புதன், செப்டம்பர் 10, 2008

ச்ச்சீய்ய்... போடா....


உன்னைக் கண்டு
எதையெதையோ
மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற

இந்தக் கண்களை மட்டும்

மறைக்க முடியவில்லை..
போடா...



எல்லோரும்
இருக்கும் போதும்

யாருக்கும் தெரியாமல்

ஆட்டம் போடும் உன்

கள்ள விரல்களை

என்ன செய்ய நான்..??



ஹையோ.. இப்பொழுதுதான்
கட்டினேன் ...
அதற்குள்
இப்படிக்
கலைத்துவிட்டாயே

சேலையை..

என்றால் சரி
கட்டிவிடுகிறேன்
என முழுதும்
கலைக்கத்துடிக்கிறாய்
எப்படித்தான் உன்னை

வைத்துக்கொண்டு

சமாளிக்கப் போகிறேனோ...



என் கோபங்களையும்
வெட்கங்களையும்

கன்னா பின்னாவென

தின்றுதீர்க்கும்
உன்
உதடுகளெனும்

முத்தசுரபிகளை

கொஞ்சம் சும்மா

இருக்கச்சொல்லேண்டா..

ப்ளீஸ்...



தூரத்தில் உன்னைக்
கண்டும்
காணாததுபோல்
தான்
நடிக்கிறேன்

இந்தப் பாழாய்போன

கைகள்தான்

உன்னைப் பார்த்தாலே

உடைசரிசெய்யும் சாக்கில்

என்னைக் காட்டிக்
கொடுத்து
விடுகின்றன..


உன் திட்டுகளையும்
தாங்க முடியவில்லை
உன் கொஞ்சல்களையும்
தாங்க முடியவில்லை
ஏணடா என்னை இப்படிக்
காதலித்துக் கொல்கிறாய்...?



நீ என்னவோ
முகம் முழுதும்

முத்தங்களை
கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...

அதனால்
வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம்
கேட்கும்
தோழியரிடம்
சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது...




யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?


கும்பலில் எல்லாம்
என்னிடம் ரகசியம்
சொல்லும் வேலை யெல்லாம்
வைத்துக்கொள்ளாதே...
நீ சொல்வதைக்
கேட்டுவிட்டு
என் வெட்கங்களை மறைக்க
நான் படும் பாடுகள்
உனக்கு என்னடா தெரியும்..?!


உன்னிடம்
கோபித்துக் கொண்டு
பேசாமல் இருந்தாலும்
என்னைப் பேசவைக்கும்
மந்திரத்தை
எங்கே இருந்து
கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்...?
ச்ச்சீய்...போடா..
பேசித்தொலைக்கிறேன்...


உன் உதடுகளையாவது
சமாளித்துவிடலாம்..
ஆனால்
அதன் மீதிருக்கும்
உன் மீசையின்
அட்டூழியங்களை
எப்படி சமாளிக்கப் போகிறேனோ...?




இல்லாத நேரங்களில்
உன் நினைவுகளால்
கட்டிக்கொல்கிறாய்..
இருக்கும் நேரங்களில்
இறுகக் கட்டிக்கொள்கிறாய்...
ஏணடா இப்படிப்
படுத்தி எடுக்கிறாய்..?


95 கருத்துகள்:

Divya சொன்னது…

பெண்ணின் பார்வையிலிருந்து கவிதை எழுதியிருப்பது , வித்தியாசமான அழகுடன் இருக்கிறது!
பாராட்டுக்கள்:))

Divya சொன்னது…

\\உன் திட்டுகளையும்
தாங்க முடியவில்லை
உன் கொஞ்சல்களையும்
தாங்க முடியவில்லை
ஏணடா என்னை
இப்படிக் காதலித்துக்
கொல்கிறாய்...?\\

ஐயோ பாவம் அந்த பொண்ணு, பையன் ரொம்ப திட்டுவான் போலிருக்கு, எப்படி நொந்து போய் புலம்புறா:((

Divya சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Divya சொன்னது…

\\இல்லாத
நேரங்களில்
உன் நினைவுகளால்
கட்டிக்கொல்கிறாய்..
இருக்கும்
நேரங்களில்
இறுகக்
கட்டிக்கொள்கிறாய்...
ஏணடா இப்படிப்
படுத்தி எடுக்கிறாய்..?\\


இந்த வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு:))

Divya சொன்னது…

\\உன்னிடம் கோபித்துக்
கொண்டு பேசாமல்
இருந்தாலும் என்னைப்
பேசவைக்கும்
மந்திரத்தை
எங்கே இருந்து கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்...?
ச்ச்சீய்...போடா..
பேசித்தொலைக்கிறேன்...\\

நல்லா சண்டைபோட வேண்டியது,
திட்டி திட்டி காயப்படுத்த வேண்டியது.......
அப்புறம் இப்படி தந்திரம் , மந்திரம் எல்லாம் போட்டு டகால்டி வேலை பண்ணி,
பொண்ணை கவுத்திட வேண்டியது,
இதே வேலையாப் போச்சு கவிஞர் சார் இந்த பசங்களுக்கு:((

போனா போகுதுன்னு பொண்ணுங்களும் பேசி தொலைச்சிடுறாங்க,

அதை கூட அந்த பொண்ணு அழகா சொல்றா மாதிரி எழுதியிருக்கிறீங்க, சூப்பர்!!

Divya சொன்னது…

ஒரு சின்ன சந்தேகம் .......

கவிதையில் நீங்கள் ஒரு பெண்ணின் மனநிலையை இத்தனை இயல்பாக பிரதிபலிப்பது எப்படி சாத்தியமாகிறது??
வியந்தேன்.....அதனால் கேட்கிறேன்:-)

வழக்கம்போல் கவிதை அசத்தல், வாழ்த்துக்கள்!!

MSK / Saravana சொன்னது…

கலக்கல் ஒவ்வொரு கவிதையும்..
சந்தோஷமா இருங்க..
:))

MSK / Saravana சொன்னது…

//Divya said...
பெண்ணின் பார்வையிலிருந்து கவிதை எழுதியிருப்பது , வித்தியாசமான அழகுடன் இருக்கிறது!
பாராட்டுக்கள்:))
//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்..
:))

பெயரில்லா சொன்னது…

i think you add more info about it.

Unknown சொன்னது…

அண்ணா அசத்திட்டீங்க..!! :))
//உன்னைக் கண்டு
எதையெதையோ மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற
இந்தக் கண்களை மட்டும்
மறைக்க முடியவில்லை..
போடா...//

அது கொஞ்சம் கஷ்டம் தான்..!! ;))

Unknown சொன்னது…

//தூரத்தில் உன்னைக்
கண்டும்
காணாததுபோல் தான்
நடிக்கிறேன்
இந்தப் பாழாய்போன
கைகள்தான்
உன்னைப் பார்த்தாலே
உடைசரிசெய்யும் சாக்கில்
என்னைக் காட்டிக்
கொடுத்து விடுகின்றன..//

:))))))

Unknown சொன்னது…

//நீ என்னவோ
முகம் முழுதும்
முத்தங்களை கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...
அதனால் வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம் கேட்கும்
தோழியரிடம் சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது.//

ம்ஹீம்..!! :))))))

Unknown சொன்னது…

//யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?//

இது தெரியலேன்னா நிச்சயம் அவர் மடையர்(மரியாதை) தான்..!! ;))

Unknown சொன்னது…

நல்லாருக்கு அண்ணா..!! :))

Unknown சொன்னது…

//Divya said...
பெண்ணின் பார்வையிலிருந்து கவிதை எழுதியிருப்பது , வித்தியாசமான அழகுடன் இருக்கிறது!
பாராட்டுக்கள்:))//

நானும் ஒரு ரிப்பீட் போட்டுக்கறேனே ப்ளீஸ் அண்ணா..!! ;))

பெயரில்லா சொன்னது…

வழக்கம் போலவே சுவாரஸ்யமான கொஞ்சல் மழையில் நனைந்து கிடக்கின்றன கவிதைகள்.

//யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?

//

அசத்தல் !

நவநீதன் சொன்னது…

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...!
உங்கள் blog-க்கே ஒரு பொக்கிஷம் போல உள்ளது.
ஒரு சிலையை செதுக்குவது போல உங்கள் இணையத்தை செதுக்கி உள்ளீர்கள்...!

வாழ்த்துக்கள் ...!

எழில்பாரதி சொன்னது…

அருமையான கவிதைகள்
பிரித்துச் சொல்ல முடியாமல் அனைத்தும் மனதைக் கடத்திச் செல்கின்றன!!!

FunScribbler சொன்னது…

ஆஹா...romanceல பையன் டாப்புல இருக்குறீங்க போல தெரியுது.

கலக்கலான குட்டி(சுட்டி) கவிதைகளின் தொகுப்பு!!!!
தொடரட்டும்! என் favourite இது தான்..

//உன் உதடுகளையாவது
சமாளித்துவிடலாம்..
ஆனால்
அதன் மீதிருக்கும்
உன் மீசையின்
அட்டூழியங்களை
எப்படி சமாளிக்கப் போகிறேனோ...?//

மீசையின்னு படிச்ச பிறகு, எனக்கு விஷால் ஞாபகம் வந்துடுச்சுப்பா! அவ்வ்வ்...:)

பெயரில்லா சொன்னது…

//என் கோபங்களையும்
வெட்கங்களையும்
கன்னா பின்னாவென
தின்றுதீர்க்கும் உன்
உதடுகளெனும்
முத்தசுரபிகளை
கொஞ்சம் சும்மா
இருக்கச்சொல்லேண்டா.. //


அட்டகாசமா இருக்குங்க நவீன். அதென்ன முத்த சுரபி? புதுசா இருக்கு ;)

பெயரில்லா சொன்னது…

//என் கோபங்களையும்
வெட்கங்களையும்
கன்னா பின்னாவென
தின்றுதீர்க்கும் உன்
உதடுகளெனும்
முத்தசுரபிகளை
கொஞ்சம் சும்மா
இருக்கச்சொல்லேண்டா.. //


அட்டகாசமா இருக்குங்க நவீன். அதென்ன முத்த சுரபி? புதுசா இருக்கு ;)

பெயரில்லா சொன்னது…

அருமை...வாழ்த்த, வர்ணிக்க வார்த்தைகளை அலசி பார்க்கிறேன் கிடைக்க மாட்டுது!! ம் ம் எப்படி இப்படியெல்லம் தோணுது! காதல் அருவியாய் பாய்கிறது!

priyamudanprabu சொன்னது…

உன்னைக் கண்டு
எதையெதையோ மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற
இந்தக் கண்களை மட்டும்
மறைக்க முடியவில்லை..
போடா...///////////

ஐயா கலக்குறீங்க
ஆண்களே சொக்கிபோவாங்க
அப்போ பெண்கள்???

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

தித்திக்கிறது நவீன் :))

பெயரில்லா சொன்னது…

நீ என்னவோ
முகம் முழுதும்
முத்தங்களை கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...
அதனால் வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம் கேட்கும்
தோழியரிடம் சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது...

antha ponna parka ungaluku pavama theriyalaiya bosss....
Anbudan,
Ramesh Kumar.S

பெயரில்லா சொன்னது…

\யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...\\


யாரிடம் வேண்டுமானாலும்
அன்பு காட்டலாம்
ஆனால்
உரிமை உள்ள இடத்தில்தானே
கோபப்பட முடியும் - இது
புரியாமல் 'மடையா' என்றால்
என்ன அர்த்தம்??

அப்படின்னு அந்த பொண்ணுகிட்ட கேள்வி கேட்க தோன்றினாலும்........

\நான் உன்னை கண்டு மட்டும்தான்
வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?\\


இந்த வரிகள் படித்ததும்.....அச்சோ பாவம் பொண்ணு வெட்கபடுதேன்னு தோனுது:))
அப்படிதானே கவிஞரே????

Subash சொன்னது…

மிகவும் அழகான கவிதைகள்
தபுசங்கர் பெண்ணாய் பிறச்திருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பாரோனு எண்ண வைக்கிறது. அவ்வளவு குளைவு.
கலக்கல்தான்

மஹாராஜா சொன்னது…

நவீன் அவர்களின் கவிதைகளை ஒன்றை கூட தட்டி கழிக்க முடியவில்லை..
அது என்னவோ தெரியவில்லை... உங்கள் கவிதையை படிக்கும் போதும் மனதிலும் சரி ,
முகத்திலும் சரி...ஒரு புன்னகை வந்து போவதை தவிர்க்க முடியவில்லை..
என்ன தான் மாயம் பண்ணி எழுதுவீங்களோ..?
எல்லா கவிதையும் அசத்தல்...

இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணிற்கும் வெட்கம் வராமல் இருக்காது..
அந்த அளவுக்கு ஒரு பெண்ணின் காதல் மன நிலையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி...........

மஹாராஜா சொன்னது…

//ஹையோ.. இப்பொழுதுதான்
கட்டினேன் ...
அதற்குள் இப்படிக்
கலைத்துவிட்டாயே
சேலையை..
என்றால் சரி கட்டிவிடுகிறேன்
என முழுதும் கலைக்கத்துடிக்கிறாய்
எப்படித்தான் உன்னை
வைத்துக்கொண்டு
சமாளிக்கப் போகிறேனோ..//

அசத்தல்...

Aruna சொன்னது…

புதுசா என்ன சொல்லப் போறேன்?????
வேறு வேறு கோணங்களில்......வெட்கம்!!!!...அழகு..
அன்புடன் அருணா

A Blog for Edutainment சொன்னது…

கவிதையும்,படங்களும் அருமைங்க. நன்றிங்க தலை.

Cable சங்கர் சொன்னது…

உங்கள் கவிதையை என்னுடய பதிவில் இட்டுள்ளேன். உங்கள் பதிவுக்கு இணைத்துள்ளேன். மிக அருமை.. மிக அருமை..

இராம்/Raam சொன்னது…

நவீன்,

வழக்கம் போல் அசத்தல்...

Info Sec சொன்னது…

மிகவும் ரசனையான கவிதைகள்!!!

அதுவும் ஒரு பெண்ணிண் பார்வையில் இருந்து அனுகியிருப்பது வித்தியாசமாக உள்ளது ...

கவிதை படைக்க காரணமானவர் யாரோ?

வாழ்த்துக்கள்!!!
தொடரட்டும் உமது கவிதை பயணம்...

ரவி சொன்னது…

இப்பத்தான் உங்க கமெண்டுலருந்து உங்க ப்ளாக் வந்தேன், படங்களோட நல்லா இருக்கு கவிதை...

Sarav சொன்னது…

Superb...Anubavichu Eluthuna mathri eruku...Very Nice...

Ravishna சொன்னது…

HEY HOW YOU ARE ABLE TO WRITE LIKE THIS????REALLY SUPERB YAAR.KEEP WRITING LIKE THIS.I LIKE IT MOST.....SO CUTE NAVEEN....

REGARDS,
RAVISHNA.P

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

பெண்ணின் பார்வையிலிருந்து கவிதை எழுதியிருப்பது , வித்தியாசமான அழகுடன் இருக்கிறது!
பாராட்டுக்கள்:)) //

வாங்க திவ்யா....
வித்தியாசமாகவா இருக்கிறது..?? !! :)))

மிக்க நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\உன் திட்டுகளையும்
தாங்க முடியவில்லை
உன் கொஞ்சல்களையும்
தாங்க முடியவில்லை
ஏணடா என்னை
இப்படிக் காதலித்துக்
கொல்கிறாய்...?\\

ஐயோ பாவம் அந்த பொண்ணு, பையன் ரொம்ப திட்டுவான் போலிருக்கு, எப்படி நொந்து போய் புலம்புறா:(( //

செல்லத்திட்டுகள் எல்லாம் கொஞ்சல்கள் தானே... :))))

இது செல்லமான புலம்பல் திவ்யா.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

\\இல்லாத
நேரங்களில்
உன் நினைவுகளால்
கட்டிக்கொல்கிறாய்..
இருக்கும்
நேரங்களில்
இறுகக்
கட்டிக்கொள்கிறாய்...
ஏணடா இப்படிப்
படுத்தி எடுக்கிறாய்..?\\


இந்த வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு:)) //

வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

\\உன்னிடம் கோபித்துக்
கொண்டு பேசாமல்
இருந்தாலும் என்னைப்
பேசவைக்கும்
மந்திரத்தை
எங்கே இருந்து கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்...?
ச்ச்சீய்...போடா..
பேசித்தொலைக்கிறேன்...\\

நல்லா சண்டைபோட வேண்டியது,
திட்டி திட்டி காயப்படுத்த வேண்டியது.......
அப்புறம் இப்படி தந்திரம் , மந்திரம் எல்லாம் போட்டு டகால்டி வேலை பண்ணி,
பொண்ணை கவுத்திட வேண்டியது,
இதே வேலையாப் போச்சு கவிஞர் சார் இந்த பசங்களுக்கு:((

போனா போகுதுன்னு பொண்ணுங்களும் பேசி தொலைச்சிடுறாங்க,

அதை கூட அந்த பொண்ணு அழகா சொல்றா மாதிரி எழுதியிருக்கிறீங்க, சூப்பர்!! ///

தந்திரம் காதலனும் மந்திரம் காதலியும் செய்வது திவ்யா.. கவிழ்வது என்னவோ இருவரும் தானே..?? !!

மிக்க நன்றி... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

ஒரு சின்ன சந்தேகம் .......

கவிதையில் நீங்கள் ஒரு பெண்ணின் மனநிலையை இத்தனை இயல்பாக பிரதிபலிப்பது எப்படி சாத்தியமாகிறது??
வியந்தேன்.....அதனால் கேட்கிறேன்:-)

வழக்கம்போல் கவிதை அசத்தல், வாழ்த்துக்கள்!! //

வாங்க திவ்யா.. :))

சின்ன சந்தேகமா..?? :))) என் மனது மாராப்பு போட்டு யோசித்தபோது இயல்பாகவே வந்துவிட்டது ... :)))))

மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Saravana Kumar MSK said...

கலக்கல் ஒவ்வொரு கவிதையும்..
சந்தோஷமா இருங்க..
:)) //

வாங்க சரவணகுமார் :)))
மிக்க நன்றி கவிஞரே வருகைக்கும் சந்தோசமான தருகைக்கும்... :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Saravana Kumar MSK said...

//Divya said...
பெண்ணின் பார்வையிலிருந்து கவிதை எழுதியிருப்பது , வித்தியாசமான அழகுடன் இருக்கிறது!
பாராட்டுக்கள்:))
//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்..
:)) //

:)))) நன்றி... நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// myspace bestpage said...

i think you add more info about it. //

:))) நன்றி... :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sri said...

அண்ணா அசத்திட்டீங்க..!! :))
//உன்னைக் கண்டு
எதையெதையோ மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற
இந்தக் கண்களை மட்டும்
மறைக்க முடியவில்லை..
போடா...//

அது கொஞ்சம் கஷ்டம் தான்..!! ;)) //

வாங்க ஸ்ரீ.. :)))
அசத்தலான வருகையும் அனுபவமான தருகையும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Sri said...

//தூரத்தில் உன்னைக்
கண்டும்
காணாததுபோல் தான்
நடிக்கிறேன்
இந்தப் பாழாய்போன
கைகள்தான்
உன்னைப் பார்த்தாலே
உடைசரிசெய்யும் சாக்கில்
என்னைக் காட்டிக்
கொடுத்து விடுகின்றன..//

:)))))) //

:)))) நன்றி ஸ்ரீ ....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sri said...

//நீ என்னவோ
முகம் முழுதும்
முத்தங்களை கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...
அதனால் வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம் கேட்கும்
தோழியரிடம் சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது.//

ம்ஹீம்..!! :)))))) //

ஒரே வார்த்தையில் உணர்வினை அளித்த ஸ்ரீ க்கு என் வணக்கங்கள் !! !:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Sri said...

//யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?//

இது தெரியலேன்னா நிச்சயம் அவர் மடையர்(மரியாதை) தான்..!! ;)) //

மடையர்..??? ;))))))))))

மரியாதையான சாடல் அழகு...:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sri said...

நல்லாருக்கு அண்ணா..!! :))//

மிக்க நன்றி ஸ்ரீ... :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Sri said...

//Divya said...
பெண்ணின் பார்வையிலிருந்து கவிதை எழுதியிருப்பது , வித்தியாசமான அழகுடன் இருக்கிறது!
பாராட்டுக்கள்:))//

நானும் ஒரு ரிப்பீட் போட்டுக்கறேனே ப்ளீஸ் அண்ணா..!! ;)) //

ஆஹா ப்ளீஸ் எதுக்கு..? தாராளமா போட்டுக்கோம்மா... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சேவியர் said...

வழக்கம் போலவே சுவாரஸ்யமான கொஞ்சல் மழையில் நனைந்து கிடக்கின்றன கவிதைகள். //

வாருங்கள் சேவியர்.. :)))
காதல் சாரலின் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... :)))

//யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?

//

அசத்தல் ! //

மிக்க நன்றி... வருகையும் தருகையும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது !!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நவநீதன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...!
உங்கள் blog-க்கே ஒரு பொக்கிஷம் போல உள்ளது.
ஒரு சிலையை செதுக்குவது போல உங்கள் இணையத்தை செதுக்கி உள்ளீர்கள்...!

வாழ்த்துக்கள் ...! //

வாருங்கள் நவநீதன்.. :)))

தங்களின் முதன் வருகைக்கும் இனிமையான தருகைக்கும் மிக்க நன்றி... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில்பாரதி said...

அருமையான கவிதைகள்
பிரித்துச் சொல்ல முடியாமல் அனைத்தும் மனதைக் கடத்திச் செல்கின்றன!!! //

வாங்க எழில்...

கடத்திச்செல்கின்றனவா..? :))) விமர்சனமே கவிதையாக இருக்கின்றதே கவிஞரே.. !! மிக்க நன்றி... :)))

Princess சொன்னது…

உங்கள் கவிதையை படிக்கும் போது நான் கவிதை எழுதுவதை நிறுத்திவிடலாமா என்று நினைக்கிறேன்...அத்தனை அழகு!!!
அது மட்டுமல்ல நான் சொல்ல வெட்க்கப்படும் விஷயங்களும் (உ.தா. முத்தம்) அற்புதமாய் நீங்கள் சொல்லிருக்கும் போது...
நான் அப்படி எண்ணுவதில் எந்த தப்புமில்லை :-) இன்னும் எழுதுங்கள்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhmaangani said...

ஆஹா...romanceல பையன் டாப்புல இருக்குறீங்க போல தெரியுது.

கலக்கலான குட்டி(சுட்டி) கவிதைகளின் தொகுப்பு!!!! //

வாம்மா தமிழ்.. :)))
குட்டி சுட்டியா..? உங்க குறும்புக்களே ஒரு கவிதையாகத்தானே இருக்கு..?!! :))
டாப் ல எல்லாம் இல்லீங்க தமிழ்...;))


// தொடரட்டும்! என் favourite இது தான்..

//உன் உதடுகளையாவது
சமாளித்துவிடலாம்..
ஆனால்
அதன் மீதிருக்கும்
உன் மீசையின்
அட்டூழியங்களை
எப்படி சமாளிக்கப் போகிறேனோ...?//

மீசையின்னு படிச்ச பிறகு, எனக்கு விஷால் ஞாபகம் வந்துடுச்சுப்பா! அவ்வ்வ்...:) //

மீசை என்றாலே விஷால் ஞாபகமா..? என்ன கொடுமை இது..? ;)))))

மிக்க நன்றி காயத்ரி... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஸ்ரீ said...

//என் கோபங்களையும்
வெட்கங்களையும்
கன்னா பின்னாவென
தின்றுதீர்க்கும் உன்
உதடுகளெனும்
முத்தசுரபிகளை
கொஞ்சம் சும்மா
இருக்கச்சொல்லேண்டா.. //


அட்டகாசமா இருக்குங்க நவீன். அதென்ன முத்த சுரபி? புதுசா இருக்கு ;) //

வாங்க கவிஞரே.. :))))
மிக்க நன்றி அட்டகாசமான வருகைக்கு... :)))

அமுத சுரபி - முடிவில்லா உணவு வழங்கும் பாத்திரம்

முத்தசுரபி - முடிவில்லா முத்தம் வழங்கும் இதழ்கள்

:))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மலர்விழி said...

அருமை...வாழ்த்த, வர்ணிக்க வார்த்தைகளை அலசி பார்க்கிறேன் கிடைக்க மாட்டுது!! ம் ம் எப்படி இப்படியெல்லம் தோணுது! காதல் அருவியாய் பாய்கிறது! //

வாருங்கள் மலர்விழி.. :)))

எல்லாம் தங்களைப் போன்ற ரசிகர்களின் ஊக்கம் தான் இப்படி எல்லாம் எழுத வைக்கின்றது.. :)))

மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும் மலர்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//பிரபு said...

உன்னைக் கண்டு
எதையெதையோ மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற
இந்தக் கண்களை மட்டும்
மறைக்க முடியவில்லை..
போடா...///////////

ஐயா கலக்குறீங்க
ஆண்களே சொக்கிபோவாங்க
அப்போ பெண்கள்??? //

வாருங்கள் பிரபு.. :)))
ஆண்கள் மட்டுமே சொக்கிப்போவார்கள்... பெண்கள் சொக்க வைப்பார்கள் தானே. ?? ;)))))

மிக்க நன்றி....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// sathish said...

தித்திக்கிறது நவீன் :)) //

வாருங்கள் கவிஞரே.. :)))
மிக்க நன்றி... தித்திப்பது தங்களின் வருகையும் தான்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Anonymous said...

நீ என்னவோ
முகம் முழுதும்
முத்தங்களை கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...
அதனால் வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம் கேட்கும்
தோழியரிடம் சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது...

antha ponna parka ungaluku pavama theriyalaiya bosss....
Anbudan,
Ramesh Kumar.S //

வாங்க ரமேஷ்.. :)))
அட பொண்ண பார்த்தா ஏன் பாவமா தெரியனும்...?? தேவதையா தெரிஞ்சா போதாதா என்ன..? ;))))))

மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//திவ்யா said...

\யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...\\


யாரிடம் வேண்டுமானாலும்
அன்பு காட்டலாம்
ஆனால்
உரிமை உள்ள இடத்தில்தானே
கோபப்பட முடியும் - இது
புரியாமல் 'மடையா' என்றால்
என்ன அர்த்தம்??

அப்படின்னு அந்த பொண்ணுகிட்ட கேள்வி கேட்க தோன்றினாலும்........

\நான் உன்னை கண்டு மட்டும்தான்
வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?\\


இந்த வரிகள் படித்ததும்.....அச்சோ பாவம் பொண்ணு வெட்கபடுதேன்னு தோனுது:))
அப்படிதானே கவிஞரே???? //

அட கதாசிரியை சொன்னா தப்பாக இருக்குமா..?? வெட்கப்படுவது எப்பொழுதுமே ஆண்கள் பார்வையில் அழகுதான்... :)))

மிக்க நன்றி திவ்யா..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சுபாஷ் said...

மிகவும் அழகான கவிதைகள்
தபுசங்கர் பெண்ணாய் பிறச்திருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பாரோனு எண்ண வைக்கிறது. அவ்வளவு குளைவு.
கலக்கல்தான் //

வாருங்கள் சுபாஷ்.. :)))
மிக்க மகிழ்ச்சியளிக்கிறது தங்களின் தருகையும் அழகான வருகையும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மஹாராஜா said...

நவீன் அவர்களின் கவிதைகளை ஒன்றை கூட தட்டி கழிக்க முடியவில்லை..
அது என்னவோ தெரியவில்லை... உங்கள் கவிதையை படிக்கும் போதும் மனதிலும் சரி ,
முகத்திலும் சரி...ஒரு புன்னகை வந்து போவதை தவிர்க்க முடியவில்லை..
என்ன தான் மாயம் பண்ணி எழுதுவீங்களோ..?
எல்லா கவிதையும் அசத்தல்... //

வாருங்கள் மஹாராஜா.. :)))
புன்னகையை திருடுகின்றனவா என வரிகள்..??? மிக்க நன்றி ராஜா..!!!

// இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணிற்கும் வெட்கம் வராமல் இருக்காது..
அந்த அளவுக்கு ஒரு பெண்ணின் காதல் மன நிலையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி........... //

அச்சசோ இப்படியெல்லாம் வாழ்த்தி எனக்குத்தான் வெட்கம் வர வைக்கிறீர்கள்.. :)))

மிக்க நன்றி ராஜா... !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மஹாராஜா said...

நவீன் அவர்களின் கவிதைகளை ஒன்றை கூட தட்டி கழிக்க முடியவில்லை..
அது என்னவோ தெரியவில்லை... உங்கள் கவிதையை படிக்கும் போதும் மனதிலும் சரி ,
முகத்திலும் சரி...ஒரு புன்னகை வந்து போவதை தவிர்க்க முடியவில்லை..
என்ன தான் மாயம் பண்ணி எழுதுவீங்களோ..?
எல்லா கவிதையும் அசத்தல்... //

வாருங்கள் மஹாராஜா.. :)))
புன்னகையை திருடுகின்றனவா என வரிகள்..??? மிக்க நன்றி ராஜா..!!!

// இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணிற்கும் வெட்கம் வராமல் இருக்காது..
அந்த அளவுக்கு ஒரு பெண்ணின் காதல் மன நிலையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி........... //

அச்சசோ இப்படியெல்லாம் வாழ்த்தி எனக்குத்தான் வெட்கம் வர வைக்கிறீர்கள்.. :)))

மிக்க நன்றி ராஜா... !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// மஹாராஜா said...

//ஹையோ.. இப்பொழுதுதான்
கட்டினேன் ...
அதற்குள் இப்படிக்
கலைத்துவிட்டாயே
சேலையை..
என்றால் சரி கட்டிவிடுகிறேன்
என முழுதும் கலைக்கத்துடிக்கிறாய்
எப்படித்தான் உன்னை
வைத்துக்கொண்டு
சமாளிக்கப் போகிறேனோ..//

அசத்தல்... //

வாருங்கள் மஹாராஜா.. :)))
மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Aruna said...

புதுசா என்ன சொல்லப் போறேன்?????
வேறு வேறு கோணங்களில்......வெட்கம்!!!!...அழகு..
அன்புடன் அருணா //

வாருங்கள் அருணா...:)))
அன்பான வருகையும் மிக அழகான தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//A Blog for Short Films said...

கவிதையும்,படங்களும் அருமைங்க. நன்றிங்க தலை. //

வாங்க வாங்க :)))
மிக்க நன்றி...வருகைக்கும் தருகைக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// cable sankar said...

உங்கள் கவிதையை என்னுடய பதிவில் இட்டுள்ளேன். உங்கள் பதிவுக்கு இணைத்துள்ளேன். மிக அருமை.. மிக அருமை..//

வாருங்கள் சங்கர்... :)))
மிக்க நன்றி... அருமையான தருகைக்கும் அழகான வருகைக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம்/Raam said...

நவீன்,

வழக்கம் போல் அசத்தல்... //

வாருங்கள் ராம்.. :))
தங்களின் இடையறா வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது... :))) மிக்க நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//subha said...

மிகவும் ரசனையான கவிதைகள்!!!

அதுவும் ஒரு பெண்ணிண் பார்வையில் இருந்து அனுகியிருப்பது வித்தியாசமாக உள்ளது ...

கவிதை படைக்க காரணமானவர் யாரோ?

வாழ்த்துக்கள்!!!
தொடரட்டும் உமது கவிதை பயணம்... //

வாருங்கள் சுபா... :)))
மிக்க நன்றி.. :))
கவிதை படைக்க காரணம் என் கற்பனையன்றி வேறு என்ன..? ;)))))

வருகையும் தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// செந்தழல் ரவி said...

இப்பத்தான் உங்க கமெண்டுலருந்து உங்க ப்ளாக் வந்தேன், படங்களோட நல்லா இருக்கு கவிதை... //

வாருங்கள் செந்தழல் ரவி... :)))
மிக்க நன்றி... அழகான வருகைக்கும் தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Pollathavan said...

Superb...Anubavichu Eluthuna mathri eruku...Very Nice... //

வாருங்கள் பொல்லாதவன்... :)))
அனுபவிச்சு படிச்சிங்களா..?? ;)))
மிக்க நன்றி... !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Ravishna said...

HEY HOW YOU ARE ABLE TO WRITE LIKE THIS????REALLY SUPERB YAAR.KEEP WRITING LIKE THIS.I LIKE IT MOST.....SO CUTE NAVEEN....

REGARDS,
RAVISHNA.P //

வாருங்கள் ரவிஷனா..

அனைத்தும் தங்களைப் போன்ற ரசிகர்களின் ஊக்கம் தான்... :))) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி ரவிஷனா...

பட்டிக்காட்டான் சொன்னது…

நவீன்...
இவன் கவிஞன் மட்டுமல்ல‌
ரசிகன்!
காதலன்!
காதலிக்கப்பட வேண்டியவனும் கூட...
தமிழ் ததும்பி ஓடுகிறது!
உன் முத்த சுரபி என்னும் புதிய வரவால்...
இன்னும் பல படைக்க வாழ்த்துக்கள்...

இன்னிக்குதாங்க உங்க ப்ளாக் பாத்தேன், அய்யோ! ரொம்ப புடிச்சுப்போச்சு.
கவித அருவியா கொட்டுது... கலக்குறீங்க! வாழ்த்துக்கள்!
நேரம் கெடச்சா என்னோட ப்ளாக் பாருங்க... பாத்துட்டு குறை நிறை இருந்தா சொல்லுங்க... (http://pattikkattantamilan.blogspot.com/)

Raj சொன்னது…

மாசத்துக்கு ஒரு தொகுப்புதானா நவீன்....ரொம்ப நல்லா இருக்கு.

புதியவன் சொன்னது…

/நீ என்னவோ
முகம் முழுதும்
முத்தங்களை கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...
அதனால் வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம் கேட்கும்
தோழியரிடம் சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது...//

அழகான வரிகள் ரசித்தேன்

//யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?//

ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
அழகான கவிதைகள் வாழ்த்துக்கள் நவீன்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// பட்டிக்காட்டான் said...

நவீன்...
இவன் கவிஞன் மட்டுமல்ல‌
ரசிகன்!
காதலன்!
காதலிக்கப்பட வேண்டியவனும் கூட...
தமிழ் ததும்பி ஓடுகிறது!
உன் முத்த சுரபி என்னும் புதிய வரவால்...
இன்னும் பல படைக்க வாழ்த்துக்கள்...

இன்னிக்குதாங்க உங்க ப்ளாக் பாத்தேன், அய்யோ! ரொம்ப புடிச்சுப்போச்சு.
கவித அருவியா கொட்டுது... கலக்குறீங்க! வாழ்த்துக்கள்!
நேரம் கெடச்சா என்னோட ப்ளாக் பாருங்க... பாத்துட்டு குறை நிறை இருந்தா சொல்லுங்க... (http://pattikkattantamilan.blogspot.com/)//

வாருங்கள் பட்டிக்காட்டான் :)))

அச்சசோ இப்படியெல்லாம் புகழாதீர்கள்...
மிக்க மகிழ்ச்சி தங்களின் கன்னி வருகைக்கும்...
அழகான தருகைக்கும்...
கண்டிப்பாக தங்கள் தளம் வருகிறேன்...
வாழ்த்துக்கள்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Raj said...

மாசத்துக்கு ஒரு தொகுப்புதானா நவீன்....ரொம்ப நல்லா இருக்கு. //


வாருங்கள் ராஜ்...

மிக்க மகிழ்ச்சி.. :)))
ஆமாம் ராஜ் மாதம் ஒன்றுதான் என்னால்
எழுத முடிகிறது.. :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//புதியவன் said...

/நீ என்னவோ
முகம் முழுதும்
முத்தங்களை கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...
அதனால் வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம் கேட்கும்
தோழியரிடம் சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது...//

அழகான வரிகள் ரசித்தேன்

//யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?//

ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
அழகான கவிதைகள் வாழ்த்துக்கள் நவீன். //

வாருங்கள்புதியவன்.. :)))


வருகையும் மிக அழகான ரசனையும்
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... :)))

King சொன்னது…

nalla iruku

Bubeshkumar சொன்னது…

ஒவ்வொரு வரியும் மிக அழகு...
ரொம்ப நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்

நாடோடி இலக்கியன் சொன்னது…

//உன்னைக் கண்டு
எதையெதையோ மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற
இந்தக் கண்களை மட்டும்
மறைக்க முடியவில்லை..
போடா...//

//யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?//

படிக்கும்போதே இதழோரத்தில் குறுநகையை கொண்டுவரச் செய்கின்ற குறும்புத்தனமான கற்பனை,
வாழ்த்துகள் நண்பா..!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Bubeshkumar said...

ஒவ்வொரு வரியும் மிக அழகு...
ரொம்ப நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்//

வாருங்கள் பூபேஷ்... :))

விரிவரியாய் ரசித்தமைக்கும்
அழகழகாய் சொன்னமைக்கும்
மிக்க நன்றி...:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாடோடி இலக்கியன் said...

//உன்னைக் கண்டு
எதையெதையோ மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற
இந்தக் கண்களை மட்டும்
மறைக்க முடியவில்லை..
போடா...//

//யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?//

படிக்கும்போதே இதழோரத்தில் குறுநகையை கொண்டுவரச் செய்கின்ற குறும்புத்தனமான கற்பனை,
வாழ்த்துகள் நண்பா..! //

வாருங்கள் நாடோடி இலக்கியன்.. :)))

வருகைக்கும் மிக அழகான தருகைக்கும் மிக்க நன்றி...:)))

Senthil சொன்னது…

Amaaaziiiiiiiiing..!!!

ஜியா சொன்னது…

Romba poraamaiyaa irukku Naveen... kaathal kavinjarnaa summaavaa?? ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// King said...

nalla iruku //

வாருங்கள் கிங்.. :))

மிக்க நன்றி அழகான வருகைக்கும் தருகைக்கும்.. !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Sen said...

Amaaaziiiiiiiiing..!!! //

வாருங்கள் சென்... :)))

மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி !!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஜி said...

Romba poraamaiyaa irukku Naveen... kaathal kavinjarnaa summaavaa?? ;))) //

வாங்க ஜி :)))

என்னங்க ஜி... உங்களோட கதைகளைவிடவா நான் அழகாக எழுதிவிடமுடியும்..?? :)))
மிக்க மகிழ்ச்சியளிக்கிறது வருகையும் மிக அழகான தருகையும்... !! :)))

Giri சொன்னது…

யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?

உன் உதடுகளையாவது
சமாளித்துவிடலாம்..
ஆனால்
அதன் மீதிருக்கும்
உன் மீசையின்
அட்டூழியங்களை
எப்படி சமாளிக்கப் போகிறேனோ...?

Pennin Parvaiyil irundhu Ezhuthi.. illai illai Izhaithu irukirirgal..meesaiyin azhgaiyum,kurumbaiyum..idhai vida yaarum solla mudiyathu..kavithai ezhuthuvathu oru ragam..sedhukuvathu innoru ragam...neengal irandavathu ragam..
vazhthukal kavithiye..

Amis-tour சொன்னது…

hi naveen anna......
nan ngal blog il endru than nulainthulen...cable sankar sir bloggeril erunthu ungalai kanden....kavithaikal naithum azhagavum oru pen parvaiyil solapatathum arumai.....evalavu naal than aangaly pengalai varnipathu ethu puthithagavum azhagavum ullathu....ungaludaiya kavithaigalai appadiya ungal peyarudanay nan facebook valayathil copy adikka ungal anumathi vendukiren naveen anna....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//nazeer said...

hi naveen anna......
nan ngal blog il endru than nulainthulen...cable sankar sir bloggeril erunthu ungalai kanden....kavithaikal naithum azhagavum oru pen parvaiyil solapatathum arumai.....evalavu naal than aangaly pengalai varnipathu ethu puthithagavum azhagavum ullathu....ungaludaiya kavithaigalai appadiya ungal peyarudanay nan facebook valayathil copy adikka ungal anumathi vendukiren naveen anna....//

மிக்க நன்றி நசீர்...no probs use it,.., :)

beevi சொன்னது…

Hi sir,now only i knew about ur wonderful poems,really it's very amazing...really superb...thank you for ur heart touching lines......usuaally i like to read poems but now i like more...hopefully hereafterwards i wont miss..thank u so much...

beevi சொன்னது…

Hi sir,now only i knew about ur wonderful poems,really it's very amazing...really superb...thank you for ur heart touching lines......usuaally i like to read poems but now i like more...hopefully hereafterwards i wont miss..thank u so much...