செவ்வாய், ஜனவரி 10, 2006

18 – வயசுல ...



ஹேர்பின்னால் கூந்தலில்
பூக்குத்திக் கொள்கிறாய்
ஓரக்கண்ணால் என்னையும்
நீ குத்திக் கொல்கிறாய் !

நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?

கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் !

அரிசி புடைக்கும்
உன் அம்மாவுக்குத் தெரியுமா ?
மகள்
புருவ அசைவிலேயே இதயத்தைப்
புடைத்து எடுப்பாள் என்று...

உன் கூந்தல் சிலுவையில் அறையப்படும்
மல்லிகைப்பூக்கள்
மறுநாள் மறிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன

பூஜைநேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது.

உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?

துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!


உனக்கே தெரியாமல் நான்
உன்னை காதலித்ததிலும்
நீ என்னை காதலிப்பதாக
நினைத்துக் கொள்வதிலும்
உள்ள சுகம்
அவன் அவனுக்கு மட்டும் தெரியும்.

காக்கை ஒருநாள் உன்மேல்
எச்சமிட்டு விட்டது
சிலைகளைப் பார்த்தால் காகங்கள்
இப்படித்தான் செய்துவிடுகின்றன !

- கவிஞர் பா. விஜய் எழுதிய 18 வயசுல.. கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதைகள்.

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

நவீன்,
உங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்..இருந்தாலும் தமிழ் நண்பர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..
உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும்

பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.அனைவருக்கும் என் இனிய பொங்கல் வழ்த்துக்கள் !

பெயரில்லா சொன்னது…

simply superb unga kavithai yellam
silla naerangalil alugaiyai kooda yettiparka vaikirathu intha irugiya manathil irunthu

keep it up

Divya சொன்னது…

கவிஞர் பா.விஜயின் கவிதை பகிர்விற்கு நன்றி,

வரிகள் அனைத்தும் மனதை கவர்ந்தன!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//simply superb unga kavithai yellam
silla naerangalil alugaiyai kooda yettiparka vaikirathu intha irugiya manathil irunthu

keep it up //

mikka Nandri.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

கவிஞர் பா.விஜயின் கவிதை பகிர்விற்கு நன்றி,

வரிகள் அனைத்தும் மனதை கவர்ந்தன!! //

வாங்க திவ்யா...:)))
மிக்க நன்றி... தேடிப்பிடித்து
படித்தமைக்கும் மிக அழகான பகிர்தலுக்கும்....:)))