
சொல்லாமல் வந்த புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில் குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து
கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு புயல்
உருவாகி மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில் குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து
கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு புயல்
உருவாகி மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .
- தபூசங்கர்
7 கருத்துகள்:
யார் இந்த பொண்ணு, ரொம்ப அழகா இருக்கிறா, தமிழ் நடிகையா???
//Divya said...
யார் இந்த பொண்ணு, ரொம்ப அழகா இருக்கிறா, தமிழ் நடிகையா??? //
வாங்க திவ்யா :))
அழகு யாராயிருந்தால் என்ன ? யாரென தெரியவில்லையே!!
தந்தையுடன் வர்ர பொண்ணையும் சைட் அடிக்காம விடரதில்ல போலிருக்கு?
\\கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்\
எவ்வளவு நுணுக்கமா பார்த்து ரசிச்சிருக்கிறீங்க, வாரே வாவ்!!
உங்கள் கவிதை தொகுப்புகளின் பழைய பக்கங்களை புரட்டினேன்....ஒவ்வொருமுறை படிக்கும் போதும் கவிதை வரிகளில் ஒருவித காந்த கவர்ச்சி இருக்கிறது, அதெப்படி???
[பழைய கவிதை பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டால்.....கவிஞர் பதிலளிக்க மாட்டாரோ??]
//Divya said...
தந்தையுடன் வர்ர பொண்ணையும் சைட் அடிக்காம விடரதில்ல போலிருக்கு?
\\கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்\
எவ்வளவு நுணுக்கமா பார்த்து ரசிச்சிருக்கிறீங்க, வாரே வாவ்!! //
வாங்க திவ்யா
நுணுக்கமாக ரசித்தது நான் இல்லை.. கவிஞர் தபூசங்கர்..
அவரோட கவிதை தான் இது :))))
// Divya said...
உங்கள் கவிதை தொகுப்புகளின் பழைய பக்கங்களை புரட்டினேன்....ஒவ்வொருமுறை படிக்கும் போதும் கவிதை வரிகளில் ஒருவித காந்த கவர்ச்சி இருக்கிறது, அதெப்படி???
[பழைய கவிதை பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டால்.....கவிஞர் பதிலளிக்க மாட்டாரோ??] //
வாங்க திவ்யா
காந்தக்கவர்ச்சியா..?? இப்படி சொல்லி சொல்லியே கவிதை போதை ஏற்றிவிடுகிறீர்கள்...
அட பதில் அளிக்க மறந்துவிட்டேன் மன்னித்துக்கொள்ளுங்கள்...
[என்ன மன்னித்துவிட்டீர்கள் தானே..?? :))))]
\அட பதில் அளிக்க மறந்துவிட்டேன் மன்னித்துக்கொள்ளுங்கள்...
[என்ன மன்னித்துவிட்டீர்கள் தானே..?? :))))]\
மன்னிப்பது மனிதனின் இயல்பு,
மறப்பது இறைவனின் இயல்பு!!!
கருத்துரையிடுக