புதன், ஜனவரி 25, 2006

காதலினால் ...



புகையாய் நீ
சாம்பலாய் நான்
நெருப்பாய் என்
காதல் !
அணைத்துவிடு
இல்லை
கரையவிடு !

கரையாய் நீ
அலையாய் நான்
ஈரமாய் என்
காதல் !
கொண்டுவிடு
இல்லை
மூழ்கவிடு !


பிடியாய் நீ
களிறாய் நான்
மதமாய் என்
காதல் !
அழைத்துவிடு
இல்லை
மடியவிடு !





6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சாம்பலாய்
அலையாய்
களிறாய்..

எல்லாமா நான்
உனக்கு..
என்னவாக நீ
எனக்கு..??
********

சாதாரணமாய் இருந்து
நெஞ்சைத்
தொட்டுவிட்டது..!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

நித்தியா
வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

மறைக்காடன்
பின்'ஊட்டத்திற்கு' நன்றி

Divya சொன்னது…

உணர்வுபூர்வமான கவிதை அருமை:)

\பிடியாய் நீ
களிறாய் நான்
மதமாய் என்
காதல் !
அழைத்துவிடு
இல்லை
மடியவிடு !\

களிறாய் என்றால் என்ன அர்த்தம்??

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வாங்க திவ்யா...
எப்பவோ எழுதின கவிதைய படிச்சு இருக்கீங்க....
ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா..??

களிறு - ஆண் யானை
பிடி - பெண் யானை

புரிந்ததா பெண்ணே..?? :))))

Divya சொன்னது…

\\களிறு - ஆண் யானை
பிடி - பெண் யானை

புரிந்ததா பெண்ணே..?? :))))\\

புரிந்தது :))

நேரம் எடுத்து பதிலும், அர்த்தமும் பின்னூட்டத்தில் தெரிவித்தமைக்கு நன்றி!