA IRUKKUNGA...\\

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

ரகசிய சிநேகிதி said...

கவிதைகளோடு சேர்த்து படங்களையும் ரசித்தேன்...அருமை! அருமை...நவீன்.

venkatx5 said...

/*
இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...
*/

Wow.. Wow.. Awesome..