செவ்வாய், ஏப்ரல் 25, 2006

தரிசில்காடு



யாருமற்ற வீதிகளினூடே
நடந்து செல்கையில்
சிறிது தாகமெடுத்தது.
அரவமற்றுப் போன
வீதிகள் என்னைப் பார்த்து
கைகொட்டிச் சிரித்தன
நீர்வேண்டுமா தணிக்க?
வினவல் கேட்டு விழித்தேன்
ஆமென்ற தலையாட்டலில்
என் அகம் வீழ்ந்தது
அகந்தையை புதைக்க
நிலம் தோண்டு
தண்ணீர் கிடைக்கக்கூடும்
மண்டையில் மரமின்றி
நிலத்தில் மரமிடு
நீராறு நிலம் பிளக்கும்
செய்வாயா? தகம் தணிப்பேன்
கேட்டுவிட்டுக் கேவினேன்
தூரத்தில் ஆடுகள்
தரிசில்
மேய்ந்துகொண்டிருந்தன !


14 கருத்துகள்:

ஆப்பு சொன்னது…

வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

என்னவோ சொல்ல வர்ரீங்க என்னானு புரியலையே ஆப்பு !

பெயரில்லா சொன்னது…

யோவ் என்னய்யா சொல்ல வர்ரீங்க? கொழபுறீங்களே !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

கொஞ்சம் முயற்சி பண்ணுங்க அன்னானி. அப்படியே எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க :)

றெனிநிமல் சொன்னது…

நன்றி நவீன்.
சரியாக கூறமுடியவில்லை. ஆனால் வித்தியாசமாக இருக்கின்றது.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

நன்றி றெனிமல் வாழ்துக்களுக்கும் ரசிப்புக்கும் !!

பெயரில்லா சொன்னது…

:-) அட
எனக்குப் புரிஞ்சுது..
:-)

நேசமுடன்..
-நித்தியா

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வாங்க நித்தியா :))

வஞ்சப்புகழ்ச்சி இல்லையே ?? :))

Unknown சொன்னது…

//மண்டையில் மரமின்றி
நிலத்தில் மரமிடு//
:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வாங்க தேவ் :) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !

Hal McCartor சொன்னது…

Hi,

I am from the US and cannot read Tamil (the script is lovely to look at even when I cannot understand it) but I have enjoyed your beautiful website and your delightful photos very much. I paint landscapes and abstracts in oil.

mccartor.blogspot.com

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

Hi Hal mc,
thank you very for your compliment. :)) I have gone through your paintings.they are really fantastic ! pay vistes to my site often :))

Divya சொன்னது…

இந்த கவிதை புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு,
இதுதான் செய்யுள் நடையா??

ஸாரி.......இன்னொருதடவை படிச்சு பார்த்துட்டு சொல்றேன்:(

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

இந்த கவிதை புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு,
இதுதான் செய்யுள் நடையா??

ஸாரி.......இன்னொருதடவை படிச்சு பார்த்துட்டு சொல்றேன்:( //

வாங்க திவ்யா..
அட இது செய்யுள் நடை எல்லாம் இல்லை..
எதுவுமே தோனாம கைபோன போக்கிலே
எழுதினது... உங்களுக்கு புரிஞ்சா
எனக்கும் சொல்லிட்டுப்போங்க.. :)))))