என்னை ஓரகண்ணால்
பார்த்துக்கொண்டே
பக்கத்தில் உள்ள
உன் தோழியிடம்
பேசிக்கொண்டு
அப்படியே ஏதோ
எழுதுவதுபோல்
நடித்துக்கொண்டிந்தபோதுதான்
புரிந்தது எப்போதும்
புரியாத இந்த
‘ மல்டி டாஸ்கிங்’
ஆசிரியருக்கு தெரியாமல்
‘பிட்’ அடிக்கும்போது
கிடைக்கும் ‘ த்ரில்’
நீ பார்க்காத போது
உன்னை ‘சைட்’
அடிக்கும்போது கிடைக்கிறது
தெரியுமா?
கெமிஸ்ட்ரி ‘லேப்’ பில்
இவள்தான் என உன்னை
நண்பர்கள் காட்டியபோதுதான்
உணர்ந்தேன்
நீ ஒரு தாவணி கட்டிய
‘ கோனிகல் ப்ளாஸ்க் ‘ என
இந்த ‘லேப்டாப்’பிற்கு
மட்டும் ஏன்
சுரிதார் போட்டு விட்டிருக்காங்க
அப்பாவியாய் கேட்டேன்
உன்னை ‘கம்ப்யூட்டர் லேப்’ பில்
பார்த்த போது
சொல்ல தயங்கி நீ
சொன்ன
‘ எனக்கு உன்னை
பிடிச்சிருக்கான்னு
தெரியலை! ‘
நீ சொன்னதிலேயே
அழகான பொய்
இதுதான் தெரியுமா ?