வியாழன், பிப்ரவரி 02, 2006

தொலைந்த நினைவுகள்





ஏன் எனக்கிந்த சோதனை ?
நான் என்னிடமில்லை
என்பதை அறியவில்லையா ?

கண்டநாள் முதலாய் நான்
தொலைந்து போனது
உனக்கு தெரியவில்லையா ?

ஊண் மறந்து நாட்கள்
பலவானது
உணர்வில்லையே ! ஏன் ?

பிரிதொருநாள் சந்திப்போம்!
வாக்கு பொய்யானது ! ஏன் ?

உறக்கம் பிடிக்கவில்லை
நினைவு மறக்கவில்லை
சித்தம் எனக்கில்லை
வேதனை வடியவில்லை !
இரக்கம் இல்லையா ?

பிரியேன் எனக்கூறி
பிரிந்ததேன் ?
என நேசம் தெரியவில்லையா ?
பாசம் உணரவில்லையா ?
உயிர்கவர்ந்து சென்றதேன் ?

சிதையிலிட்டு எரிக்க
மனமில்லை
உன்பாதியை சிதையிலிட்டு
எரிக்க மனம்
ஒப்பவில்லை !

ஏச்சுகள் உனை எட்டவில்லையா ?
பேச்சுகளின் ஏளனம் தாங்கவில்லை
இமையறுத்து இன்னமும் காத்திருக்கிறேன் !
எப்பொழுதாவது நீ
எனை கடத்திச்செல்வாயென !

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இணைத்த படமும் அருமை. கவிதையும அருமை.

பாலு மணிமாறன் சொன்னது…

Nice Kavithai... Nice picture too

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

ஷன்முகி, பாலு வருகைக்கும் தருகைக்கும் நன்றி !

Divya சொன்னது…

கேள்வி கனைகளுடன்.......உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிக்கிறது:))

Divya சொன்னது…

\ஊண் மறந்து நாட்கள்
பலவானது
உணர்வில்லையே ! ஏன் ?\\

ஊண் - ஊண் னா உணவா??

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

கேள்வி கனைகளுடன்.......உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிக்கிறது:))//

வாங்க திவ்யா.. :))
நீண்ட நாட்களுக்கு முன் எழுதிய கவிதைக்கெல்லாம் வந்திருக்கிறீர்கள்... மிக்க மகிழ்ச்சி..:))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\ஊண் மறந்து நாட்கள்
பலவானது
உணர்வில்லையே ! ஏன் ?\\

ஊண் - ஊண் னா உணவா?? //

ஆமாம் திவ்யா.. உணவு தான்.. :))